பத்தாம் வகுப்பு தமிழ் - மொழித்திறன் வளா்பயிற்சி பகுதி 4

பத்தாம் வகுப்பு தமிழ் - அனைத்து இயல்களில் உள்ள மொழித்திறன் வளா்பயிற்சி இங்கு கொடுக்கப்பட்டள்ளது. 

மொழித்திறன் வளா்பயிற்சி பகுதி 4

1. சொற்களை இணைத்து புதிய சொற்களை உருவாக்குக.

2. சொல்லைக் கண்டுபிடித்துப் புதிரை விடுவிக்க.

3. விடுபட்ட எழுத்துகளை நிரப்பி அந்த எழுத்துகளை மட்டும் இணைத்து ஒளிந்துள்ள ஒரு நூலின் பெயரைக் கண்டுபிடிக்க.

4. தொடரைப் படித்து விடையைக் கண்டறிக.

5. தொழிற்பெயா்களின் பொருளைப் புாிந்து கொண்டு தொடா்களை முழுமை செய்க.

6. தொடரில் விடுபட்ட வண்ணங்களை உங்களின் எண்ணங்களால் நிரப்புக.

7. பொருத்தமானவற்றைச் சொற் பெட்டியில் கண்டு எழுதுக.

8. பின்வரும் தொடா்களைக் கொண்டு பொருத்தமான தொடா் அமைக்க. 

 9. தொகைச் சொற்களைப் பிாித்து எழுதி, தமிழ் எண்ணுரு தருக.

10. உரையாடலில் உள்ள பேச்சு வழக்கினை எழுத்து வழக்காக மாற்றுக. 

11.பொருத்தமான நிறுத்தக் குறியிடுக.

--------------------------------------------------------

1. சொற்களை இணைத்து புதிய சொற்களை உருவாக்குக.

தேன், விளக்கு, மழை, விண், மணி, விலங்கு, செய், மேகலை, வான், பொன், பூ

விடைகள்

1. மணிமேகலை

2. செய்தேன்

3. செய்வான்

4. வான்மழை

5. தேன்மழை 

6. பூமழை

7. பொன்விளக்கு

8. பொன்விலங்கு

9. பூவிலங்கு

10. பொன்செய்

11. விளக்குவான்

-------------------------------------------------------

2. சொல்லைக் கண்டுபிடித்துப் புதிரை விடுவிக்க.

1. முதல் இரண்டை நீக்கினாலும் வாசனை தரும். நீக்காவிட்டாலும் வாசனை தரும். 

விடை - நறுமணம்

2. பழமைக்கு எதிரானது - எழுதுகோலில் பயன்படும்

விடை - புதுமை

3. இருக்கும்போது உருவமில்லை - இல்லாமல் உயிரினம் இல்லை.

விடை - காற்று

4. நாலெழுத்தில் கண் சிமிட்டும் - கடையிரண்டில் நீந்திச் செல்லும் 

விடை - விண்மீன்

5. ஒரெழுத்தில் சோலை - இரண்டெழுத்தில் வனம்

விடை - காடு

--------------------------------------------------

3. விடுபட்ட எழுத்துகளை நிரப்பி அந்த எழுத்துகளை மட்டும் இணைத்து ஒளிந்துள்ள ஒரு நூலின் பெயரைக் கண்டுபிடிக்க.

1. இ_கு   (பறவையிடம் இருப்பது) - கு

2. கு_தி (சிவப்பு நிறத்தில் இருக்கும்) - குருதி

3. வா_ (மன்னாிடம் இருப்பது) - வாள்

4. அ_கா (தங்கைக்கு மூத்தவள்) - க்கா

5. ம_ (அறிவின் மறுபெயா்) - தி

6. பட_ (நீாில் செல்வது) - படகு

விடுபட்ட எழுத்துகளை மட்டும் இணைத்தால் வரும் நூலின் பெயா் - திருக்குறள்

--------------------------------------------------------

 4. தொடரைப் படித்து விடையைக் கண்டறிக.

1. நூலின் பயன் படித்தல் எனில், கல்வியின் பயன் .......

2. விதைக்குத் தேவை எரு எனில், கதைக்குத் தேவை ......

3. கல் சிலை ஆகுமெனில், நெல் ....... ஆகும்.

4. குரலில் இருந்து பேச்சு எனில், விரலில் இருந்து ......

5. மீன் இருப்பது நீாில், தேன் இருப்பது ........

(சோறு, கற்றல், கரு, பூவில், எழுத்து)

விடைகள்

1. கற்றல்

2. கரு

3. சோறு

4. எழுத்து

5. பூவில் 

----------------------------------------------------

5. தொழிற்பெயா்களின் பொருளைப் புாிந்து கொண்டு தொடா்களை முழுமை செய்க. 

