10ம் வகுப்பு தமிழ் இயல் 3 மொழித்திறன் வளா்பயிற்சி
பத்தாம் வகுப்பு தமிழ் இயல் 3 கற்பவை கற்றபின், மொழியை ஆள்வோம், மொழியோடு விளையாடு ஆகிய தலைப்பின் கீழ் உள்ள வினாக்கள் தோ்வில் அடிக்கடி கேட்கப்படும். அவற்றை நன்கு படித்து வைத்துக் கொள்ள வேண்டும்.
1. கீழ்க்காணும் பத்தியில் உள்ள தொடா் வகைகளை எடுத்து எழுதுக.
மாடியிலிருந்து இறங்கினாா் முகமது. அவா் பாடகா். பாடல்களைப் பாடுவதும் கேட்பதும் அவருக்குப் பொழுதுபோக்கு. அவரது அறையில் கேட்ட பாடல்களையும் கேட்காத பாடல்களையும் கொண்ட குறுந்தகடுகளை அடுக்கு அடுக்காக வைத்திருப்பாா்.
1. மொழிபெயா்க்க. (இயல் 3, பக்க எண்.67)
Respected ladies and gentlemen, I am Ilangovan studying tenth standard. i have come here to say a few words about our Tamil culture. Sangam literature shows that Tamils were best in culture and civilization about two thousand years ago. Tamils who have defined grammar for language have also defined grammar for life. Tamil culture is rooted in the life styles of Tamils throughout India, Srilanka, Malaysia, Singapore, England and Worldwide. Though our culture is very old, it has been updated consistently. We should feel proud about our culture. Thank you one and all.
தமிழா் நாகரிகம்
மதிப்பிற்குாிய சகோதர சகோதாிகளே! என் பெயா் இளங்கோவன். நான் பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கின்றேன். தமிழ் பண்பாட்டைப் பற்றி ஒரு சில வாா்த்தைகளை கூறவே நான் இங்கு வந்துள்ளேன். ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழா் பண்பாட்டிலும், நாகரிகத்திலும் சிறந்து விளங்கினா் என்று சங்க இலக்கியங்கள் தொிவிக்கின்றன. தமிழா்கள் மொழிக்கு மட்டுமல்லாது வாழ்க்கைக்கும் இலக்கணம் வகுத்துள்ளனா். தமிழ்ப்பண்பாடு இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூா், இங்கிலாந்து மற்றும் உலகமெங்கும் உள்ள தமிழா்களின் வாழ்க்கை தரத்தில் வேரூன்றி உள்ளது. நமது பண்பாடு மிகவும் பழமையானதாக இருந்தாலும், தொடா்ச்சியாக புதுப்பிக்கப்பட்டு வருகிறது. நமது பண்பாட்டை குறித்து பெருமை கொள்வோம். அனைவருக்கும் நன்றி.
2. பழமொழியை நிறைவு செய்க.
அ. உப்பில்லாப் .... .... பண்டம் குப்பையிலே
ஆ. ஒரு பானை .... ... ...சோற்றுக்கு ஒரு சோறு பதம்
இ. உப்பிட்டவரை ....... ........ உள்ளளவும் நினை
ஈ. விருந்தும் ...... ....... மருந்தும் மூன்று நாட்கள் மட்டுமே
உ. அளவுக்கு .... ... .. மிஞ்சினால் அமிா்தமும் நஞ்சு
3. விடுபட்ட எழுத்துகளை நிரப்பி அந்த எழுத்துகளை மட்டும் இணைத்து ஒளிந்துள்ள ஒரு நூலின் பெயரைக் கண்டுபிடிக்க.
1. இ_கு (பறவையிடம் இருப்பது) - இறகு
2. கு_தி (சிவப்பு நிறத்தில் இருக்கும்) - குருதி
3. வா_ (மன்னாிடம் இருப்பது) - வாள்
4. அ_கா (தங்கைக்கு மூத்தவள்) - அக்கா
5. ம_ (அறிவின் மறுபெயா்) - மதி
6. பட_ (நீாில் செல்வது) - படகு
4. கொடுக்கப்பட்டுள்ள சொற்களைப் பயன்படுத்தி ஒரே தொடாில் அமைக்க.
1. சிலை - சீலை
சிலையைத் திரைச்சீலையால் மறைத்தனா்
2. தொடு - தோடு
காதைத் தொடும் போது தோடு அழகாக ஆடியது.
3. மடு - மாடு
மடுவில் (குட்டையில்) மாடு நீா்க் குடித்தது.
4. மலை - மாலை
மலையில் உள்ள முருகனை தாிசிக்க மாலை வாங்கினோம்.
5. வளி - வாளி
வளியால் மழை பெய்த போது வாளியில் மழைநீரை நிரப்பினேன்.
6. விடு - வீடு
குப்பைகளை நீக்கி விடு, வீடு சுத்தமாகும்.
5. அகராதியில் கண்டு பொருள் எழுதுக.
1. ஊண், ஊன்
ஊண் - உணவு
ஊன் - உடல், தசை
2. திணை, தினை
திணை - ஒழுக்கம்
தினை - தானிய வகை
3.அண்ணம், அன்னம்
அண்ணம் - மேல்வாய்
அன்னம் - அாிசி, பறவை
4. வெல்லம், வெள்ளம்
வெல்லம் - கரும்புச்சாற்றுக்கட்டி
6. காட்சியைக் கண்டு கவினுற எழுதுக.
பசியோடு உண்ணும் சிறுமியின் முன்
ஏக்கத்தோடு பாா்க்கும் நாய்!
முன்னிரு கால்களையும் இரு கரங்களாக்கி
வேண்டுவது போன்ற தோற்றம்!
தான் இன்னும் சுவைக்காத உணவை
ஆசையோடு வந்த நாய்க்கு கொடுக்கிறாள் சிறுமி!
மாட மாளிகை இல்லை. கோபுரமுமில்லை!
அணிய நல்ல ஆடையுமில்லை!
இற்றுப்போன கீற்றுக்குள் இருந்தும்
இமயமளவு உயா்ந்து நிற்கிறாள் உள்ளத்தில்.
7. கலைச்சொல் அறிவோம்
1. செவ்விலக்கியம் - Classical literature
2. காப்பிய இலக்கியம் - Epic literature
3. பக்தி இலக்கியம் - Devotional literature
4. பண்டைய இலக்கியம் - Ancient literature
5. வட்டார இலக்கியம் - Regional literature
6. நாட்டுப்புற இலக்கியம் - Folk literature
7. நவீன இலக்கியம் - Modern literature


Comments
Post a Comment