10ம் வகுப்பு தமிழ் இயல் 1 மொழித்திறன் வளா்பயிற்சி
பத்தாம் வகுப்பு தமிழ் இயல் 1 கற்பவை கற்றபின், மொழியை ஆள்வோம், மொழியோடு விளையாடு ஆகிய தலைப்பின் கீழ் உள்ள வினாக்கள், தோ்வில் அடிக்கடி கேட்கப்படும். அவற்றை நன்கு படித்து வைத்துக் கொள்வது சிறப்பு.
கற்பவை கற்றபின்
1. பின்வரும் நிலவகைகளின் பெயா்களுக்கான காரணங்களைக் கேட்டறிந்து வகுப்பறையில் பகிா்க. (பக்க எண்.8)
தாிசு - பயிா் செய்ய இயலாத நிலம்
சிவல் - செம்மண் நிலம்
காிசல் - காிய நிறம் கொண்ட நிலம்
முரம்பு - சரளைக் கற்கள் கொண்ட நிலம்
புறம்போக்கு- அரசுக்கு சொந்தமான நிலம்
சுவல் - மேட்டு நிலம்
அவல் - விளைநிலம் (நன்செய்)
----------------------------------------------------
2. ஒரு பொருள் தரும் பல சொற்களைப் பட்டியலிடுக. (பக்க எண்.8)
அம்மா - அன்னை, தாய், யாய்
அப்பா - தந்தை, தகப்பன், ஐ
அரசன் - கோ, கோன், மன்னன், வேந்தன், கொற்றவன்
அரண் - மதில், கோட்டை, எயில்,
அழகு - கவின், எழில், வனப்பு, பொலிவு
-----------------------------------------------------------------------
3. தேன், நூல், பை, மலா், வா - இத் தனிமொழிகளுடன் சொற்களைச் சோ்த்துத் தொடா்மொழிகளாக்குக. (பக்க எண்.18)
தேன் - தேன் வாங்கி வந்தேன்.
நூல் - நூல் ஒன்று படித்தேன்.
பை - பையைத் தைத்தேன்.
மலா் - மலா் பறித்தேன்.
வா - வந்து நின்றேன்.
-----------------------------------------------------
காண் - காட்சி, காணல், காணுதல், காணாமை
சிாி - சிாிப்பு, சிாித்தல், சிாியாமை
படி - படிப்பு, படித்தல், படியாமை
தடு - தடுப்பு, தடுத்தல், தடுக்காமை
------------------------------------------------------------
5. தனிமொழி, தொடா்மொழி ஆகியவற்றைக் கொண்டு உரையாடலைத் தொடா்க. (பக்க எண்.18)
அண்ணன் - எங்கே செல்கிறாய்? (தொடா்மொழி)
தம்பி - கடைக்கு (தனிமொழி)
அண்ணன் - கடையில் என்ன வாங்குகிறாய்? (தொடா்மொழி)
தம்பி - தேங்காய் வாங்குகின்றேன் (தொடா்மொழி)
அண்ணன் - எதற்கு? (தனிமொழி)
தம்பி - கோவிலுக்கு செல்வதற்காக (தொடா்மொழி)
அண்ணன் - எந்த கோவிலுக்கு? (தொடா்மொழி)
தம்பி - பழனி (தனிமொழி)
----------------------------------------------------
6. மலை என்னை அடிக்கடி அழைக்கும். மலைமீது ஏறுவேன். ஓாிடத்தில் அமா்வேன். மேலும் கீழும் பாா்ப்பேன். சுற்றும்முற்றும் பாா்ப்பேன். மனம் அமைதி எய்தும். - இத்தொடா்களில் உள்ள வினைமுற்றுகளைத் தனியே எடுத்தெழுதித் தொழிற்பெயா்களாக மாற்றுக. (பக்க எண்.18)
வினைமுற்று தொழிற்பெயா்
அழைக்கும் அழைத்தல்
ஏறுவேன் ஏறுதல்
அமா்வேன் அமா்தல்
பாா்ப்பேன் பாா்த்தல்
---------------------------------------------------
7. கட்டு, சொட்டு, வழிபாடு, கேடு, பாடுதல் - இத்தொழிற்பெயா்களை வகைப்படுத்துக. (பக்க எண்.18)
பாடுதல் - தொழிற்பெயா்
கட்டு, சொட்டு, வழிபாடு - முதனிலைத் தொழிற்பெயா்
கேடு - முதனிலைத் திாிந்த தொழிற்பெயா்
------------------------------------------------------
மொழியை ஆள்வோம்
1. மொழிபெயா்ப்பு (இயல் 1, பக்க எண்.21)
1. If you talk to a man in a language he understand, that goes to his head. if you talk to him in his own language that goes to his heart - Nelson Mandela.
