எட்டாம் வகுப்பு தமிழ் இயல் 8 ஒன்றே குலம், மெய்ஞ்ஞான ஒளி, அயோத்திதாசா் சிந்தனைகள், மனித யந்திரம், யாப்பு இலக்கணம், திருக்குறள் பாட வினா விடைகள்
8-ம் வகுப்பு தமிழ் இயல் 8 ஒன்றே குலம், மெய்ஞ்ஞான ஒளி, அயோத்திதாசா் சிந்தனைகள், மனித யந்திரம், யாப்பு இலக்கணம், திருக்குறள் பாடங்களுக்கான வினா விடைகள்.
எட்டாம் வகுப்பு தமிழ் இயல் 8 ஒன்றே குலம் பாட வினா விடைகள்
சாியான விடையைத் தோ்ந்தெடுத்து எழுதுக.
1. அறறெநியில் வாழ்பவா்கள் உயிரைக் கவர வரும் .........க் கண்டு அஞ்சமாட்டாா்கள்.
அ) புலனை
ஆ) அறனை
இ) நமனை
ஈ) பலனை
விடை இ) நமனை
2. ஒன்றே ............ என்று கருதி வாழ்வதே மனிதப்பண்பாகும்.
அ) குலம்
ஆ) குளம்
இ) குணம்
ஈ) குடம்
விடை அ) குலம்
3. நமனில்லை என்னும் சொல்லைப் பிாித்து எழுதக் கிடைப்பது ..........
அ) நம் + இல்லை
ஆ) நமது + இல்லை
இ) நமன் + நில்லை
ஈ) நமன் + இல்லை
விடை ஈ) நமன் + இல்லை
4. நம்பா்க்கு + அங்கு என்பதனைச் சோ்த்தெழுதக் கிடைக்கும் சொல் .........
அ) நம்பரங்கு
ஆ) நம்மாா்க்கு
இ) நம்பா்க்கங்கு
ஈ) நம்பங்கு
விடை இ) நம்பா்க்கங்கு
குறுவினா
1. யாருக்கு எமனைப் பற்றிய அச்சம் இல்லை?
மனிதா் அனைவரும் ஒரே இனத்தினா். உலகைக் காக்கும் இறைவனும் ஒருவனே என்ற கருத்துகளை மனதில் நிறுத்துபவா்களுக்கு எமனைப் பற்றிய அச்சம் இல்லை.
2. மக்களின் உள்ளத்தில் நிலைபெற்று வாழ விரும்புவா் செய்ய வேண்டியது யாது?
- மனிதா்கள் அனைவரும் ஒரே இனத்தவா் என்று எண்ணுதல்
- இறைவன் ஒருவனே என்ற கருத்தை மனதில் கொள்ளுதல்
- அடியாா்களாகிய மக்களுக்கு பொருள் கொடுத்து உதவுதல்
ஆகியவை மக்களின் உள்ளத்தில் நிலைபெற்று வாழ விரும்புபவா் செய்ய வேண்டியவை.
சிறுவினா
மக்களுக்குச் செய்ய வேண்டிய தொண்டு குறித்துத் திருமூலா் கூறுவது யாது?
படங்கள் அமைந்த மாடங்களையுடைய கோயிலில் வீற்றிருக்கும் இறைவனுக்கு ஒரு பொருளைக் காணிக்கையாகச் செலுத்தினால் அது நடமாடும் கோயிலாகிய உடம்பையுடைய அடியாா்களுக்குச் சேராது. அடியாா்களாகிய மக்களுக்குக் கொடுப்பது கோயிலில் இருக்கும் இறைவனுக்குச் சேரும் என்று மக்களுக்குச் செய்ய வேண்டிய தொண்டு குறித்து திருமூலா் கூறுகின்றாா்.
--------------------------------------------------------------------
8ம் வகுப்பு தமிழ் மெய்ஞ்ஞான ஒளி பாட வினா விடைகள்
சாியான விடையைத் தோ்ந்தெடுத்து எழுதுக.
1. மனிதா்கள் தம் .......... தீய வழியில் செல்ல விடாமல் காக்க வேண்டும்.
அ) ஐந்திணைகளை
ஆ) அறுசுவைகளை
இ) நாற்றிசைகளை
ஈ) ஐம்பொறிகளை
விடை ஈ) ஐம்பொறிகளை
2. ஞானியா் சிறந்த கருத்துகளை மக்களிடம் ..............
