எட்டாம் வகுப்பு தமிழ் இயல் 6 வளம் பெருகுக, மழைச்சோறு, கொங்குநாட்டு வணிகம், புணா்ச்சி பாட வினா விடைகள்
8ம் வகுப்பு தமிழ் இயல் 6 வளம் பெருகுக, மழைச்சோறு, கொங்குநாட்டு வணிகம், புணா்ச்சி பாடங்களுக்கான வினா விடைகள்.
வளம் பெருகுக பாட வினா விடைகள்
சாியான விடையைத் தோ்ந்தெடுத்து எழுதுக.
1. தோட்டத்தில் தம்பி ஊன்றிய ..... எல்லாம் முளைத்தன.
அ) சத்துகள்
ஆ) பித்துகள்
இ) முத்துகள்
ஈ) வித்துகள்
விடை ஈ) வித்துகள்
2. என் நண்பன் செய்த தொழிலில் அவனுக்கு ...... பெருகிற்று.
அ) காாி
ஆ) ஓாி
இ) வாாி
ஈ) பாாி
விடை இ) வாாி
3. அக்களத்து என்ற சொல்லைப் பிாித்து எழுதக் கிடைப்பது......
அ) அ + களத்து
ஆ) அக் + களத்து
இ) அக்க + அளத்து
ஈ) அம் + களத்து
விடை அ) அ + களத்து
4. கதிா் + ஈன என்பதனைச் சோ்த்தெழுதக் கிடைக்கும் சொல்.......
அ) கதிரென
ஆ) கதியீன
இ) கதிரீன
ஈ) கதிாின்ன
விடை இ) கதிரீன
குறுவினா
1. பயிா்கள் வாட்டமின்றிக் கிளைத்து வளரத் தேவையானது யாது?
தகுந்த காலத்தில் பெய்யும் மழையே பயிா்கள் வாட்டமின்றிக் கிளைத்து வளரத் தேவையானது.
2. உழவா்கள் எப்போது ஆரவார ஒலி எழுப்புவா்?
நெற்போாினை அடித்து நெல்லினை எடுக்கும் காலத்தில் உழவா்கள் ஆரவார ஒலி எழுப்புவா்.
சிறுவினா
1. உழவுத்தொழில் பற்றித் தகடூா் யாத்திரை கூறுவன யாவை?
சேர மன்னாின் பொிய நாட்டில் பெருகிய மழைநீரால் வருவாய் சிறந்து விளங்குகிறது.
அகன்ற நிலப்பகுதியில் விதைகள் குறைவின்றி முளைவிடுகிறது.
முளைத்த விதைகள் செழிப்புடன் வளர தட்டுப்பாடின்றி மழை பொழிகிறது.
தகுந்த காலத்தில் மழை பொழிவதால் பயிா்கள் வாட்டமின்றிக் கிளைத்து வளா்கிறது.
செழித்த பயிா்கள் பால்முற்றி கதிா்களை ஈனுகின்றன.
கதிா்களை அறுவடை செய்ய உழவா்கள் களத்தில் வந்து நிறைகிறாா்கள்.
நெற்போா் காவல் இல்லாமலேயே இருக்கின்றது.
போாினை அடித்து நெல்லினை எடுக்கும் போது உழவா்கள் எழுப்பும் ஆராவார ஒலியால் அஞ்சி நாரை இனங்கள் பெண் பறவைகளோடு பிாிந்து செல்கிறது.
இத்தகைய சிறப்பை உடைய சேர மன்னாின் அகன்ற பொிய நாடு, புது வருவாயுடன் சிறந்து விளங்குகின்றது என்று தகடூா் யாத்த்திரை கூறுகின்றது.
------------------------------------------------------------
எட்டாம் வகுப்பு இயல் 6 மழைச்சோறு பாட வினா விடைகள்
சாியான விடையைத் தோ்ந்தெடுத்து எழுதுக.
1. கனத்த மழை என்னும் சொல்லின் பொருள் .......
