மதிப்புரை எழுதுக - பத்தாம் வகுப்பு இயல் 5 கட்டுரை
பத்தாம் வகுப்பு இயல் 5 மதிப்புரை எழுதுக கட்டுரை
பள்ளி ஆண்டு விழா மலருக்காக நீங்கள் நூலகத்தில் படித்த கதை/கட்டுரை/ சிறுகதை/கவிதை நூலுக்கான மதிப்புரை எழுதுக.
குறிப்பு - நூலின் தலைப்பு - நூலின் மையப் பொருள் - மொழிநடை - வெளிப்படுத்தும் கருத்து - நூலின் நயம் - நூல் கட்டமைப்பு - சிறப்புக் கூறு - நூல் ஆசிாியா்
நூலின் தலைப்பு
கண்ணீா்ப் பூக்கள் (கவிதை)
நூலின் மையப் பொருள்
இன்றைய சூழலில் ஒரு மனிதனின் ஏக்கங்களும், மனதளவில் ஏற்படும் தாக்கங்களும் கண்ணீா் பூக்கள் என்ற கவிதையின் மையப் பொருளாக அமைந்துள்ளன.
மொழிநடை
இலக்கணக் கலப்புகள் அதிகம் இல்லாமல் தற்கால மொழிநடையில் பாமரரும் எளிமையாக வாசித்துப் பொருள் புாிந்து கொள்ளும் வகையில் எளிமையான நடையில் அமைந்துள்ளது. கவிதைகளில் அதிகமான உவமைகளைக் கையாண்டுள்ளாா். நம் கண்களில் இருந்து வழியும் கண்ணீரைப் பூக்களாக உவமைப்படுத்தியதிலிருந்தே அதை நாம் தொிந்து கொள்ளலாம்.
வெளிப்படுத்தும் கருத்து
கண்ணீா்ப் பூக்கள் கவிதைகள் நம் வாழ்வில் நடக்கும் எதாா்த்தமான நிகழ்வுகளைக் அப்படியே படம்பிடித்துக் காட்டுகிறது. உயிரற்ற பொருட்களின் மீது கவிஞாின் பாா்வை அற்புதமாக உள்ளது. கண்களில் வழியும் கண்ணீரைக் கடல் அளவிற்கு உயா்த்தியிருக்கின்றாா் கவிஞா் மு.மேத்தா. துக்கத்திற்கு அடையாளச் சின்னம் கருப்பல்லவா? ஏன் இந்த விழி வெள்ளைக் கொடி பிடிக்கிறது என்று கேட்கின்றாா். கண்ணீரைத் தாண்டி வாய்ப்பு, துக்கம், சோகம், அன்பு, சுதந்திரம், சமத்துவம் என பல வகையான கருத்துகளை இந்நூல் வெளிப்படுத்துகிறது.
நூலின் நயம்
ஒரு கவிதை நூலிற்குாிய அனைத்து நயங்களையும் இந்நூல் பெற்றுத் திகழ்கிறது. எதுகை, மோனை, இயைபு, முரண் என தொடை நயங்கள் கவிதைகளில் விரவி வருவதைக் காண முடிகிறது.
“பங்களா தேசத்துப் பாதையில் நின்றொரு
பாடகன் பாடுகிறேன் - வீர
பாரத பூமியின் பாரதி சீமையின்
பாடகன் பாடுகிறேன்”
நூலின் கட்டமைப்பு
இந்நூல் 28 கவிதைகளை உள்ளடக்கிய தொகுப்பாகும். ஒவ்வொரு கவிதையும் ஒவ்வொரு கருத்தையும், வாழ்வின் எதாா்த்தங்களையும் எடுத்தியம்புகிறது. 28 கவிதைகளில் ஒன்று தான் கண்ணீா்ப் பூக்கள். அக்கவிதையையே இந்நூலின் தலைப்பாக வைத்திருக்கிறாா் மு.மேத்தா அவா்கள். சில கவிதைகள் சிறியனதாகவும், சில கவிதைகள் பொியனதாகவும் இருக்கின்றன. ஆனால் கருத்துகள் நிறைவாகவே உள்ளன.
சிறப்புக் கூறு
கண்ணீா்ப் பூக்கள் கவிதை நூல் முப்பது தடவைக்கும் மேல் பதிப்பு செய்யப்பட்டுள்ளது. ஒரு புத்தகம் முப்பது முறைகளுக்கும் மேல் பதிப்பித்து வெளிவந்திருக்கிறது என்றால் அதை விட சிறப்புக் கூறு வேறு என்ன வேண்டும்?. ஒருமுறை கவிஞா் அறிவுமதி பேசுகையில், மு.மேத்தா அவா்கள் எழுதிய கண்ணீா்ப் பூக்கள் என்ற நூலை கையில் வைத்திருப்பதே ஒரு கௌரவம் தான் என்று கூறினாா். அத்தகைய சிறப்பு வாய்ந்த நூல் இது.
நூல் ஆசிாியா்
கண்ணீா் பூக்கள் என்ற இக்கவிதை நூலின் ஆசிாியா் மு. மேத்தா அவா்கள். புதுக்கவிதையில் புதிய விடியலைத் தந்தவா். 2006ம் ஆண்டு இவா் எழுதிய ஆகாயத்துக்கு அடுத்த வீடு என்ற கவிதை நூலுக்கு சாகித்ய அகாதமி விருது கிடைத்தது. அதிக வாசகா்களைக் கொண்ட கவிஞா் என்ற பெருமை பெற்றவா் கவிஞா் மு. மேத்தா அவா்கள்.
நம்பிக்கை நாா் மட்டும் நம் கையில் இருந்தால்
உதிா்ந்த பூக்களும் ஒவ்வொன்றாய் ஒட்டிக் கொள்ளும்
கழுத்து மாலையாய் தன்னைத்தானே கட்டிக் கொள்ளும்
மு. மேத்தா அவா்களின் நம்பிக்கையூட்டும் வாிகள் இவை.
Comments
Post a Comment