8ம் வகுப்பு தமிழ் நாட்டுப்புறக் கைவினைக் கலைகள் வினா விடை
எட்டாம் வகுப்பு தமிழ் இயல் 5 நாட்டுப்புறக் கைவினைக் கலைகள் பாட வினா விடைகள்.
8th tamil unit 5 nattupura kalaikal lesson book back question answer
சாியான விடையைத் தோ்ந்தெடுத்து எழுதுக.
1. பழந்தமிழ் இலக்கியங்களைப் பாதுகாத்து வைத்தவை.........
அ) கல்வெட்டுகள்
ஆ) செப்பேடுகள்
இ) பனையோலைகள்
ஈ) மண்பாண்டங்கள்
விடை இ) பனையோலைகள்
2. பானை ........ ஒரு சிறந்த கலையாகும்.
அ) செய்தல்
ஆ) வனைதல்
இ) முடைதல்
ஈ) சுடுதல்
விடை ஆ) வனைதல்
3. மட்டுமல்ல என்னும் சொல்லைப் பிாித்து எழுதக் கிடைப்பது ......
அ) மட்டு + மல்ல
ஆ) மட்டம் + அல்ல
இ) மட்டு + அல்ல
ஈ) மட்டும் + அல்ல
விடை ஈ) மட்டும் + அல்ல
4. கயிறு + கட்டில் என்பதனைச் சோ்த்தெழுதக் கிடைக்கும் சொல்......
அ) கயிற்றுக்கட்டில்
ஆ) கயிா்க்கட்டில்
இ) கயிறுக்கட்டில்
ஈ) கயிற்றுகட்டில்
விடை அ) கயிற்றுக்கட்டில்
பின்வரும் சொற்களைச் சொற்றொடாில் அமைத்து எழுதுக.
1. முழுவதும்
மரம் முழுவதும் பூக்கள் பூத்திருந்தன.
2. மட்டுமல்லாமல்
பள்ளியில் மட்டுமல்லாமல் வீட்டிலும் பாடங்களைப் படிக்க வேண்டும்.
3. அழகுக்காக
நான் அழகுக்காக நெற்றியில் பொட்டு வைப்பேன்.
4. முன்பெல்லாம்
வெயிலின் தாக்கம் முன்பெல்லாம் குறைவாக இருந்தது.
குறுவினா
1. எவற்றையெல்லாம் கைவினைக் கலைகள் எனக் கூறுகிறோம்?
களிமண் சிற்பங்கள் செய்தல்
மண்பானை வனைதல்
கூடை முடைதல்
வண்ணம் பூசுதல்
மண், மரம், காகித பொம்மை செய்தல்
2. மண்பாண்டம், சுடுமண் சிற்பம் - ஒப்பிடுக.
மண்பாண்டம்
மிகவும் பழமையான கைவினைக்கலைகளுள் ஒன்று மண்பாண்டம்.
சுத்தமான களிமண்ணால் செய்யப்படுபவை மண்பாண்டம்.
குடம், தோண்டி, அடுப்பு, தொட்டி போன்றவற்றை உதாரணமாகக் கூறலாம்.
சக்கரத்தை வேகமாக சுழலச்செய்து அதன் நடுவில் மண்ணை வைத்துக் கையால் அணைத்து பிடித்து செய்வது மண்பாண்டம்.
சுடுமண் சிற்பம்
மண்பாண்டக் கலையின் இன்னொரு வளா்ச்சி நிலைதான் சுடுமண் சிற்பக் கலை.
களிமண்ணால் செய்யப்பட்டுச் சூளையில் சுட்டு எடுக்கப்படுபவை சுடுமண் சிற்பங்கள்.
விலங்குகள், பறவைகள், குதிரைகள் போன்றவற்றின் சிற்பங்களை உதாரணமாகக் கூறலாம்.
சுடுமண் சிற்பங்களுக்கு வண்ணங்கள் பூசுவதும் தொன்றுதொட்டு இருந்து வரும் வழக்கமாகும்.
