Posts

10ஆம் வகுப்பு தமிழ் இயல் 2 மொழித்திறன் வினா விடைகள்

Image
 10ஆம் வகுப்பு தமிழ் இயல் 2 மொழித்திறன் வினா விடைகள் பகுதி 1 - கற்பவை கற்றபின் பகுதி 2 - மொழியை ஆள்வோம் பகுதி 3 - மொழியோடு விளையாடு ------------------------------------------------ பகுதி 1 கற்பவை கற்றபின் 1. வண்ணச் சொற்களின் தொடர்வகைகளை எழுதுக. அ. பழகப் பழகப் பாலும் புளிக்கும் ஆ. வந்தார் அண்ணன் இ. வடித்த கஞ்சியில் சீலையை அலசினேன். ஈ. அரிய கவிதைகளின் தொகுப்பு இது. உ. மேடையில் நன்றாகப் பேசினான். விடை  அ. பழகப் பழகப் - அடுக்குத் தொடர்  ஆ. வந்தார் அண்ணன் - வினைமுற்றுத் தொடர் இ. வடித்த கஞ்சி - பெயரெச்சத் தொடர் ஈ. கவிதைகளின் தொகுப்பு - வேற்றுமைத் தொகாநிலைத் தொடர் உ. நன்றாகப் பேசினான் - வினையெச்சத் தொடர் 2. கீழ்க்காணும் பத்தியில் உள்ள தொடர் வகைகளை எடுத்து எழுதுக. மாடியிலிருந்து இறங்கினார் முகமது. அவர் பாடகர். பாடல்களைப் பாடுவதும் கேட்பதும் அவருக்கு பொழுதுபோக்கு. அவரது அறையில் கேட்ட பாடல்களையும் கேட்காத பாடல்களையும் கொண்ட குறுந்தகடுகளை அடுக்கு அடுக்காக வைத்திருப்பார். விடை அ. இறங்கினார் முகமது - வினைமுற்றுத் தொடர் ஆ. அவர் பாடகர் - எழுவாய்த் தொடர் இ. கேட்ட பாடல் - பெயரெச்சத் த...

10ஆம் வகுப்பு தமிழ் இயல் 1 மொழித்திறன் வினா விடைகள்

Image
 10ஆம் வகுப்பு தமிழ் இயல் 1 மொழித்திறன் வளர்பயிற்சி வினா விடைகள் பகுதி 1 - கற்பவை கற்றபின் பகுதி 2 - மொழியை ஆள்வோம் பகுதி 3 - மொழியோடு விளையாடு ------------------------------------------------------------ பகுதி 1 கற்பவை கற்றபின் 1. தேன், நூல், பை, மலர், வா - இத்தனிமொழிகளுடன் சொற்களைச் சேர்த்து தொடர்மொழிகளாக்குக. அ) தேன் -  தேன் இனிப்பாக இருக்கும் ஆ) நூல் - நூல் பல கற்க வேண்டும் இ) பை - பையை எடுத்து வா ஈ) மலர் - மலர் பறித்து வந்தேன் உ) வா - வா கடைக்குப் போகலாம் 2. வினை அடியை விகுதிகளுடன் இணைத்து தொழிற்பெயர்களை உருவாக்குக. காண், சிரி, படி, தடு அ) காண் - காணல், காணுதல், காணாமை ஆ) சிரி - சிரிப்பு, சிரித்தல், சிரிக்காமை இ) படி - படிப்பு, படித்தல், படிக்காமை ஈ) தடு - தடுப்பு, தடுத்தல், தடுக்காமை 3. தனிமொழி, தொடர்மொழி ஆகியவற்றைக் கொண்டு உரையாடலைத் தொடர்க.  அண்ணன்  -  எங்கே செல்கிறாய்? (தொடர்மொழி) தம்பி             -  கடைக்கு (தனிமொழி) அண்ணன்  -  கடையில் என்ன வாங்குகிறாய்? (தொடர்மொழி) தம்பி        ...