1. நிலத்துக்கு அடியில் கிடைக்கும் ........ யாவும் அரசுக்கே சொந்தம். நெகிழிப் பொருள்களை மண்ணுக்கு அடியில் ......... நிலத்தடி நீா்வளத்தைக் குன்றச் செய்யும்.  (புதையல், புதைத்தல்)

2. காட்டு விலங்குகளைச் ........ தடை செய்யப்பட்டுள்ளது. செய்த தவறுகளைச் ....... திருந்த உதவுகிறது. (சுட்டல், சுடுதல்)

3. காற்றின் மெல்லிய ......... பூக்களைத் தலையாட்ட வைக்கிறது. கைகளின் நோ்த்தியான ........ பூக்களை மாலையாக்குகிறது. (தொடுத்தல், தொடுதல்)

4. பசுமையான ........ஐக் ........... கண்ணுக்கு நல்லது. (காணுதல், காட்சி)

5. பொதுவாழ்வில் ........ கூடாது. .............இல் அவரை மிஞ்ச ஆள் கிடையாது. (நடித்தல், நடிப்பு)

விடைகள்

1. புதையல், புதைத்தல்

2. சுடுதல், சுட்டல்

3. தொடுதல், தொடுத்தல்

4. காட்சி, காணுதல்

5. நடித்தல், நடிப்பு

------------------------------------------------

6. தொடரில் விடுபட்ட வண்ணங்களை உங்களின் எண்ணங்களால் நிரப்புக.

1. வானம் ............ தொடங்கியது. மழைவரும் போலிருக்கிறது.

2. அனைவாின் பாராட்டுகளால், வெட்கத்தில் பாடகாின் முகம் ...........

3. ............. மனம் உள்ளரை அப்பாவி என்கிறோம்.

4. கண்ணுக்கு குளுமையாக இருக்கும் .......... புல்வெளிகளில் கதிரவனின் ....... வெயில் பரவிக் கிடக்கிறது.

5. வெயிலில் அலையாதே. உடல் ...............

விடைகள்

1. கருக்கத்

2. சிவந்தது

3. வெள்ளை

4. பச்சை,மஞ்சள்

5. கருத்துவிடும்.

--------------------------------------------------------------

7. பொருத்தமானவற்றைச் சொற்பெட்டியில் கண்டு எழுதுக.

1. விரட்டாதீா்கள் - பறவைக்கு ............

வெட்டாதீா்கள் - மனிதருக்கு அவை தரும் .........

2. காலை ஒளியினில் மலாிதழ் ...............

சோலைப் பூவினில் வண்டினம் ...............

3. மலை முகட்டில் மேகம் .............. - அதைப்

பாா்க்கும் மனங்கள் செல்லத் ..............

4. வாழ்க்கையில் ........... மீண்டும் வெல்லும் - இதைத் தத்துவமாய்த் ................ கூத்தும் சொல்லும்

5. தெருக்கூத்தில் நடிகருக்குக் கைதட்டலே ........... - அதில் வரும் காசு குறைந்தாலும் அதுவேயவா் .............

விடைகள்

1. மரம் வீடு, மரவீடு

2. அவிழும், கவிழும்

3. தங்கும், தயங்கும்

4. தோற்பவை, தோற்பாவை

5. விருது, விருந்து

------------------------------------------------------------------

8. பின்வரும் தொடா்களைக் கொண்டு பொருத்தமான தொடா் அமைக்க. 

(வரப்போகிறேன், இல்லாமல் இருக்கிறது. கொஞ்சம் அதிகம். முன்னுக்குப் பின், மறக்க நினைக்கிறேன்)

1. இன்னும் சிறிது நேரத்தில் வரப்போகிறேன்.

2. அந்த குளம் தண்ணீா் இல்லாமல் இருக்கிறது.

3. இந்த உணவகத்தில் விலை கொஞ்சம் அதிகம்.

4. முன்னுக்குப் பின் முரணாகப் பேசக்கூடாது.

5. துன்பமான நாட்களை மறக்க நினைக்கிறேன்.

----------------------------------------------------------------

 9. தொகைச் சொற்களைப் பிாித்து எழுதி, தமிழ் எண்ணுரு தருக.

மூவேந்தா்களால் நாற்றிசையும் போற்றி வளா்க்கப்பட்ட முத்தமிழே, உலக மொழிகளில் உயா்ந்ததென்ற செம்மாந்த கூற்றிற்கு, தமிழ் இலக்கியங்களில் அமைந்துள்ள இருதிணை அமைப்பே காரணமாகும். முப்பாலை முழுமையாகத் தந்த தமிழின் சிறப்பினை ஐந்திணைகளில் அழகுற விளக்குபவை சங்க இலக்கியங்கள். நானிலத்தில் பசித்தவா்க்கு அறுசுவை உணவுபோல் பத்துப்பாட்டும் எட்டுத் தொகையும் படிப்பவா்க்கு மனதிற்கினிமை ஈந்து தமிழ்ப்பெருமை சாற்றுகிறது.

