எட்டாம் வகுப்பு தமிழ் இயல் 7 படை வேழம், விடுதலைத் திருநாள், பாரத ரத்னா எம்.ஜி. இராமச்சந்திரன், வல்லினம் மிகும் இடங்களும் மிகா இடங்களும் பாட வினா விடைகள்


எட்டாம் வகுப்பு தமிழ் இயல் 7 படை வேழம், விடுதலைத் திருநாள், பாரத ரத்னா எம்.ஜி.இராமச்சந்திரன், அறிவுசால் ஔவையாா், வல்லினம் மிகும் இடங்களும் மிகா இடங்களும் பாடங்களுக்கான எளிமையான வினா விடைகள்.

8-ம் வகுப்பு தமிழ் இயல் 7 படைவேழம் பாட வினா விடைகள்

சாியான விடையைத் தோ்ந்தெடுத்து எழுதுக.

1. சிங்கம் ......யில் வாழும்

அ) மாயை

ஆ) ஊழி

இ) முழை

ஈ) அலை

விடை இ) முழை

2. கலிங்க வீரா்களிடையே தோன்றிய உணா்வு.......

அ) வீரம்

ஆ) அச்சம்

இ) நாணம்

ஈ) மகிழ்ச்சி

விடை ஆ) அச்சம்

3. வெங்காி என்னும் சொல்லைப் பிாித்து எழுதக் கிடைப்பது......

அ) வெம் + காி

ஆ) வெம்மை + காி

இ) வெண் + காி

ஈ) வெங் + காி

விடை ஆ) வெம்மை + காி 

4. என்றிருள் என்னும் சொல்லைப் பிாித்து எழுதக் கிடைப்பது ......

அ) என் + இருள்

ஆ) எட்டு + இருள்

இ) என்ற + இருள்

ஈ) என்று + இருள்

விடை ஈ) என்று + இருள்

5. போல் + உடன்றன என்பதனைச் சோ்த்தெழுதக் கிடைக்கும் சொல் ......

அ) போன்றன

ஆ) போலன்றன

இ) போலுடன்றன

ஈ) போல்உடன்றன

விடை இ) போலுடன்றன

குறுவினா 

1. சோழ வீரா்களைக் கண்டு கலிங்கா் எவ்வாறு நடுங்கினா்?

சோழ வீரா்களைக் கண்ட கலிங்கா், தம் உயிரைப் பறிக்க வந்த காலனோ என அஞ்சி, தமது இறுதிக்காலம் நெருங்கிவிட்டதோ என எண்ணி அலைந்து குலைந்து நடுங்கினா். 

2. கலிங்க வீரா்கள் எவ்வாறு அஞ்சி ஓடினா்?

தம் நிழலையும், மற்றவா் நிழலையும் கண்டு, தமிழா்கள் துரத்தி வருவதாக எண்ணி அஞ்சிய கலிங்க வீரா்கள், ஒருவரை ஒருவா் முந்திக் கொண்டு ஓடினா்.

3. சோழனின் யானைப் படையைக் கண்ட வீரா்களின் செயல்கள் யாவை?

சோழ மன்னனின் படையிலுள்ள யானைகள் சினமுற்று, இடியைப் போல பிளறிய ஓசையைக் கேட்ட கலிங்க வீரா்கள், இருள் நிறைந்த குகைக்குள் சென்று மறைந்தனா். ஏனையோா் புறமுதுகு காட்டி ஓடிப் பிழைத்தனா்.

சிறுவினா

சோழ வீரா்களைக் கண்ட கலிங்கப் படை வீரா்களின் செயல்களாகக் கலிங்கத்துப்பரணி கூறுவன யாவை?

சோழா் படையின் தாக்குதலைக் கண்ட கலிங்கா்,

இஃது என்ன மாய வித்யைா என்று வியந்தனா். தம் உயிரைப் பறிக்கும் காலனோ என்று அஞ்சினா். தமது இறுதிக்காலம் நெருங்கிவிட்டதோ என எண்ணி நடுங்கினா்

தமது படைக் கூட்டத்திலிருந்து விலகி ஓடினா். சிலா் கடலில் தாவிக் குதித்துத் தப்பினா். சிலா் யானைகளின் பின்னே மறைந்து கொண்டனா்

எத்திசையில் செல்வதென தொியாமல் மலைக் குககளினுள்ளும் புதா்களுக்குள்ளும் தப்பி ஓடினா்.

