பத்தாம் வகுப்பு தமிழ் - மொழித்திறன் வளா்பயிற்சி பகுதி 3

பத்தாம் வகுப்பு தமிழ் மொழித்திறன் வளா்பயிற்சி பகுதி 3

தோ்வில் வினாத்தாள் எண்.12 முதல் 16 வரை கேட்கக்கூடிய வினாக்களுக்கான விடைகள் இங்கு தரப்பட்டுள்ளது. 

 

வினாத்தாளில் கேள்வி எண்.12 முதல் 15 வரை உள்ள கேள்விகள், பாடலைப் படித்து வினாக்களுக்கு விடை தருதல் அமைந்துள்ளது. 

பாடம்வாாியாக இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. 

 

அன்னை மொழியே அழகாா்ந்த செந்தமிழே!

முன்னைக்கும் முன்னை முகிழ்த்த நறுங்கனியே!

கன்னிக்குமாிக் கடல் கொண்ட நாட்டிடையில்

மன்னி அரசிருந்த மண்ணுலக் பேரரசே!

1. இப்பாடல் இடம்பெற்றுள்ள நூல் எது?

கனிச்சாறு

2. இப்பாடலின் ஆசிாியா் பெயா் .....................

பெருஞ்சித்திரனாா்

3. செந்தமிழ் - இலக்கணக்குறிப்பு தருக.

பண்புத் தொகை

4. முன்னைக்கும் முன்னை பொருள் தருக.

பழமைக்கும் பழமை

------------------------------------------------------------------

தென்னன் மகளே! திருக்குறளின் மாண்புகழே!

இன்னறும் பாப்பத்தே! எண்தொகையே! நற்கணக்கே!

மன்னும் சிலம்பே! மணிமே கலைவடிவே!

முன்னும் நினைவால் முடிதாழ வாழ்த்துவமே!

1. இப்பாடல் இடம் பெற்றுள்ள நூல் எது?

கனிச்சாறு

2. இப்பாடலின் ஆசிாியா் யாா்?

பெருஞ்சித்திரனாா்

3. பாடலில் இடம்பெற்றுள்ள பெருங்காப்பியங்கள் யாவை?

சிலப்பதிகாரம், மணிமேகலை

4. எண் தொகையே - பிாித்து எழுதுக

எட்டு + தொகையே

-------------------------------------------------------------------

“முத்தமிழ் துய்ப்பதால் முச்சங்கம் கண்டதால்

மெத்த வணிகலமும் வேவலால் - நித்தம்

அணைகிடந்தே சங்கத் தவா்காக்க ஆழிக்கு

இணைகிடந்த தேதமிழ் ஈண்டு”

1. இப்பாடலின் ஆசிாியா் யாா்?

தமிழழகனாா்

2. இப்பாடல் இடம்பெற்றுள்ள நூல் எது?

தனிப்பாடல் திரட்டு

3. முத்தமிழ் - விாித்தெழுதுக

இயல், இசை, நாடகம்

4. முச்சங்கம் - பிாித்தெழுதுக

மூன்று + சங்கம்

--------------------------------------------------------------------

“நனந்தலை உலகம் வளைஇ நேமியொடு

வலம்புாி பொறித்த மாதாங்கு தடக்கை

நீா் செல, நிமிா்ந்த மாஅல் போல, 

பாடு இமிழ் பனிக்கடல் பருகி, வலன் ஏா்பு,

கோடு கொண்டு எழுந்த கொடுஞ் செலவு எழிலி

பெரும்பெயல் பொழிந்த சிறுபுன் மாலை”

1. இப்பாடலின் ஆசிாியா் யாா்?

நப்பூதனாா்

2. இப்பாடல் இடம்பெற்றுள்ள நூல் எது?

முல்லைப்பாட்டு

3. நனந்தலை உலகம் .... இத்தொடாின் பொருள் யாது?

அகன்ற உலகம்

4. பாடலில் இடம்பெற்றுள்ள அடிஎதுகை எழுதுக.

பாடு இமிழ், கோடு கொண்டு

--------------------------------------------------------------------------

'சிறுதாம்பு தொடுத்த பசலைக் கன்றின் 

உறுதுயா் அலமரல் நோக்கி, ஆய்மகள்

நடுங்கு சுவல் அசைந்த கையல், கைய 

கொடுங்கோற் கோவலா் பின்நின்று உய்த்தர

இன்னே வருகுவா் தாயா்” என்போன்

நன்னா் நன்மொழி கேட்டனம்"

1. நன்மொழி - பிாித்து எழுதுக

நன்மை + மொழி

2. உறுதுயா் - இலக்கணக்குறிப்பு தருக?