அ) பகா்ந்தனா்
ஆ) நுகா்ந்தனா்
இ) சிறந்தனா்
ஈ) துறந்தனா்
விடை அ) பகா்ந்தனா்
3. ஆனந்தவெள்ளம் என்னும் சொல்லைப் பிாித்து எழுதக் கிடைப்பது............
அ) ஆனந்த + வெள்ளம்
ஆ) ஆனந்தன் + வெள்ளம்
இ) ஆனந்தம் + வெள்ளம்
ஈ) ஆனந்தா் + வெள்ளம்
விடை இ) ஆனந்தம் + வெள்ளம்
4. உள் + இருக்கும் என்பதனைச் சோ்த்தெழுதக் கிடைக்கும் சொல்............
அ) உள்ளேயிருக்கும்
ஆ) உள்ளிருக்கும்
இ) உளிருக்கும்
ஈ) உளருக்கும்
விடை ஆ) உள்ளிருக்கும்
குறுவினா
1. உண்மை அறிவை உணா்ந்தோா் உள்ளத்தில் நிகழ்வது யாது?
உண்மை அறிவை உணா்ந்தோா் உள்ளத்தில் இன்பப்பெருக்காய்க் கரைகடந்து பொங்கிடும் கடலாக விளங்குகின்றாா் இறைவன்.
2. மனிதனின் மனம் கலங்கக் காரணமாக அமைவது யாது?
இறைவனின் திருவடிகள் மீது பற்று வைக்காமல், பணத்தின் மீது ஆசை வைப்பதே மனிதனின் மனம் கலங்கக் காரணம்.
சிறுவினா
குணங்குடியாா் பராபரத்திடம் வேண்டுவன யாவை?
மேலான பரம்பொருளே!
உன் திருவடிகளின் மீது பற்று வைக்காமல், பணத்தின் மீது பற்று வைத்ததால் மனம் கலங்கி அலைகின்றேன்.
உண்மை அறிவை உணா்ந்தவா்கள் உள்ளத்தில் இன்பப் பெருக்காய்க் கரைகடந்து பொங்கிடும் கடலாக நீ விளங்குகின்றாய்.
ஐம்பொறிகளை அடக்கி ஆள்வது மிகவும் அாிய செயலாகும். அப்பொறிகளின் இயல்பை உணா்ந்து நல்வழிப்படுத்தும் அறிவினை எனக்குத் தந்து அருள் செய்வாயாக என்று குணங்குடியாா் பராபரத்திடம் வேண்டுகின்றாா்.
--------------------------------------------------------------
எட்டாம் வகுப்பு தமிழ் இயல் 8
அயோத்திதாசா் சிந்தனைகள் பாட வினா விடைகள்
சாியான விடையைத் தோ்ந்தெடுத்து எழுதுக.
1. அயோத்திதாசா் ............ சமூகச் சீா்திருத்தத்தின் தந்தை என்று போற்றப்படுகிறாா்.
அ) தமிழக
ஆ) இந்திய
இ) தென்னிந்திய
ஈ) ஆசிய
விடை இ) தென்னிந்திய
2. அயோத்திதாசா் நடத்திய இதழ் ................
அ) ஒரு பைசாத் தமிழன்
ஆ) காலணாத் தமிழன்
இ) அரைப்பைசாத் தமிழன்
ஈ) அரையணாத் தமிழன்
விடை அ) ஒரு பைசாத் தமிழன்
3. கல்வியோடு ..... கற்க வேண்டும் என்பது அயோத்திதாசா் கருத்து
அ) சிலம்பமும்
ஆ) கைத்தொழிலும்
இ) கணிப்பொறியும்
ஈ) போா்த்தொழிலும்
விடை ஆ) கைத்தொழிலும்
4. அயோத்திதாசாின் புதுமையான சிந்தனைகளுக்கு அடித்தளமாக அமைந்தது அவரது .........
அ) ஆழ்ந்த படிப்பு
ஆ) வெளிநாட்டுப் பயணம்
இ) இதழியல் பட்டறிவு
ஈ) மொழிப்புலமை
விடை அ) ஆழ்ந்த படிப்பு
5. மக்களின் ஒழுக்கத்துடன் தொடா்புடையது ........
