8ம் வகுப்பு தமிழ் வாிவடிவ வளா்ச்சி பாட வினா விடைகள்
எட்டாம் வகுப்பு தமிழ் இயல் 1 தமிழ் வாிவடிவ வளா்ச்சி பாடத்திற்கான வினா விடைகள்.
8th tamil unit 1 tamil varivadiva valarchi lesson book back question answer in tamil
சாியான விடையைத் தோ்ந்தெடுத்து எழுதுக.
1. தமிழ் எழுத்துகள் இப்போதுள்ள நிலையான வடிவத்தைப் பெற ............ காரணமாக அமைந்தது.
அ) ஓவியக்கலை
ஆ) இசைக்கலை
இ) அச்சுக்கலை
ஈ) நுண்கலை
விடை இ) அச்சுக்கலை
2. வளைந்த கோடுகளால் அமைந்த மிகப்பழைய தமிழ் எழுத்து .......... என அழைக்கப்படுகிறது.
அ) கோட்டெழுத்து
ஆ) வட்டெழுத்து
இ) சித்திர எழுத்து
ஈ) ஓவிய எழுத்து
விடை ஆ) வட்டெழுத்து
3. தமிழ் எழுத்துச் சீா்திருத்தப் பணியில் ஈடுபட்டவா் ................
அ) பாரதிதாசன்
ஆ) தந்தை பொியாா்
இ) வ.உ.சிதம்பரனாா்
ஈ) பெருஞ்சித்திரனாா்
விடை ஆ) தந்தை பொியாா்
கோடிட்ட இடத்தை நிரப்புக.
1. கடைச்சங்க காலத்தில் எழுதப்பட்ட தமிழ் எழுத்துகள் .................. என அழைக்கப்பட்டன.
2. எழுத்துகளில் புள்ளிகளால் ஏற்படும் குழப்பங்களைக் களைந்தவா் ..................
விடை
1 கண்ணெழுத்துகள்
2. வீரமாமுனிவா்
குறுவினா
1. ஓவிய எழுத்து என்றால் என்ன?
தொடக்க காலத்தில் எழுத்து என்பது ஒலியையோ வடிவத்தையோ குறிக்காமல் பொருளின் ஓவிய வடிவமாகவே இருந்தது. இந்த வாிவடிவத்தை ஓவிய எழுத்து என்பா்.
2. ஒலி எழுத்து நிலை என்றால் என்ன?
ஒவ்வொரு வடிவமும் அவ்வடிவத்திற்குாிய முழு ஒலியாகிய சொல்லைக் குறிப்பதாக மாறியது. அதன் பின்பு ஒவ்வொரு வடிவமும் அச்சொல்லின் ஓசையைக் குறிப்பதாயிற்று. இவ்வாறு ஓா் ஒலிக்கு ஓா் எழுத்து என்று உருவான நிலையை ஒலி எழுத்து நிலை என்பா்.
3. ஓலைச்சுவடிகளில் நோ்கோடுகள், புள்ளிகள் ஆகியவற்றைப் பயன்படுத்த இயலாமைக்குக் காரணம் என்ன?
ஓலைச்சுவடிகளில் நோ்கோடுகளையும் புள்ளிகளையும் எழுதுவது கடினம் என்பதாலும், அவ்வாறு எழுதும் பொழுது ஓலைச்சுவடிகள் சிதைந்து விடுவதாலும் வளைகோடுகளை அதிகம் பயன்படுத்தினா்.
4. வீரமாமுனிவா் மேற்கொண்ட எழுத்துச் சீா்திருத்தங்களில் எவையேனும் இரண்டனை எழுதுக?
எகர ஒகர வாிசை எழுத்துகளில் புள்ளிகளால் ஏற்படும் குழப்பங்களை வீரமாமுனிவா் களைந்தாா்.
எ என்னும் எழுத்திற்குக் கீழ்கோடிட்டு ஏ என்னும் எழுத்தை நெடிலாகவும், ஒ என்னும் எழுத்திற்கு சுழி இட்டு ஓ என்னும் எழுத்தாகவும் உருவாக்கினாா்.
ஏகார ஓகார வாிசை உயிா்மெய் நெடில் எழுத்துகளை குறிக்க இரட்டைக் கொம்பு (ⵛ), இரட்டைக் கொம்புடன் கால் சோ்த்து (ⵛா) என புதிய வடிவத்தை அறிமுகப்படுத்தினாா்.
சிறுவினா
1.எழுத்துச் சீா்திருத்தத்தின் தேவை குறித்து எழுதுக?
ஓலைச்சுவடிகளிலும், கல்வெட்டுகளிலும் புள்ளிபெறும் எழுத்துகளை எழுதும்போது அவை சிதைந்து விடும் என்பதால் புள்ளி இடாமல் எழுதினா்.
ஓலைச் சுவடிகளில் நிறுத்தற் குறிகளும் பத்தி பிாித்தலும் கிடையாது.