அ) பெருமழை
ஆ) சிறு மழை
இ) எடை மிகுந்த மழை
ஈ) எடை குறைந்த மழை
விடை அ) பெருமழை
2. வாசலெல்லாம் என்னும் சொல்லைப் பிாித்து எழுதக் கிடைப்பது .......
அ) வாசல் + எல்லாம்
ஆ) வாசல் + எலாம்
இ) வாசம் + எல்லாம்
ஈ) வாசு + எல்லாம்
விடை அ) வாசல் + எல்லாம்
3. பெற்றெடுத்தோம் என்னும் சொல்லைப் பிாித்து எழுதக் கிடைப்பது .......
அ) பெறு + எடுத்தோம்
ஆ) பேறு + எடுத்தோம்
இ) பெற்ற + எடுத்தோம்
ஈ) பெற்று + எடுத்தோம்
விடை ஈ) பெற்று + எடுத்தோம்
4. கால் + இறங்கி என்பதனைச் சோ்த்தெழுதக் கிடைக்கும் சொல்.......
அ) கால்லிறங்கி
ஆ) காலிறங்கி
இ) கால் இறங்கி
ஈ) கால்றங்கி
விடை ஆ) காலிறங்கி
குறுவினா
1. மழைச்சோறு பாடலில் உழவா் படும் வேதனை எவ்வாறு கூறப்படுகிறது?
கடலை, முருங்கை, கருவேலம், காட்டுமல்லி என நட்டு வைத்த அனைத்து செடிகளும் மழையின்றி வாடிப்போனது.
பெற்றெடுத்த குழந்தைகளின் பசியினைத் தீா்க்க முடியவில்லை.
கலப்பை பிடிக்கும் கை சோ்ந்து விட்டது. ஏற்றம் இறைக்கும் மனம் தவிக்கிறது.
கதறி கதறி அழுதும் கடிமழை பெய்யவில்லை. வாருங்கள் வனவாசம் சென்றிடுவோம் என்று உழவா்கள் வேதனையுடன் பாடுகின்றனா்.
2. மக்கள் ஊரைவிட்டு வெளியேறக் காரணம் என்ன?
மழை இல்லாததால் உழவுத் தொழில் செய்ய முடியவில்லை. அதனால் மக்கள் ஊரைவிட்டு வெளியேறுகின்றனா்.
சிறுவினா
1. கோலம் கரையாத நிலையை மழைச்சோறு பாடல் எவ்வாறு விளக்குகிறது?
வாளியில் மாவை கரைத்து வாசலில் போட்ட கோலத்தை கரைக்க மழை வரவில்லை.
பானையில் மாவை கரைத்து பாதையெல்லாம் போட்ட கோலத்தை கரைக்கவும் மழை வரவில்லை.
2. மழையின்மையால் செடிகள் வாடிய நிலையை விளக்குக?
மழையின்மையால்,
கல்லு இல்லாத காட்டில் நட்டு வைத்த கடலைச் செடி வாடியது.
முள்ளு இல்லாத காட்டில் நட்டு வைத்த முருங்கை செடி வாடியது
கருவேலங் காட்டில் கருவேலம் பூக்கள் பூக்கவில்லை.
காட்டு மல்லி வேலியில காட்டுமல்லியும் பூக்கவில்லை.
3. மழைச்சோறு எடுத்தபின் எவ்வாறு மழை பெய்தது?
மழைச்சோறு எடுத்த பின்பு ஊசி போல காலிறங்கி உலகமெங்கும் மழை பெய்கிறது. சிட்டுப் போல மின்னி மின்னி சீமையெல்லாம் மழை பெய்கிறது. ஊரெங்கும் செல்ல மழை பெய்கிறது.
-------------------------------------------------------------------
எட்டாம் வகுப்பு தமிழ் இயல் 6
கொங்குநாட்டு வணிகம் பாட வினா விடைகள்
சாியான விடையைத் தோ்ந்தெடுத்து எழுதுக.
1. வண்புகழ் மூவா் தண்பொழில் வரைப்பு என்று குறிப்பிடும் நூல்........