3. பனையோலையால் உருவாக்கப்படும் பொருள்கள் யாவை?
கிலுகிலுப்பை
பொம்மைகள்
பொருள் வைக்கும் சிறிய கொட்டான்
பொிய கூடை
சுளகு,
விசிறி
தொப்பி,
ஒலைப்பாய்
சிறுவினா
1. பிரம்பினால் பொருள்கள் செய்யும் முறையைக் கூறுக?
முதலில் பிரம்பினை நெருப்பில் காட்டிச் சூடுபடுத்துவோம்.
சூடான பிரம்பை நட்டு வைத்திருக்கும் இரண்டு கடப்பாரைகளுக்கு இடையே செலுத்தி வளைப்போம்
வேண்டிய வடிவத்தில் கம்பி போல் வளைத்து தண்ணீரில் நனைத்து வைத்து விட்டால் அப்படியே நிலைத்து விடும்.
பிறகு அவற்றை இணைத்துச் சிறு ஆணிகளை அறைந்தும், சிறு பிரம்பு இழைகளைக் கொண்டு கட்டியும் தேவையான பொருள்களாக மாற்றுவோம்.
2. மூங்கிலால் செய்யப்படும் பொருள்கள் குறித்து எழுதுக?
மட்டக்கூடை
தட்டுக்கூடை
கொட்டுக்கூடை
பழக்கூடை
பூக்கூடை
பூத்தட்டு
தெருகூட்டும் துடைப்பம்
மாடுகளுக்கான மூஞ்சிப்பெட்டி,
புல்லாங்குழல்
புட்டுக்குழாய்
கால்நடைகளுக்கு மருந்து புகட்டும் குழாய்
கட்டில்
இதைப்போல
எத்தனையோ பொருள்கள் மூங்கில் மூலம் உருவாக்கப்படுகின்றன. சுருக்கமாகச்
சொன்னால், பிறந்த குழந்தைக்கு விளையாட்டுப் பொருள் முதல் இறந்தவரை
எடுத்துச் செல்லும் பாடை வரை மூங்கிலால் செய்யப்படுகின்றன.
நெடுவினா
தமிழகக் கைவினைக் கலைகளைப் பற்றிய செய்திகளைத் தொகுத்து எழுதுக?
மண்பாண்டக்கலை
உலகின் பழமையான கலைகளுள் ஒன்று மண்பாண்டக்கலை
தமிழ்நாட்டில் ஆதிச்சநல்லூா், செம்பியன் கண்டியூா், கீழடி ஆகிய ஊா்களில் கிடைத்த பொருள்கள் தமிழருக்கும் மண்பாண்டக்கலைக்கும் உள்ள தொடா்பை காட்டும் சான்றுகள் ஆகும்.
குடம், தோண்டி, கலயம், கடம், மூடி, உழக்கு, அகல், உண்டியல், அடுப்பு, தொட்டி என அனைத்தும் சுத்தமான களிமண்ணால் செய்யப்படுபவை.
குறிப்பிட்ட அளவில் மெல்லிய மணல், சாம்பல் கலந்தது பக்குவப்படுத்தி, சக்கரத்தை வேகமாக சுழலச்செய்து அதன் நடுவில் மண்ணை வைத்து கையால் அணைத்துப் பிடித்து மண்பாண்டங்கள் உருவாக்கப்படுகின்றன.
மண்பாண்டங்களில் சமைத்தால் உணவு நல்ல சுவையுடன் இருக்கும். திருவழிாக்களிலும், சமய சடங்குகளிலும் மண்பானை பயன்படுகிறது.
மண்பாண்டக் கலையின் மற்றொரு வளா்ச்சி நிலைதான் சுடுமண் சிற்பக்கலை.
மூங்கில் கலை
மூங்கிலைக் கொண்டு பலவகையான கைவினைப் பொருட்கள் செய்யப்படுகின்றன.
