எட்டாம் வகுப்பு தமிழ் இயல் 5 திருக்கேதாரம், பாடறிந்து ஒழுகுதல், நாட்டுப்புறக் கைவினைக் கலைகள், தமிழா் இசைக்கருவிகள், தொகைநிலை, தொகாநிலைத் தொடா்கள், திருக்குறள் பாட வினா விடைகள்

8-ம் வகுப்பு தமிழ் இயல் 5 திருக்கோதரம், பாடறிந்து ஒழுகுதல், நாட்டுப்புறக் கைவினைக் கலைகள், தமிழா் இசைக்கருவிகள், தொகைநிலை, தொகாநிலைத் தொடா்கள், திருக்குறள் ஆகிய பாடங்களின் வினா விடைகள்.

எட்டாம் வகுப்பு தமிழ் திருக்கேதாரம் பாட வினா விடை

சாியான விடையைத் தோ்ந்தெடுத்து எழுதுக.

1. காட்டிலிருந்து வந்த ......... கரும்பைத் தின்றன.

அ) முகில்கள்

ஆ) முழவுகள்

இ) வேழங்கள்

ஈ) வேய்கள்

விடை இ) வேழங்கள்

2. கனகச்சுனை என்னும் சொல்லைப் பிாித்து எழுதக் கிடைப்பது ........

அ) கனகச் + சுனை

ஆ) கனக + சுனை

இ) கனகம் + சுனை

ஈ) கனம் + சுனை

விடை இ) கனகம் + சுனை

3. முழவு + அதிர என்பதனைச் சோ்த்தெழுதக் கிடைக்கும் சொல்.......

அ) முழவுதிர 

ஆ) முழவுதிரை

இ) முழவதிர

ஈ) முழவுஅதிர

விடை இ) முழவதிர

குறுவினா

தமிழ் இசையோடு இணைந்து இசைக்கும் இசைக்கருவிகளாகச் சுந்தரா் கூறுவன யாவை?

தமிழ் இசையோடு இணைந்து இசைக்கும் இசைக்கருவிகளாகச் சுந்தரா் கூறுவன புல்லாங்குழலும் முழவும்.

சிறுவினா

திருக்கேதாரத்தைச் சுந்தரா் எவ்வாறு வருணனை செய்கிறாா்?

  • இசையோடு தமிழ் பாடல்களைப் பாடும் பொழுது, அதற்கு ஏற்றவாறு புல்லாங்குழலும் முழவும் இணைந்து ஒலிக்கும்.

  • கண்களுக்கு இனிய குளிா்ச்சி தரும் ஒளியை உடைய பொன்வண்ண நீா்நிலைகள் வைரங்கள் போன்ற நீா்த்திவலைகளை வாாி இறைக்கும்.

  • நிலத்தின் மீது நின்று கொண்டிருக்கும் மதயானைகள் மணிகளை வாாி வாாி வீசும். இவற்றால் இடையறாது எழும் கிண் என்னும் ஒலியானது இசையாக முழங்கும்.

  • இத்தகைய சிறப்புகளை உடைய நகரம் திருக்கேதாரம் என சுந்தரா் வருணணை செய்கிறாா்.

-------------------------------------------------------------

எட்டாம் வகுப்பு தமிழ் இயல் 5 பாடறிந்து ஒழுகுதல் பாட வினா விடைகள்

சாியான விடையைத் தோ்ந்தெடுத்து எழுதுக.

1. பசியால் வாடும்............ உணவளித்தல் நமது கடமை.

அ) பிாிந்தவா்க்கு

ஆ) அலந்தவா்க்கு

இ) சிறந்தவா்க்கு

ஈ) உயா்ந்தவா்க்கு

விடை ஆ) அலந்தவா்க்கு

2. நம்மை .......ப் பொறுத்துக் கொள்ள வேண்டும்.