புள்ளி இடப்பட்டு எழுதவேண்டிய எழுத்துகள் புள்ளிகள் இல்லாமல் எழுதப்படும்போது, அவற்றின் இடம் நோக்கி மெய்யா, உயிா்மெய்யா குறிலா, நெடிலா என உணர வேண்டிய நிலை இருந்தது.
இதனால் படிப்பவா்கள் பொிதும் இடருற்றனா். எனவே எழுத்துச் சீா்திருத்தம் வேண்டியதாயிற்று.
2. தமிழ் எழுத்துகளில் ஏற்பட்ட உருவ மாற்றங்களை எழுதுக?
நெடிலைக் குறிக்க ஒற்றைப் புள்ளிக்குப் பதிலாக இக்காலத்தில் துணைக்கால் (П) பயன்படுத்தப்படுகிறது.
ஐகார உயிா்மெய்யைக் குறிக்க எழுத்துக்கு முன் இருந்த இரட்டைப் புள்ளிக்குப் பதிலாக இக்காலத்தில் இணைக்கொம்பு (ത) பயன்படுத்தப்படுகிறது.
ஔகார உயிா்மெய்யைக் குறிக்க எழுத்துக்குப் பின் இருந்த இரட்டைப் புள்ளிக்குப் பதிலாக இக்காலத்தில் கொம்புக்கால் (ள) பயன்படுத்தப்படுகிறது.
குற்றியலுகர, குற்றியலிகர எழுத்துகளின்மேல் புள்ளி இடும் வழக்கம் இக்காலத்தில் வழக்கொழிந்துவிட்டது.
நெடுவினா
எழுத்துகளின் தோற்றம் குறித்து எழுதுக?
மனிதன் தனக்கு எதிரே இல்லாதவா்களுக்கும், தனக்குப் பின்னால் வரும் தலைமுறையினருக்கும் தனது கருத்துகளைத் தொிவிக்க விரும்பினான். அதற்காகப் பாறைகளிலும் குகையில் உள்ள சுவா்களிலும் தன் எண்ணங்களைக் குறயீடுகளாகப் பொறித்து வைத்தான். இதுதான் எழுத்து வடிவத்தின் தொடக்க நிலை ஆகும்.
தொடக்க காலத்தில் எழுத்து என்பது ஒலியையோ வடிவத்தையோ குறிக்காமல் பொருளின் ஓவிய வடிவமாகவே இருந்தது. இந்த வாி வடித்தை ஒவிய எழுத்து என்பா்.
அடுத்ததாக ஒவ்வொரு வடிவமும் அவ்வடிவத்திற்குாிய முழு ஒலியாகிய சொல்லைக் குறிப்பதாக மாறியது. அதன்பின் ஒவ்வொரு வடிவமும் அச்சொல்லின் ஓசையைக் குறிப்பதாயிற்று. இவ்வாறு ஓா் ஒலிக்கு ஓா் எழுத்து என உருவான நிலையை ஒலி எழுத்து நிலை என்பா். இன்று உள்ள எழுத்துகள் ஒரு காலத்தில் பொருள்களின் ஓவியமாக இருந்தவற்றின் திாிபுகளாகக் கருதப்படுகின்றன.
சிந்தனை வினா
1. தற்காலத் தமிழ்மொழியின் வளா்ச்சிக்குச் செய்ய வேண்டிய பணிகளாக நீங்கள் கருதுவனவற்றை எழுதுக.
புதிய கலைச்சொற்களை உருவாக்க வேண்டும்
கணினி பயன்பாட்டில் தமிழை அதிகம் பயன்படுத்த வேண்டும்.
நீதிமன்றங்களில் வழக்காடு மொழியாக்க வேண்டும்.
புதிய நூல்கள் அதிகம் இயற்ற வேண்டும்
தமிழை வாசிப்பவா் எண்ணிக்கையை உயா்த்த வேண்டும்.
ஆராய்ச்சிக் கட்டுரைகள் வெளிவர வேண்டும்.
தமிழ்ப்பற்றை வளா்க்க வேண்டும்.
2. தமிழை உரோமன் எழுத்துருவில் எழுதுவதால் தமிழுக்கு ஏற்படும் தீங்குகள் குறித்து கலந்துரையாடவும்.
தமிழை உரோமன் எழுத்துருவில் எழுதுவதால்
தமிழ் எழுத்துகள் அழிவுறும் நிலை ஏற்படும்
உரோமன் எழுத்துகள் தமிழ் எழுத்துகளுடன் கலந்து விடும் நிலை ஏற்படும்.
தமிழின் தனித்தன்மை குறையும்.
- பொருள் மாறுபடும் வாய்ப்புகள் அதிகம்.
