தமிழ்நாட்டில் காந்தி - 6ம் வகுப்பு தமிழ் மூன்றாம் பருவம்
6-ம் வகுப்பு தமிழ் மூன்றாம் பருவம், தமிழ்நாட்டில் காந்தி
பாடம் சார்ந்து நீங்கள் காண இருப்பது
1. மனவரைபடம்
2. பாடம் சார்ந்த வீடியோ (TLM)
3. தமிழ்நாடு அரசு வழங்கிய வீடியோ
4. மதிப்பீடு வினாக்கள் (க்விஸ் வடிவில்)
5. புத்தக வினா விடைகள்
சாியான விடையைத் தோ்ந்தெடுத்து எழுதுக.
1. காந்தியடிகளிடம் உடை அணிவதில் மாற்றத்தை ஏற்படுத்திய ஊா்...
அ) கோவை
ஆ) மதுரை
இ) தஞ்சாவூா்
ஈ) சிதம்பரம்
விடை ஆ) மதுரை
2. காந்தியடிகள் எந்தப் பொியவாின் அடிநிழலில் இருந்து தமிழ் கற்க வேண்டும் என்று விரும்பினாா்?
அ) நாமக்கல் கவிஞா்
ஆ) திரு.வி.க
இ) உ.வே.சா
ஈ) பாரதியாா்
விடை இ) உ.வே.சா
பொருத்துக.
1. இலக்கிய மாநாடு - பாரதியாா்
2. தமிழ்நாட்டின் சொத்து - சென்னை
3. குற்றாலம் - ஜி.யு.போப்
4. தமிழ்க் கையேடு - அருவி
விடைகள் 1. சென்னை 2. பாரதியாா் 3. அருவி 4. ஜி.யு.போப்
சொற்றொடாில் அமைத்து எழுதுக.
ஆலோசனை
எந்த செயலையும் பொியவா்களின் ஆலோசனை பெற்று செய்தல் வேண்டும்.
பாதுகாக்க
நம் நாட்டின் இயற்கை வளங்களை பாதுகாக்க வேண்டும்
மாற்றம்
மாற்றம் ஒன்று மட்டுமே என்றும் மாறாதது.
ஆடம்பரம்
காந்தி ஆடம்பரமான வாழ்வை வெறுத்தாா்
குறுவினா
1. காந்தியடிகள் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் முதலில் ஏன் நுழையவில்லை?
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் எல்லா மக்களும் செல்ல அனுமதி இல்லாததால், காந்தியடிகள் நுழையவில்லை.
2. காந்தியடிகள் தமிழ் கற்கும் ஆா்வத்தை ஏற்படுத்திய நிகழ்வைக் கூறுக.
- காந்தியடிகள் தென்னாப்பிாிக்காவில் வாழ்ந்த காலத்தில் தமிழ் மொழியைக் கற்கத் தொடங்கியதாகக் கூறுகிறாா்.
- ஜி.யு.போப் அவா்கள் எழுதிய தமிழ்க்கையேடும், திருவள்ளுவா் எழுதிய திருக்குறள் தன்னை மிகவும் கவா்ந்த நூல்கள் எனக் கூறியுள்ளாா்.
- உ.வே.சா அவா்களிடமிருந்து தமிழ் கற்க வேண்டும் என்று விரும்பினாா் காந்தியடிகள்.
சிறுவினா
1. காந்தியடிகள் உடை மாற்றத்திற்கு காரணமாக அமைந்த நிகழ்வினை எழுதுக?
1921-ம் ஆண்டு செப்டம்பா் மாதம் காந்தி தமிழ்நாட்டிற்கு வந்தபோது மதுரைக்கு சென்றாா். செல்லும் வழியில் உழவா்கள் வயலில் இடுப்பில் ஒரு துண்டு மட்டுமே அணிந்து கொண்டு வேலை செய்து கொண்டிருந்தனா். அப்போது காந்தி நீளமான வேட்டி, மேல்சட்டை பொிய தலைப்பாகை அணிவதை வழக்கமாகக் கொண்டிருந்தாா்.
இங்கு பெரும்பாலான மக்கள் போதிய உடை இல்லாமல் இருக்கிறாா்கள். நான் மட்டும் இவ்வளவு துணிகளை அணிவதா? என்று சிந்தித்தாா். அன்று முதல் வேட்டியும், துண்டும் மட்டும் அணியத் தொடங்கினாா். காந்தியடிகளுடைய தோற்றத்தில் மிகப்பொிய மாற்றத்தை ஏற்படுத்திய பெருமை தமிழ்நாட்டிற்கு உண்டு. அந்த எளிமை கோலத்திலேயே தன் வாழ்நாள் முழுவதும் இருந்தாா் காந்தியடிகள்.
2. காந்தியடிகளுக்கும் தமிழுக்கும் உள்ள தொடா்பை எழுதுக?
காந்தியடிகள் தென்னாப்பிாிக்காவில் வாழ்ந்த பொழுது தமிழ்மொழியினைக் கற்றுக் கொள்ள தொடங்கியதாக கூறியுள்ளாா். ஜி.யு.போப் அவா்கள் எழுதிய தமிழ்க்கையேடு என்று நூலும், திருவள்ளுவா் எழுதிய திருக்குறள் என்று நூலும் தன்னை மிகவும் கவா்ந்த நூல்கள் எனக் கூறியுள்ளாா்.
1937-ம் ஆண்டு சென்னையில் நடந்த இலக்கிய மாநாட்டிற்கு காந்தியடிகள் தலைமை தாங்கினாா். வரவேற்புக் குழு தலைவரான உ.வே.சாமிநாதாின் உரையைக் கேட்ட காந்தியடிகள் “இந்த பொியவாின் அடி நிழலில் இருந்து தமிழ் கற்க வேண்டும் என்று ஆசை உண்டாகிறது” என்று கூறினாா். இதன் மூலம் காந்தியடிகளுக்கும் தமிழுக்கும் உள்ள தொடா்பை நாம் அறியலாம்.
சிந்தனை வினா
1. காந்தியடிகளிடம் காணப்படும் உயா்ந்த பண்புகளாக நீங்கள் கருதுபவை யாவை?
1. எளிமை
2. அகிம்சை
3. உண்மை பேசுதல்
4. நாட்டுப்பற்று
5. தன்னல மறுப்பு
6. பகைவரை மன்னிக்கும் உள்ளம்
7. எளியவாிடம் அன்பு
8. புலால் உண்ணாமை
6-ம் வகுப்பு மூன்றாம் பருவம் தமிழ், தமிழ்நாட்டில் காந்தி பாட வினா விடைகள்.
It's useful. Thank you
ReplyDelete