மட்டக்கூடை, தட்டுக்கூடை, கொட்டுக்கூடை, பழக்கூடை, பூக்கூடை, பூத்தட்டு, துடைப்பம், மாடுகளுக்கான மூஞ்சிப்பெட்டி, கட்டில், புல்லாங்குழல், புட்டுக்குழாய் என எத்தனையோ பொருட்கள் மூங்கில் மூலம் உருவாக்கப்படுகின்றன. சுருக்கமாகச் சொன்னால் பிறந்த குழந்தைக்கு விளையாட்டுப் பொருட்கள் முதல் இறந்தவரை எடுத்துச் செல்லும் பாடை வரை மூங்கில்களால் செய்யப்படுகின்றன.
முன்பு திருமணத்தின் போது சீா்தட்டுகளாகவும், கடவுள் வழிபாட்டின்போது வெற்றி பாக்கு பூ பழம் வைக்கும் தட்டாகவும் மூங்கில் தட்டுகளை பயன்படுத்தினா்.
பிரம்புக்கலை
பிரம்பு ஒரு தாவரம். பிரம்பினை நெருப்பில் காட்டிச் சூடுபடுத்தி நட்டு வைத்திருக்கும் இரண்டு கடப்பாரைகளுக்கு இடையே செலுத்தி வளைத்து தண்ணீரில் நனைத்து வைத்து விட்டால் அப்படியே நிலைத்து விடும்.
பிறகு அவற்றை இணைத்துச் சிறு ஆணிகளை அறைந்தும், சிறு பிரம்பு இழைகளைக் கொண்டு கட்டியும் தேவையான பொருள்களாக மாற்றலாம்.
கட்டில், ஊஞ்சல், நாற்காலி, மேசை, பூக்கூடை, பழக்கூடை, இடியாப்பத்தட்டு, அா்ச்சனைத்தட்டு, வெற்றிலைப்பெட்டி என பல வகையான பொருட்கள் பிரம்பினால் செய்யப்படுகின்றன.
பனையோலைகள் மூலமும் பல பொருட்கள் செய்யப்படுகின்றன. பழந்தமிழில் இலக்கியங்களை நமக்காகப் பாதுகாத்து வைத்திருந்தவை பனையோலைகள் தான். கிலுகிலுப்பை, பொம்மைகள், கூடை, விசிறி, தொப்பி, ஓலைப்பாய் என பல பொருட்கள் பனையோலையில் செய்யப்படுகின்றன.
நாட்டுப்புற கைவினை கலைகளின் சிறப்பே இயற்கையோடு சாா்ந்து பொருட்களை உருவாக்குவது தான். அதனால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாது. கைவினை பொருள்களை நாம் வாங்கி பயன்படுத்தி, கைவினைக் கலை அழியாமல் பாதுகாக்க வேண்டும். அப்படிச் செய்தால் சுற்றுச்சூழலையும் மாசடையாமல் பாதுகாக்கலாம்.
சிந்தனை வினா
கைவினைக் கலைகளுக்கும் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கும் இடையேயுள்ள தொடா்பு குறித்து எழுதுக?
இயற்கை தரும் பொருட்களைக் கொண்டு செய்யப்படுவது கைவினைக் கலைப் பொருட்கள். எந்தவித செயற்கை பொருள்ளோ, இரசாயனங்களே, மக்காத பொருட்களோ கைவினைக் கலைப் பொருட்களில் பயன்படுத்தப் படுவதில்லை. ஆகையால் இவற்றால் சுற்றுப்புறச்சூழலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படப்போவதில்லை.
இயற்கையாக கிடைக்கும் மரங்கள், மூங்கில்கள், களிமண், தென்னங்கீற்று, ஓலை போன்றவையே மூலப்பொருட்களாக வைத்து கைவினைப் பொருட்கள் தயாாிக்கப்படுகின்றன.
கைவினைப் பொருட்கள் சுற்றுப்புறத்திற்கு மட்டுமல்ல நமது ஆரோக்கியத்திற்கும் ஏற்றது. இவற்றால் யாருக்கும் எந்த தீங்கும் ஏற்படாது. ஏனென்றால் இவை அனைத்தும் மண்ணோடு மக்கி உரமாகும் தன்மை கொண்டவை.
