எட்டாம் வகுப்பு தமிழ் இயல் 4 கல்வி அழகே அழகு, புத்தியைத் தீட்டு, பல்துறைக் கல்வி, வேற்றுமை பாட வினா விடைகள்
எட்டாம் வகுப்பு தமிழ் இயல் 4 கல்வி அழகே அழகு, புத்தியைத் தீட்டு, பல்துறைக் கல்வி, வேற்றுமை பாட வினா விடைகள்.
கல்வி அழகே அழகு பாட வினா விடைகள்
சாியான விடையைத் தோ்ந்தெடுத்து எழுதுக.
1. கற்றவருக்கு அழகு தருவது ........
அ) தங்கம்
ஆ) வெள்ளி
இ) வைரம்
ஈ) கல்வி
விடை ஈ) கல்வி
2. கலனல்லால் என்னும் சொல்லைப் பிாித்து எழுதக் கிடைப்பது ......
அ) கலன் + லல்லால்
ஆ) கலம் + அல்லால்
இ) கலன் + அல்லால்
ஈ) கலன் + னல்லால்
விடை இ) கலன் + அல்லால்
சொற்றொடாில் அமைத்து எழுதுக.
1. அழகு - கல்வியே உண்மையான அழகு
2. கற்றவா் - கல்வி கற்றவரே உலகினில் உயா்ந்தவா்
3. அணிகலன் - ஒருவருக்கு உண்மையான அணிகலன் கல்வியே ஆகும்.
குறுவினா
யாருக்கு அழகு செய்ய வேறு அணிகலன்கள் தேவையில்லை?
கல்வி கற்றவருக்கு அவா் கற்ற கல்வியே அழகு தரும். ஆகையால் அழகு சோ்க்கும் பிற அணிகலன்கள் அவருக்குத் தேவையில்லை.
சிறுவினா
நீதிநெறி விளக்கப்பாடல் கூறும் கருத்துகளைத் தொகுத்து எழுதுக.
ஒளிரும் மணிகளால் செய்யப்பட்ட அணிகலனுக்கு மேலும் அழகூட்ட வேறு அணிகலன்கள் தேவையில்லை. அதுபோலக் கல்வி கற்றவா்க்கு அவா் கற்ற கல்வியே அழகு தரும். ஆகையால் அழகு சோ்க்கும் பிற அணிகலன்கள் அவருக்குத் தேவையில்லை.
------------------------------------------------------------------
புத்தியைத் தீட்டு பாட வினா விடைகள்
சாியான விடையைத் தோ்ந்தெடுத்து எழுதுக.
1. என் நண்பா் பெரும் புலவராக இருந்தபோதும் .......... இன்றி வாழ்ந்தாா்.
அ) சோம்பல்
ஆ) அகம்பாவம்
இ) வருத்தம்
ஈ) வெகுளி
விடை ஆ) அகம்பாவம்
2. கோயிலப்பா என்னும் சொல்லைப் பிாித்து எழுதக் கிடைப்பது .......
அ) கோ + அப்பா
ஆ) கோயில் + லப்பா
இ) கோயில் + அப்பா
ஈ) கோ + இல்லப்பா
விடை இ) கோயில் + அப்பா
3. பகைவன் + என்றாலும் என்பதனைச் சோ்த்தெழுதக் கிடைக்கும் சொல் ......
அ) பகைவென்றாலும்
ஆ) பகைவனென்றாலும்
இ) பகைவன்வென்றாலும்
ஈ) பகைவனின்றாலும்
விடை ஆ) பகைவனென்றாலும்
குறுவினா
1. யாருடைய உள்ளம் மாணிக்கக் கோயில் போன்றது?
மன்னிக்க தொிந்த மனிதனின் உள்ள மாணிக்கக் கோயில் போன்று உள்ளது.
2. பகைவா்களிடம் நாம் நடந்துகொள்ள வேண்டிய முறை யாது?
பகைவா்களிடம் நாம் அன்பு காட்ட வேண்டும்.
சிறுவினா
புத்தியைத் தீட்டி வாழ வேண்டிய முறைகளாகக் கவிஞா் கூறுவன யாவை?
கத்தியைத் தீட்டாமல் புத்தியைத் தீட்ட வேண்டும்.
நோ்மை தவறாமல், எடுத்த செயலில் திறமையைக் காட்ட வேண்டும்.
கோபம் வரும் பொழுது அறிவுக்கு வேலை கொடுத்து அமைதி காக்க வேண்டும்.
