10ஆம் வகுப்பு தமிழ் இயல் 2 மொழித்திறன் வினா விடைகள்
10ஆம் வகுப்பு தமிழ் இயல் 2 மொழித்திறன் வினா விடைகள் பகுதி 1 - கற்பவை கற்றபின் பகுதி 2 - மொழியை ஆள்வோம் பகுதி 3 - மொழியோடு விளையாடு ------------------------------------------------ பகுதி 1 கற்பவை கற்றபின் 1. வண்ணச் சொற்களின் தொடர்வகைகளை எழுதுக. அ. பழகப் பழகப் பாலும் புளிக்கும் ஆ. வந்தார் அண்ணன் இ. வடித்த கஞ்சியில் சீலையை அலசினேன். ஈ. அரிய கவிதைகளின் தொகுப்பு இது. உ. மேடையில் நன்றாகப் பேசினான். விடை அ. பழகப் பழகப் - அடுக்குத் தொடர் ஆ. வந்தார் அண்ணன் - வினைமுற்றுத் தொடர் இ. வடித்த கஞ்சி - பெயரெச்சத் தொடர் ஈ. கவிதைகளின் தொகுப்பு - வேற்றுமைத் தொகாநிலைத் தொடர் உ. நன்றாகப் பேசினான் - வினையெச்சத் தொடர் 2. கீழ்க்காணும் பத்தியில் உள்ள தொடர் வகைகளை எடுத்து எழுதுக. மாடியிலிருந்து இறங்கினார் முகமது. அவர் பாடகர். பாடல்களைப் பாடுவதும் கேட்பதும் அவருக்கு பொழுதுபோக்கு. அவரது அறையில் கேட்ட பாடல்களையும் கேட்காத பாடல்களையும் கொண்ட குறுந்தகடுகளை அடுக்கு அடுக்காக வைத்திருப்பார். விடை அ. இறங்கினார் முகமது - வினைமுற்றுத் தொடர் ஆ. அவர் பாடகர் - எழுவாய்த் தொடர் இ. கேட்ட பாடல் - பெயரெச்சத் த...