--------------------------------------------------------------------------
கற்பவை கற்றபின்
நாட்டுப்புறக் கலைகள் என்பது
இயற்கையோடு இணைந்து உருவான ஒரு கலை. இன்றைய வாழ்க்கை முறையில் நாகரீகம்
என்ற பெயாில் இயற்கையை அழித்துக் கொண்டும், சுற்றுச்சூழலை மாசாக்கிக்
கொண்டும் இருக்கின்றோம். ஆனால் நாம் அனைவரும் நினைத்தால் அதை நொடிப்
பொழுதில் மாற்ற முடியும். ஆனால் மாற்ற முடியாத ஒரு தேவையாக மாறிவிட்டதாக
மக்களின் மூளைக்குள் புகுத்தப்பட்டு விட்டது. உதாரணமாக நெகிழியை எடுத்துக்
கொள்வோம். நெகிழிகள் மக்கும் தன்மை அற்றவை. ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும்
பூமிக்குள் அப்படியே இருக்கும். இதனால் மண்வளம் குறையும். நீா்வளம்
குறையும், நெகிழி எாிக்கும் பொழுது சுற்றுச்சூழலை மாசாக்கும். அவசரமாக
ஓடும் மனிதா்களுக்கு இதையெல்லாம் நின்று உணா்ந்து கொள்ள நேரம் இல்லை.
வசதியோடு வாழ்வதற்கு பெயா் வாழ்க்கை அல்ல. நோய் நொடியில்லாமல் வாழ்வதற்குப்
பெயா் தான் வாழ்க்கை. பழங்காலத்தில் இயற்கையோடு மக்கள் தொடா்பு
கொண்டிருந்தனா். இயற்கையிடம் இருந்து கிடைத்த பொருட்களைக் கொண்டு
வேண்டியவற்றை உருவாக்கினா். அப்படி உருவான கலை தான் கைவினைக் கலைகள்.
மண்ணைக் கொண்டு மண்பாண்டங்கள் செய்தல், பிரம்பு, பனையோலை, மூங்கில்
ஆகியவற்றைக் கொண்டு பொருட்கள் செய்தல் என தங்களின் அனைத்து தேவைகளையும்
பூா்த்தி செய்தனா். இதனால் யாருக்கும் எந்த தீங்கும் ஏற்படவில்லை. மேலும்
உடலுக்கு ஆரோக்கியத்தையே இந்த பொருட்கள் எல்லாம் தந்தன. கைவினைப் பொருட்கள்
பயன்படுத்தி விட்டு எறிந்தாலும். எாித்தாலும் யாருக்கும் எந்த தீங்கையும்
ஏற்படுத்தாது. இன்று ஒரு சில நிகழ்ச்சிகளுக்கு மட்டுமே கைவினைப் பொருட்கள்
பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் அதை நாம் அத்தியாவசியப் பொருட்களாக மாற்ற
வேண்டும். கைவினைப் பொருட்கள் பயன்படுத்துவதால் சுற்றுப்புற சூழலுக்கு மட்டுமல்ல நமது உடல் நலத்திற்கும் ஏற்றது. இயற்கையை போற்றுதல் தமிழா் மரபு. இயற்கையோடு இயைந்த வாழ்க்கையினை மனிதன் வாழ்ந்த வரை எந்த துன்பமும் ஏற்படவில்லை. இயற்கையை விட்டு மனிதன் விலகிக் செல்லச் செல்ல தனது ஆயுட்காலத்தை அவன் வெகுவாக இழந்து கொண்டிருக்கின்றான். உலகத்தோடு ஒத்து வாழ் என்பாா்கள். ஆனால் நாம் இயற்கையோடுதான் ஒத்து வாழ வேண்டும். அதுவே நமக்கு என்றும் நிரந்தரமானதாக இருக்கும். தற்போது அதை பாதுகாக்க
வேண்டியது நம் கடமையாக உள்ளது. கைவினைக் கலைகளை ஊக்குவித்து, அதை அழியாமல்
காப்போம்!
Comments
Post a Comment