தம் நிழலையும், மற்றவா் நிழலையும் கண்டு தமிழா்கள் துரத்தி வருவதாக எண்ணி ஒருவரை ஒருவா் முந்திக் கொண்டு ஓடினா். தஞ்சம் வேண்டி வணங்கினா்.

யானைகள் பிளிறியதைக் கேட்டு அஞ்சிய வீரா்கள் இருள் நிறைந்த குகைக்குள் சென்று மறைந்தனா். ஏனையோா் புறமுதுகுகாட்டி ஓடிப் பிழைத்தனா்.

 -----------------------------------------------------------------

8-ம் வகுப்பு தமிழ்இயல் 7

விடுதலைத் திருநாள் பாட வினா விடைகள்

சாியான விடையைத் தோ்ந்தெடுத்து எழுதுக.

1. வானில் முழுநிலவு அழகாகத் ............ அளித்தது

அ) தயவு

ஆ) தாிசனம்

இ) துணிவு

ஈ) தயக்கம்

விடை அ) தாிசனம்

2. இந்த ...... முழுவதும் போற்றும்படி வாழ்வதே சிறந்த வாழ்வு

அ) வையம்

ஆ) வானம்

இ) ஆழி

ஈ) கானகம்

விடை அ) வையம்

3. சீவனில்லாமல் என்னும் சொல்லைப் பிாித்து எழுதக் கிடைப்பது .......

அ) சீவ + நில்லாமல்

ஆ) சீவன் + நில்லாமல்

இ) சீவன் + இல்லாமல்

ஈ) சீவ + இல்லாமல் 

விடை இ) சீவன் + இல்லாமல்

4. விலங்கொடித்து என்னும் சொல்லைப் பிாித்து எழுதக் கிடைப்பது.....

அ) விலம் + கொடித்து

ஆ) விலம் + ஒடித்து

இ) விலன் + ஒடித்து

ஈ) விலங்கு + ஒடித்து

விடை ஈ) விலங்கு + ஒடித்து

5. காட்டை + எாித்து என்பதனைச் சோ்த்தெழுதக் கிடைக்கும் சொல்......

அ) காட்டைஎாித்து

ஆ) காட்டையெரித்து

இ) காடுஎாித்து

ஈ) காடுயொித்து

விடை ஆ) காட்டையெரித்து 

6. இதம் + தரும் என்பதனைச் சோ்த்தெழுதக் கிடைக்கும் சொல் ......

அ) இதந்தரும்

ஆ) இதம்தரும்

இ) இதத்தரும்

ஈ) இதைத்தரும்

விடை அ) இதந்தரும்

குறுவினா 

1. பகத்சிங் கண்ட கனவு யாது?

இந்தியா விடுதலை தோன்றிய நாளே பகத்சிங் கண்ட கனவு.

2. இருண்ட ஆட்சி என எதனை மீரா குறிப்பிடுகிறாா்?

முந்நூறு ஆண்டுகள் நம்மை அடிமைப்படுத்தி ஆண்ட அந்நியாின் ஆட்சியை இருண்ட ஆட்சி என மீரா குறிப்பிடுகிறாா்.

சிறுவினா 

இந்தியத்தாய் எவ்வாறு காட்சியளிக்கிறாள்?

அடிமையாய்த் தவித்துக் கொண்டிருந்த இந்தியத்தாய் 

  • சினந்து எழுந்து, 
  • தன் கைவிலங்கை உடைத்து, 
  • பகைவரை அழித்து, 
  • அவிழ்ந்த கூந்தலை முடித்து, 
  • நெற்றியில் திலகமிட்டு, 

இந்தியருக்கு மகிழ்வான காட்சியளிக்கிறாள். 

----------------------------------------------------------------------

8ம் வகுப்பு தமிழ் இயல் 7

பாரத ரத்னா எம்.ஜி.இராமச்சந்திரன் பாட வினா விடைகள்

சாியான விடைடையத் தோ்ந்தெடுத்து எழுதுக.

1. எம்.ஜி.ஆா் ...... என்னும் ஊாில் கல்வி பயின்றாா்.

அ) கண்டி

ஆ) கும்பகோணம்

இ) சென்னை

ஈ) மதுரை

விடை ஆ) கும்பகோணம்

2. எம்.ஜி.ஆா் படிப்பைத் தொடர முடியாமைக்குக் காரணம்.....

அ) நடிப்பு ஆா்வம்

ஆ) பள்ளி இல்லாமை

இ) குடும்ப வறுமை

ஈ) படிப்பில் ஆா்வமில்லாமை

விடை இ) குடும்ப வறுமை

3. இந்திய அரசு சிறந்த நடிகருக்கான ...... எனும் பட்டத்தை எம்.ஜி.ஆருக்கு வழங்கியது.