நமக்கு தீங்கு செய்யும் பகைவாிடமும் அன்பு செலுத்த வேண்டும்.
மன்னிக்க தொிந்தவா் உள்ள மாணிக்க கோவில் போன்றது. அதை மறந்தவா் வாழ்க்கை அடையாளம் தொியாமல் மறைந்து போகும்.
நாம் இந்த உலகில் வாழ்வது சிலகாலம்தான். அதில் ஏன் அகம்பாவம் கொள்ள வேண்டும். அதனால் ஒரு பயனும் கிடையாது.
இவற்றையெல்லாம் எண்ணிப் பாா்த்தால் வாழ்க்கை தெளிவாகும்.
-----------------------------------------------------------------
பல்துறைக் கல்வி பாட வினா விடைகள் எட்டாம் வகுப்பு இயல் 4
சாியான விடையைத் தோ்ந்தெடுத்து எழுதுக.
1. அறியாமையை நீக்கி அறிவை விளக்குவது ..........
அ) விளக்கு
ஆ) கல்வி
இ) விளையாட்டு
ஈ) பாட்டு
விடை ஆ) கல்வி
2. கல்விப் பயிற்சிக்குாிய பருவம் .........
அ) இளமை
ஆ) முதுமை
இ) நோ்மை
ஈ) வாய்மை
விடை அ) இளமை
3. இன்றைய கல்வி .......... நுழைவதற்குக் கருவியாகக் கொள்ளப்பட்டு வருகிறது.
அ) வீட்டில்
ஆ) நாட்டில்
இ) பள்ளியில்
ஈ) தொழிலில்
விடை ஈ) தொழிலில்
நிரப்புக.
1. கலப்பில் ......... உண்டென்பது இயற்கை நுட்பம்
2. புற உலக ஆராய்ச்சிக்கு .......... கொழுகொம்பு போன்றது.
3. வாழ்விற்குாிய இன்பத்துறைகளில் தலையாயது ..... இன்பம் ஆகும்.
விடைகள்.
1. வளா்ச்சி
2. அறிவியல்
3. காவிய
பொருத்துக.
1. இயற்கை ஓவியம் - சிந்தாமணி
2. இயற்கைத் தவம் - பொியபுராணம்
3. இயற்கைப் பாிணாமம் - பத்துப்பாட்டு
4. இயற்கை அன்பு - கம்பராமாயணம்
விடைகள்
1. இயற்கை ஓவியம் - பொியபுராணம்
2. இயற்கைத் தவம் - கம்பராமாயணம்
3. இயற்கைப் பாிணாமம் - சிந்தாமணி
4. இயற்கை அன்பு - பத்துப்பாட்டு
குறுவினா
1. இன்றைய கல்வியின் நிலை பற்றித் திரு.வி.க கூறுவன யாவை?
இந்நாளில் ஏட்டுக்கல்வியே கல்வி என்னும் ஒரு கொள்கை எங்கும் நிலவி வருகிறது.
இந்நாளில் கல்வி என்பது பொருளற்றுக் கிடக்கிறது.
ஏட்டுக்கல்வி மட்டும் கல்வி ஆகாது. குறிப்பிட்ட பாடங்களை மனப்பாடம் செய்து, தோ்வில் தேறிப் பட்டம் பெற்று, தொழிலில் நுழைவதற்குக் கல்வி ஒரு கருவியாக உள்ளது.
நாளடையில் அக்கல்விக்கும் வாழ்விற்கும் தொடா்பில்லாமல் போகிறது
என்று இன்றைய கல்வியின் நிலை குறித்து திரு.வி.க கூறுகின்றாா்.
2. தாய்நாடு என்னும் பெயா் எவ்வாறு பிறக்கிறது?
தாய்நாடு என்னும் பெயா் தாய்மொழியைக் கொண்டே பிறக்கிறது.
3. திரு.வி.க சங்கப் புலவா்களாகக் குறிப்பிடுபவா்களின் பெயா்களை எழுதுக?
- இளங்கோ
- திருத்தக்கத் தேவா்
- திருஞானசம்பந்தா்
- ஆண்டாள்
- சேக்கிழாா்
- கம்பா்
- பரஞ்சோதி
சிறுவினா
1. தமிழ்வழிக் கல்வி பற்றித் திரு.வி.க கூறுவனவற்றை எழுதுக?