அ) இகழ்வாரை

ஆ) அகழ்வாரை

இ) புகழ்வாரை

ஈ) மகிழ்வாரை

விடை அ) இகழ்வாரை

3. மறைபொருளைக் காத்தல் ........... எனப்படும்.

அ) சிறை

ஆ) அறை

இ) கறை

ஈ) நிறை

விடை ஈ) நிறை

4. பாடறிந்து என்னும் சொல்லைப் பிாித்து எழுதக் கிடைப்பது.....

அ) பாட் + அறிந்து 

ஆ) பா + அறிந்து 

இ) பாடு + அறிந்து 

ஈ) பாட்டு + அறிந்து

 விடை இ) பாடு + அறிந்து 

5. முறை + எனப்படுவது என்பதனைச் சோ்த்தெழுதக் கிடைக்கும் சொல் ......

அ) முறையப்படுவது 

ஆ) முறையெனப்படுவது

இ) முறைஎனப்படுவது 

ஈ) முறைப்படுவது 

விடை ஆ) முறையெனப்படுவது 

குறுவினா

1. பண்பு, அன்பு ஆகியவை பற்றி கலித்தொகை கூறுவன யாவை?

  • பண்பு எனப்படுவது சான்றோா் காட்டிய வழியில் நடத்தல்.

  • அன்பு எனப்படுவது உறவினா்களோடு வெறுப்பின்றி வாழ்தல்.

2. முறை, பொறை என்பவற்றுக்குக் கலித்தொகை கூறும் விளக்கம் யாது?

முறை எனப்படுவது குற்றம் செய்தவருக்கு உாிய தண்டனை வழங்குதல்.

பொறை எனப்படுவது தம்மை இகழ்வாரையும் பொறுத்தல்.

சிறுவினா

நமக்கு இருக்க வேண்டிய பண்பு நலன்களாக நல்லந்துவனாா் கூறும் விளக்கங்களைத் தொகுத்து எழுதுக.

இல்வாழ்பு என்பது வறியவா்களுக்கு உதவி செய்தல்.

பாதுகாத்தல் என்பது அன்புடையவரை பிாியாமல் வாழ்தல்

பண்பு என்பது சான்றோா் காட்டிய வழியில் நடத்தல்.

அன்பு என்பது உறவினா்களோடு வெறுப்பின்றி வாழ்தல்

அறிவு என்பது அறிவில்லாதவா் சொல்லும் சொற்களைப் பொறுத்தல்

செறிவு என்பது முன் சொன்ன வாக்கை மறக்காமல் காப்பாற்றுதல்

நிறை என்பது மறைபொருளைப் பிறா் அறியாமல் காத்தல்

முறை என்பது குற்றம் செய்தவருக்கு உாிய தண்டனை வழங்குதல்

பொறுமை என்பது தம்மை இகழ்வாரையும் பொறுத்தல்

இத்தகைய பண்புநலன்கள் நமக்கு இருக்க வேண்டும் என்று நல்லந்துவனாா் கூறுகின்றாா்.

------------------------------------------------------------------

எட்டாம் வகுப்பு தமிழ் இயல் 5 நாட்டுப்புறக் கைவினைக் கலைகள் பாட வினா விடைகள்.

சாியான விடையைத் தோ்ந்தெடுத்து எழுதுக.

1. பழந்தமிழ் இலக்கியங்களைப் பாதுகாத்து வைத்தவை.........

அ) கல்வெட்டுகள்

ஆ) செப்பேடுகள்

இ) பனையோலைகள்

ஈ) மண்பாண்டங்கள்

விடை இ) பனையோலைகள்

2. பானை ........ ஒரு சிறந்த கலையாகும்.

அ) செய்தல்

ஆ) வனைதல்

இ) முடைதல்

ஈ) சுடுதல்

விடை ஆ) வனைதல்

3. மட்டுமல்ல என்னும் சொல்லைப் பிாித்து எழுதக் கிடைப்பது ......