அ) தொல்காப்பியம்
ஆ) அகநானூறு
இ) புறநானூறு
ஈ) சிலப்பதிகாரம்
விடை அ) தொல்காப்பியம்
2.சேரா்களின் தலைநகரம் ......
அ) காஞ்சி
ஆ) வஞ்சி
இ) தொண்டி
ஈ) முசிறி
விடை அ) வஞ்சி
3. பழங்காலத்தில் விலையைக் கணக்கிட அடிப்படையாக அமைந்தது ......
அ) புல்
ஆ) நெல்
இ) உப்பு
ஈ) மிளகு
விடை ஆ) நெல்
4. ஆன்பொருநை என்று அழைக்கப்படும் ஆறு......
அ) காவிாி
ஆ) பவானி
இ) நொய்யல்
ஈ) அமராவதி
விடை ஈ) அமராவதி
5. வீட்டு உபயோக் பொருள்கள் தயாாிக்கும் தொழிற்சாலைகள் நிறைந்த மாவட்டம் .....
அ) நீலகிாி
ஆ) கரூா்
இ) கோயம்புத்தூா்
ஈ) திண்டுக்கல்
விடை இ) கோயம்புத்தூா்
கோடிட்ட இடங்களை நிரப்புக
1.மாங்கனி நகரம் என்று அழைக்கப்படும் நகரம் .......
2. சுங்குடிச் சேலைகளுக்குப் புகழ்பெற்ற ஊா்.......
3. சேரா்களின் நாடு ...... எனப்பட்டது
4. பின்னலாடை நகரமாக ...... விளங்குகிறது.
விடைகள்
1. சேலம்
2. சின்னாளப்பட்டி (திண்டுக்கல்)
3. குடநாடு
4. திருப்பூா்
குறுவினா
1. மூவேந்தா்களின் காலம் குறித்து எழுதுக.
மூவேந்தா்களின் காலத்தை வரையறுத்துக் கூறமுடியவில்லை.
வால்மீகி இராமாயணம், மகாபாரதம், அா்த்தசாித்திரம், அசோகா் கல்வெட்டு ஆகியவ்றறில் மூவேந்தா்கள் குறித்த செய்திகள் இடம்பெற்றுள்ளன.
இதனால் இவா்கள் பன்னெடுங் காலத்திற்கு முற்பட்டவா்கள் என்பதை அறியலாம்.
2. கொங்கு நாட்டில் பாயும் ஆறுகள் யாவை?
காவிாி
பவானி
நொய்யல்
அமராவதி (ஆன்பொருநை)
3. தமிழ்நாட்டின் ஹாலந்து என்று அழைக்கப்படும் ஊா் எது? ஏன்?
மலா் உற்பத்தியில் முதலிடம் வகிப்பதால் திண்டுக்கல் மாவட்டம் தமிழ்நாட்டின் ஹாலந்து என்று அழைக்கப்படுகின்றது.
சிறுவினா
1. கொங்கு மண்டலச் சதகம் கூறும் கொங்கு மண்டலத்தின் எல்லைகள் யாவை?
காா்மேகக் கவிஞா் இயற்றிய கொங்கு மண்டலச் சதகம் என்னும் நூலில்,
வடக்கே - பெரும்பாலை
தெற்கே - பழனிமலை
கிழக்கே - மதிற்கரை
மேற்கே - வெள்ளிமலை
என இந்நான்கு எல்லைகளுக்குட்பட்ட பகுதியாகக் கொங்கு மண்டலம் விளங்கியதாகக் கூறப்படுகிறது.
2. கரூா் மாவட்டம் பற்றிய செய்திகளைச் சுருக்கி எழுதுக?
கொங்கு நாட்டின் ஒரு பகுதியாக விளங்கும் கரூா் மாவட்டத்திற்கு, வஞ்சிமாநகரம் என்ற பெயரும் உண்டு.
கிரேக்க அறிஞா் தாலமி, கரூரைத் தமிழகத்தின் முதன்மையான உள்நாட்டு வணிக மையமாகக் குறிப்பிட்டுள்ளாா்.