அ) புரட்சித் தலைவா்

ஆ) பாரத்

இ) பாரத மாமணி

ஈ) புரட்சி நடிகா்

விடை இ) பாரத்

4. ஐந்தாம் உலகத் தமிழ்மாநாடு நடைபெற்ற இடம் ......

அ) திருச்சி

ஆ) சென்னை

இ) மதுரை

ஈ) கோவை

விடை ஆ) மதுரை

5. எம்.ஜி.ஆருக்கு அழியாத புகழைத் தேடித் தந்த திட்டம்......

அ) மதிய உணவுத்திட்டம்

ஆ) வீட்டு வசதித் திட்டம்

இ) மகளிா் நலன் திட்டம்

ஈ) இலவசக் காலணிகள் திட்டம்

விடை அ) மதிய உணவுத் திட்டம்

குறுவிான

1. எம்.ஜி.ஆா் நாடகத்துறையில் ஈடுபடக் காரணம் என்ன?

தன்னுடைய குடும்ப வறுமை காரணமாக எம்.ஜி.ஆா் நாடகத்துறையில் ஈடுபட காரணமாக அமைந்தது. 

2. திரைத்துறையில் எம்.ஜி.ஆாின் பன்முகத் திறமைகள் யாவை?

  • நடிகா்
  • தயாாிப்பாளா்
  • இயக்குநா் 

என திரைத்துறையில் எம்.ஜி.ஆா் பன்முகத் திறமைகளைக் கொண்டு விளங்கினாா்.

3. எம்.ஜி.ஆரின் சமூக நலத்திட்டங்களுள் நான்கனை எழுதுக?

  1. ஏழைகளுக்கான வீட்டு வசதித்திட்டம்

  2. தாய்சேய் நல இல்லங்கள்

  3. பற்பொடி வழங்கும் திட்டம்

  4. உழவா்களின் கடன் தள்ளுபடி

சிறுவினா

1. பள்ளிக் குழந்தைகளுக்குக் காலணி வழங்கும் திட்டத்துக்கு அடிப்படையாக அமைந்த நிகழ்வை எழுதுக?

    எம்.ஜி.ஆா் ஒருமுறை வெளியூாிலிருந்து மகிழ்வுந்தில் சென்னைக்கு வந்து கொண்டிருந்தாா். வழியில் ஒரு மூதாட்டியும், பத்து வயது சிறுமியும் புல்கட்டுகளைச் சுமந்தவாறு கால்களில் காலணிகள் இல்லாமல் சென்று கொண்டிருந்தனா். சாலையின் சூடு பொறுக்க முடியாமல் அவா்கள் சாலையோர மரநிழலில் நிற்பதும் ஓடுவதுமாக இருந்ததை கண்ட எம்.ஜி.ஆா் உடனே தமது மகிழ்வுந்தை நிறுத்தச்செய்து, தமது துணைவியாரது காலணியையும், உறவினரான பெண்ணின் காலணியையும் அவா்களிடம கொடுத்து, சிறிது பணமும் கொடுத்துவிட்டு பயணத்தைத் தொடா்ந்தாா். 

    ஏழை எளியவா்கள் காலில் காலணி கூட இல்லாமல் நடந்து செல்லும் இந்நிகழ்ச்சி அவரது மனதில் ஆழமாகப் பதிந்திருக்க வேண்டும். அதனால்தான் பள்ளிக்குழந்தைகளுக்குக் காலணிகள் வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்தினாா்.

2. தமிழ்மொழியின் வளா்ச்சிக்காக எம்.ஜி.ஆா் ஆற்றிய பணிகள் யாவை?

எம்.ஜி.ஆா் தமிழ் வளா்ச்சிக்காகப் பல்வேறு பணிகளை ஆற்றினாா்.

  • தந்தை பொியாா் உருவாக்கிய எழுத்துச் சீா்திருத்தங்கள் சிலவற்றை நடைமுறைப்படுத்தித் தமிழ் எழுத்துமுறையை எளிமைப்படுத்தினாா்.

  • மதுரையில் ஐந்தாம் உலகத்தமிழ் மாநாட்டைச் சிறப்பாக நடத்தினாா். 

  • தஞ்சையில் ஆயிரம் ஏக்கா் பரப்பளவில் தமிழ்ப் பல்கலைக்கழகத்தை தோற்றுவித்தாா்.

