ஏமாந்து என்பதன் பொருள் தெரியுமா?

ஏமாந்து என்ற சொல்லின் சரியான பொருள் என்னவென்று தெரியுமா?

தமிழ் இலக்கணம் 1

ஏமாந்து என்ற சொல்லை பெரும்பாலான மக்கள் ஏமாற்றம் என்ற பொருளில் வெகுகாலமாக பயன்படுத்தி வருகின்றனர்.  ஆனால் ஏமாந்து என்ற சொல்லிற்கான பொருள் அதுவன்று.  இந்தப் பதிவில் அச்சொல்லின் சரியான பொருள் என்னவென்று தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

ஏமாந்து என்ற சொல்லை நாம் ஏமாறுதல் என்று பொருளில் பேசுகின்றோம் எழுதுகின்றோம். ஆனால் ஏமாந்து என்றால் மகிழ்ந்து என்றே பொருள். இங்குள்ள 10 தொடர்களிலும் ஏமாந்து என்ற சொல் ஏமாற்றம் என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆகையால் இந்த 10 தொடர்களும் தவறு. தொடர்களில் உள்ள தவற்றைத் திருத்தி சரிசெய்ய முயலுங்கள். விடைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

இந்தத் தலைப்பு சார்ந்த செய்திகளை நீங்கள் காணொலியாகக் காண விரும்பினால் CLICK HERE

வினாக்கள்:-

  • 1.       ஏமாந்து போகாதீர்கள்!
  • 2.       இரக்கப்பட்டு ஏமாந்தவர்கள் அதிகம்.
  • 3.       மக்கள் ஏமாந்தே பழகி விட்டனர்.
  • 4.       பணம் கொடுத்து ஏமாந்தேன்.
  • 5.       அவர் ஏமாந்ததை நினைத்து வருந்தினார்.
  • 6.       ஏமாந்தது போதும். இனியும் ஏமாற மாட்டோம்.
  • 7.       ஏமாந்தவன் வாழ்வில் இன்பம் ஏது? 
  • 8.       நான் ஏமாற்றவில்லை. ஏமாந்தேன்.
  • 9.       நீங்கள் எப்படி ஏமாந்தீர்கள்?
  • 10.   முயன்றால் ஏமாந்தவற்றை திரும்பப் பெறலாம்.


விடைகள்:-

  • 1.       ஏமாறிப் போகாதீர்கள்!
  • 2.       இரக்கப்பட்டு ஏமாறியவர்கள் அதிகம்.
  • 3.       மக்கள் ஏமாறியே பழகி விட்டனர்.
  • 4.       பணம் கொடுத்து ஏமாறினேன்.
  • 5.       அவர் ஏமாறியதை நினைத்து வருந்தினார்.
  • 6.       ஏமாறியது போதும். இனியும் ஏமாற மாட்டோம்.
  • 7.       ஏமாறியவன் வாழ்வில் இன்பம் ஏது?
  • 8.       நான் ஏமாற்றவில்லை. ஏமாறினேன்.
  • 9.       நீங்கள் எப்படி ஏமாறினீர்கள்?
  • 10.   முயன்றால் ஏமாறியவற்றைத் திரும்பப் பெறலாம்.


    இந்தப் பதிவின் மூலம் ஏமாந்து என்ற சொல்லைத் தவிர்த்து ஏமாற்றம் என்ற சொல்லை நாம் பயன்படுத்த வேண்டும் என்று நீங்கள் அறிந்திருப்பீர்கள் என்று நினைக்கின்றேன். இந்தப் பதிவில் இருந்து நீங்கள் புதிதாக ஒன்றைக் கற்றுக் கொண்டிருந்தால் உங்கள் மேலான கருத்தையும், எதையேனும் நான் மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்று நினைத்தால் உங்கள் ஆலோசனையும் வழங்கினால் பேருதவியாக இருக்கும் என்று நம்புகின்றேன். 

உங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி🙏


Comments

Popular posts from this blog

ஒற்றுமையே உயா்வு - 7ம் வகுப்பு கட்டுரை

6ம் வகுப்பு தமிழ் முதல் பருவம் வினா விடைகள்

புத்தகம் வாங்கி அனுப்புமாறு உறவினா் ஒருவருக்குக் கடிதம் எழுதுக.