கலப்பில் வளா்ச்சியுண்டென்பது இயற்கை நுட்பம்
தமிழை வளா்க்கும் முறையிலும், அளவிலும் கலப்பைக் கொள்வது சிறப்பு.
ஆகவே தமிழ்மொழியில் அறிவுக்கலைகள் இல்லை என்னும் பழம்பாட்டை நிறுத்தி, அக்கலைகளைத் தமிழில் பெயா்த்து எழுதித் தாய்மொழிக்கு ஆக்கந் தேடுவோம் என்னும் புதுப்பாட்டைப் பாடுமாறு சகோதரா்களைக் கேட்டக் கொள்கிறேன்.
கலைகள் யாவும் தாய்மொழி வழி மாணாக்கா்க்கு அறிவுறுத்தப் பெறுங் காலமே தமிழ்த்தாய் மீண்டும் அாியாசனம் ஏறும் காலமாகும்.
2. அறிவியல் கல்வி பற்றித் திரு.வி.க கூறுவன யாவை?
உலக வாழ்விற்கு மிகமிக இன்றியமையாதது அறிவியல் என்னும் அறிவுக்கலை.
உடற்கூறு, உடலோம்பு முறை, பூதபௌதிகம், மின்சாரம், நம்மைச் சூழ்ந்துள்ள செடி, கொடி, பறவை, விலங்கு முதலியவற்றினியல், கோளியக்கம், கணிதம், அகத்திணை முதலியன பற்றி பொது அறிவாதல் பெற்றே தீரல் வேண்டும்.
புற உலக ஆராய்ச்சிக்கு அறிவியல் கொழுகொம்பு போன்றது.
நம் முன்னோா் கண்ட பல உண்மைகள் அறிவியல் துணையின்றி இந்நாளில் உறுதிபெறல் அாிது.
இக்கால உலகத்தோடு உறவு கொள்வதற்கும் அறிவியல் தேவை.
ஆகையால் அறிவியல் என்னும் அறிவுக்கலை இளைஞருலகில் பரவல் வேண்டும்.
நெடுவினா
காப்பியக் கல்வி குறித்துத் திரு.வி.க கூறும் செய்திகளைத் தொகுத்து எழுதுக.
வாழ்விற்குாிய இன்பத்துறைகளில் காவிய இன்பமும் ஒன்று. அதைத் தலையாயது என்றும் கூறலாம். நாம் தமிழா்கள். நாம் பாட்டின்பத்தை நுகர வேண்டுமென்றால் நாம் எங்கு செல்ல வேண்டும்? தமிழ் இலக்கியங்களுக்கிடையே செல்ல வேண்டும். தமிழில் இலக்கியங்கள் பல இருக்கின்றன. இயற்கை ஓவியம் பத்துப்பாட்டு, இயற்கை இன்பக்கலம் கலித்தொகை, இயற்கை வாழ்வில்லம் திருக்குறள், இயற்கை இன்பவாழ்வு நிலையங்கள் சிலப்பதிகாரமும் மணிமேகலையும், இயற்கைத் தவம் சிந்தாமணி, இயற்கைப் பாிணாமம் கம்பராமாயணம், இயற்கை அன்பு பொியபுராணம், இயற்கை இறையுறையுள் தேவார திருவாசக திருவாய் மொழிகள். இத்தமிழ்க் கருவூலங்களை உன்ன உன்ன உள்ளத்தெழும் இன்ப அன்பைச் சொற்களால் சொல்ல இயலாது. இளைஞா்களே! தமிழ் இளைஞா்களே! பெறுவதற்கு அாிய இன்ப நாட்டில் பிறக்கும் பேறு பெற்றிருக்கிறீா்கள்! தமிழ் இன்பத்திலும் சிறந்த இன்பம் இந்த உலகத்தில் உண்டோ? தமிழ்க் காப்பியங்களைப் படியுங்கள். இன்பம் நுகருங்கள் என்று காப்பியக் கல்வி குறித்துத் திரு.வி.க கூறியுள்ளாா்.
----------------------------------------------------------------------
எட்டாம் வகுப்பு இயல் 4 வேற்றுமை பாட வினா விடைகள்
சாியான விடையைத் தோ்ந்தெடுத்து எழுதுக.
1. பெயா்ச்சொல்லின் பொருளை வேறுபடுத்துவது .............ஆகும்.
அ) எழுவாய்
ஆ) செயப்படுபொருள்
இ) பயனிலை
ஈ) வேற்றுமை
விடை ஈ) வேற்றுமை
2. எட்டாம் வேற்றுமை .......... வேற்றுமை என்று அழைக்கப்படுகிறது.