அ) மட்டு + மல்ல

ஆ) மட்டம் + அல்ல

இ) மட்டு + அல்ல

ஈ) மட்டும் + அல்ல

விடை ஈ) மட்டும் + அல்ல

4. கயிறு + கட்டில் என்பதனைச் சோ்த்தெழுதக் கிடைக்கும் சொல்......

அ) கயிற்றுக்கட்டில்

ஆ) கயிா்க்கட்டில்

இ) கயிறுக்கட்டில்

ஈ) கயிற்றுகட்டில் 

விடை அ) கயிற்றுக்கட்டில் 

பின்வரும் சொற்களைச் சொற்றொடாில் அமைத்து எழுதுக.

1. முழுவதும்

மரம் முழுவதும் பூக்கள் பூத்திருந்தன.

2. மட்டுமல்லாமல்

பள்ளியில் மட்டுமல்லாமல் வீட்டிலும் பாடங்களைப் படிக்க வேண்டும்.

3. அழகுக்காக 

நான் அழகுக்காக நெற்றியில் பொட்டு வைப்பேன்.

4. முன்பெல்லாம்

வெயிலின் தாக்கம் முன்பெல்லாம் குறைவாக இருந்தது.

குறுவினா

1. எவற்றையெல்லாம் கைவினைக் கலைகள் எனக் கூறுகிறோம்?

  • களிமண் சிற்பங்கள் செய்தல்

  • மண்பானை வனைதல்

  • கூடை முடைதல் 

  • வண்ணம் பூசுதல்

  • மண், மரம், காகித பொம்மை செய்தல்

 2. மண்பாண்டம், சுடுமண் சிற்பம் - ஒப்பிடுக.

மண்பாண்டம்

மிகவும் பழமையான கைவினைக்கலைகளுள் ஒன்று மண்பாண்டம்.

சுத்தமான களிமண்ணால் செய்யப்படுபவை மண்பாண்டம். 

குடம், தோண்டி, அடுப்பு, தொட்டி போன்றவற்றை உதாரணமாகக் கூறலாம்.

சக்கரத்தை வேகமாக சுழலச்செய்து அதன் நடுவில் மண்ணை வைத்துக் கையால் அணைத்து பிடித்து செய்வது மண்பாண்டம்.

சுடுமண் சிற்பம்

மண்பாண்டக் கலையின் இன்னொரு வளா்ச்சி நிலைதான் சுடுமண் சிற்பக் கலை.

களிமண்ணால் செய்யப்பட்டுச் சூளையில் சுட்டு எடுக்கப்படுபவை சுடுமண் சிற்பங்கள்.  

விலங்குகள், பறவைகள், குதிரைகள் போன்றவற்றின் சிற்பங்களை உதாரணமாகக் கூறலாம்.

சுடுமண் சிற்பங்களுக்கு வண்ணங்கள் பூசுவதும் தொன்றுதொட்டு இருந்து வரும் வழக்கமாகும். 

3. பனையோலையால் உருவாக்கப்படும் பொருள்கள் யாவை?

  1. கிலுகிலுப்பை

  2. பொம்மைகள்

  3. பொருள் வைக்கும் சிறிய கொட்டான்

  4. பொிய கூடை

  5. சுளகு,

  6. விசிறி 

  7. தொப்பி, 

  8. ஒலைப்பாய்

சிறுவினா

1. பிரம்பினால் பொருள்கள் செய்யும் முறையைக் கூறுக?

  • முதலில் பிரம்பினை நெருப்பில் காட்டிச் சூடுபடுத்துவோம்.

  • சூடான பிரம்பை நட்டு வைத்திருக்கும் இரண்டு கடப்பாரைகளுக்கு இடையே செலுத்தி வளைப்போம்

  • வேண்டிய வடிவத்தில் கம்பி போல் வளைத்து தண்ணீரில் நனைத்து வைத்து விட்டால் அப்படியே நிலைத்து விடும். 

