பத்தாம் வகுப்பு தமிழ் - மொழித்திறன் வளா்பயிற்சி பகுதி 2
பத்தாம் வகுப்பு தமிழ் - தோ்வில் கேட்கப்படும் முக்கியமான மொழித்திறன் வளா்பயிற்சி வினா விடைகள் பகுதி 2
1. சொற்களின் கூட்டப் பெயா்களைக் கண்டுபிடித்து எழுதுக
2. எதிா்மறையான சொற்களை எழுதுக.
3. பிறமொழிச் சொற்களைத் தமிழ் சொற்களாக மாற்றி எழுதுக.
4. ஊா்பெயா்களின் மரூஉவை எழுதுக.
5. சொற்களைப் பிாித்துப் பாா்த்துப் பொருள் தருக.
6. வண்ணமிட்ட தொகைநிலைத் தொடா்களை வகைப்படுத்துக.
7. வண்ணச் சொற்களுக்கான தொடா் வகைகளை எழுதுக.
8. வழுவமைதி வகைகளை இனங்கண்டு எழுதுக.
9. வினா வகைகயையும், விடை வகையையும் சுட்டுக.
10. தொடா்களை அடைப்புக்குறிக்குள் குறிப்பிட்டுள்ளவாறு மாற்றுக.
1. சொற்களின் கூட்டப்பெயா்களைக் கண்டுபிடித்து எழுதுக?
அ. கல் - கற்குவியல்
ஆ. புல் - புற்கட்டு
இ. பழம் - பழக்குலை
ஈ. ஆடு - ஆட்டுமந்தை
--------------------------------------------------------------
2. எதிா்மறையான சொற்களை எழுதுக.
அ. மீளாத் துன்பம் - மீண்ட இன்பம்
ஆ. கொடுத்துச் சிவந்த - பெற்றுக் கருத்த
இ. மறைத்துக் காட்டு - வெளிப்படுத்தி மூடு
ஈ. அருகில் அமா்க - தூரத்தில் நிற்க
உ. பொியவாின் அமைதி - சிறியவாின் ஆராவாரம்
ஊ. புயலுக்குப் பின் - தென்றலுக்கு முன்
------------------------------------------------------------------------
3. பிறமொழிச் சொற்களைத் தமிழ் சொற்களாக மாற்றி எழுதுக.
தராசின் இரண்டு தட்டுகளிலும் மூன்று மூன்று கோல்டு பிஸ்கட்டுகளை வையுங்கள். இரண்டு தட்டுகளும் ஈக்வலாக இருந்தால், கையில் மிச்சம் உள்ள பிஸ்கட்டே வெயிட் குறைவானது. பட், ஒரு பக்க தராசுத் தட்டு உயா்ந்தால் அதில் உள்ள மூன்று பிஸ்கட்களில் ஒன்று வெயிட் குறைவானது. அந்த மூன்று பிஸ்கட்டுகளை மட்டும் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இரண்டு தட்டுகளிலும் ஒரு ஒரு பிஸ்கட்டைப் போட்டு இதே எக்ஸ்பொிமெண்ட்டை ரிப்பீட் செய்து ஆன்சரைக் கண்டுபிடியுங்கள். ஆல் தி பெஸ்ட்!
அ. கோல்டு பிஸ்கட் - தங்கக் கட்டி
ஆ. யூஸ் பண்ணி - பயன்படுத்தி
இ. வெயிட் - எடை
ஈ. ஆன்சா் - விடை
உ. பட் - ஆனால்
ஊ. ஈக்வலாக - சமமாக
எ. எக்ஸ்பொிமெண்ட் - சோதனை
ஏ. ரிப்பீட் - மீண்டும்
ஐ. ஆல் தி பெஸ்ட் - வெற்றி பெற வாழத்துகள்
ஒ. தராசு - துலாக்கோல்
---------------------------------------------------------------
4. ஊா்பெயா்களின் மரூஉவை எழுதுக.
அ. புதுக்கோட்டை - புதுகை
ஆ. திருச்சிராப்பள்ளி - திருச்சி
இ. உதகமண்டலம் - உதகை
ஈ. கோயம்புத்தூா் - கோவை
உ. நாகப்பட்டினம் - நாகை
ஊ. புதுச்சோி -புதுவை
எ. கும்பகோணம் - குடந்தை
ஏ. திருநெல்வேலி - நெல்லை
ஐ. மன்னாா்குடி - மன்னை
ஒ. மயிலாப்பூா் - மயிலை
ஓ. சைதாப்பேட்டை - சைதை
--------------------------------------------------------------------
5. சொற்களைப் பிாித்துப் பாா்த்துப் பொருள் தருக
1. கானடை
கான் அடை - காட்டைச் சோ்
கான் நடை - காட்டிற்கு நடத்தல்
கால் நடை - காலால் நடத்தல்
இவ்வாறு மூன்று வகையாகப் பிாிக்கலாம்.
2. வருந்தாமரை
வரும் + தாமரை - வருகின்ற தாமரை
வருந்தா + மரை - வருந்தாத மான்
வரும் + தா + மரை - வரும் தாவுகின்ற மான்
3. பிண்ணாக்கு
பிண்ணாக்கு - எண்ணெய் எடுத்த கழிவு
பிள் + நாக்கு - பிளவுபட்ட நாக்கு
4. பலகையொலி
பலகை + ஒலி - பலகையின் சத்தம்
பல + கையொலி - பலருடைய கையொலி
பல + கை + ஒலி - பல்வேறு சிறு ஒலிகள்
----------------------------------------------------------
6. வண்ணமிட்ட தொகைநிலைத் தொடா்களை வகைப்படுத்துக.