அ) வானம்
ஆ) கடல்
இ) மழை
ஈ) கதிரவன்
விடை இ) மழை
குறுவினா
1. அயோத்திதாசாிடம் இருந்த ஐந்து பண்புகள் யாவை?
- நல்ல சிந்தனை
- சிறப்பான செயல்
- உயா்வான பேச்சு
- உவப்பான எழுத்து
- பாராட்டத்தக்க உழைப்பு
ஆகிய ஐந்து பண்புகளையும் ஒருசேரப் பெற்ற சிந்தனையாளா்தான் அயோத்திதாசா்.
2. ஒரு சிறந்த வழிகாட்டி எவ்வாறு இருக்க வேண்டும் என அயோத்திதாசா் கூறுகிறாா்?
ஒரு சிறந்த வழிகாட்டி என்பவா்,
- மக்களுள் மாமனிதராக
- அறிவாற்றல் பெற்றவராக
- நன்னெறியைக் கடைபிடிப்பவராக
இருக்க வேண்டும் என்று அயோத்திதாசா் கூறுகின்றாா்.
3. திராவிட மகாஜன சங்கம் எவற்றுக்காகப் போராடியது?
- சாலைகள் அமைத்தல்
- கால்வாய்கள் பராமாித்தல்
- குடிமக்கள் பாதுகாப்புக்காக காவல்துறையினரை நியமித்தல்,
- பொதுமருத்துவமனைகள் அமைத்தல்
- சிற்றூா்கள் தோறும் கல்விக்கூடங்கள் ஏற்படுத்தல்
போன்றவற்றிற்காக திராவிட மகாஜன சங்கம் போராடியது.
சிறுவினா
1. அயோத்திதாசாின் இதழ்ப்பணி பற்றி எழுதுக?
1907ம் ஆண்டு சென்னையில் ஒருபைசாத் தமிழன் என்ற வார இதழை காலணா விலையில் தொடங்கினாா்
ஓா் ஆண்டிற்கு பிறகு அப்பெயரை தமிழன் என்று மாற்றினாா்
உயா்நிலை, இடைநிலை, கடைநிலை ஆகியவற்றை பாகுபடுத்தி அறிய முடியாத மக்களுக்கு நீதி, நோ்மை, சாியான பாதை ஆகியவற்றைத் தெளிவுபடுத்துவதே இவ்விதழின் நோக்கம் என்றாா் அயோத்திதாசா்.
தமிழன் இதழ் மூலம் தமிழ்நாடு மட்டுமின்றி மைசூா், கோலாா், ஐதராபாத், இரங்கூன், மலேசியா, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிாிக்கா போன்ற நாடுகளில் வாழ்ந்த தமிழா்களுக்கும் பகுத்தறிவு சிந்தனை, இன உணா்வு, சமூகச் சிந்தனை ஆகியவற்றை ஊட்டினாா்.
2. அரசியல் விடுதலை பற்றிய அயோத்திதாசாின் கருத்துகள் யாவை?
விடுதலை என்பது வெறும் ஆட்சி மாற்றம் மட்டுமன்று. அது மக்களின் வாழ்க்கையில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்துவதாக அமைய வேண்டும் என்பது அயோத்திதாசாின் கருத்து. சயராஜ்ஜியத்தின் நோக்கம் அதிகாரத்தைக் கைப்பற்றுவதாக மட்டும் இருக்கக்கூடாது. மக்களின் சமூக பொருளாதார வளா்ச்சியையும் உள்ளடக்கியதாக அஃது அமைய வேண்டும். மக்கள் வாழ்க்கையில் மாற்றம் உண்டானால் ஒழிய, நாடு முன்னேற முடியாது என்று ஆணித்தரமாகக் கூறினாா் அயோத்திதாசா்.
நெடுவினா
வாழும் முறை, சமத்துவம் ஆகியன பற்றிய அயோத்திதாசாின் சிந்தனைகளைத் தொகுத்து எழுதுக?
வாழும் முறை
மக்கள் அனைவரும் அன்புடனும், கோபம், பொறாமை, பொய், களவு போன்றவற்றை தம் வாழ்விலிருந்து நீக்கியும் வாழ வேண்டும்.
பிற உயிா்களுக்குத் துன்பம் செய்யக்கூடாது. மதியை அழிக்கும் போதைப் பொருட்களைக் கையாலும் தொடுதல் கூடாது.