அது அஃது இது இஃது வரும் இடங்கள் (தமிழ் இலக்கணம் )

தமிழ் இலக்கணம்  ஒன்று, இரண்டு ஆகிய சொற்கள் உயிரெழுத்தில் தொடங்கும் சொற்களுக்கு முன் ஓர், ஈர் என்றும், உயிர்மெய் எழுத்தில் தொடங்கும் சொற்களுக்கு முன் ஒரு, இரு என்றும் வரும் என்று பார்த்தோம். அதேப்போல் அது, இது ஆகிய சொற்கள் உயிரெழுத்தில் தொடங்கும் சொற்களுக்கு முன் எவ்வாறு வரும் என்று காணொலி மூலம் நீங்கள் தெரிந்திருப்பீர்கள். காணொலியைப் பார்க்க CLICK HERE இங்கு சில பயிற்சி வினாக்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றைச் சரியான முறையில் திருத்தி எழுதவும். விடைகள் கீழே தரப்பட்டுள்ளன. (முடிந்தவரை நீங்களே விடைகளைக் கண்டுபிடிக்க முயலுங்கள்) 1. அது என்னுடைய ஊஞ்சல் 2. இது யாருடைய மிதிவண்டி 3. அது அணில் என்று எனக்குத் தெரியும் 4. நான் பார்த்தவற்றில் இது அருமையாக உள்ளது. 5. இஃது யார் புத்தகம்? 6. இஃது உன்னுடைய புத்தகங்களா? 7. அஃது கிராமத்திற்குச் செல்லும் வழி 8. அது ஒரு இனிய பாடல் 9. அது என் அண்ணணுடைய ஆடைகள் 10. இது அழகான ஓவியம் 11. அது என்னுடைய எழுதுபொருள்கள் 12. அவை அவளுடைய தோடு   விடைகள் 1. அஃது என்னுடைய ஊஞ்சல் 2. இது யாருடைய மிதிவண்டி 3. அஃது அணில் என்று எ...

ஒன்று இரண்டு சொற்கள் எங்குப் பயன்படுத்த வேண்டும்?

 ஓர் ஓரு சொற்கள் எங்கு பயன்படுத்த வேண்டும் அறிந்து கொள்வோம் வாருங்கள். தமிழ் இலக்கணம் 3 ஆங்கிலத்தில் a e i o u எழுத்துகளுக்கு முன் an பயன்படுத்த வேண்டும். மற்ற எழுத்துகளுக்கு முன் a பயன்படுத்த வேண்டும் என்ற விதி உள்ளது. An apple, An Orange, a Tree, a Post office. இதுபோல் தமிழிலும் உண்டு. ஒன்று என்ற சொல்லை  உயிரெழுத்தில் தொடங்கும் சொற்களுக்கு முன் ஓர் என்றும், உயிர்மெய் எழுத்தில் தொடங்கும் சொற்களுக்கு முன் ஒரு என்றும் பயன்படுத்த வேண்டும். அதேப் போல்தான் இரண்டு என்ற சொல்லையும் பயன்படுத்த வேண்டும்.  அதாவது இரண்டு என்ற சொல்லை உயிரெழுத்தில் தொடங்கும் சொற்களுக்கு முன் ஈர் என்றும், உயிர்மெய் எழுத்தில் தொடங்கும் சொற்களுக்கு முன் இரு என்றும் பயன்படுத்த வேண்டும்.  கீழ்க்காணும் 10 தொடர்களிலும் உள்ள பிழைகளைத் திருத்தி எழுத முயலுங்கள். விடைகள் கீழே தரப்பட்டுள்ளன. (முடிந்தவரை நீங்களே விடையளிக்க முயலுங்கள்) இவற்றை நீங்கள்  காணொலியாக காண விரும்பினால்  CLICK HERE வினாக்கள் 1.     ஒரு அழகிய சிற்றூரில் ஒரு குளம் இருந்தது 2.     இரண்டு மரத்தைய...

சிவப்பு/சிகப்பு எது சரி தெரியுமா?