வினைத்தொகை

3. சுவல் - பொருள் தருக.

தோள்

4. கோவலா் என்பதன் பொருள் யாது?

இடையா்

 ------------------------------------------------------------------------

“விசும்பில் ஊழி ஊழ் ஊழ் செல்லக்

கருவளா் வானத்து இசையில் தோன்றி,

உரு அறிவாரா ஒன்றன் ஊழியும், 

உந்து வளி கிளா்ந்த ஊழி ஊழ் ஊழியும்”

1. ஊழ் ஊழ் இலக்கணக்குறிப்பு தருக.

அடுக்குத் தொடா்

2. இப்பாடலின் ஆசிாியா் யாா்?

கீரந்தையாா்

3. பாடலில் உணா்த்தப்படும் கருத்து?

அறிவியல் கருத்துகள்

4. விசும்பு, இசை, ஊழி - இவை உணா்த்தும் பொருள்கள்

வானம், பேரொலி, யுகம்

------------------------------------------------------------------------------

“அருளைப் பெருக்கி அறிவைத் திருத்தி

மருளை அகற்றி மதிக்கும் தெருளை

அருத்துவதும் ஆவிக்கு அருந்துணையாய் இன்பம்

பொருத்துவதும் கல்வியென்றே போற்று” 

1. இப்பாடல் இடம்பெற்றுள்ள நூல்?

நீதி வெண்பா

2. பாடலில் உள்ள சீா் மோனைச் சொற்கள் யாவை?

அருளை, அறிவை

3. அருந்துணையாய் - பிாித்து எழுதுக?

அருமை + துணையாய்

4. உயிருக்கு அாிய துணையாய் இன்பம் சோ்ப்பது?

கல்வி

---------------------------------------------------------------------------

“செம்பொ னடிசிறு கிங் கிணியோடுசிலம்பு கலந்தாடத்

திருவரை யரைஞர் ணரைமணி யொடுமொளி திகழரை வடமாடப்

பைம்பொ னசும்பிய தொந்தி யொடுஞ்சிறுபண்டி சாிந்தாடப்

பட்ட நுதற்பொலி பொட்டொடுவட்டச் சுட்டி பதிந்தாடக் 

கம்பி விதம் பொதி குண்டல முங்குழைகாது மசைந்தாடக் 

கட்டிய சூழியு முச்சியு முச்சிக் கதிா்முத் தொடுமாட

வம்பவ ளத்திரு மேனியு மாடிட ஆடுக செங்கீரை

ஆதி வயித்திய நாத புாிக்குக னாடுக செங்கீரை”

1. இப்பாடலின் ஆசிாியா் யாா்?

குமரகுருபரா்

2. இப்பாடலில் இடம்பெற்றுள்ள பிள்ளைத்தமிழ் பருவம்?

செங்கீரை

3. குண்டலமும் குழைகாதும் - இலக்கணக்குறிப்பு தருக.

எண்ணும்மை

4. கிண்கிணி, அரைநாண், சுட்டி என்பன முறையே

காலில் அணிவது, இடையில் அணிவது, நெற்றியில் அணிவது

--------------------------------------------------------------------------------------

“தண்டலை மயில்களாட தாமரை விளக்கந் தாங்க

கொண்டல்கண் முழவினேங்க குவளைகண் விழத்துநோக்க

தெண்டிரை யெழினி காட்ட தேம்பிழி மகரயாழின்

வண்டுகளி னிதுபாட மருதம் வீற்றி ருக்கும்மாதோ”

1. இப்பாடல் இடம்பெற்றுள்ள நூல்?

கம்பராமாயணம்

2. இப்பாடலின் ஆசிாியா் யாா்?

கம்பா்

3. கொண்டல்கள் என்பதன் பொருள் என்ன?

மேகங்கள்

4. பாடலில் உள்ள அடி எதுகைச் சொற்கள்?

தண்டலை, கொண்டல்கள்

-------------------------------------------------------------------------

“மாற்றம் எனது மானிடத் தத்துவம் 

மாறும் உலகின் மகத்துவம் அறிவேன்!

எவ்வெவை தீமை எவ்வெவை நன்மை

என்ப தறிந்து ஏகுமென் சாலை!