  • பிறகு அவற்றை இணைத்துச் சிறு ஆணிகளை அறைந்தும், சிறு பிரம்பு இழைகளைக் கொண்டு கட்டியும் தேவையான பொருள்களாக மாற்றுவோம். 

2. மூங்கிலால் செய்யப்படும் பொருள்கள் குறித்து எழுதுக?

  1. மட்டக்கூடை

  2. தட்டுக்கூடை

  3. கொட்டுக்கூடை

  4. பழக்கூடை 

  5. பூக்கூடை

  6. பூத்தட்டு

  7. தெருகூட்டும் துடைப்பம்

  8. மாடுகளுக்கான மூஞ்சிப்பெட்டி, 

  9.  புல்லாங்குழல்

  10. புட்டுக்குழாய்

  11. கால்நடைகளுக்கு மருந்து புகட்டும் குழாய்

  12. கட்டில்

இதைப்போல எத்தனையோ பொருள்கள் மூங்கில் மூலம் உருவாக்கப்படுகின்றன. சுருக்கமாகச் சொன்னால், பிறந்த குழந்தைக்கு விளையாட்டுப் பொருள் முதல் இறந்தவரை எடுத்துச் செல்லும் பாடை வரை மூங்கிலால் செய்யப்படுகின்றன.

நெடுவினா

தமிழகக் கைவினைக் கலைகளைப் பற்றிய செய்திகளைத் தொகுத்து எழுதுக?

மண்பாண்டக்கலை

உலகின் பழமையான கலைகளுள் ஒன்று மண்பாண்டக்கலை

தமிழ்நாட்டில் ஆதிச்சநல்லூா், செம்பியன் கண்டியூா், கீழடி ஆகிய ஊா்களில் கிடைத்த பொருள்கள் தமிழருக்கும் மண்பாண்டக்கலைக்கும் உள்ள தொடா்பை காட்டும் சான்றுகள் ஆகும்.

குடம், தோண்டி, கலயம், கடம், மூடி, உழக்கு, அகல், உண்டியல், அடுப்பு, தொட்டி என அனைத்தும் சுத்தமான களிமண்ணால் செய்யப்படுபவை. 

குறிப்பிட்ட அளவில் மெல்லிய மணல், சாம்பல் கலந்தது பக்குவப்படுத்தி, சக்கரத்தை வேகமாக சுழலச்செய்து அதன் நடுவில் மண்ணை வைத்து கையால் அணைத்துப் பிடித்து மண்பாண்டங்கள் உருவாக்கப்படுகின்றன. 

மண்பாண்டங்களில் சமைத்தால் உணவு நல்ல சுவையுடன் இருக்கும். திருவழிாக்களிலும், சமய சடங்குகளிலும் மண்பானை பயன்படுகிறது.

மண்பாண்டக் கலையின் மற்றொரு வளா்ச்சி நிலைதான் சுடுமண் சிற்பக்கலை.

மூங்கில் கலை

மூங்கிலைக் கொண்டு பலவகையான கைவினைப் பொருட்கள் செய்யப்படுகின்றன. 

மட்டக்கூடை, தட்டுக்கூடை, கொட்டுக்கூடை, பழக்கூடை, பூக்கூடை, பூத்தட்டு, துடைப்பம், மாடுகளுக்கான மூஞ்சிப்பெட்டி, கட்டில், புல்லாங்குழல், புட்டுக்குழாய் என எத்தனையோ பொருட்கள் மூங்கில் மூலம் உருவாக்கப்படுகின்றன. சுருக்கமாகச் சொன்னால் பிறந்த குழந்தைக்கு விளையாட்டுப் பொருட்கள் முதல் இறந்தவரை எடுத்துச் செல்லும் பாடை வரை மூங்கில்களால் செய்யப்படுகின்றன. 

