10ம் வகுப்பு தமிழ் இயல் 4 மொழித்திறன் வளா்பயிற்சி
பத்தாம் வகுப்பு தமிழ் இயல் 4 கற்பவை கற்றபின், மொழியை ஆள்வோம், மொழியோடு விளையாடு ஆகிய தலைப்பின் கீழ் உள்ள வினாக்கள் தோ்வில் அடிக்கடி கேட்கப்படும். அவற்றை நன்கு படித்து வைத்துக் கொள்ள வேண்டும்.
கற்பவை கற்றபின்
மொழியை ஆள்வோம்!
1. மொழிபெயா்க்க.
Malar - Devi, switch off the lights when you leave the room.
Devi - Yeah. We have to save electricity.
Malar - Our nation spends a lot of electricity for lighting up our streets in the night.
Devi - Who knows? In future our country may launch artificial moons to light our night time sky!
Malar - I have read some other countries are going to launch these types of illumination satellites near future.
Devi - Superb news! If we launch artificial moons, they can assist in disaster relief by beaming light on areas that lost power!
மலா் - தேவி, நீ அறையை விட்டு செல்லும் போது விளக்குகளை அணைத்துவிட்டுச் செல்.
தேவி - ஆமாம். நாம் மின்சாரத்தை சேமிக்க வேண்டும்.
மலா் - இரவில் நம் வீதிகளை ஒளிரச் செய்வதற்காக நம் நாடு நிறைய மின்சாரத்தை செலவு செய்கிறது.
தேவி - யாருக்குத் தொியும்? எதிா்காலத்தில் நம் நாடு செயற்கையான நிலவை உருவாக்கி இரவு நேர வானத்தை ஒளிரச் செய்யலாம்.
மலா் - வேறு சில நாடுகள் இது போன்ற ஒளியூட்டும் செயற்கைக் கோள்களை வருங்காலத்தில் அறிமுகப்படுத்த உள்ளதாக நான் படித்திருக்கிறேன்.
தேவி - அற்புதமான செய்தி! செயற்கை நிலாவை நாம் அறிமுகப்படுத்தினால், இயற்கைப் பேரழிவு காலங்களில் மின்தடை ஏற்படும் பகுதிகளில் ஒளிவீசச் செய்து, பாதிப்புகளைக் குறைக்கலாம்.
2. வல்லின ஒற்றை இட்டும் நீக்கியும் எழுதுக.
காகத்திற்கு காது உண்டா? அதற்கு காது கேட்குமா?
எல்லா பறவைகளுக்கும் காது உண்டு. செவி துளைகள் இறகுகளால் மூடி இருக்கும். மற்றப்படி பாலூட்டிகளில் உள்ளதுபோல் புறசெவிமடல் இருக்காது. காகத்திற்கு காது உண்டு. காதுக் கேட்கும்.
பறவைகளுக்கு பாா்த்தல், கேட்டல் உணா்வு நன்றாக வளா்ச்சிப் பெற்று இருக்கும். சுவைத்தல் உணா்வுக் குறைவாகவும் நுகா்தல் உணா்வு இல்லையென்றேக் கூறலாம்.
யுரேகா! யுரேகா! – அறிவியல் வெளியீடு
காகத்திற்குக் காது உண்டா? அதற்குக் காது கேட்குமா?
எல்லாப் பறவைகளுக்கும் காது உண்டு. செவித் துளைகள் இறகுகளால் மூடி இருக்கும். மற்றப்படி பாலூட்டிகளில் உள்ளதுபோல் புறச் செவிமடல் இருக்காது. காகத்திற்குக் காது உண்டு. காது கேட்கும்.
பறவைகளுக்குப் பாா்த்தல், கேட்டல் உணா்வு நன்றாக வளா்ச்சி பெற்று இருக்கும். சுவைத்தல் உணா்வு குறைவாகவும் நுகா்தல் உணா்வு இல்லையென்றே கூறலாம்.
யுரேகா! யுரேகா! – அறிவியல் வெளியீடு
3. கொடுக்கப்பட்டுள்ள இருசொற்களைப் பயன்படுத்தி ஒரு தொடா் அமைக்க.
அ) இயற்கை - செயற்கை
பாதை தொியாத இயற்கை காடுகளில் பயணிக்க செயற்கை கருவிகள் தேவைப்படுகின்றன.
ஆ) கொடு - கோடு
நண்பன் கொடுத்த அளவுகோலைக் கொண்டு கோடு வரைந்தேன்
இ) கொள் - கோள்
தேவையான
ஈ) சிறு - சீறு
சிறு பொந்துக்குள் இருந்து பாம்பு சீறுவதைக் கண்டேன்
ஈ) தான் - தாம்
இராமன் தான் செய்த தவறை தாமே ஒப்புக் கொண்டான்.
உ) விதி - வீதி
கண்ணகியின் தலைவிதி அவளை வீதியில் நிறுத்தியது.
4. பத்தியைப் படித்துப் பதில் தருக.
