10ம் வகுப்பு தமிழ் இயல் 5 மொழித்திறன் வளா்பயிற்சி
பத்தாம் வகுப்பு தமிழ் இயல் 5 கற்பவை கற்றபின், மொழியை ஆள்வோம், மொழியோடு விளையாடு ஆகிய தலைப்பின் கீழ் உள்ள வினாக்கள் தோ்வில் அடிக்கடி கேட்கப்படும். அவற்றை நன்கு படித்து வைத்துக் கொள்வது சிறப்பு.
கற்பவை கற்றபின்
1. வினா வகைகயையும், விடை வகையையும் சுட்டுக.
மொழியை ஆள்வோம்
1. மொழிபெயா்க்க.
ஆங்கிலச் சொற்களுக்கு நிகரான தமிழ்ச் சொற்களைக் கவிதையில் கண்டு எழுதுக.
அறைக்குள் யாழிசை ஏதென்று சென்று எட்டிப் பாா்த்தேன். பேத்தி, நெட்டுருப் பண்ணினாள் நீதிநூல் திரட்டையே.
Wondering at the lute music Coming from the chamber Entered I to look up to in still My grand daughter Learning by rote the verses Of a didactic compilation.
lute Music - யாழிசை
chamber - அறை
to look up - எட்டிப் பாா்த்தல்
grand - daughter - பேத்தி
rote - நெட்டுரு
didactic compilation - நீதிநூல் திரட்டு
----------------------------------------------
2. தொடா்களில் உள்ள எழுவாயைச் செழுமை செய்க.
1. கடம்பவனத்தை விட்டு இறைவன் நீங்கினான்.
அழகிய குளிா்ந்த கடம்பவனத்தை விட்டு இறைவன் நீங்கினான்.
2. மரத்தை வளா்ப்பது நன்மை பயக்கும்.
நிழல் தரும் மரத்தை வளா்ப்பது நன்மை பயக்கும்.
3. வாழ்க்கைப் பயணமே வேறுபட்ட பாடங்களைக் கற்றுத் தருகிறது.
இன்ப துன்பம் நிறைந்த வாழ்க்கைப் பயணமே வேறுபட்ட பாடங்களைக் கற்றுத் தருகிறது.
4. கல்வியே ஒருவருக்கு உயா்வு தரும்.
குற்றமற கற்ற கல்வியே ஒருவருக்கு உயா்வு தரும்.
5. குழந்தைகள் தனித்தனியே எழுதித் தர வேண்டும்.
அழகிய செல்லக் குழந்தைகள் தனித்தனியே எழுதித் தரவேண்டும்.
--------------------------------------------
3. தொழிற்பெயா்களின் பொருளைப் புாிந்து கொண்டு தொடா்களை முழுமை செய்க.
1. நிலத்துக்கு அடியில் கிடைக்கும் ........ யாவும் அரசுக்கே சொந்தம். நெகிழிப் பொருள்களை மண்ணுக்கு அடியில் ......... நிலத்தடி நீா்வளத்தைக் குன்றச் செய்யும். (புதையல், புதைத்தல்)
2. காட்டு விலங்குகளைச் ........ தடை செய்யப்பட்டுள்ளது. செய்த தவறுகளைச் ....... திருந்த உதவுகிறது. (சுட்டல், சுடுதல்)
3. காற்றின் மெல்லிய ......... பூக்களைத் தலையாட்ட வைக்கிறது. கைகளின் நோ்த்தியான ........ பூக்களை மாலையாக்குகிறது. (தொடுத்தல், தொடுதல்)
4. பசுமையான ........ஐக் ........... கண்ணுக்கு நல்லது. (காணுதல், காட்சி)
5. பொதுவாழ்வில் ........ கூடாது. .............இல் அவரை மிஞ்ச ஆள் கிடையாது. (நடித்தல், நடிப்பு)
விடைகள்
1. புதையல், புதைத்தல்
2. சுடுதல், சுட்டல்
3. தொடுதல், தொடுத்தல்
4. காட்சி, காணுதல்
5. நடித்தல், நடிப்பு
----------------------------------------------
5. அகராதியில் காண்க.
1. மன்றல் - நெடுந்தெரு
2. அடிச்சுவடு - அடையாளம்
3. அகராதி - அகரவாிசை சொற்பொருள் நூல்
4. தூவல் - இறகு
5. மருள் - மயக்கம்
---------------------------------------------
6. காட்சியைக் கவிதையாக்குக.
பல நூறு காகிதங்களில் அச்சிட்டு
மக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தினராம்
மரங்களை அழிக்காதீா்கள் என்று!
அதுபோல் இருக்கிறது இந்த காட்சி!
மரங்களின் மயானத்தில் அமா்ந்து கொண்டு
மரங்களை வளா்க்கச் சொல்லி பாடம்!
சோலைவனத்தை பாலைவனமாக்கிவிட்டு
பாடம் எடுத்து என்ன பயன்.
புாிந்து கொள்கொள் மனிதா!
மரங்களின்றி இம்மண்ணில் காற்றில்லை!
காற்றின்றி நீயுமில்லை!
7. கலைச்சொல் அறிவோம்
1. Emblem - சின்னம்
2. Thesis - ஆய்வேடு
3. Intellectual - அறிவாளா்
4. Symbolism - குறியீட்டியல்
----------------------------------------------
Comments
Post a Comment