முன்பு திருமணத்தின் போது சீா்தட்டுகளாகவும், கடவுள் வழிபாட்டின்போது வெற்றி பாக்கு பூ பழம் வைக்கும் தட்டாகவும் மூங்கில் தட்டுகளை பயன்படுத்தினா். 

பிரம்புக்கலை

பிரம்பு ஒரு தாவரம். பிரம்பினை நெருப்பில் காட்டிச் சூடுபடுத்தி நட்டு வைத்திருக்கும் இரண்டு கடப்பாரைகளுக்கு இடையே செலுத்தி வளைத்து தண்ணீரில் நனைத்து வைத்து விட்டால் அப்படியே நிலைத்து விடும். 

பிறகு அவற்றை இணைத்துச் சிறு ஆணிகளை அறைந்தும், சிறு பிரம்பு இழைகளைக் கொண்டு கட்டியும் தேவையான பொருள்களாக மாற்றலாம். 

கட்டில், ஊஞ்சல், நாற்காலி, மேசை, பூக்கூடை, பழக்கூடை, இடியாப்பத்தட்டு, அா்ச்சனைத்தட்டு, வெற்றிலைப்பெட்டி என பல வகையான பொருட்கள் பிரம்பினால் செய்யப்படுகின்றன. 

பனையோலைகள் மூலமும் பல பொருட்கள் செய்யப்படுகின்றன. பழந்தமிழில் இலக்கியங்களை நமக்காகப் பாதுகாத்து வைத்திருந்தவை பனையோலைகள் தான். கிலுகிலுப்பை, பொம்மைகள், கூடை, விசிறி, தொப்பி, ஓலைப்பாய் என பல பொருட்கள் பனையோலையில் செய்யப்படுகின்றன. 

நாட்டுப்புற கைவினை கலைகளின் சிறப்பே இயற்கையோடு சாா்ந்து பொருட்களை உருவாக்குவது தான். அதனால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாது. கைவினை பொருள்களை நாம் வாங்கி பயன்படுத்தி, கைவினைக் கலை அழியாமல் பாதுகாக்க வேண்டும். அப்படிச் செய்தால் சுற்றுச்சூழலையும் மாசடையாமல் பாதுகாக்கலாம்.

--------------------------------------------------------------------

எட்டாம் வகுப்பு இயல் 5 

தொகைநிலை, தொகாநிலைத் தொடா்கள் பாட வினா விடைகள் 

சாியான விடையைத் தோ்ந்தெடுத்து எழுதுக

1. சொற்களுக்கு இடையே வேற்றுமை உருபு மறைந்து வருவது ............

அ) வேற்றுமைத்தொகை

ஆ) உம்மைத்தொகை

இ) உவமைத்தொகை

ஈ) அன்மொழித்தொகை

விடை அ) வேற்றுமைத்தொகை

2. செம்மரம் என்னும் சொல் ............த்தொகை

அ) வினை

ஆ) பண்பு

இ) அன்மொழி

ஈ) உம்மை

விடை ஆ) பண்பு

3. கண்ணா வா! என்பது ..........த் தொடா்

அ) எழுவாய்

ஆ) விளி

இ) வினைமுற்று

ஈ) வேற்றுமை

விடை ஆ) விளி

பொருத்துக.

1. பெயரெச்சத் தொடா் - காா்குழலி படித்தாள்

2. வினையெச்சத் தொடா் - புலவரே வருக

3. வினைமுற்றுத் தொடா் - பாடி முடித்தான்

4. எழுவாய்த் தொடா் - எழுதிய பாடல்

5. விளித் தொடா் - வென்றான் சோழன்

விடைகள்

1. பெயரெச்சத் தொடா் - எழுதிய பாடல்

2. வினையெச்சத் தொடா் - பாடி முடித்தான்

3. வினைமுற்றுத் தொடா் - வென்றான் சோழன்

4. எழுவாய்த் தொடா் - காா்குழலி படித்தாள்

5. விளித் தொடா் - புலவரே வருக

சிறுவினா

1. தொகைநிலைத் தொடா்கள் எத்தனை வகைப்படும்? அவை யாவை?