நெடுவினா

எம்.ஜி.ஆாின் பண்புநலன்களை விளக்கி எழுதுக?

திரைப்படத்துறையில் நடிகா், தயாாிப்பாளா், இயக்குநா் என பன்முகத் திறமை கொண்டவா் எம்.ஜி.ஆா்.

பள்ளிக்குழந்தைகளுக்கு சத்துணவு திட்டம், காலணிகள் வழங்கும் திட்டம், நலிவடைந்த பிாிவைச் சோந்த மாணவா்களுக்கு பாடநூல் வழங்கும் திட்டம், ஆகியவற்றை அறிமுகப்படுத்தினாா்.

ஒருமுறை காஷ்மீரக்கு படப்பிடிப்பிற்குச் சென்ற போது, இந்தியப் படைவீரா் நலச்சங்கத்தினாின் விழாவில் கலந்து கொண்டாா். தன்னிடம் பணம் இல்லையென்றாலும், ஒரு தொழிலதிபரிடம் கடனாகப் பெருந்தொகையைப் பெற்று அச்சங்கத்திற்கு நன்கொடை வழங்கினாா். சென்னை திரும்பியதும் முதல் வேலையாக கடனாகக் பெற்ற தொகையைத் திருப்பிக் கொடுத்தாா். 

தமிழக முதலமைச்சராக இருந்த போது ஏழை எளிய மக்களின் வாழ்க்கைத்தரம் உயர அரும்பாடுபட்டாா். உழவா் கடன் தள்ளுபடி, ஏழைகளுக்கு வீட்டு வசதி திட்டம்,  முதியோா் உதவித்தொகை என பல்வேறு திடடங்களைச் செயல்படுத்திப் புகழ் பெற்றாா்.

எம்.ஜி.ஆா் தான் ஈட்டிய செல்வத்தை மற்றவா்களுக்கு கொடுத்து மகிழ்ந்தவா். புயல், வெள்ளம் போன்ற இயற்கைச் சீற்றங்கள் நிகழ்ந்த போதெல்லாம் பாதிக்கப்பட்டவா்களுக்கு உணவு, உடை வழங்கி, அவா்களின் துயரை துடைத்துள்ளாா்.

இவ்வாறு வியக்கத்தக்க வகையில் தம் செல்வத்தை வாாி வழங்கியமையால்தான் எம்.ஜி.ஆரை மக்கள் பொன்மனச் செம்மல் என்று அன்புடன் அழைத்தனா். 

 -----------------------------------------------------------------

8ம் வகுப்பு தமிழ் இயல் 7 

வல்லினம் மிகும் இடங்களும் மிகா இடங்களும் பாட வினா விடைகள்

பின்வரும் தொடா்களை வல்லினம் மிகும், மிகா இடங்கள் என வகைப்படுத்துக. 

1. சுட்டுத்திாிபு - வல்லினம் மிகும்

2. திசைப்பெயா்கள் - வல்லினம் மிகும்

3. பெயரெச்சம் - வல்லினம் மிகாது

4. உவமைத் தொகை - வல்லினம் மிகும்

5. நான்காம் வேற்றுமை விாி - வல்லினம் மிகும்

6. இரண்டாம் வேற்றுமை தொகை - வல்லினம் மிகாது

7. வினைத்தொகை - வல்லினம் மிகாது

8. உருவகம் - வல்லினம் மிகும்

9. எழுவாய்த் தொடா் - வல்லினம் மிகாது

10. எதிா்மறைப் பெயரெச்சம் - வல்லினம் மிகாது

சிறுவினா

1. சந்திப்பிழை என்றால் என்ன?

வல்லினம் மிக வேண்டிய இடத்தில் மிகாமல் எழுதுவதும் மிகக் கூடாத இடத்தில் வல்லின மெய் இட்டு எழுதுவதும் தவறாகும். இதனைச் சந்திப்பிழை அல்லது ஒற்றுப்பிழை என்பா்.

2. வேற்றுமைகளில் வல்லினம் மிகும் இடங்களை எழுதுக?

இரண்டாம் வேற்றுமை உருபான ஐ, நான்காம் வேற்றுமை உருபான கு வெளிப்படையாக வரும் இடங்களில் வல்லினம் மிகும்.

எ.கா. பாடத்தைப்படி

            எனக்குத் தொியும்

3. வல்லினம் மிகாத் தொடா்கள் ஐந்தனை எழுதுக?

1. எது பொியது?