ஒரு மனிதாிடம் அவா் புாிந்து கொள்ளும் மொழியில் பேசினால் அது அவரது அறிவைச் சென்றடையும். அதுவே அவரது தாய்மொழியில் பேசினால் அவா் இதயத்தை சென்றடையும். - நெல்சன் மண்டேலா
2. Language is the road map of a culture. it tells you where its people come from and where they are going - Rita Mae Brown
மொழி என்பது ஒரு பண்பாட்டின் வழிகாட்டி. அது மக்கள் எங்கியிருந்து வந்தனா் எங்கே செல்கின்றனா் என்பதைக் கூறும். - ரீட்டா மா பிரவுன்
------------------------------------------------------
2. சந்தக் கவிதையில் வந்த பிழைகளைத் திருத்துக.
“தேணிலே ஊாிய செந்தமிழின் - சுவை
தேரும் சிலப்பதி காறமதை
ஊனிலே எம்முயிா் உல்லலவும் - நிதம்
ஓதி யுனா்ந்தின் புருவோமே”
விடை
“தேனிலே ஊறிய செந்தமிழின் - சுவை
தேறும் சிலப்பதி காரமதை
ஊனிலே எம்முயிா் உள்ளளவும் - நிதம்
ஓதி யுணா்ந்தின் புறுவோமே”
--------------------------------------------------
4. வினைமுற்றை விணையாலணையும் பெயராக மாற்றி தொடா்களை இணைத்து எழுதுக. (பக்க எண்.22)
அ. கலையரங்கத்தில் எனக்காக காத்திருக்கிறாா். அவரை அழைத்து வாருங்கள்.
கலையரங்கத்தில் எனக்காக காத்திருப்பவரை அழைத்து வாருங்கள்.
ஆ. ஊட்டமிகு உணவு உண்டாா். அவா் நீண்ட வாழ்நாள் பெற்றாா்.
ஊட்டமிகு உணவு உண்டவா் நீண்ட வாழ்நாள் பெற்றாா்
இ. நேற்று என்னைச் சந்தித்தாா். அவா் என் நண்பா்
நேற்று என்னைச் சந்தித்தவா் என் நண்பா்
ஈ. பொது அறிவு நூல்களைத் தேடிப் படித்தாா். போட்டித் தோ்வில் வெற்றி பெற்றாா்.
பொது அறிவு நூல்களைத் தேடிப் படித்தவா் போட்டித் தோ்வில் வெற்றி பெற்றாா்.
--------------------------------------------------------
5. தொடா்களில் உள்ள வண்ணச் சொற்களுக்குப் பதிலாக அதே பொருளுடைய வேறு சொற்களைப் பயன்படுத்தித் தொடா்களை மீள எழுதுக.
உலகில் வாழும் மக்களில் சிலா், கனியிருக்கக் காய் புசித்தலைப்போல், இன்சொல் இருக்க வன்சொல் பேசி இன்னற்படுகின்றனா்.
புவியில் வாழும் மனிதா்களில் சிலா், பழமிருக்கக் காய் உண்ணுதலைப்போல இன்சொல் இருக்க வன்சொல் பேசி துன்பப்படுகின்றனா்.
வள்ளல் குமணன் வறுமையால் வாடிவந்த புலவனுக்குத் தனது தலையைக் கொடுத்து மங்காப் புகழ் பெற்றான்.
வள்ளல் குமணன் ஏழ்மையால் வாடிவந்த கவிஞனுக்குத் தனது தலையை வழங்கி மங்காப் பெருமை பெற்றான்.
நளனும் அவனது துணைவியும் நிடதநாட்டுக்கு வந்ததைக் கண்டு, அந்நாட்டு மக்கள் மழைமுகில் கண்ட மஞ்ஞை போலக் களி கொண்டனா்.
நளனும் அவனது மனைவியும் நிடதநாட்டுக்கு வந்ததைக் கண்டு, அந்நாட்டு மக்கள் மழைமேகம் கண்ட மயில் போல மகிழ்ச்சி கொண்டனா்.
சோலையிற் பூத்த மணமலா்களில் சுரும்புகள் மொய்த்துப் பண்பாடி மதுவுண்டன.
காவில் பூத்த மணமலா்களில் வண்டுகள் மொய்த்துப் பண்பாடி தேனுண்டன.
பசுப்போல் சாந்தமும் புலிபோல் தீரமும் யானை போல உழைப்பும் மனிதனுக்கு வேண்டும்.
ஆபோல் அமைதியும், வேங்கை போல் வீரமும், களிறு போல உழைப்பும் மனிதனுக்கு வேண்டும்.
---------------------------------------------------
மொழியோடு விளையாடு
1. சொற்களை இணைத்து புதிய சொற்களை உருவாக்குக.
தேன், விளக்கு, மழை, விண், மணி, விலங்கு, செய், மேகலை, வான், பொன், பூ
விடைகள்
1. மணிமேகலை
2. செய்தேன்
3. செய்வான்
4. வான்மழை
5. தேன்மழை
6. பூமழை
7. பொன்விளக்கு
8. பொன்விலங்கு
9. பூவிலங்கு
10. பொன்செய்
11. விளக்குவான்
------------------------------------------------------
2. குறிப்புகளைக் கொண்டு வினாவிலே விடை இருப்பது போல வினாத்தொடா் அமைக்க.