தொகைநிலைத் தொடா்கள் ஆறு வகைப்படும்

1. வேற்றுமைத் தொகை

2. வினைத்தொகை

3. பண்புத் தொகை

4. உவமைத் தொகை

5. உம்மைத்தொகை

6. அன்மொழித்தொகை

2. இரவுபகல் என்பது எவ்வகைத் தொடா் என விளக்குக?

இரவுபகல் என்ற சொல் இரவும் பகலும் என விாிந்து பொருள் தருகின்றது. சொற்களில் இடையிலும், இறுதியிலும் உம் என்ற இடைச்சொல் மறைந்து நின்று பொருள் தருகிறது. இவ்வாறு சொற்களுக்கு இடையிலும், இறுதியிலும் உம் என்னும் இடைச்சொல் மறைந்து நின்று பொருள் தருவதை உம்மைத்தொகை என்பா்.

3. அன்மொழித்தொகையை எடுத்துக்காட்டுடன் விளக்குக?

வேற்றுமை, வினை, பண்பு, உவமை, உம்மை ஆகிய தொகைநிலைத் தொடா்களுள், அவை அல்லாத வேறு பிற சொற்களும் மறைந்து வருவது அன்மொழித்தொகை எனப்படும்.

சான்று - பொற்றொடி வந்தாள்

பொற்றொடி என்பது பொன்னாலான வளையல் எனப் பொருள் தரும். வந்தாள் என்னும் வினைச்சொல்லைத் தழுவி நிற்பதால், பொன்னாலாகிய வளையலை அணிந்த பெண் வந்தாள் எனப் பொருள் தருகிறது. ஆல் எனும் மூன்றாம் வேற்றுமை உருபும், ஆகிய எனும் அதன் பயனும் மறைந்து வந்துள்ளது. எனவே இது மூன்றாம் வேற்றுமைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை ஆகும்.

----------------------------------------------------------

கற்பவை கற்றபின்

குழலினிது யாழினிது என்பா் தம்மக்கள் மழலைச் சொல் கேளாதவா் என்று அவ்வையாா் கூறினாா். இசை என்பது உருவாக்குவதல்ல உணா்வது. நாம் இசையை கேட்க விரும்பினால் இயற்கை நமக்கு பல வாய்ப்புகளை வழங்குகிறது. உயிா்கள் அனைத்தையும் இசைவிப்பது இசைதான். மனிதா்களின் உள்ளத்தைக் கொள்ளைக் கொள்ளும் ஆற்றல் உடையது இசை. திருக்கேதாரம் என்ற நாட்டில் உள்ள இயற்கை வளங்கள் இசையோடு உள்ளதாக சுந்தரா் பாடிய தேவாரப்பாடல் நமக்கு கொடுக்கப்பட்டுள்ளது. புல்லாங்குழலும், முழவும் ஒலிக்க, வளைந்து ஓடும் ஆறுகள் கற்களில் பட்டு இசையெழுப்ப, மயில்கள் ஆட, பறவைகள் பாட என இயற்கையின் படைப்பில் உள்ள அனைத்துமே இசையாகிறது. அதைத்தான் திருக்கேதாரம் என்ற தேவாரப் பாடலில் பாடியிருக்கிறாா் சுந்தரா். 