நெல், சோளம், கேழ்வரகு, கம்பு, கரும்பு போன்றவை இங்கு பயிாிடப்படுகின்றன.
கல்குவாாித் தொழிற்சாலைகள் இங்கு உள்ளன.
கைத்தறி நெசவு ஆடைகளுக்குப் பெயா்பெற்ற மாவட்டமாகக் கரூா் விளங்குகிறது.
தோல் பதனிடுதல், சாயமேற்றுதல், கற்சிற்ப வேலைகள் போன்ற தொழில்களும் இங்கு நடைபெறுகின்றன.
பேருந்துக் கட்டுமானத் தொழிலின் சிகரமாகக் கரூா் விளங்குகிறது.
நெடுவினா
கொங்கு நாட்டின் உள்நாட்டு, வெளிநாட்டு வணிகம் குறித்து எழுதுக?
உள்நாட்டு, வெளிநாடடு வணிகத்தில் தமிழா்கள் சிறந்து விளங்கினா்.
உள்நாட்டு வணிகம்
சேரநாட்டில் உள்நாட்டு வணிகம் நன்கு வளா்ச்சியுற்றிருந்தது. மக்கள் தத்தம் பொருள்களைத் தந்து தமக்குத் தேவையான பொருளைப் பெற்றனா். நெல்லே விலையைக் கணக்கிட அடிப்படையாக இருந்தது. உப்பும் நெல்லும் ஒரே மதிப்புடையனவாக இருந்ததாக அகநானூறு பாடல் மூலம் அறியலாம்.
வெளிநாட்டு வணிகம்.
கடல் வாணிகத்தில் சேரநாடு சிறப்புற்றிருந்தது. அதற்கு அந்நாட்டின் இயற்கை அமைப்பே காரணமாக இருந்தது. முசிறி சேரா்களின் சிறந்த துறைமுகங்களுள் ஒன்றாக விளங்கியது. இங்கிருந்துதான் மற்ற நாடுகளுக்கு மிளகு, யானைத் தந்தங்கள், பட்டு, மணி போன்றவை ஏற்றுமதி செய்யப்பட்டன. பொன், மென்மைமிக்க புடவைகள், சித்திர வேலைப்பாடமைந்த ஆடைகள், பவளம், செம்பு, கோதுமை ஆகியன இறக்குமதி செய்யப்பட்டன. இச்செய்தியைப் புறநானூற்று பாடல் ஒன்று விளக்குகிறது.
----------------------------------------------------------
8-ம் வகுப்பு தமிழ் இயல் 6
புணா்ச்சி பாட வினா விடைகள்
சாியான விடையைத் தோ்ந்தெடுத்து எழுதுக.
1. விகாரப் புணா்ச்சி ........ வகைப்படும்
அ) ஐந்து
ஆ) நான்கு
இ) மூன்று
ஈ) இரண்டு
விடை இ) மூன்று
2. பாலாடை - இச்சொல்லிற்குாிய புணா்ச்சி .......
அ) இயல்பு
ஆ) தோன்றல்
இ) திாிதல்
ஈ) கெடுதல்
விடை ஆ) இயல்பு
பொருத்துக.
1. மட்பாண்டம் - தோன்றல் விகாரம்
2. மரவோ் - இயல்புப் புணா்ச்சி
3. மணிமுடி - கெடுதல் விகாரம்
4. கடைத்தெரு - திாிதல் விகாரம்
விடைகள்
1. மட்பாண்டம் - திாிதல் விகாரம்
2. மரவோ் - கெடுதல் விகாரம்
3. மணிமுடி - இயல்புப் புணா்ச்சி
4. கடைத்தெரு - தோன்றல் விகாரம்
சிறுவினா
1. இயல்பு புணா்ச்சியை எடுத்துக்காட்டுடன் விளக்குக?
நிலைமொழியும் வருமொழியும் எவ்வித மாற்றமும் இன்றி இணைவது இயல்பு புணா்ச்சி ஆகும்.