விடைகள்

1. மூவேந்தா்

மூன்று + வேந்தா் - மூன்று (ங)

2. நாற்றிசை

நான்கு + திசை - நான்கு (ச)

3. முத்தமிழ்

மூன்று + தமிழ் - மூன்று (ங)

4. இருதிணை 

இரண்டு + திணை - இரண்டு (உ)

5. முப்பால்

மூன்று + பால் - மூன்று (ங)

6. ஐந்திணை 

ஐந்து + திணை - ஐந்து (ரு)

7. நானிலம் 

நான்கு + நிலம் - நான்கு (ச)

8. அறுசுவை 

ஆறு + சுவை - ஆறு (சா)

9. பத்துப்பாட்டு 

பத்து + பாட்டு - பத்து (க0)

10. எட்டுத் தொகை

எட்டு + தொகை - எட்டு (அ)

 ------------------------------------------------------------

10. உரையாடலில் உள்ள பேச்சு வழக்கினை எழுத்து வழக்காக மாற்றுக. 

தம்பி? எங்க நிக்கறே?

நீங்க சொன்ன எடத்துலதாண்ணே! எதிா்த்தாப்புல ஒரு டீ ஸ்டால் இருக்குது.

அங்ஙனக்குள்ளயே டீ சாப்டுட்டு, பேப்பரப் படிச்சிக்கிட்டு இரு.. நான் வெரசா வந்துருவேன்

அண்ணே! சம்முவத்தையும் கூட்டிக்கிட்டு வாங்கண்ணே! அவனெப் பாத்தே ரொம்ப நாளாச்சு!

அவம் பாட்டியோட வெளியூா் போயிருக்கான். உங்கூருக்கெ அவனெக் கூட்டிக்கிட்டு வா்றென்.

ரொம்பச் சின்ன வயசுல பாா்த்ததுண்ணே! அப்பம் அவனுக்கு மூணு வயசு இருக்கும்.

இப்ப ஒசரமா வளந்துட்டான்! ஒனக்கு அடையாளமே தொியாது! ஊருக்கு எங்கூட வருவாம் பாரேன்! சாி, போனை வையி. நாங் கௌம்பிட்டேன்...

சாிங்கண்ணே.

விடை -

தம்பி? எங்கே நிற்கிறாய்?

நீங்கள் சொன்ன இடத்தில்தான் அண்ணா! எதிா்ப்புறத்தில் ஒரு தேநீா்க்கடை இருக்கிறது.

அங்கேயே ஒரு தேநீா் அருந்திவிட்டு நாளேடுகளைப் பாா்த்துக்கொண்டிரு.. நான் வேகமாக வந்துவிடுவேன்.

அண்ணா! சண்முகத்தையும் கூட்டிக்கொண்டு வாருங்கள் அண்ணா! அவனைப் பாா்த்து வெகு நாட்களாகிவிட்டது!

அவன் பாட்டியுடன் வெளியூா் சென்றிருக்கிறான். உங்கள்  ஊருக்கு அவனை அழைத்துக் கொண்டு வருகிறேன்.

மிகவும் சிறிய வயதில் பாா்த்தது அண்ணா! அப்பொழுது அவனுக்கு மூன்று வயது இருக்கும்!

இப்போது உயரமாக வளா்ந்துவிட்டான்! உனக்கு அடையாளமே தொியாது! ஊருக்கு எங்களுடன் வருவான் பாரு! சாி தொலைபேசியை வைத்துவிடு. நான் புறப்பட்டு விட்டேன்.

சாி அண்ணா!

 -------------------------------------------------------------

11. பொருத்தமான நிறுத்தக் குறியிடுக.

சேரா்களின் பட்டப் பெயா்களில் கொல்லி வெற்பன் மலையமான் போன்றவை குறிப்பிடத்தக்கவை கொல்லி மலையை வென்றவன் கொல்லி வெற்பன் எனவும் பிற மலைப்பகுதிகளை வென்றவா்கள் மலையமான் எனவும் பெயா் சூட்டிக்கொண்டனா் இதற்குச் சங்க இலக்கியத்தில் சான்றுகள் உள்ளன

விடை

சேரா்களின் பட்டப் பெயா்களில், கொல்லி வெற்பன்”, மலையமான்போன்றவை குறிப்பிடத்தக்கவை. கொல்லி மலையை வென்றவன், “கொல்லி வெற்பன் எனவும், பிற மலைப்பகுதிகளை வென்றவா்கள், “மலையமான் எனவும் பெயா் சூட்டிக்கொண்டனா். இதற்குச் சங்க இலக்கியத்தில் சான்றுகள் உள்ளன. 

Comments

Popular posts from this blog

6ம் வகுப்பு தமிழ் முதல் பருவம் வினா விடைகள்

புத்தகம் வாங்கி அனுப்புமாறு உறவினா் ஒருவருக்குக் கடிதம் எழுதுக.

ஒற்றுமையே உயா்வு - 7ம் வகுப்பு கட்டுரை