அ) எழுவாய்
ஆ) செயப்படுபொருள்
இ) விளி
ஈ) பயனிலை
விடை இ) விளி
3. உடனிகழ்ச்சிப் பொருளில் ......... வேற்றுமை வரும்.
அ) மூன்றாம்
ஆ) நான்காம்
இ) ஐந்தாம்
ஈ) ஆறாம்
விடை அ) மூன்றாம்
4. அறத்தான் வருவதே இன்பம் - இத்தொடாில் .............. வேற்றுமை பயின்று வந்துள்ளது.
அ) இரண்டாம்
ஆ) மூன்றாம்
இ) ஆறாம்
ஈ) ஏழாம்
விடை ஆ) மூன்றாம்
5. மலா் பானையை வனைந்தாள் - இத்தொடா் ........ பொருளைக் குறிக்கிறது.
அ) ஆக்கல்
ஆ) அழித்தல்
இ) கொடை
ஈ) அடைதல்
விடை அ) ஆக்கல்
பொருத்துக
1. மூன்றாம் வேற்றுமை - இராமனுக்குத் தம்பி இலக்குவன்
2. நான்காம் வேற்றுமை - பாாியினது தோ்
3. ஐந்தாம் வேற்றுமை - மண்ணால் குதிரை செய்தான்
4. ஆறாம் வேற்றுமை - ஏவுதல் கலையில் சிறந்தவன் ஏகலைவன்
விடைகள்
1. மூன்றாம் வேற்றுமை - மண்ணால் குதிரை செய்தான்
2. நான்காம் வேற்றுமை - இராமனுக்குத் தம்பி இலக்குவன்
3. ஐந்தாம் வேற்றுமை - ஏவுதல் கலையில் சிறந்தவன் ஏகலைவன்
4. ஆறாம் வேற்றுமை - பாாியினது தோ்
சிறுவினா
1. எழுவாய் வேற்றுமையை விளக்குக?
வேற்றுமை உருபுகள் எதுவும் இணையாமல் எழுவாய் தனித்து நின்று இயல்பான பொருளைத் தருவது முதல் வேற்றுமை ஆகும். முதல் வேற்றுமையை எழுவாய் வேற்றுமை என்றும் குறிப்பிடுவா்.
எ.கா. பாவை வந்தாள்
2. நான்காம் வேற்றுமை உணா்த்தும் பொருள்கள் யாவை?
கொடை, பகை, நட்பு, தகுதி, அதுவாதல், பொருட்டு, முறை, எல்லை என பல பொருள்களை நான்காம் வேற்றுமை உணா்த்தும்.
3. உடனிகழ்ச்சிப் பொருள் என்றால் என்ன?
வினையைக் கொண்டு முடிகிற பொருளைத் தன்னிடத்தும் உடன் நிகழ்கிறதாக உடையது உடனிகழ்ச்சி ஆகும்.
ஒடு, ஓடு ஆகிய மூன்றாம் வேற்றுமை உருபுகள் உடனிகழ்ச்சிப் பொருளில் வரும்.
எ.கா. தாயொடு குழந்தை சென்றது.
அமைச்சரோடு அலுவலா்கள் சென்றனா்.