சிவப்பு, சிகப்பு எது சரி   தமிழ் இலக்கணம் 2 சிகப்பு, சிவப்பு  இவ்விரண்டு சொற்களில் எது சரியான சொல் என்று உங்களுக்குத் தெரியுமா? சிவப்பு என்ற சொல்லையும் நாம் பயன்படுத்துகிறோம். சிகப்பு என்ற சொல்லையும் பயன்படுத்துகிறோம். ஆனால் எந்தச் சொல் சரியானது என்ற குழப்பம் ஏற்படுகையில் அதன் வேர்ச்சொல் கொண்டும், வினைச்சொல் கொண்டும் அறிந்து கொள்ளலாம்.      இந்தப் பதிவு எது சரியான சொல் என்று சில எடுத்துக்காட்டுகள் மூலம் எடுத்துரைக்கும். அதன்மூலம் சரியான சொல் எது என்பதை நீங்கள் அறிந்து கொள்ளலாம்.  இந்தத் தகவல்களை நீங்கள் காணொளியாகக் காண விரும்பினால்  CLICK HERE      கீழ்க்கண்ட தொடர்களைப் பாருங்கள். 1.     வெட்கத்தில் முகம் சிவந்தது. 2.     சிகப்பரிசி தரும் நன்மைகள்   3.     நான் சிகப்பு மனிதன். 4.     சிகப்பு ரோஜாக்கள் 5.     மாலை வானம் சிவந்து காணப்பட்டது. 6.     வீட்டிற்கு சிவப்பு வண்ணம் பூசினேன். 7.     வெள்ளை அணு - சிவப்பணு 8.   ...

ஏமாந்து என்பதன் பொருள் தெரியுமா?

ஏமாந்து என்ற சொல்லின் சரியான பொருள் என்னவென்று தெரியுமா? தமிழ் இலக்கணம் 1 ஏமாந்து என்ற சொல்லை பெரும்பாலான  மக்கள் ஏமாற்றம் என்ற பொருளில் வெகுகாலமாக  பயன்படுத்தி வருகின்றனர்.  ஆனால் ஏமாந்து என்ற சொல்லிற்கான பொருள் அதுவன்று.  இந்தப் பதிவில் அச்சொல்லின் சரியான பொருள் என்னவென்று தெரிந்து கொள்வோம் வாருங்கள். ஏமாந்து என்ற சொல்லை  நாம் ஏமாறுதல் என்று பொருளில் பேசுகின்றோம் எழுதுகின்றோம். ஆனால் ஏமாந்து என்றால் மகிழ்ந்து என்றே பொருள்.  புலவர் சொ. ஞானசம்பந்தன் அவர்கள் எழுதிய “தமிழைத் திருத்தமாக எழுதுவது எப்படி” என்ற நூலில் இது பற்றிக் கூறியுள்ளார்.  இங்குள்ள 10 தொடர்களிலும் ஏமாந்து என்ற சொல் ஏமாற்றம் என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது. பேச்சுமொழியில் இவை போன்று தான் நாம் பயன்படுத்தி வருகின்றோம். இந்த 10 தொடர்களும் தவறு. தொடர்களில் உள்ள தவற்றைத் திருத்தி சரி செய்ய முயலுங்கள். விடைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. வினாக்கள்:- 1.        ஏமாந்து போகாதீர்கள்! 2.        இரக்கப்பட்டு ஏமாந்தவர்கள் அதிகம். 3. ...

தமிழ் இலக்கணம் தலைப்புகள்

  1000 தலைப்புகள் 1000 இலக்கணங்கள் 1000 விளக்கங்கள் கற்போம், கற்பிப்போம் வாழ்க தமிழ், வளர்க தமிழ்நாடு  வ.எ பாடத் தலைப்புகள்                       இணைப்பு     1 ஏமாந்து என்ற சொல் சரியா? இப்படி ஏமாந்துட்டீங்களே! Click Here 2 சிவப்பு, சிகப்பு எந்தச் சொல் சரி? சோக்கா சொன்னப்பா நீ! Click Here 3 பேச்சுமொழிய எழுத்துமொழியா இப்படிகூட மாத்தலாமா! வேற லெவல்பா  Click Here 4 மனதார, மனமார - எது சரி?   Click Here 5 தவறு என்ற சொல்லில் இத்தனை தவறா? யாரு சாமி நீ! விரைவில் 6 ஓர் ஒரு வரும் இடங்களில் இதை கவனீச்சீங்களா?  விரைவில் 7 அட இவ்வளவுதான் வினைத்தொகையா? சொல்லவே இல்ல விரைவில் 8 ஓரெழுத்து ஒரு மொழியில் வல்லினம் மிகுமா? இதுல இவ்வளவு நுணுக்கம் இருக்கா?  விரைவில் ...