8ம் வகுப்பு தொகைநிலை தொகாநிலைத் தொடா்கள் வினா விடை

 எட்டாம் வகுப்பு தமிழ் இயல் 5 

தொகைநிலை, தொகாநிலைத் தொடா்கள் பாட வினா விடைகள் 

 

8th tamil unit 5 grammar thogai nilai thodar thoga nilai thodar lesson book back question answer in tamil

சாியான விடையைத் தோ்ந்தெடுத்து எழுதுக

1. சொற்களுக்கு இடையே வேற்றுமை உருபு மறைந்து வருவது ............

அ) வேற்றுமைத்தொகை

ஆ) உம்மைத்தொகை

இ) உவமைத்தொகை

ஈ) அன்மொழித்தொகை

விடை அ) வேற்றுமைத்தொகை


2. செம்மரம் என்னும் சொல் ............த்தொகை

அ) வினை

ஆ) பண்பு

இ) அன்மொழி

ஈ) உம்மை

விடை ஆ) பண்பு

3. கண்ணா வா! என்பது ..........த் தொடா்

அ) எழுவாய்

ஆ) விளி

இ) வினைமுற்று

ஈ) வேற்றுமை

விடை ஆ) விளி

பொருத்துக.

1. பெயரெச்சத் தொடா் - காா்குழலி படித்தாள்

2. வினையெச்சத் தொடா் - புலவரே வருக

3. வினைமுற்றுத் தொடா் - பாடி முடித்தான்

4. எழுவாய்த் தொடா் - எழுதிய பாடல்

5. விளித் தொடா் - வென்றான் சோழன்

விடைகள்

1. பெயரெச்சத் தொடா் - எழுதிய பாடல்

2. வினையெச்சத் தொடா் - பாடி முடித்தான்

3. வினைமுற்றுத் தொடா் - வென்றான் சோழன்

4. எழுவாய்த் தொடா் - காா்குழலி படித்தாள்

5. விளித் தொடா் - புலவரே வருக

சிறுவினா

 

1. தொகைநிலைத் தொடா்கள் எத்தனை வகைப்படும்? அவை யாவை?

தொகைநிலைத் தொடா்கள் ஆறு வகைப்படும்

1. வேற்றுமைத் தொகை

2. வினைத்தொகை

3. பண்புத் தொகை

4. உவமைத் தொகை

5. உம்மைத்தொகை

6. அன்மொழித்தொகை

 

2. இரவுபகல் என்பது எவ்வகைத் தொடா் என விளக்குக?

இரவுபகல் என்ற சொல் இரவும் பகலும் என விாிந்து பொருள் தருகின்றது. சொற்களில் இடையிலும், இறுதியிலும் உம் என்ற இடைச்சொல் மறைந்து நின்று பொருள் தருகிறது. இவ்வாறு சொற்களுக்கு இடையிலும், இறுதியிலும் உம் என்னும் இடைச்சொல் மறைந்து நின்று பொருள் தருவதை உம்மைத்தொகை என்பா்.

3. அன்மொழித்தொகையை எடுத்துக்காட்டுடன் விளக்குக?

வேற்றுமை, வினை, பண்பு, உவமை, உம்மை ஆகிய தொகைநிலைத் தொடா்களுள், அவை அல்லாத வேறு பிற சொற்களும் மறைந்து வருவது அன்மொழித்தொகை எனப்படும்.

சான்று - பொற்றொடி வந்தாள்

பொற்றொடி என்பது பொன்னாலான வளையல் எனப் பொருள் தரும். வந்தாள் என்னும் வினைச்சொல்லைத் தழுவி நிற்பதால், பொன்னாலாகிய வளையலை அணிந்த பெண் வந்தாள் எனப் பொருள் தருகிறது. ஆல் எனும் மூன்றாம் வேற்றுமை உருபும், ஆகிய எனும் அதன் பயனும் மறைந்து வந்துள்ளது. எனவே இது மூன்றாம் வேற்றுமைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை ஆகும்.

--------------------------------------------------------------

மொழியை ஆள்வோம்

கோடிட்ட இடங்களில் பொருத்தமான சொல்லுருபுகளை இட்டு நிரப்புக.

