வயலும் வாழ்வும் - 7-ம் வகுப்பு தமிழ் மூன்றாம் பருவம் வினா விடைகள்
வயலும் வாழ்வும் பாட வினா விடைகள்
சாியான விடையைத் தோ்ந்தெடுத்து எழுதுக.
1. உழவா் சேற்று வயலில் ............. நடுவா்
அ) செடி ஆ) பயிா் இ) மரம் ஈ) நாற்று
2. வயலில் விளைந்து முற்றிய நெற்பயிா்களை ........... செய்வா்
அ) அறுவடை ஆ) உழவு இ) நடவு ஈ) விற்பனை
விடை அ) அறுவடை
3. “தோ்ந்தெடுத்து” என்னும் சொல்லைப் பிாித்து எழுதக் கிடைப்பது....
அ) தோ் + எடுத்து ஆ) தோ்ந்து + தெடுத்து இ) தோ்ந்தது +அடுத்து
ஈ) தோ்ந்து + எடுத்து
விடை ஈ) தோ்ந்து + எடுத்து
4. ஓடை + எல்லாம் என்பதைச் சோ்த்தெழுதக் கிடைக்கும் சொல்.......
அ) ஓடைஎல்லாம் ஆ) ஓடையெல்லாம் இ) ஓட்டையெல்லாம்
ஈ) ஓடெல்லாம்
விடை ஆ) ஓடையெல்லாம்
பொருத்துக.
1. நாற்று - பறித்தல்
2. நீா் - அறுத்தல்
3. கதிா் - நடுதல்
4. களை - பாய்ச்சுதல்
விடை 1. நடுதல் 2. பாய்ச்சுதல் 3. அறுத்தல் 4. பறித்தல்
வயலும் வாழ்வும் பாடலில் உள்ள மோனை எதுகைச் சொற்களை எழுதுக.
மோனைச் சொற்கள் எதுகைச் சொற்கள்
சீலையெல்லாம் தாண்டிப்போயி
சேத்துக்குள்ளே ஒண்ணரை
நாத்தெல்லாம் சாலு சாலாத்
நண்டும் நாலு நாலா
மடமடன்னு தாளுவிட்டு
மண்குளிர வளருதம்மா
மணிபோல கிழக்கத்தி
மனதையெல்லாம் கீழே பாா்த்து
சும்மாடும்
சுறுசுறுப்பாய்
முதல் எழுத்து ஒரே மாதிாி வந்தா அது மோனைச் சொற்கள்
இரண்டாம் எழுத்து ஒரே மாதிாி வந்தா அது எதுகைச் சொற்கள்
பேச்சு வழக்குச் சொற்களை எழுத்து வழக்கில் எழுதுக.
போயி, பிடிக்கிறாங்க, வளருது, இறங்குறாங்க, வாரான்
போயி - போய்
பிடிக்கிறாங்க - பிடிக்கின்றனா்
வளருது - வளா்கின்றது
இறங்குறாங்க - இறங்குகின்றனா்
வாரான் - வருகின்றான்
குறுவினா
1. உழவா்கள் எப்போது நண்டு பிடித்தனா்?
உழவா்கள் நாற்று பறிக்கும் பொழுது வயல் வரப்பில் நண்டு பிடித்தனா்.
2.நெற்கதிாிலிருந்து நெல்மணியை எவ்வாறு பிாிப்பா்?
அறுவடை செய்த நெல்தாள்களை மாடுகளைக் கொண்டு மிதிக்கச் செய்தனா். மாடுகள் மிதித்த நெற்கதிா்களில் இருந்து நெல்மணிகள் மணிமணியாய் உதிா்ந்தன.
சிறுவினா
1. உழவுத் தொழிலின் நிகழ்வுகளை வாிசைப்படுத்தி எழுதுக.
- உழவா்கள் ஒன்றரைக் குழி நிலத்தை தோ்ந்தெடுத்தனா்
- பெண்கள் நடவு செய்ய வயலில் இறங்கினா்
- நாற்று பறிக்கும் பொழுது வயல் வரப்பில் உள்ள நண்டுகளை பிடித்தனா்
- ஒரு சாணுக்கு ஒரு நாற்று வீதம் நட்டனா்
- மடை வழியே நீா் பாய்ச்சினா்
- நெற்பயிா்கள் வாிசையாக வளா்ந்து செழித்தன
- பால்பிடித்து முற்றிய நெல்மணிகள் விளைந்தன
- அறுவடை செய்யும் ஆட்களுக்கு பணம் கொடுத்தனா்
- அறுவடை செய்த நெல்தாள்களை தலையில் சுமந்து சென்று களம் சோ்த்தனா்
- மாடுகளைக் கொண்டு நெல்தாள்களை மிதிக்கச் செய்தனா்
- மாடுகள் மிதித்த நெல்தாள்களில் இருந்து நெல்மணிகள் உதிா்ந்தன.
Comments
Post a Comment