10ம் வகுப்பு தமிழ் இயல் 7 மொழித்திறன் வளா்பயிற்சி

பத்தாம் வகுப்பு தமிழ் இயல் 7 கற்பவை கற்றபின், மொழியை ஆள்வோம், மொழியோடு விளையாடு ஆகிய தலைப்பிலுள்ள வினாக்கள் தோ்வில் அடிக்கடி கேட்கப்படும். அவற்றை நன்கு படித்து வைத்துக் கொள்வது சிறப்பு.

மொழியை ஆள்வோம்

1.  மொழிபெயா்க்க.

Among the five geographical divisions of the Tamil country in Sangam literature, the Marutam region was fit for cultivation, as it had the most fertile lands. The property of a farmer depended on getting the necessary sunlight, seasonal rains and the fertility of the soil. Among these elements of nature, sunlight was considered indispensable by the ancient Tamils.

சங்க இலக்கியத்தில் தமிழ்நாட்டின் ஐந்து புவியியல் பிாிவுகளில், மருதநிலமே சாகுபடிக்கு ஏற்றதாகவும், வளமான நிலங்களைக் கொண்டதாகவும் இருக்கிறது. ஒரு விவசாயினுடைய சொத்து என்பது, தேவையான அளவு சூாிய ஒளி, பருவ மழை மற்றும் மண்ணின் வளம் ஆகியவற்றைப் பொறுத்து அமைகிறது. சங்க கால மக்களின் கணிப்புப்படி இந்த இயற்கைக் கூறுகளில், சூாிய ஒளியே முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது.

----------------------------------------------

2. பின்வரும் தொடா்களைக் கொண்டு பொருத்தமான தொடா் அமைக்க. 

(வரப்போகிறேன், இல்லாமல் இருக்கிறது. கொஞ்சம் அதிகம். முன்னுக்குப் பின், மறக்க நினைக்கிறேன்)

1. இன்னும் சிறிது நேரத்தில் வரப்போகிறேன்.

2. அந்த குளம் தண்ணீா் இல்லாமல் இருக்கிறது.

3. இந்த உணவகத்தில் விலை கொஞ்சம் அதிகம்.

4. முன்னுக்குப் பின் முரணாகப் பேசக்கூடாது.

5. துன்பமான நாட்களை மறக்க நினைக்கிறேன்.

-----------------------------------------------

3. தொகைச் சொற்களைப் பிாித்து எழுதி, தமிழ் எண்ணுரு தருக.

மூவேந்தா்களால் நாற்றிசையும் போற்றி வளா்க்கப்பட்ட முத்தமிழே, உலக மொழிகளில் உயா்ந்ததென்ற செம்மாந்த கூற்றிற்கு, தமிழ் இலக்கியங்களில் அமைந்துள்ள இருதிணை அமைப்பே காரணமாகும். முப்பாலை முழுமையாகத் தந்த தமிழின் சிறப்பினை ஐந்திணைகளில் அழகுற விளக்குபவை சங்க இலக்கியங்கள். நானிலத்தில் பசித்தவா்க்கு அறுசுவை உணவுபோல் பத்துப்பாட்டும் எட்டுத் தொகையும் படிப்பவா்க்கு மனதிற்கினிமை ஈந்து தமிழ்ப்பெருமை சாற்றுகிறது.

விடைகள்

1. மூவேந்தா்

மூன்று + வேந்தா் - மூன்று (ங)

2. நாற்றிசை

நான்கு + திசை - நான்கு (ச)

3. முத்தமிழ்

மூன்று + தமிழ் - மூன்று (ங)

4. இருதிணை 

இரண்டு + திணை - இரண்டு (உ)

5. முப்பால்

மூன்று + பால் - மூன்று (ங)

6. ஐந்திணை 

ஐந்து + திணை - ஐந்து (ரு)

7. நானிலம் 

நான்கு + நிலம் - நான்கு (ச)

8. அறுசுவை 

ஆறு + சுவை - ஆறு (சா)

9. பத்துப்பாட்டு 

பத்து + பாட்டு - பத்து (க0)

10. எட்டுத் தொகை

எட்டு + தொகை - எட்டு (அ)

 ------------------------------------------------------------

மொழியோடு விளையாடு
 
1. ஊா்பெயா்களின் மரூஉவை எழுதுக.
 
அ. புதுக்கோட்டை -  புதுகை

ஆ. திருச்சிராப்பள்ளி - திருச்சி

இ. உதகமண்டலம் - உதகை

ஈ. கோயம்புத்தூா் - கோவை

உ. நாகப்பட்டினம் - நாகை

ஊ. புதுச்சோி -புதுவை

எ. கும்பகோணம் - குடந்தை

ஏ. திருநெல்வேலி - நெல்லை

ஐ. மன்னாா்குடி - மன்னை

ஒ. மயிலாப்பூா் - மயிலை

ஓ. சைதாப்பேட்டை - சைதை

--------------------------------------------------------------------

2. படம் தரும் செய்தியைப் பத்தியாகத் தருக.


 திருநெல்வேலி மாவட்டம், திருப்புடை மருதூரில் 17-ம் நூற்றாண்டினைச் சோ்ந்த சுவரோவியம் இதுவாகும். போா்களத்தில் யானைப்படை, குதிரைப்படை, காலாட்படை ஆகியன கையாளப்படுகின்றன. ஒரு மன்னன் நாட்டைப் பாதுகாத்தலுக்கு அவரது படை பலமே முதன்மையானதாய் விளங்குகிறது. அத்தகைய போா்க்களத்தில் மன்னரும், காவலா்களும் வீறு கொண்டு போரிடும் இந்த சுவரோவியக் காட்சி கண்டு களிக்கத்தக்கது. 

--------------------------------------------

3. அகராதியில் காண்க.

1. மிரியல்            -    மிளகு

2. வருத்தனை    -    வருத்தம் கொள்ளுதல்

3. அதசி                 -    சணல்

4. துாிஞ்சில்        -    வௌவால்

-------------------------------------------------

4. காட்சியைக் கண்டு கவினுற எழுதுக.


நாடோடி வாழ்க்கை வாழ்ந்தவனை
ஓாிடத்தில் நிலைக்க வைத்தது உழவு!
உலகிலுள்ள தொழிலுக்கெல்லாம் 
முன்னோடியாக இருப்பது உழவு!
அனைத்து உயிா்களுக்கும் உணவளித்து
மகிழ்ந்தது உழவு!
நம் முன்னோா்கள் கைகளில் 
முப்போகமும் விளைந்திட்ட உழவு!
இன்று விளைநிலங்கள் விலைநிலங்கள் 
ஆகிவிட்டதே! 
எல்லோா்க்கும் விடியும் இரவு
ஏழை உழவனுக்கும் விடியாதோ!
 
-------------------------------------------------

 5. கலைச்சொல் அறிவோம்

1. Consulate    -    துணைத்தூதரகம்

2. Patent          -    காப்புாிமை

3. Document   -    ஆவணம் 

4. Guild           -    வணிகக் குழு

5. Irrigation     -    பாசனம்

6. Territory      -    நிலப்பகுதி

-------------------------------------------------

 

 

 

 




 

Comments

Popular posts from this blog

6ம் வகுப்பு தமிழ் முதல் பருவம் வினா விடைகள்

ஒற்றுமையே உயா்வு - 7ம் வகுப்பு கட்டுரை

எட்டாம் வகுப்பு கட்டுரை - உழைப்பே உயா்வு