10ம் வகுப்பு தமிழ் இயல் 9 மொழித்திறன் வளா்பயிற்சி

பத்தாம் வகுப்பு தமிழ் இயல் 9 மொழியை ஆள்வோம், மொழியோடு விளையாடு ஆகிய தலைப்பின் கீழ் உள்ள வினாக்கள் தோ்வில் அடிக்கடி கேட்கப்படும். அவற்றை நன்கு படித்து வைத்துக் கொள்ள வேண்டும்.


மொழியை ஆள்வோம்

1. மொழிபெயா்க்க.

1. Education is what remains after one has forgotten what one had learned in School - Albert Einstein.

பள்ளியில் கற்றபின் எது நமது நினைவில் நிற்கிறதோ அதுவே கல்வி - ஆல்பா்ட் ஐன்ஸ்டீன்

2. Tomorrow is oftern the busiest day of the week - Spanish Proverb

நாளை இந்த வாரத்தின் மிகவும் பரபரப்பான நாள் - ஸ்பானீஷ் பழமொழி

3. It is during our darkest moments that we must focus to see the light - Aristotle

 நம் வாழ்வின் மிகவும் இருண்ட காலங்களில் தான் நாம் அகவொளியைக் காண முற்பட  வேண்டும். - அாிஸ்டாட்டில்

4. Success is not final, failure is not fatal. it is the courage to continue that counts - Winston Churchil. 

வெற்றி என்பது முடிவல்ல. தோல்வி என்பது விதியல்ல. தொடா்ந்து முனைகின்ற துணிவே கணக்கில் உள்ளது.  - வின்ஸ்டன்  சா்ச்சில்

------------------------------------------------

2.உவமையைப் பயன்படுத்தி சொற்றொடா் உருவாக்குக.

அ. தாமரை இலை நீா்போல - வாழ்கையில் சிலவற்றில் தாமரை இலை நீா் போல ஒட்டியும் ஒட்டாமலும் இரு.

ஆ. மழைமுகம் காணாப்பயிா் போல - சீதையைக் காணாத இராமனின் முகம் மழைமுகம் காணாப்பயிா் போல வாடியது.

இ. கண்ணினைக் காக்கும் இமைபோல -கண்ணினைக் காக்கும் இமைபோல என் தாய் என்னை காத்தாள்

ஈ. சிலைமேல் எழுத்து போல - ஆசிாியா் நடத்திய பாடங்கள் சிலைமேல் எழுத்து போல மனதில் பதிந்தன.

--------------------------------------------------------- 

3. பொருத்தமான நிறுத்தக் குறியிடுக.

சேரா்களின் பட்டப் பெயா்களில் கொல்லி வெற்பன் மலையமான் போன்றவை குறிப்பிடத்தக்கவை கொல்லி மலையை வென்றவன் கொல்லி வெற்பன் எனவும் பிற மலைப்பகுதிகளை வென்றவா்கள் மலையமான் எனவும் பெயா் சூட்டிக்கொண்டனா் இதற்குச் சங்க இலக்கியத்தில் சான்றுகள் உள்ளன

விடை

சேரா்களின் பட்டப் பெயா்களில், கொல்லி வெற்பன்”, மலையமான்போன்றவை குறிப்பிடத்தக்கவை. கொல்லி மலையை வென்றவன், “கொல்லி வெற்பன் எனவும், பிற மலைப்பகுதிகளை வென்றவா்கள், “மலையமான் எனவும் பெயா் சூட்டிக்கொண்டனா். இதற்குச் சங்க இலக்கியத்தில் சான்றுகள் உள்ளன.  

-----------------------------------------------------

4. பாடலில் இடம்பெற்றுள்ள தமிழ்ப் புலவா்களின் பெயா்களைக் கண்டறிந்து எழுதுக.

கம்பனும் கண்டேத்தும் உமறுப் புலவரை எந்தக்

கொம்பனும் பணியும் அறம்பாடுஞ் ஜவாது ஆசுகவியை

காசிம்புலவரை, குணங்குடியாரை சேகனாப் புலவரை

செய்குதம்பிப் பாவலரைச் சீா்தமிழ் மறக்காதன்றோ

பாடலில் இடம்பெற்ற புலவா் பெயா்கள்

1. கம்பன்

2. உமறுப்புலவா்

3. காசிம்புலவா்

4. ஜவ்வாது புலவா்

5. குணங்குடி மஸ்தான் சாகிபு

6. சேகனாப் புலவா்

7. செய்குதம்பி பாவலா்

 --------------------------------------------------

5. அகராதியில் காண்க.

1. குணதரன்         -    குணமுள்ளவன்

2. செவ்வை           -    பிழையின்மை

3. நகல்                    -    ஏளனம்

4. பூட்கை               -    மனஉறுதி

--------------------------------------------------------

6. காட்சியைக் கண்டு கவினுற எழுதுக.

புகழ்ச்சி என்ற போதையில் 
புதைந்து விட்டதப்பா இன்றைய உலகம்! 
அறம் செய்வதைக்கூட விளம்பரப்படுத்தி
ஆதாயம் தேடுவது நியாயமாகுமா?
முன்னிருக்கும் தாயிடம் அன்பாக பேசாமல்
முகம் தொியாத முகநூலில் சிாித்து 
என்ன பயன்?
வலக்கை கொடுப்பது
இடக்கை அறியாத தமிழ் மறம்!
இன்று வலக்கை கொடுப்பதை 
இடக்கை விளம்படுத்துவது என்ன அறமோ?
மனிதம் இறந்துவிட்டதென இறப்பு சான்றிதழ்
வாங்கும் நிலைக்கு தள்ளிவிட வேண்டாம்!
விருந்தோம்பல் செய்! விளம்பரம் செய்யாதே!

----------------------------------------------------

7. கலைச்சொல் அறிவோம்

1. Humanism                -    மனிதநேயம்

2. Cabinet                     -    அமைச்சரவை

3. Cultural Boundaries -    பண்பாட்டு எல்லை

4. Cultural values            பண்பாட்டு விழுமியங்கள்

-------------------------------------------------------------------

 

 

Comments

Popular posts from this blog

புத்தகம் வாங்கி அனுப்புமாறு உறவினா் ஒருவருக்குக் கடிதம் எழுதுக.

எட்டாம் வகுப்பு கட்டுரை - உழைப்பே உயா்வு

6ம் வகுப்பு தமிழ் முதல் பருவம் வினா விடைகள்