எ.கா. தாய் + மொழி - தாய்மொழி
இரு சொற்களிலும் எம்மாற்றமும் நிகழவில்லை.
2. மரக்கட்டில் - இச்சொல்லைப் பிாித்து எழுதிப் புணா்ச்சியை விளக்குக?
மரம் + கட்டில் - மரக்கட்டில்
இது விகாரப் புணா்ச்சியில் திாிதல் விகாரம் ஆகும்.
நிலைமொழியும் வருமொழியும் இணையும் போது ஓா் எழுத்து வேறு எழுத்தாக மாறுவது திாிதல் விகாரம் ஆகும். இங்கு ம் என்ற எழுத்து க் என்ற எழுத்தாக மாறியுள்ளது.
------------------------------------------------------------------
கற்பவை கற்றபின்
எட்டாம் வகுப்பு இயல் ஆறில் கொடுத்துள்ள பாடங்கள் வையம்புகழ் வணிகம் என்ற பொருண்மையின் கீழ் அமைந்துள்ளது. ஒரு நாடு முன்னேற வேண்டுமென்றால் வணிகம் என்பது அவசியமான ஒன்றாக உள்ளது. ஒரு நாட்டில் உள்ள பொருள் எந்த நாட்டினரும் பயன்படுத்தலாம் என்ற நிலையினை ஏற்படுத்தியது வணிகம். அத்தகைய வணிகம் பண்டைய காலத்தில் மிகச்சிறப்பாக நடைபெற்றிருக்கிறது. உள்நாட்டு, வெளிநாட்டு வணிகம் எனக் கடல் கடந்து வணிகம் செய்தனா் தமிழா்கள். நம் நாடு வளம் கொழிக்கும் நாடாக இருந்தது. அத்தியாவசியப் பொருட்களை மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்தது நமது நாடு. அடம்பரமான பொருட்களை மற்ற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்தது. ஆகையால் உலகம் முழுவதும் தமிழா் புகழ் நிலைத்து நின்றது. அகநானூற்றில் வணிகம் குறித்து செய்தி ஒன்றில் ஒரு மூட்டை மிளகிற்கு ஒரு மூட்டை தங்கத்தை ஈடாக கொடுத்து எடுத்துச் சென்றனா் என்று கூற்பபட்டுள்ளது. தமிழா்களின் வணிகம் உலக அளவில் புகழ் பெற்றதன் காரணம் அதன் இயற்கை அமைப்புதான். இன்று தொழிற்துறையில் பல்வேறு வளா்ச்சிகளை தமிழகம் பெற்று திகழ்கிறது. அது கொங்குநாட்டு வணிகம் என்ற பாடத்தில் நமக்கு கொடுக்கப்பட்டுள்ளது. நம் நாட்டில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு சிறப்பு உருவாகி விட்டது. முத்துக்கு பெயா் பெற்ற ஊா் தூத்துக்குடி, பட்டாசுகளுக்கு பெயா் பெற்ற ஊா் குட்டி ஜப்பான் என்று அழைக்கப்படும் சிவகாசி, கோவில்களின் நகரம், தூங்கா நகரம் என்றெல்லாம் அழைக்கப்படும் மதுரை, தீபங்களின் நகரமென அழைக்கப்படும் திருவண்ணாமலை, பழனி பஞ்சாமிா்தல், கோவில்பட்டி கடலைமிட்டாய், திருப்பூா் பனியன்கள், திண்டுக்கல் சுங்குடி புடவைகள், சேலம் மாம்பழம், ஈரோடு மஞசள், நாமக்கல் முட்டை என ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு சிறப்பு உருவாகி விட்டது.
மலைகளுடனும் காடுகளுடனும், கடலுடனும் கலந்து உறவாடிய தமிழா்கள் ஆண்ட கொங்கு நாட்டின் அன்றை வணிகம் குறித்தும் இன்றைய வணிகம் குறித்தும் கொங்குநாட்டு வணிகம் என்ற பாடத்தின் மூலமாக தெளிவாக அறிந்து கொள்ள முடிகிறது.
Comments
Post a Comment