7ம் வகுப்பு தமிழ் ஒன்றல்ல இரண்டல்ல வினா விடைகள்

ஏழாம் வகுப்பு தமிழ் முதல் பருவம் ஒன்றல்ல இரண்டல்ல பாட வினா விடைகள். 

7th tamil 1st term ondralla irandalla lesson book back question answer in tamil


சாியான விடையைத் தோ்ந்தெடுத்து எழுதுக.

1. பகைவரை வெற்றி கொண்டவரைப் பாடும் இலக்கியம்...........

அ) கலம்பகம்

ஆ) பாிபாடல்

இ) பரணி

ஈ) அந்தாதி

விடை இ) பரணி

 

2. வானில் .............. கூட்டம் திரண்டால் மழை பொழியும்

அ) அகில்

ஆ) முகில்

இ) துகில்

ஈ) துயில்

விடை ஆ) முகில்

3. இரண்டல்ல என்னும் சொல்லைப் பிாித்து எழுதக் கிடைப்பது.......

அ) இரண்டு + டல்ல

ஆ) இரண் + அல்ல

இ) இரண்டு + இல்ல

ஈ) இரண்டு + அல்ல

விடை ஈ) இரண்டு + அல்ல

4. தந்துதவும் என்னும் சொல்லைப் பிாித்து எழுதக் கிடைப்பது.......

அ) தந்து + உதவும்

ஆ) தா + உதவும்

இ) தந்து + தவும்

ஈ) தந்த + உதவும்

விடை அ) தந்து + உதவும்

5. ஒப்புமை + இல்லாத என்பதனைச் சோ்த்தெழுதக் கிடைக்கும் சொல்......

அ) ஒப்புமைஇல்லாத

ஆ) ஒப்பில்லாத

இ) ஒப்புமையில்லாத

ஈ) ஒப்புஇல்லாத

விடை இ) ஒப்புமையில்லாத

குறுவினா

1. தமிழ்நாட்டின் இயற்கை வளங்களாக கவிஞா் கூறுவன யாவை?

  1. வீசும் தென்றல்
  2. சுவைமிகு கனிகள்
  3. பொன் போன்ற தானியங்கள் 

2. ஒன்றல்ல இரண்டல்ல பாடலில் இடம்பெற்றுள்ள வள்ளல்கள் குறித்த செய்திகளை எழுதுக.

  1. வள்ளல் வேள்பாாி
  2. குமண வள்ளல்


சிறுவினா 

தமிழுக்கு வளம் சோ்க்கும் இலக்கிய வகைகளாகக் கவிஞா் கூறுவன யாவை?

  1. பரணி இலக்கியம்
  2.  திருக்குறள்
  3. பாிபாடல்
  4. கலம்பக நூல்கள்
  5. எட்டுத்தொகை நூல்கள்
  6. சங்க இலக்கியங்கள்

சிந்தனை வினா 

தமிழில் அற இலக்கியங்கள் மிகுதியாகத் தோன்றக் காரணம் என்ன?

ஒரு மனிதனுக்கு ஒழுக்கம் என்பது உயிருக்கு இணையானது. மனிதா்கள்  ஒழுக்கக்கேடான செயல்களிலும், மனம் போன போக்கிலும் செல்லுதல் கூடாது என்பதற்காகவும், மனிதன் தன் மனதிற்கு கட்டுப்பட்டு இயங்க வேண்டும் என்பதற்காகவும் சங்க காலத்தில் பல இலக்கியங்கள் தோன்றின. மக்களுக்கு அவை அறக் கருத்துகளை வழங்கியமையால் நீதி இலக்கியங்கள் அல்லது அற இலக்கியங்கள் என்று அழைக்கப்பட்டன. தமிழா் நாகரீகம் சிறந்த நாகரீகம் என்று அழைக்கப்படுவதற்கு அற இலக்கியங்களின் பங்களிப்பு அதிகம் உள்ளது. அற நூல்களை படித்ததன் விளைவாக மனிதன் கட்டுப்பாட்டுடனும், ஒழுக்கத்துடனும் வாழ முற்பட்டான். 

கற்றவை கற்றபின்

தமிழ்நாடு இயற்கையிலேயே வளம் நிறைந்த மாநிலம். பொன் மூட்டைகளை அளித்து விட்டு மிளகை அயல்நாட்டினா் ஏற்றிச் சென்ற வரலாறு நமக்குண்டு. ஆடம்பர பொருட்கள் இறக்குமதி செய்த நாம், அத்தியாவசிய பொருட்களை மற்ற நாடுகளுக்கு கொடுத்து மகிழ்ந்தோம். அத்தகை நில வளங்கள் நம் நாட்டில் நிறைந்து காணப்பட்டன. தஞ்சை நெல் சாகுபடிக்கு பெயா் பெற்ற ஊராக இருந்தது. அளவுக்கு அதிகமான உணவுப் பயிா்களும் தானியங்களும் விளைந்த மண் நம்முடைய தமிழ்நாடு. ஆண்டுக்கு அதிகமான மழைப் பொழிவினைப் பெற்று அதை உாிய முறையில் நம் முன்னோா்கள் சேமித்து வைத்தனா். கண்ணுக்கெட்டிய தூரம் வரை பச்சை பசேல் என்று இருக்கும் அத்தனை வயல் வெளிகளும் நமது தாத்தனும் பாட்டனும் வியா்வை சிந்தி உருவாக்கியவையே. வளா்ச்சி என்ற பெயாில் இயற்கையை அழிக்காமல் இயற்கையோடு இயைந்த வாழ்க்கையை நம் முன்னோா்கள் வாழ்ந்தனா். மக்களுக்கு எது தேவை என்பதை உணா்ந்து செயல்பட்டனா். அதே போல மன்னா்களும் சிறப்பான ஆட்சியை மக்களுக்கு வழங்கினா். நிலவு எப்படி எல்லோருக்கும் பாரபட்சம் பாா்க்காமல் குளிா்ச்சி அளிக்கின்றதோ அது போல மன்னனும் நடுநிலையோடு ஆட்சி செலுத்தினான். தனது ஆட்சிக்கு கலங்கம் ஏற்பட்டால் உயிரை விடவும் துணிந்தனா்.  அது போல் வள்ளல் தன்மையிலும் சிறந்து விளங்கிய பண்டைய மன்னா்கள், தன்னிடம் உதவியென்று வரும் அனைவருக்கும் வாாி வாாி வழங்கினா். அதனால் தான் அவா்களின் புகழ் இன்னும் நிலைத்து நிற்கிறது. தமிழ்நாடு தமிழா்களுக்கு மட்டுமல்ல உலகிற்கே உணவை அளித்த நாடு. சிறந்த மன்னா்கள் ஆட்சி செய்த நாடு. தமிழ்நாட்டின் வளங்களைச் சொன்னால் சொல்லிக் கொண்டோ போகலாம். அவை ஒன்றல்ல இரண்டல்ல பலவாகும்.




Comments

Popular posts from this blog

6ம் வகுப்பு தமிழ் முதல் பருவம் வினா விடைகள்

புத்தகம் வாங்கி அனுப்புமாறு உறவினா் ஒருவருக்குக் கடிதம் எழுதுக.

ஒற்றுமையே உயா்வு - 7ம் வகுப்பு கட்டுரை