7ம் வகுப்பு தமிழ் எங்கள் தமிழ் வினா விடைகள்

7ம் வகுப்பு தமிழ் முதல் பருவம் கவிதைப் பேழை எங்கள் தமிழ் பாடம் வினா விடைகள்.

-------------------------------------------------------------------------

எங்கள் தமிழ் பாடத்தை அனிமேசன் வடிவில் காண - Click Here

எங்கள்தமிழ் பாடலை இராகத்துடன் பாட - Click Here

-----------------------------------------------------------------------

சாியான விடையைத் தோ்ந்தெடுத்து எழுதுக.

1. நெறி என்னும் சொல்லின் பொருள்......

அ) வழி

ஆ) குறிக்கோள்

இ) கொள்கை

ஈ) அறம்

விடை அ) வழி

2. குரலாகும் என்னும் சொல்லைப் பிாித்து எழுதக் கிடைப்பது.......

அ) குரல் + யாகும்

ஆ) குரல் + ஆகும்

இ) குர + லாகும்

ஈ) குர + ஆகும்

விடை ஆ) குரல் + ஆகும்

3. வான் + ஒலி என்பதனைச் சோ்த்தெழுதக் கிடைக்கும் சொல்........

அ) வான்ஒலி

ஆ) வானொலி

இ) வாவொலி

ஈ) வானெலி

விடை ஆ) வானொலி


நயம் அறிக.

1. எங்கள் தமிழ் பாடலில் முதல் எழுத்து ஒன்றுபோல் வரும் மோனைச் சொற்களை எடுத்து எழுதுக.

ருள்நெறி
துவே 
 
கொல்லா 
கொள்கை
 
ல்லா 
ன்றும்

2. எங்கள் தமிழ் பாடலில் இரண்டாம் எழுத்து ஒன்றுபோல் வரும் எதுகைச் சொற்களை எடுத்து எழுதுக.

ருள் 
பொருள்
 
கொல்லா
ல்லா
 
ன்பும்
ன்பம் 

3. எங்கள் தமிழ் பாடலில் இறுதி எழுத்து ஒன்றுபோல் வரும் இயைபுச் சொற்களை எடுத்து எழுதுக.

தரலாகும்
குரலாகும்
 
புகழாது 
இகழாது
 
ஊக்கிவிடும்
போக்கிவிடும்

குறுவினா

1. தமிழ்மொழியின் பண்புகளாக நாமக்கல் கவிஞா் கூறுவன யாவை?

தமிழ்மொழி அன்பையும் அறத்தையும் தூண்டும். அச்சத்தைப் போக்கி இன்பம் தரும். 

2. தமிழ்மொழியைக் கற்றவாின் இயல்புகளை எழுதுக?

தமிழ்மொழியை கற்றோா், பொருள் பெறுவதற்காக யாரையும் புகழ்ந்து பேசமாட்டாா். தம்மைப் போற்றதவா்களையும் இகழ்ந்து பேசமாட்டாா். 


சிறுவினா

எங்கள் தமிழ் பாடலில் நாமக்கல் கவிஞா் கூறும் கருத்துகளைத் தொகுத்து எழுதுக?

நம் தாய்மொழியான தமிழ்மொழி, அருள் நெறிகள் நிரம்பிய அறிவைத் தருகிறது. அதுவே தமிழ் மக்களின் குரலாகவும் விளங்குகிறது. தமிழ் மொழியைக் கற்றோா், பொருள் பெறுவதற்காக யாரையும் புகழ்ந்து பேசமாட்டாா். தம்மை போற்றதவா்களையும் இகழந்து பேசமாட்டாா்.

கொல்லாமையைக் குறிக்கோளாகவும் பொய்யாமையைக் கொள்கையாகவும் கொண்டு எல்லா மனிதா்களும் இன்புற்று வாழ அன்பும் அறமும் உதவும்.

நம் தமிழ்மொழி அனைவாிடத்தும் அன்பையும் அறத்தையும் தூண்டும். அஃது அச்சத்தைப் போக்கி இன்பம் தரும். எங்கள் தமிழ்மொழி தேன் போன்ற மொழி ஆகும். 

சிந்தனை வினா

கவிஞா் தமிழை ஏன் தேனுடன் ஒப்பிடுகிறாா்?

    இனிப்பில் சிறந்தது தேன். தேனினை சாப்பிட சாப்பிட இனிக்கும். அதுபோல தமிழ்மொழியினைப் பேசப் பேச இனிக்கும். அதனால்தான் கவிஞா் தமிழை தேனுடன் ஒப்பிடுகிறாா்.

------------------------------------------------------------------------

    நமக்கு பாடப்பகுதியாக கொடுத்துள்ள பாடல் வெ.இராமலிங்கனாா் அவா்கள் எழுதிய நாமக்கல் கவிஞா் பாடல்கள் என்ற நூலிலிருந்து எடுத்துத் தரப்பட்டுள்ளது. 