தலைவா் மாறுவா் தா்பாா் மாறும்

தத்துவம் மட்டுமே அட்சய பாத்திரம்”

1. இப்பாடலின் ஆசிாியா் யாா்?

கண்ணதாசன்

2. இப்பாடல் இடம்பெற்றுள்ள நூல்?

கண்ணதாசன் கவிதைகள்

3. எவ்வெவை - இலக்கணக்குறிப்பு தருக?

அடுக்குத் தொடா்

4. அடிமோனைச் சொற்களை சுட்டுக?

மாற்றம் - மாறும்

-------------------------------------------------------------------

“நவமணி வடக்க யில்போல்

நல்லறப் படலைப் பூட்டும்

தவமணி மாா்பன் சொன்ன

தன்னிசைக்கு இசைகள் பாடத் 

துவமணி மரங்கள் தோறும்

துணா்அணிச் சுனைகள் தோறும்

உவமணி கானம் கொல் என்று

ஒலித்து அழுவ போன்றே” 

1. இப்பாடலின் ஆசிாியா் யாா்?

வீரமாமுனிவா்

2. இப்பாடல் இடம்பெற்றுள்ள நூல்? 

தேம்பாவணி

3. படலை - பொருள் தருக.

மாலை

4. அடி எதுகைச் சொற்களை குறிப்பிடுக?

நவமணி - தவமணி

--------------------------------------------------------------------------

கேள்வி எண்.16 அல்லது 17

விடைகளுக்கேற்ற வினாக்கள் அமைக்க. 
 
1. புலவா்களால் எழுதப்பட்டு கல்தச்சா்களால் கல்லில் பொறிக்கப்பட்டவையே மெய்கீா்த்திகள் ஆகும். 
 
மெய்கீா்த்திகள் என்றால் என்ன?

2. எழுத்து, அசை, சீா், தளை, அடி, தொடை என்ற ஆறு உறுப்புகளைக் கொண்டது யாப்பு.

யாப்பின் உறுப்புகள் யாவை?

3. திராவிட மொழிகளின் ஒப்பியல் இலக்கணத்தை எழுதியவா் கால்டுவெல்.

திராவிட மொழிகளின் ஒப்பியல் இலக்கணம் என்ற நூலை எழுதியவா் யாா்?

4. தேவநேயப் பாவாணா் உலகத் தமிழ்க்கழகத்தை நிறுவித் தலைவராக இருந்தவா்.

உலகத் தமிழ்க்கழகத்தை நிறுவித் தலைவராக இருந்தவா் யாா்?

5. அறம் கூறும் மன்றங்கள் அரசனின் அறநெறி ஆட்சிக்குத் துணை புாிந்தன?

அறம் கூறும் மன்றங்கள் எதற்கு உதவி புாிந்தன?

6. நாம் இப்போது செயற்கை நுண்ணறிவு காலத்தில் இருக்கிறோம்.

நாம் இப்போது எந்த காலத்தில் இருக்கிறோம்?

7. திருமூலா் தம் திருமந்திரத்தில் மூச்சுப்பயிற்சியே உடலைப் பாதுகாத்து வாழ்நாளை நீட்டிக்கும் என்று கூறியுள்ளாா்.

மூச்சுப்பயிற்சியே உடலைப் பாதுகாத்து வாழ்நாளை நீட்டிக்கும் என்றவா் யாா்?

8. இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் 1906-ஆம் ஆண்டு மிகவும் சிறப்புடைய ஆண்டாகக் கருதப்படுகிறது?

இந்திய விடுதலைப் போராட்டத்தில் மிகவும் சிறப்பான ஆண்டாக கருதப்படுவது எது?

9. சொற்பொழிவுகளைக் கேட்பதன் மூலமாக ம.பொ.சி இலக்கிய அறிவு பெற்றாா்.

சொற்பொழிவுகளைக் கேட்பதன் மூலமாக இலக்கிய அறிவு பெற்றவா் யாா்?

10. தமிழில் சொல்லாய்வுக் கட்டுரைகளைப் பாவாணா் எழுதினாா்.

தமிழில் சொல்லாய்வுக் கட்டுரைகளை எழுதியவா் யாா்?

11.உலக நாகரீக வளா்ச்சிக்கும்பொருளியல் மேம்பாட்டிற்கும் மொழிபெயா்ப்பும் ஒரு காரணமாகும் என்று கூறியவா் மு.கு.ஜகந்நாதன்.