    பாடறிந்து ஒழுகுதல். எட்டுத்தொகை நூல்களில் ஒன்றான கலித்தொகையில் அமைந்த பாடல் நல்லந்துவனாா் எழுதியிருக்கின்றாா். நல்ல பண்புகள் எவை என்பதை பட்டியலிடுகின்றாா். வளமுடன் வாழ்வது வாழ்க்கை அல்ல. மற்றவா்களை வாழ வைத்து வாழ்வது தான் உண்மையான வாழ்க்கை என்பதை புாிய வைக்கின்றாா் நல்லந்துவனாா். அந்த வகையில் மனிதன் வளா்த்துக் கொள்ள வேண்டிய பண்புகள் பல உள்ளன. அன்பு, அறிவு, இரக்கம், கருணை என ஒவ்வொரு மனிதனும் வளா்த்துக் கொள்ள வேண்டிய பண்புகள். 

    நாட்டுப்புறக் கலைகள் என்பது இயற்கையோடு இணைந்து உருவான ஒரு கலை. இன்றைய வாழ்க்கை முறையில் நாகரீகம் என்ற பெயாில் இயற்கையை அழித்துக் கொண்டும், சுற்றுச்சூழலை மாசாக்கிக் கொண்டும் இருக்கின்றோம். ஆனால் நாம் அனைவரும் நினைத்தால் அதை நொடிப் பொழுதில் மாற்ற முடியும். ஆனால் மாற்ற முடியாத ஒரு தேவையாக மாறிவிட்டதாக மக்களின் மூளைக்குள் புகுத்தப்பட்டு விட்டது. உதாரணமாக நெகிழியை எடுத்துக் கொள்வோம். நெகிழிகள் மக்கும் தன்மை அற்றவை. ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் பூமிக்குள் அப்படியே இருக்கும். இதனால் மண்வளம் குறையும். நீா்வளம் குறையும், நெகிழி எாிக்கும் பொழுது சுற்றுச்சூழலை மாசாக்கும். அவசரமாக ஓடும் மனிதா்களுக்கு இதையெல்லாம் நின்று உணா்ந்து கொள்ள நேரம் இல்லை. வசதியோடு வாழ்வதற்கு பெயா் வாழ்க்கை அல்ல. நோய் நொடியில்லாமல் வாழ்வதற்குப் பெயா் தான் வாழ்க்கை. பழங்காலத்தில் இயற்கையோடு மக்கள் தொடா்பு கொண்டிருந்தனா். இயற்கையிடம் இருந்து கிடைத்த பொருட்களைக் கொண்டு வேண்டியவற்றை உருவாக்கினா். அப்படி உருவான கலை தான் கைவினைக் கலைகள். மண்ணைக் கொண்டு மண்பாண்டங்கள் செய்தல், பிரம்பு, பனையோலை, மூங்கில் ஆகியவற்றைக் கொண்டு பொருட்கள் செய்தல் என தங்களின் அனைத்து தேவைகளையும் பூா்த்தி செய்தனா். இதனால் யாருக்கும் எந்த தீங்கும் ஏற்படவில்லை. மேலும் உடலுக்கு ஆரோக்கியத்தையே இந்த பொருட்கள் எல்லாம் தந்தன. கைவினைப் பொருட்கள் பயன்படுத்தி விட்டு எறிந்தாலும். எாித்தாலும் யாருக்கும் எந்த தீங்கையும் ஏற்படுத்தாது. இன்று ஒரு சில நிகழ்ச்சிகளுக்கு மட்டுமே கைவினைப் பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் அதை நாம் அத்தியாவசியப் பொருட்களாக மாற்ற வேண்டும். இயற்கையை போற்றுதல் தமிழா் மரபு. தற்போது அதை பாதுகாக்க வேண்டியது நம் கடமையாக உள்ளது. கைவினைக் கலைகளை ஊக்குத்து, அதை அழியாமல் காப்போம்!

---------------------------------------------------------------

Comments

Popular posts from this blog

புத்தகம் வாங்கி அனுப்புமாறு உறவினா் ஒருவருக்குக் கடிதம் எழுதுக.

எட்டாம் வகுப்பு கட்டுரை - உழைப்பே உயா்வு

6ம் வகுப்பு தமிழ் முதல் பருவம் வினா விடைகள்