இத்தனை அழகான எண்ணுப்பெயர்கள் நம்மொழியிலா?
இவ்வளவு அழகான எண்ணுப்பெயர்கள் நம்மொழியில் இருக்கின்றனவா? தமிழ் இலக்கணம் 5 எண்ணுப்பெயர்களோடு சேர்ந்து வரும் நபர் என்ற சொல்லை நாம் அடிக்கடி பயன்படுத்துகின்றோம். ஆனால் நபர் என்ற சொல் அரபு மொழியைச் சேர்ந்தது. எழுத்து வழக்கிற்கும் அவற்றை பயன்படுத்துவது சிறப்புடையதாக இருக்காது. ஆகவே கீழ்க்காணும் பத்தியில் உள்ள அரபு மொழிச் சொற்களைத் தமிழ்ச் சொற்களில் மாற்றி அமையுங்கள். விடைகள் கடைசியாகத் தரப்பட்டுள்ளன. இதுசார்ந்த காணொலி ஒன்றையும் பதிவிட்டுள்ளேன். நீங்கள் பார்க்க விரும்பினால் CLICK HERE பயிற்சி வினா புகழ்பெற்ற அந்நிறுவனத்தில் வேலைக்கு ஆட்கள் எடுப்பதாக விளம்பரம் செய்தனர். பல பேர் விண்ணப்பம் பெற்றுச் சென்றனர். ஆனால் நிறுவனமோ எட்டுப் பேர் மட்டுமே நியமனம் செய்யப்படுவார்கள் என்று கூறியது. இருப்பினும், தகுதியான நபர்கள் இருக்கும் பட்சத்தில் பத்துப் பேர் நியமனம் செய்யப்பட வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்தது. பல பேர் வேலைக்கு விண்ணப்பித்தனர். சில பேர் விலகிக் கொண்டனர். பணியாளர்களைத் தேர்வு செய்ய ஐந்து பேர் கொண்ட குழு அமைத்த நிறுவனம், ஒன்பது பேரை இறுதித் தேர்வுக்கு அழைத்தது. அவ...