சிவப்பு/சிகப்பு எது சரி தெரியுமா?

சிவப்பு, சிகப்பு எது சரி

 தமிழ் இலக்கணம் 2

சிகப்பு, சிவப்பு ஆகிய இரண்டு சொற்களில் எது சரியான சொல் என்று உங்களுக்குத் தெரியுமா? சிவப்பு என்ற சொல்லையும் நாம் பயன்படுத்துகிறோம். சிகப்பு என்ற சொல்லையும் பயன்படுத்துகிறோம். ஆனால் எந்தச் சொல் சரியானது என்ற குழப்பம் ஏற்படுகையில் அதன் வேர்ச்சொல் கொண்டும், வினைச்சொல் கொண்டும் அறிந்து கொள்ளலாம். 

    இந்தப் பதிவு எது சரியான சொல் என்று சில எடுத்துக்காட்டுகள் மூலம் எடுத்துரைக்கும். அதன்மூலம் சரியான சொல் எது என்பதை நீங்கள் அறிந்து கொள்ளலாம். இந்தத் தகவல்களை நீங்கள் காணொலியாகக் காண விரும்பினால் CLICK HERE

    கீழ்க்கண்ட தொடர்களைப் பாருங்கள்.

  • 1.    வெட்கத்தில் முகம் சிவந்தது.
  • 2.    சிகப்பரிசி தரும் நன்மைகள்  
  • 3.    நான் சிகப்பு மனிதன்.
  • 4.    சிகப்பு ரோஜாக்கள்
  • 5.    மாலை வானம் சிவந்து காணப்பட்டது.
  • 6.    வீட்டிற்கு சிவப்பு வண்ணம் பூசினேன்.
  • 7.    வெள்ளை அணு - சிவப்பணு
  • 8.    சிவக்குமார் வீட்டிற்கு வந்தார்
  • 9.    சிகப்பு முள்ளங்கி, சிகப்பு குடை மிளகாய்
  • 10. சிகப்பு கீரை சாப்பிடுவது நல்லது

இங்குள்ள 10 தொடர்களில் சில இடங்களில் சிகப்பு என்ற எடுத்தாளப்பட்டுள்ளதை நீங்கள் காணலாம். அவை பேச்சுமொழியில் இருந்து அவ்வண்ணமே எழுத்து மொழிக்கும் வந்துள்ளன. ஆனால் அந்த இடங்களில் நிறத்தை குறிக்க மட்டுமே சிகப்பு என்ற சொல் பயன்படுத்தப்பட்டள்ளதை நீங்கள் பார்க்க முடியும். ஆனால் நிறத்தைக் குறிப்பது மட்டுமல்லாமல் வினைச்சொல்லாகவும் வரும் இடங்களில் சிவப்பு, சிவந்து, சிவந்தது என்றுதான்  வந்துள்ளன. சிகந்தன என்று வரவில்லை.

சிவ, சிவந்து, சிவந்தது, சிவந்தன ஆகிய சொற்கள் மூலம் சிவப்பு என்ற சொல்லே சரியானது என்பது தெளிவுபடுகிறது. ஆகவே சிவப்பு என்பதே சரியான சொல். மேற்கண்ட தொடர்களில் பேச்சுமொழியில் உள்ள சிகப்பு என்ற சொல் கீழ்க்காணும் தொடர்களில் உள்ளவை போல் வருவதே சிறப்பு. 

  • 1.    சிவப்பரிசி தரும் நன்மைகள்.
  • 2.    நான் சிவப்பு மனிதன்.
  • 3.    சிவப்பு ரோஜாக்கள்.
  • 4.    சிவப்பு முள்ளங்கி, சிவப்பு குடை மிளகாய்.
  • 5.    சிவப்பு கீரை சாப்பிடுவது நல்லது.


இந்தப் பதிவிலிருந்து சிவப்பு என்ற சொல்லே சரியானது என்று நீங்கள் அறிந்திருப்பீர்கள். மேற்கண்ட தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்திருப்பின் உங்கள் மேலான கருத்தையும், ஏதேனும் மேம்படுத்த வேண்டுமென்று நீங்கள் நினைத்தால் உங்கள் ஆலோசனையும் வழங்க வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன். 


உங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி🙏

Comments

Popular posts from this blog

6ம் வகுப்பு தமிழ் முதல் பருவம் வினா விடைகள்

ஒற்றுமையே உயா்வு - 7ம் வகுப்பு கட்டுரை

புத்தகம் வாங்கி அனுப்புமாறு உறவினா் ஒருவருக்குக் கடிதம் எழுதுக.