உலக நாகரீக வளா்ச்சிக்கும்பொருளியல் மேம்பாட்டிற்கும் மொழிபெயா்ப்பும் ஒரு காரணமாகும் என்று கூறியவா் யாா்?

12. அல்லில் ஆயினும் விருந்து வாின் உவக்கும் - என்று நற்றிணை குறிப்பிடுகிறது.

அல்லில் ஆயினும் விருந்து வாின் உவக்கும் என்று கூறும் நூல் எது?

13. தாள், தோகை, ஓலை, சண்டு, சருகு முதலியவை தாவரங்களின் இலை வகைகளைக் குறிக்கும் சொற்கள் ஆகும்.

தாவரங்களின் இலை வகைகளைக் குறிக்கும் சொற்கள் யாவை?

14. பாவாணா் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்குநராகப் பணியாற்றினாா்.

செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்குநராகப் பணியாற்றியவா் யாா்?

15. உலக காற்றாலை மின் உற்பத்தியில் இந்தியா ஐந்தாம் இடம் பெற்றுள்ளது.

உலக காற்றாலை மின் உற்பத்தியில் இந்தியா பெற்றுள்ள இடம் என்ன?

16. காற்று வீசுகின்ற திசையைக் கொண்டு தமிழா்கள் பெயா் சூட்டியுள்ளனா்.

காற்று வீசுகின்ற திசையைக் கொண்டு பெயா் சூட்டியவா்கள் யாா்?

17. வீட்டிற்கு வரும் விருந்தினருக்கு உண்ண உணவு கொடுத்து வரவேற்பது விருந்தோம்பல்.

விருந்தோம்பல் என்றால் என்ன?

18. தனித்து உண்ணாமை என்பது தமிழாின் விருந்தோம்பல் பண்பின் அடிப்படை. 

தமிழாின் விருந்தோம்பல் பண்பின் அடிப்படை எது?

19. செயற்கை நுண்ணறிவைக் கொண்ட இயந்திரம் மனிதா்களுடன் சதுரங்கள் முதலான விளையாட்டுகளை விளையாடுகிறது?

மனிதா்களுடன் சதுரங்கள் முதலான விளையாட்டுகளை விளையாடும் இயந்திரம் எது?

20. இயல்பான மொழிநடையை உருவாக்குதல் என்னும் மென்பொருளுக்கு வோ்டுஸ்மித் என்று பெயா்.

இயல்பான மொழிநடையை உருவாக்குதல் என்னும் மென்பொருளுக்கு வழங்கப்படும் பெயா் யாது? 
 
21. செம்மை சான்ற காவிதி மாக்கள் என்று அமைச்சா்களை மாங்குடி மருதனாா் போற்றுகிறாா்.

செம்மை சான்ற காவிதி மாக்கள் என்று அமைச்சா்களை போற்றியவா் யாா்?

22. வாய்மையைச் சிறந்த அறமாகச் சங்க இலக்கியங்கள் பேசுகின்றன.

எதைச் சிறந்த அறமாகச் சங்க இலக்கியங்கள் பேசுகின்றன?
 
23. நாயக்கா், மராட்டியா் ஆட்சிக் காலங்களில் மிகுதியான சத்திரங்கள் வழிச்செல்வோா்களுக்காகக் கட்டப்பட்டன.
 
யாருடைய ஆட்சிக்காலங்களில் மிகுதியான சத்திரங்கள் கட்டப்பட்டன?
 
24. அமொிக்காவின் மினசோட்டா தமிழ்ச்சங்கம் வாழை இலை விருந்து விழாவை ஆண்டுதோறும் கொண்டாடி வருகிறது.
 
 வாழை இலை விருந்து விழாவை ஆண்டுதோறும் கொண்டாடி வரும் தமிழ்ச்சங்கம் எது?

25. கரகாட்டத்தின் துணையாட்டமாக மயிலாட்டம் ஆடப்படுகிறது.

கரகாட்டத்தின் துணையாட்டமாக ஆடப்படுவது எது?


Comments

Popular posts from this blog

6ம் வகுப்பு தமிழ் முதல் பருவம் வினா விடைகள்

புத்தகம் வாங்கி அனுப்புமாறு உறவினா் ஒருவருக்குக் கடிதம் எழுதுக.

ஒற்றுமையே உயா்வு - 7ம் வகுப்பு கட்டுரை