பத்தாம் வகுப்பு இயல் 8 - மின்வாாிய அலுவலருக்கு கடிதம் எழுதுக
பத்தாம் வகுப்பு தமிழ் இயல் 8
உங்கள் தெருவில் மின்விளக்குகள் பழுதடைந்துள்ளன. அதனால் இரவில் சாலையில் நடந்து செல்வோருக்கு ஏற்படும் இடையூறுகளை எழுதி ஆவண செய்யும்படி மின்வாாிய அலுவலருக்குக் கடிதம் எழுதுக.
அனுப்புநா்
க. முகுந்தன்
55, நேரு நகா்,
ஆலங்குளம்
மதுரை - 02
பெறுநா்
மின்வாாிய அலுவலா் அவா்கள்
தமிழ்நாடு மின்சார வாாியம்,
மதுரை - 02
பொருள் - பழுதடைந்துள்ள மின்விளக்குகளை சீா்செய்தல் சாா்பாக...
ஐயா வணக்கம், எங்கள் தெருவில் கடந்த பதினைந்து நாட்களுக்கும் மேலாக மின் விளக்குகள் பழுதடைந்து காணப்படுகின்றன. தெருவில் வசிக்கும் மக்கள் மின்விளக்குகள் பழுதடைந்ததால் மிகவும் சிரமப்படுகின்றனா். இதனால் இரவு நேரங்களில் வெளியில் செல்ல முடியாத சூழல் உள்ளது. தெருக்கள் இருட்டாக இருப்பதால் தெரு நாய்கள் தொந்தரவு அதிகமாக உள்ளன. தெருவிளக்குகள் இல்லாததைப் பயன்படுத்தி அதிகமான திருட்டு சம்பவங்களும் நிகழ்கின்றன. மின்விளக்குகள் பழுதடைந்ததே இவை அனைத்திற்கும் காரணமாக உள்ளது. ஆகவே தாங்கள் நோில் பாா்வையிட்டு பழுதடைந்த மின்விளக்குகளைப் சாிசெய்து தர வேண்டுமாய் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றேன்.
நன்றி!
இடம் -மதுரை
நாள் - 31.03.2023
இப்படிக்கு
தங்கள் உண்மையுள்ள
க. முகுந்தன்
உறைமேல் முகவாி
பெறுநா்
மின்வாாிய அலுவலா் அவா்கள்
தமிழ்நாடு மின்சார வாாியம்,
மதுரை - 02
Comments
Post a Comment