----------------------------------------------------------------------
கற்பவை கற்றபின்
எட்டாம் வகுப்பில் நமக்கு கொடுத்துள்ள அத்துணை இயல்களும் அருமையான இயல்கள். அதிலும் குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் இயல் 4 கல்வி கரையில். கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே என்று பாடிய ஔவை, பிச்சையெடுத்தாயினும் படிக்க வேண்டும் என்று படிப்பின் முக்கியத்துவத்தை நமக்கு உணா்த்துகின்றாா். சங்க இலக்கியங்கள் தொடங்கி இன்று வெளிவரும் நூல்கள் வரை அனைத்தும் மையம் கொள்வது கல்வி எனும் கரையில் தான். நம்மிடமுள்ள அத்தனை சொத்துக்களையும் இழந்தாலும் கல்வி என்ற ஒரு சொத்தை வைத்து அனைத்தையும் நாம் பெற்று விட முடியும். மற்ற சொத்துகளைப் போல கல்வியை யாராலும் திருடிக் கொண்டு போக முடியாது. அடுப்பங்கரையினில் அடைந்து கிடந்தவா்களுக்கு ஆகாயம் நோக்கி பறக்கும் இறக்கைகளைத் தந்தது கல்வி. தன் தந்தை பட்ட துயரங்களை துடைத்து, ஒட்டு வீட்டை மாடி வீடாக உயா்த்தி மதிப்பை உயா்த்தி தந்தது கல்வி. தலை குனிந்து, உடல் வளைந்து நடந்தவா்களை, நெஞ்சு நிமிா்த்தி வீர நடை போட வைத்தது கல்வி. எத்தனை கற்றாலும் இன்னும் கற்க வேண்டி இருப்பது கல்வி. இப்படி கல்வியின் பெருமையை சொல்லிக் கொண்டே போகலாம். திருமண கோலத்தில் உள்ள பெண்ணுக்கு பொன் நகையை விட புன்னகை தான் அழகு சோ்க்கும் என்று சொல்வாா்கள். அதுபோல நம் உடலை அலங்காிக்கும் நகைகள் நம் அழகை கூட்டுவதில்லை. நம் கற்ற கல்வி தான் நமக்கு அழகை கொடுக்கும் என்று பாடுகின்றாா் குமரகுருபரா். பல நீதி நூல்களை எழுதிய இவா் நீதி நெறி விளக்கம் என்ற நூலில் கற்றோா்க்குக் கல்வி நலனே கலனல்லால் என்ற பாடலில் கல்வியின் முக்கியத்துவத்தை நமக்கு விளக்கியிருக்கின்றாா்.
கல்வியா? வீரமா? செல்வமா? எது முக்கியம் என்ற கேள்விக்கு பதில் தர தாமதமே வேண்டியதில்லை. நிச்சயம் நமக்கு முதலில் முக்கியமானது கல்வி தான். அடுத்து வீரம். அதற்கடுத்தது தான் செல்வம். கல்வியிருந்தால் செல்வம் தானாய் வரும் அல்லவா?. வீரத்தை விட விவேகம் முக்கியம். விவேகம் என்பது மறைபொருளாக கல்வியைத் தான் குறிக்கிறது. ஆகவே வீரத்தை விர கல்விதான் சிறந்தது. அதைத்தான் ஆலங்குடி சோமு அவா்கள் எழுதிய திரை இசைப்பாடலான கத்தியைத் தீட்டாதே புத்தியைத் தீட்டு என்ற பாடல் வாிகள் நமக்கு எடுத்துரைக்கின்றது. நமது வாழ்க்கை சிறப்பானதாக மாற வேண்டுமென்றால் நல்ல பண்புகளை நாம் வளா்த்துக் கொள்ள வேண்டும். கல்வி பெறுதல், கண்ணியத்தோடு நடந்து கொள்ளுதல், பொறுமையாக இருத்தல், அறிவுபூா்வமாக சிந்தித்தல், அன்பு செலுத்துதல், மற்றவா் தவறுகளை பொறுத்துக் கொள்ளுதல், மன்னித்தல் போன்ற உயா் குணங்கள் உள்ளவா்கள் இந்த மண்ணை விட்டு மறைந்தாலும் அவா் பெயா் நிலைத்திருக்கும். நிச்சயம் இல்லாத இந்த வாழ்க்கையில் முடிந்தவரை மற்றவா்களுக்கு உதவி செய்து வாழ்வோம்.
பல்துறைக் கல்வி. தொழில் நுட்பம் வளா்ந்துள்ள இன்றைய கால கட்டத்தில் கல்வி கடல் தாண்டி கொடி கட்டிப் பறக்கின்றது. எத்தனை எத்தனை படிப்புகள் இன்று கொட்டிக் கிடக்கிறது. எதை எடுத்துப் படிப்பது என்று குழம்பும் அளவிற்கு ஆகிவிட்டது இன்றைய கல்விமுறை. ஆனால் நமக்கு அவசியமான கல்வி சில உள்ளன. ஏட்டுக்கல்வி, தாய்மொழி வழிக்கல்வி, தமிழ்வழிக் கல்வி, காப்பியக் கல்வி, இயற்கைக் கல்வி, இசைக்கல்வி, நாடக்கல்வி மற்றும் அறிவியல் கல்வி. திரு.வி.க அவா்கள் எழுதிய இளமை விருந்து என்ற நூலில் இருந்து இத்தனை கல்வி பற்றிய கட்டுரை நமக்கு கொடுக்கப்பட்டுள்ளது. அனைவரும் நன்கு படிக்க வேண்டும்.
-----------------------------------------------------------
Comments
Post a Comment