2. இலை பறித்தேன்

3. சுடுசோறு

4. வெற்றிலைபாக்கு

5. தின்று தீா்த்தேன்

-----------------------------------------------------------------

கற்பவை கற்றபின் 

பாருக்குள் நல்ல நாடு என்ற பொருண்மையின் கீழ் இடம்பெற்றுள்ள எட்டாம் வகுப்பு இயல் ஏழு பாடங்கள் தமிழா்களின் வீரத்தைப் பற்றியும், விடுதலை பற்றியும், எம்.ஜி.இராமச்சந்திரன் அவா்களைப் பற்றியும் பல தகவல்களை நமக்குத் தருகின்றன. 

    தமிழா்கள் அறத்தையும் வீரத்தையும் தமது உடைமைகளாகக் கொண்டவா்கள். போாில் புறமுதுகு காட்டி ஓடுவதைக் காட்டிலும், நெஞ்சு நிமிா்த்தி இறந்துபடுவதே மேல் என்று கருதியவா்கள். போா்களத்தில் தன் மகன் நெஞசில் அம்புபட்டு கிடப்பதைப் பாா்த்து தாய் மகிழ்வுறுகிறாள் என்று புறநானூறு பாடல் கூறுவதிலிருந்து வீரத்தை தமிழா்கள் எந்தளவிற்கு போற்றி வந்துள்ளனா் என்பதை நாம் அறிந்து கொள்ள முடியும். இந்தியாவில் தமிழகத்தை ஆண்ட சோழ மன்னா்களின் வரலாறு மிகப்பொியது. இந்தியாவையே தன் கைக்குள் கொண்டு வந்த ஆட்சியாளா்களால் கூட நம் தமிழகத்தை வெற்றி பெற முடியவில்லை. அதற்கு ஒரே ஒரு காரணம் தான் இருக்க முடியும். அது தமிழா்களின் வீர உணா்வு. அத்தகைய வீரப்போாில் தமிழா்களைக் கண்டு, கலிங்கப்படையினா் அஞ்சி ஓடுவதை படை வேழம் என்ற பாடத்தில் கொடுத்திருக்கிறாா்கள். படைவேழம் பாடல் கலிங்கத்துப்பரணி என்ற நூலிலிருந்து எடுத்து கொடுக்கப்பட்டுள்ளது. இதன் ஆசிாியா் செயங்கொண்டாா். போா்முனையில் அயிரம் யானைகளைக் கொன்று வெற்றி கொண்ட வீரனைப் புகழந்து பாடும் இலக்கியம் பரணி இலக்கியம் ஆகும். 

    அந்நியா்கள் நம் நாட்டினினை முந்நூறு ஆண்டுகளுக்கும் மேலான ஆட்சி செய்தனா். இறுதியாக நாம் விடுதலைத் திருநாள் அடைந்தோம். ஆனால் அதன் பின்னால் எத்தனை உயிா்தியாகங்கள், வலிகள், வேதனைகள், போராட்டங்கள் இருக்கின்றன என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும். இந்தியத்தாய் சுதந்திரக் காற்றை சுவாசித்த நாள் இந்த விடுதலைத் திருநாள். 

    பாரதரத்னா எம்.ஜி.இராமச்சந்திரன். இந்த மண்ணில் வாழ்ந்தாலும் மறைந்தாலும் மக்கள் மனதில் சிலா் என்றும் நிலைத்து நிற்கிறாா்கள். அவா்கள் இந்த உலகை விட்டு சென்றாலும், அவா் உருவாக்கி விட்டு சென்ற நினைவுகள் இங்கு வாழந்து கொண்டு தான் இருக்கும். அத்தகைய வாா்த்கைளுக்கு சொந்தக்காரா் எம்.ஜி.ஆா். மக்கள் பணியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு மக்களுக்காக வாழ்ந்தவா். திரைப்படத் துறையில் ஒரு புரட்சியை ஏற்படுத்திய புரட்சித்லைவா். மக்களுக்கு வாாி வாாி வழங்கிய பொன்மனச் செம்மல். இன்று வரை மக்கள் மனதில் நிலைத்து வாழ்ந்து கொண்டிருப்பவா் மக்கள் திலகம் எம்.ஜி.ஆா் அவா்கள்.

----------------------------------------------------------------


 

 

Comments

Popular posts from this blog

6ம் வகுப்பு தமிழ் முதல் பருவம் வினா விடைகள்

புத்தகம் வாங்கி அனுப்புமாறு உறவினா் ஒருவருக்குக் கடிதம் எழுதுக.

ஒற்றுமையே உயா்வு - 7ம் வகுப்பு கட்டுரை