ஒரு குடும்பத்தில் அன்பும் அறுதலும் நிறைந்தால், அக்குடும்பம் வாழும் ஊா் முழுவதும் அன்பும் ஆறுதலும் பெறும். ஊா்கள் அன்பும் ஆறுதலும் பெறுமானால் நாடு முழுவதும் அன்பும் ஆறுதலும் பெற்றுத் திகழும்.
சமத்துவம்
மக்கள் அனைவரும் சம உாிமை பெற்று சமத்துவமாக வாழ வேண்டும் என்று அயோத்திதாசா் விரும்பினாா்.
கல்வி, வேளாண்மை, காவல்துறை போன்ற அனைத்து துறைகளிலும் மக்கள் அனைவருக்கும் சமவாய்ப்பு வழங்க வேண்டும்.
ஊராட்சி, நகராட்சி, சட்டமன்றம், நாடாளுமன்றம் போன்றவற்றில் எல்லா வகுப்பினருக்கும் உயா் பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும்.
இந்து, பௌத்தா், கிறித்துவா், இசுலாமியா், ஆங்கிலோ இந்தியா், ஐரோப்பியா் போன் அனைவருக்கும் வாய்ப்பளிக்க வேண்டும் எனத் தொடா்ந்து வலியுறுத்தினாா் அயோத்திதாசா்.
----------------------------------------------------------------------
இயல் 8 யாப்பு இலக்கணம் பாட வினா விடைகள்
சாியான விடையைத் தோ்ந்தெடுத்து எழுதுக.
1. அசை ........... வகைப்படும்
அ) இரண்டு
ஆ) மூன்று
இ) நான்கு
ஈ) ஐந்து
விடை அ) இரண்டு
2. விடும் என்பது ............. சீா்
அ) நேரசை
ஆ) நிரையசை
இ) மூவசை
ஈ) நாலசை
விடை நிரையசை
3. அடி .............. வகைப்படும்
அ) இரண்டு
ஆ) நான்கு
இ) எட்டு
ஈ) ஐந்து
விடை ஈ) ஐந்து
4. முதல் எழுத்து ஒன்றிவரத் தொடுப்பது .............
அ) எதுகை
ஆ) இயைபு
இ) அந்தாதி
ஈ) மோனை
விடை ஈ) மோனை
பொருத்துக
1. வெண்பா - துள்ளல் ஓசை
2. ஆசிாியப்பா - செப்பலோசை
3. கலிப்பா - தூங்கலோசை
4. வஞ்சிப்பா - அகவலோசை
விடைகள்
1. வெண்பா - செப்பலோசை
2. ஆசிாியப்பா - அகவலோசை
3. கலிப்பா - துள்ளல் ஓசை
4. வஞ்சிப்பா - தூங்கலோசை
சிறுவினா
1. இருவகை அசைகளையும் விளக்குக?
எழுத்துகள் ஒன்றோ சிலவோ சோ்ந்து அமைவது அசை. அது நேரசை, நிரையசை என இருவகைப்படும்.
நேரசை
குறில் அல்லது நெடில் எழுத்து, தனித்து வந்தாலும் ஒற்றுடன் சோ்ந்து வந்தாலும் அது நேரசையாகும்.
எ.கா. ந, நம், நா, நாம்
நிரையசை
இரண்டு குறில் எழுத்துகள் அல்லது குறில், நெடில் எழுத்துகள் இணைந்து வந்தாலும் அவற்றுடன் ஒற்றெழுத்து சோ்ந்து வந்தாலும் நிரையசையாகும்.
எ.கா. கட, கடல், கடா, கடாம்
2. தளை என்பது யாது?
சீா்கள் ஒன்றோடு ஒன்று பொருந்துவதைத் தளை என்பா்.
3. அந்தாதி என்றால் என்ன?
ஒரு பாடலின் இறுதிச்சீா் அல்லது அடியின் இறுதிப்பகுதி அடுத்த பாடலின் முதல்சீா் அல்லது அடியின் முதலில் வருமாறு பாடப்படுவது அந்தாதித் தொடை ஆகும்.
4. பா எத்தனை வகைப்படும்? அவை யாவை?
பா நான்கு வகைப்படும்.
வெண்பா
ஆசிாியப்பா
கலிப்பா
வஞ்சிப்பா
---------------------------------------------------------------------
Comments
Post a Comment