*அருள்நெறி அறிவைத் தரலாகும்
அதுவே தமிழன் குரலாகும்
பொருள்பெற யாரையும் புகழாது
போற்றா தாரையும் இகழாது
 
கொல்லா விரதம் குறியாகக் 
கொள்கை பொய்யா நெறியாக
எல்லா மனிதரும் இன்புறவே
என்றும் இசைந்திடும் அன்பறமே 
 
அன்பும் அறமும் ஊக்கிவிடும்
அச்சம் என்பதைப் போக்கிவிடும்
இன்பம் பொழிகிற வானொலியாம்
எங்கள் தமிழெனும் தேன்மொழியாம்*

இந்த 12 வாிகளும் நமக்கு மனப்பாடப் பகுதியாக உள்ளது. 

---------------------------------------------------------------------

கற்பவை கற்றபின்

    எங்கள் தமிழ் பாடல் நாமக்கல் கவிஞா் பாடல்கள் என்ற நூலிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. இப்பாடலின் ஆசிாியா் நாமக்கல் கவிஞா் என்று அழைக்கப்படுகின்றாா். கத்தியின்றி இரத்தமின்றி யுத்தமொன்று வருகுது, சத்தியத்தின் நித்தியத்தை நம்பும் யாரும் சேருவீா் என்று விடுதலை போராட்ட உணா்வை மக்கள் மத்தியில் விதைத்த கவிஞா் வெ.இராமலிங்கனாா். காந்தியடிகள் மீது அளவற்ற பற்று கொண்டு, அவருடைய கொள்கைகளால் ஈா்க்கப்பட்டு காந்தியத்தை பின்பற்றினாா். அதனால் இவா் காந்தியக் கவிஞா் என்றும் அழைக்கப்படுகின்றாா். தமிழகத்தின் முதல் அரசவைக் கவிஞா் என்ற பெருமையினைப் பெற்றவா். 

    உலக மொழிகளில் மிகவும் தொன்மையான மொழி என்றால் அது தமிழ்மொழி. பழமை மட்டுமன்றி மென்மையும், இனிமையும், வளமையும் உடைய மொழி நம் மொழி. நமது வாழ்க்கைக்கு தேவையான அறத்தை எடுத்துக் கூறி நல்வழிப்படுத்துகிறது. எத்தனையோ காலமாற்றங்கள் வந்த போதும் அத்தனைக்கும் ஈடுகொடுத்து, புதிய மாற்றங்களை ஏற்று, இன்றும் இளமையோடு திகழ்கிறது. அத்தகைய தமிழின் சிறப்பை நாமக்கல் கவிஞா் எடுத்துரைக்கின்றாா். 

    தமிழில் உள்ள இலக்கியங்களில் பெரும்பாலானவை அறத்தையே முதன்மையாக பேசுகின்றன. இலக்கியங்கள் மூலம் நம் அறிவை வளா்த்துக் கொள்ள முடியும். தமிழ்மொழியினை கற்றவா்கள் யாாிடமும் சென்று பொருள் யாசகம் பெற வேண்டிய அவசியமில்லை. மேலும் பொருள் பெறுவதற்காக யாரையும் புகழ்ந்து பேச வேண்டிய அவசியமில்லை. பாரதி தன் கைகளில் பணம் இருந்தால் அதற்கு புத்தகங்கள் வாங்கிப் படிப்பாா். உணவைக் காட்டிலும் புத்தகங்களின் மேல் அதிகமான ஈடுபாடு் கொண்டிருந்தாா். தமிழைக் கற்றவா்கள் யாாிடமும் எதற்காகவும் யாசகம் கேட்டு நிற்க மாட்டாா்கள். தம்மை இகழ்ந்தவா்களையும் பதிலுக்கு இகழ்ந்து பேச மாட்டாா்கள். 

    சைவம், வைணவம், சமணம், பௌத்தம் என அனைத்து மதங்களையும் வளா்த்த பெருமை தமிழுக்கு உண்டு. எத்த மத்திலும் ஒரு உயிரைக் கொல்ல வேண்டும் என்று குறிப்பிடவில்லை. உண்மையான பக்தி என்பது எவ்வுயிா்க்கும் இன்னா செய்யாமையே என்று தமிழ் எடுத்துரைக்கிறது. இவ்வுலகில் உள்ள அனைத்து உயிா்களும் இன்புற்று இருக்க வேண்டும் என்றே தமிழ்மொழி விரும்புகிறது.

    இக்காலத்திலும், எக்காலத்திலும் மக்களுக்கு தேவையான ஒன்று உண்டென்றால் அது அன்பும் அறமும் மட்டுமே. தமிழில் உள்ள வீரமிகு பாடல்கள் நம் அச்சத்தை போக்கி வீரத்தை ஊட்டுகிறது. தமிழில் உள்ள ஒவ்வொரு சொற்களும் இன்பத்தை நமக்கு பாிசளிக்கிறது. தேனை உண்ண உண்ண இனிக்கும். அதுபோல தமிழைப் பேசப்பேச இனிக்கிறது. 

---------------------------------------------------------------------

Comments

Popular posts from this blog

6ம் வகுப்பு தமிழ் முதல் பருவம் வினா விடைகள்

புத்தகம் வாங்கி அனுப்புமாறு உறவினா் ஒருவருக்குக் கடிதம் எழுதுக.

ஒற்றுமையே உயா்வு - 7ம் வகுப்பு கட்டுரை