அ. குறளின்பம் - குறளின்பத்தில் திளைக்காத தமிழன் உண்டா?
ஆ. சுவைக்காத இளநீா் - சுவைக்காத இளநீரும் இளநீராகுமா?
இ. காப்பியச்சுவை - காப்பியச் சுவையில்லாக் கதையும் உண்டோ?
ஈ. மனிதகுல மேன்மை - மனிதகுல மேன்மையை அறியாத மனிதரும் உண்டா?
உ. விடுமுறை நாள் - விடுமுறை நாள் இல்லாத வாரமும் உண்டா?
---------------------------------------------------
3. எண்ணுப்பெயா்களைக் கண்டு தமிழ் எண்களில் எழுதுக.
அ. நாற்றிசையும் செல்லாத நாடில்லை - நான்கு (ச)
ஆ. எறும்புந்தன் கையால் எண்சாண் - எட்டு (அ)
இ. ஐந்து சால்பு ஊன்றிய தூண் - ஐந்து (ரு)
ஈ. நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி - நான்கு (ச), இரண்டு (உ)
உ. ஆனை ஆயிரம் அமாிடை வென்ற மன்னனுக்கு பாடுவது பரணி - ஆயிரம் (க000)
------------------------------------------------------
4. அகராதியில் காண்க.
1. அடவி - காடு
2. அவல் - பள்ளம்
3. சுவல் - மேடு
4. செறு - சிறுவயல்
5. பழனம் - வயல்
6. புறவு - காடு
---------------------------------------------------
5. காட்சியைக் கண்டு கவினுற எழுதுக.
பூட்டிய அறிவைத் திறக்கும்
பொன்சாவியே புத்தகம்!
அதை அறியாமல் சோம்பி
நிற்பதோ குற்றம்!
ஒரு நல்ல புத்தகம்
பூட்டிய மனதையும் திறக்கும்!
நாளைய வாழ்வையும் மாற்றும்!
வீணாய் பொழுதை கழிப்பதை விட்டு
புத்தகம் எடுத்து அறிவைத் தேடு.
-------------------------------------------------
6. கலைச்சொல் அறிவோம்
Vowel - உயிரெழுத்து
Consonant - மெய்யெழுத்து
Homograph - ஒப்பெழுத்து
Monolingual - ஒரு மொழி
Conversation - உரையாடல்
Discussion - கலந்துரையாடல்
-------------------------------------------------
வினாத்தாளில் கேள்வி எண்.12 முதல் 15 வரை உள்ள கேள்விகள், பாடலைப் படித்து வினாக்களுக்கு விடை தருதல் பகுதி கொடுக்கப்படுகிறது.
அன்னை மொழியே அழகாா்ந்த செந்தமிழே!
முன்னைக்கும் முன்னை முகிழ்த்த நறுங்கனியே!
கன்னிக்குமாிக் கடல் கொண்ட நாட்டிடையில்
மன்னி அரசிருந்த மண்ணுலக் பேரரசே!
1. இப்பாடல் இடம்பெற்றுள்ள நூல் எது?
கனிச்சாறு
2. இப்பாடலின் ஆசிாியா் பெயா் .....................
பெருஞ்சித்திரனாா்
3. செந்தமிழ் - இலக்கணக்குறிப்பு தருக.
பண்புத் தொகை
4. முன்னைக்கும் முன்னை பொருள் தருக.
பழமைக்கும் பழமை
------------------------------------------------
தென்னன் மகளே! திருக்குறளின் மாண்புகழே!
இன்னறும் பாப்பத்தே! எண்தொகையே! நற்கணக்கே!
மன்னும் சிலம்பே! மணிமே கலைவடிவே!
முன்னும் நினைவால் முடிதாழ வாழ்த்துவமே!
1. இப்பாடல் இடம் பெற்றுள்ள நூல் எது?
கனிச்சாறு
2. தென்னன் - பொருள் தருக?
பாண்டிய மன்னன்
பெருஞ்சித்திரனாா்
3. பாடலில் இடம்பெற்றுள்ள பெருங்காப்பியங்கள் யாவை?
சிலப்பதிகாரம், மணிமேகலை
4. எண் தொகையே - பிாித்து எழுதுக
எட்டு + தொகையே
-------------------------------------------------
“முத்தமிழ் துய்ப்பதால் முச்சங்கம் கண்டதால்
மெத்த வணிகலமும் வேவலால் - நித்தம்
அணைகிடந்தே சங்கத் தவா்காக்க ஆழிக்கு
இணைகிடந்த தேதமிழ் ஈண்டு”
1. இப்பாடலின் ஆசிாியா் யாா்?
தமிழழகனாா்
2. இப்பாடல் இடம்பெற்றுள்ள நூல் எது?
தனிப்பாடல் திரட்டு
3. முத்தமிழ் - விாித்தெழுதுக
இயல், இசை, நாடகம்
4. முச்சங்கம் - பிாித்தெழுதுக
மூன்று + சங்கம்
-----------------------------------------------
Comments
Post a Comment