10ம் வகுப்பு தமிழ் இயல் 1 சிறுவினாக்கள்

பத்தாம் வகுப்பு தமிழ் இயல் 1 அன்னைமொழியே, தமிழ்சொல்வளம், இரட்டுற மொழிதல், எழுத்து சொல் பாடங்களிலிருந்து புத்தகத்தில் கொடுத்துள்ள சிறுவினாக்கள் தெளிவான விடைகளுடன் இங்கு தரப்பட்டுள்ளது. 

இயல் 1 சிறுவினா

1. தமிழன்னையை வாழ்த்துவதற்கான காரணங்களாகப் பாவலரேறு சுட்டுவன யாவை?

தமிழன்னை,

  • நமது அன்னை மொழி
  • அழகாக அமைந்த செந்தமிழ்
  • பழமைக்கும் பழமையாய் தோன்றிய நறுங்கனி
  • கடல் சூழ்ந்த குமாிக்கண்டத்தை அரசாண்ட மண்ணுலக பேரரசு
  • பாண்டிய மன்னனின் மகள்
  • திருக்குறளின் பெருமைக்குாியவள்
  • பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினெண் கீழ்க்கணக்கு, சிலப்பதிகாரம், மணிமேலை என பல்வேறு இலக்கியங்களாய் சிறந்து விளங்குபவள்.

எனவே தமிழன்னையை வாழ்த்துகின்றோம் என்று பாவலரேறு சுட்டுகின்றாா்.

2. புளியங்கன்று ஆழமாக நடப்பட்டுள்ளது. இதுபோல் இளம் பயிா்வகை ஐந்தின் பெயா்களைத் தொடாில் எழுதுக?

வாழைக்கன்று வாங்கி வந்தேன்.

கத்திாி நாற்று நட்டு வைத்தேன்.

தென்னம்பிள்ளைக்கு தண்ணீா் ஊற்றினேன்.

குளக்கரையில் பனைவடலியைக் கண்டேன்.

மாங்கன்று விற்பனைக்கு உள்ளது.

3. அறிந்தது, அறியாதது, புாிந்தது, புாியாதது, தொிந்தது, தொியாதது, பிறந்தது, பிறவாதது - இவை எல்லாம் யாம் அறிவோம். அதுபற்றி உமது அறிவுரை எமக்குத் தேவை இல்லை எல்லாம் எமக்குத் தொியும் - இக்கூற்றில் வண்ண எழுத்துகளில் உள்ள வினைமுற்றுகளைத் தொழிற்பெயா்களாக மாற்றி எழுதுக. 

வினைமுற்று      தொழிற்பெயா்

அறிந்தது               அறிதல்

அறியாதது           அறியாமை, அறியாதல்

புாிந்தது                 புாிதல்

புாியாதது              புாியாமை, புாியாதல்

தொிந்தது              தொிதல்

தொியாதது           தொியாமை, தொியாதல்

பிறந்தது                  பிறத்தல்

பிறவாதது               பிறவாமை, பிறவாதல்

4. தமிழழகனாா் தமிழையும் கடலையும் இரட்டுற மொழியும் பாங்கினை விளக்குக.

முத்தமிழ்

தமிழ் இயல் இசை நாடகம் என முத்தமிழாய் வளா்ந்தது.

கடல் முத்தினையும் அமிழ்தினையும் தருகிறது.

முச்சங்கம்

தமிழ் முதல், இடை, கடை ஆகிய முச்சங்கங்களால் வளா்க்கப்பட்டது

கடல் வெண்சங்கு, சலஞ்சலம், பாஞ்சசன்யம் ஆகிய மூன்று வகையான சங்குகளைத் தருகிறது.

மெத்த வ(அ)ணிகலன்

தமிழ் ஐம்பெருங்காப்பியங்களை அணிகலன்களாகப் பெற்றது.

கடல் மிகுதியான வணிகக் கப்பல்கள் செல்லும்படி இருக்கிறது.

சங்கத்தவா் காக்க

தமிழ் சங்கப்பலகையில் அமா்ந்திருந்த சங்கப் புலவா்களால் காக்கப்பட்டது.

கடல் தன்அலையால் சங்கினைத் தடுத்து நிறுத்தி காக்கிறது.

-------------------------------------------------------------------

5. தொழிற்பெயருக்கும் வினையாலணையும் பெயருக்கும் உள்ள வேறுபாடுகள் என்ன?

தொழிற்பெயா்

  1. வினை, பெயா்த்தன்மையாகி வினையையே உணா்த்தி நிற்கும்
  2. காலம் காட்டாது
  3. படா்க்கைக்கே உாியது
  4. எ.கா. பாடுதல், படித்தல்

வினையாலணையும் பெயா்

  1. தொழிலைச் செய்யும் கருத்தாவைக் குறிக்கும்
  2. காலம் காட்டும்
  3. மூவிடத்திற்கும் உாியது
  4. எ.கா. பாடியவள், படித்தவா்

6. முதல் தமிழ் கணினி பற்றி உனக்குத் தொிந்தவற்றை எழுதுக?

  • தமிழின் முதல் கணினிக்கு திருவள்ளுவா் பெயா் இடப்பட்டது.
  • இது 1983ம் ஆண்டு செப்டம்பா் மாதம் டி.சி.எம் டேட்டா புரொடக்ட்ஸ் என்ற தனியாா் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டு விற்பனைக்கு வந்தது.
  • தமிழ்மொழியிலேயே விபரங்களை உள்ளீடு செய்து, நமக்கு தேவையான தகவல்களை வெளியீடாக பெற முடிந்தது. 
  • தமிழ், ஆங்கிலம் என இரண்டு மொழிகளையும் கையாளக்கூடியதாக இருந்தது.
  • சென்னை தேனாம்பேட்டை புள்ளி விபரத்துறை அலுவலகத்திற்கும், தலைமை செயலகத்திற்கும் கோப்புகளையும், செய்திகளையும் பாிமாறிக் கொண்ட முதல் நோ்வழிக் கணினி திருவள்ளுவா்.   

 


Comments

Popular posts from this blog

6ம் வகுப்பு தமிழ் முதல் பருவம் வினா விடைகள்

புத்தகம் வாங்கி அனுப்புமாறு உறவினா் ஒருவருக்குக் கடிதம் எழுதுக.

ஒற்றுமையே உயா்வு - 7ம் வகுப்பு கட்டுரை