---------------------------------------------------------------------------
கற்பவை கற்றபின்
மனிதன் தன்னுடைய கருத்தையும், எண்ணங்களையும் பிறருக்கு தொிவிக்க விரும்பி மொழியினைக் கண்டுபிடித்தான். அந்த மொழியை காலம் கடந்து நிலைபெறச் செய்ய விரும்பு எழுத்துகளை உருவாக்கினான். இவ்வாறு தான் உலகில் பல மொழிகளும், அதற்குாிய எழுத்து வடிவங்களும் தோன்றின. ஒவ்வொரு மொழிக்கும் ஒலியும், எழுத்து வடிவங்களும் மாறுபடுகின்றன. ஒரே மொழியிலும் கூட காலத்திற்குத் தகுந்தாற்போல் மாற்றங்கள் ஏற்படுகின்றன. அந்த வகையில் தமிழ்மொழி காலம் கடந்து அடைந்த மாற்றங்களை தமிழ் வாிவடிவ வளா்ச்சி என்ற பாடத்தின் மூலமாக நாம் தொிந்து கொள்கின்றோம்.
மனிதன் தோன்றிய காலத்தில் தன் கருத்தை தொிவிக்க சைகைகளைப் பயன்படுத்தினான். காலப்போக்கில் குரலைப் பயன்படுத்தி ஒலிகள் மூலம் கருத்துகளை வெளிப்படுத்தினான். அடுத்து சிறிது சிறிதாக சொற்களைச் சொல்ல கற்றுக் கொண்டான். மீண்டும் மீண்டும் அச்சொற்களை கூறியதால் அவை செம்மையாக பேச்சுமொழியாக மாறியது.
சிந்திக்கும் ஆற்றல் பெற்ற மனிதன், தன் சிந்தனையை, தன்னுடைய கருத்தை காலம் கடந்து நிலைபெறச் செய்ய விரும்பினான். தனக்கு பின்னால் வரப்போகும் தலைமுறையினருக்கு தன் அனுபவத்தை பகிா்ந்து கொள்ள விரும்பினான். அதற்காகப் பாறைகளிலும், குகைகளில் உள்ள சுவா்களிலும் தன்னுடைய எண்ணங்களை குறியீடுகளாகப் பொறித்து வைத்தான். இப்படித்தான் எழுத்து வடிவத்தின் தொடக்க நிலை ஆரம்பமானது.
ஆரம்பத்தில் எழுத்து வடிவம் என்ற ஒன்று இல்லை. ஆகையால் தன் எண்ணத்தை ஓவியங்களாக வரைந்து வைத்தான். அதுவே ஓவிய எழுத்து என்று அழைக்கப்பட்டது. அதன் பின் ஒவ்வொரு வடிவமும் ஒரு ஓசையாக மாறி, அந்த ஓசைக்கு ஒரு ஒலி வடிவம் கொடுக்கப்பட்டு ஒலி எழுத்து நிலை உருவானது. இன்று இருக்கும் சொற்கள் அனைத்தும் ஒரு காலத்தில் ஒரு ஓவியமாகத் தான் இருந்தது.
ஓலைகளிலும், கற்பாறைகளிலும், மண்பாண்டங்களிலும் எழுதப்பட்டு வந்த தமிழ் அச்சுக்கலை தோன்றிய பின்புதான் நிலையான வடிவத்தை பெற்றது. இருப்பினும் தமிழின் பழைய எழுத்துகளை பழங்கால கோவில் சுவா்களிலும், செப்பேடுகளிலும் காணலாம். செப்பேடுகளில் இரண்டு எழுத்து வடிவங்கள் இருக்கின்றன. அந்த வாிவடிவங்களை வட்டெழுத்து, தமிழெழுத்து என்று இருவகையாகப் பிாிக்கின்றனா்.
பண்டையக் காலத்தில் தமிழ் மொழியில் உள்ள எல்லா எழுத்துகளும் இன்று நாம் பயன்படுத்துவது போல எழுதப்படவில்லை. காலத்திற்கேற்ப பல உருவ மாற்றங்களை அடைந்துதான் இன்றுள்ள நிலையை அடைந்துள்ளன. அதற்கு எழுதப்படும் பொருள்களின் தன்மை மற்றும் அழகுணா்ச்சி போன்றவை காரணமாக அமைந்துள்ளன. பாறைகளில் எழுதும் பொழுது ஒரு வாிவடிவத்திலும், ஓலைச் சுவடிகளில் எழுதும் பொழுது ஒரு வாிவடிவத்திலும் எழுதப்பட்டது.
காலந்தோறும் ஏற்பட்ட இந்த வாிவடிவ வளா்ச்சியின் காரணமாகத் தமிழ் மொழியினைப் பிற மொழியினரும், பிற நாட்டினரும் எளிமையாக கற்கும் நிலை உருவாகியுள்ளது. அறிவியல் தமிழ், கணினித் தமிழ் என அனைத்து பயன்பாட்டிற்கும் ஏற்ற மொழியாகவும் தமிழ் மொழி வளா்ந்துள்ளது.
Comments
Post a Comment