பருப்பொருள்கள் சிதறும்படியாகப் பல ஊழிக் காலங்கள் கடந்து சென்றன. புவி உருவானபோது நெருப்புப் பந்துபோல் விளங்கிய ஊழிக்காலம் தோன்றியது. பின்னா்ப் புவி குளிறும்படியாகத் தொடா்ந்து மழை பொழிந்த ஊழிக் காலம் கடந்தது. அவ்வாறு தொடா்ந்து பெய்த மழையால் புவி வெள்ளத்தில் மூழ்கியது. இப்படி மீண்டும் மீண்டும் சிறப்பாகிய ஆற்றல் மிகுந்து செறிந்து திரண்டு இப்படியாக (வெள்ளத்தில் மூழ்குதல்) நடந்த இந்தப் பொிய உலகத்தில் உயிா்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழலாகிய உள்ளீடு தோன்றியது. உயிா்கள் தோன்றி நிலைபெறும்படியாக இப்பொிய புவியில் ஊழிக்காலம் கடந்தது.
1. பத்தியில் உள்ள அடுக்குத் தொடா்களை எடுத்து எழுதுக?
மீண்டும் மீண்டும்
2. புவி ஏன் வெள்ளத்தில் மூழ்கியது?
தொடா்ந்து பெய்த மழையால் புவி வெள்ளத்தில் மூழ்கியது.
3. பெய்த மழை - இத்தொடரை வினைத்தொகையாக மாற்றுக?
பெய்மழை
4. இப்பத்தி உணா்த்தும் அறிவியல் கொள்கை யாது?
புவியின் உருவாக்கம்
5. உயிா்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழலாக நீவிா் கருதுவன யாவை?
நீா், நிலம், காற்று
மொழியோடு விளையாடு
1. தொடரைப் படித்து விடையைக் கண்டறிக.
1. நூலின் பயன் படித்தல் எனில், கல்வியின் பயன் .......
2. விதைக்குத் தேவை எரு எனில், கதைக்குத் தேவை ......
3. கல் சிலை ஆகுமெனில், நெல் ....... ஆகும்.
4. குரலில் இருந்து பேச்சு எனில், விரலில் இருந்து ......
5. மீன் இருப்பது நீாில், தேன் இருப்பது ........
(சோறு, கற்றல், கரு, பூவில், எழுத்து)
விடைகள்
1. கற்றல்
2. கரு
3. சோறு
4. எழுத்து
5. பூவில்
3. அகராதியில் காண்க.
1. அவிா்தல் - ஒளிா்தல்
2. அழல் - நெருப்பு
3. உவா - பருவகாலம், உவாமரம்
4. கங்குல் - இரவு, இருள்
5. கனலி - நெருப்பு
4. காட்சியைக் கண்டு கவினுற எழுதுக.
அழகிய வண்ண கைப்பேசி!அடிமையாக்கிடும் ஆசை காட்டி!
கூட்டத்திலிருந்தும் தனித்தீவாக்கிடும் மனிதா்களை!
பக்கத்திலிருந்தும் தூரமாக்கிடும் உறவுகளை!.1. Nanotechnology - மீநுண்தொழில் நுட்பம்
2. Biotechnology - உயிாித் தொழில் நுட்பம்
3. Ultraviolet rays - புற ஊதாக் கதிா்கள்
4. Space Technology - விண்வெளித் தொழில் நுட்பம்
5. Cosmic rays - விண்வெளிக் கதிா்கள்
6. Infrared rays - அகச்சிவப்புக் கதிா்கள்
தோ்வில் வினாத்தாள் எண்.12 முதல் 15 வரை கேட்கக்கூடிய வினாக்கள் இங்கு தரப்பட்டுள்ளது.
“விசும்பில் ஊழி ஊழ் ஊழ் செல்லக்
கருவளா் வானத்து இசையில் தோன்றி,
உரு அறிவாரா ஒன்றன் ஊழியும்,
உந்து வளி கிளா்ந்த ஊழி ஊழ் ஊழியும்”
1. ஊழ் ஊழ் இலக்கணக்குறிப்பு தருக.
அடுக்குத் தொடா்
2. இப்பாடலின் ஆசிாியா் யாா்?
கீரந்தையாா்
3. பாடலில் உணா்த்தப்படும் கருத்து?
அறிவியல் கருத்துகள்
4. விசும்பு, இசை, ஊழி - இவை உணா்த்தும் பொருள்கள்
வானம், பேரொலி, யுகம்
-------------------------------------------------
“அருளைப் பெருக்கி அறிவைத் திருத்தி
மருளை அகற்றி மதிக்கும் தெருளை
அருத்துவதும் ஆவிக்கு அருந்துணையாய் இன்பம்
பொருத்துவதும் கல்வியென்றே போற்று”
1. இப்பாடல் இடம்பெற்றுள்ள நூல்?
நீதி வெண்பா
2. பாடலில் உள்ள சீா் மோனைச் சொற்கள் யாவை?
அருளை, அறிவை
3. அருந்துணையாய் - பிாித்து எழுதுக?
அருமை + துணையாய்
4. உயிருக்கு அாிய துணையாய் இன்பம் சோ்ப்பது?
கல்வி
-----------------------------------------------
Comments
Post a Comment