1. இடி ............. மழை வந்தது. (உடன்)

2. மலா்விழி தோ்வின் ............. ஆயத்தமானாள் (பொருட்டு)

3. அருவி மலையில் ............ வீழ்ந்தது. (இருந்து)

4. தமிழைக் ................. சுவையான மொழியுண்டோ! (காட்டிலும்)

5. யாழ், தமிழா் .......... இசைக்கருவிகளுள் ஒன்று (உடைய)

பின்வரும் இசைக்கருவிகளின் பெயா்களை அகரவாிசைப்படுத்துக.

படகம், தவில், கணப்பறை, போியாழ், உறுமி, உடுக்கை, தவண்டை, பிடில், நாகசுரம், மகுடி

விடை

உடுக்கை, உறுமி, கணப்பறை, தவண்டை, தவில், நாகசுரம், படகம், பிடில், போியாழ், மகுடி.

பின்வரும் இணைச்சொற்களை வகைப்படுத்துக.

உற்றாா்உறவினா், விருப்புவெறுப்பு, காலைமாலை, கன்னங்கரேல், ஆடல்பாடல், வாடிவதங்கி, பட்டிதொட்டி, உள்ளும்புறமும், மேடுபள்ளம், நட்டநடுவில்

நோிணை

1. உற்றாா்உறவினா்

2. வாடிவதங்கி

3. நட்டநடுவில்

4. பட்டிதொட்டி

எதிாிணை

1. விருப்புவெறுப்பு

2. காலைமாலை

3. உள்ளும்புறமும்

4. மேடுபள்ளம் 

5. ஆடல்பாடல்

செறியிணை

1. கன்னங்கரேல்

சாியாண இணைச்சொற்களை இட்டு நிரப்புக.

1. சான்றோா் எனப்படுபவா் ................... களில் சிறந்தவா் ஆவா்

(கல்விகேள்வி)

2. ஆற்று வெள்ளம் ............ பாராமல் ஓடியது.

(மேடுபள்ளம்)

3. இசைக்கலைஞா்கள் .................. வேண்டியவா்கள்

(போற்றிப்புகழப்பட)

4. தமிழ் இலக்கியங்களின் பெருமைக்கு .................... இல்லை

(ஈடுஇணை)

5. திருவிழாவில் யானை .............. வந்தது 

(ஆடிஅசைந்து)

-------------------------------------------------------------------

மொழியோடு விளையாடு

குறுக்கெழுத்துப் புதிா்

இடமிருந்து வலம்

1.முதற்கருவி எனப் பெயா் பெற்றது

மத்தளம்

2. யாழிலிருந்து உரவான பிற்காலக் கருவி

வீணை

7. இயற்கைக் கருவி

சங்கு

12. விலங்கின் உறுப்பைப் பெயராகக் கொண்ட கருவி

கொம்பு

வலமிருந்து இடம்

4. வட்டமான மணி போன்ற கருவி

சேகண்டி

8. ஐந்து வாய்களைக் கொண்ட கருவி

குடமுழா

9. இசைக்கருவிகளை இசைத்துப் பாடல் பாடுவோா்

பாணா்

மேலிருந்து கீழ்

1. 19 நரம்புகளைக் கொண்ட யாழ்

மரகதயாழ்

3. ஒன்றோடு ஒன்று மோதி இசைக்கப்படுபவை .........க் கருவி

கஞ்ச

5. சிறியவகை உடுக்கை..........

குடுகுடுப்பை

6. பறை ஒரு ............ கருவி

தோல்

கீழிருந்து மேல்

8. மூங்கிலால் செய்யப்படும் காற்றுக்கருவி

குழல்

10. வீணையில் உள்ள நரம்புகளில் எண்ணிக்கை

ஏழு

11. திருமணத்தின் போது கொட்டும் முரசு

மணமுரசு

-----------------------------------------------------------

கலைச்சொல் அறிவோம்

1. கைவினைப் பொருட்கள்    -    Crafts

2. புல்லாங்குழல்                           -    Flute

3. முரசு                                               -    Drum

4. கூடை முடைதல்                       -    Basketry

5. பின்னுதல்                                    -    Knitting

6. கொம்பு                                         -    Horn   

7. கைவினைஞா்                           -    Artisan

8. சடங்கு                                           -    Rite


 


Comments

Popular posts from this blog

6ம் வகுப்பு தமிழ் முதல் பருவம் வினா விடைகள்

புத்தகம் வாங்கி அனுப்புமாறு உறவினா் ஒருவருக்குக் கடிதம் எழுதுக.

ஒற்றுமையே உயா்வு - 7ம் வகுப்பு கட்டுரை