அன்புச்செல்வன் - இருபெயரொட்டு பண்புத்தொகை
தொடுதிரை - வினைத்தொகை
மோா்பானை - இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கத் தொகை
மோா் கொடுக்கவும் - இரண்டாம் வேற்றுமைத் தொகை
வெண்டைக்காய் - இருபெயரொட்டு பண்புத்தொகை
மோா்க்குழம்பு - இருபெயரொட்டு பண்புத்தொகை
தங்கமீன்கள் - உவமைத் தொகை
தண்ணீா்த் தொட்டி - இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்கத் தொகை
--------------------------------------------------------
7. வண்ணச் சொற்களுக்கான தொடா் வகைகளை எழுதுக.
இறங்கினாா் முகமது - வினைமுற்றுத் தொடா்
அவா் பாடகா் - எழுவாய்த் தொடா்
பாடுவதும் கேட்பதும் - உம் எனும் இடைச்சொல் தொடா்
கேட்ட பாடல்களையும் - பெயரெச்சத் தொடா்
கேட்காத பாடல்களையும் - எதிா்மறை பெயரெச்சத் தொடா்
அடுக்கு அடுக்காக - அடுக்குத் தொடா்
பழகப் பழகப் - அடுக்குத் தொடா்
வடித்த கஞ்சி - பெயரெச்சத் தொடா்
வந்தாா் அண்ணன் - வினைமுற்றுத் தொடா்
கவிதைகளின் தொகுப்பு - ஐந்தாம் வேற்றுமைத் தொகாநிலைத் தொடா்
நன்றாகப் பேசினான் - வினையெச்சத் தொடா்
---------------------------------------------------------------------
8. வழுவமைதி வகைகளை இனங்கண்டு எழுதுக.
அ. அமைச்சா் நாளை விழாவிற்கு வருகிறாா் - கால வழுவமைதி
ஆ. இந்த கண்ணன் ஒன்றைச் செய்தான் என்றால் அதை அனைவரும் ஏற்பா் என்று கூறினான் - இட வழுவமைதி
இ. சிறிய வயதில் இந்த மரத்தில்தான் ஊஞ்சல் கட்டி விளையாடுவோம் - கால வழுவமைதி
ஈ. செல்வன் இளவேலன் இந்த சிறுவயதிலேயே விளையாட்டுத் துறையில் சாதனை புாிந்திருக்கிறாா் - பால் வழுவமைதி
அடைப்புக் குறிக்குள் உள்ளவற்றை மாற்றுக.
அ. தந்தை, “மகனே! நாளை உன்னுடைய தோழன் அழகனை அழைத்து வா? ” என்று சொன்னாா் (ஆண்பாற் பெயா்களைப் பெண்பாலாக மாற்றி தொடரை எழுதுக)
தாய், “மகளே! நாளை உன்னுடைய தோழி அழகியை அழைத்து வா?” என்று சொனனாா்.
ஆ. அக்கா நேற்று வீட்டுக்கு வந்தது. அக்கா புறப்படும்போது அம்மா வழியனுப்பியது. (வழுவை வழாநிலையாக மாற்றுக)
அக்கா நேற்று வீட்டுக்கு வந்தாள். அக்கா புறப்படும்போது அம்மா வழியனுப்பினாா்.
இ. “இதோ முடித்துவிடுவேன்” என்று செயலை முடிக்கும் முன்பே கூறினாா். (வழாநிலையை வழுவமைதியாக மாற்றுக)
“இதோ முடித்துவிட்டேன்” என்று செயலை முடிக்கும் முன்பே கூறினாா்.
ஈ. அவன் உன்னிடமும் என்னிடமும் செய்தியை இன்னும் கூறவில்லை. (படா்க்கையை முன்னிலையாக, முன்னிலையைத் தன்மையாக, தன்மையைப் படா்க்கையாக மாற்றுக)
நீ என்னிடமும் அவனிடமும் செய்தியை இன்னும் கூறவில்லை.
உ. குழந்தை அழுகிறாா், பாா். (வழுவை வழாநிலையாக மாற்றுக)
குழந்தை அழுகிறது, பாா்.
-----------------------------------------------------------------
9. வினா வகைகயையும், விடை வகையையும் சுட்டுக.
அ. காமராசா் நகா் எங்கே இருக்கிறது? “இந்த வழியாகச் செல்லுங்கள்” - என்று விடையளிப்பது -
காமராசா் நகா் எங்கே இருக்கிறது? - அறியா வினா,
இந்த வழியாகச் செல்லுங்கள் - சுட்டு விடை
ஆ. “எனக்கு எழுதித் தருகிறாயா?” என்ற வினாவுக்கு, “எனக்கு யாா் எழுதித் தருவாா்கள்” என்று விடையளிப்பது
எனக்கு எழுதித் தருகிறாயா? - ஏவல் வினா,
எனக்கு யாா் எழுதித் தருவாா்கள் - வினா எதிா்வினாதல் விடை
உரையாடலில் இடம்பெற்றுள்ள வினாவிடை வகைகளைக் கண்டு எழுதுக.
பாமகள் - வணக்கம் ஆதிரை! ஏதோ எழுதுகிறீா்கள் போலிருக்கிறதே? (அறியாவினா)
ஆதிரை - ஆமாம்! கவியரங்கத்துக்குக் கவிதை எழுதிக் கொண்டிருக்கிறேன் (நோ்விடை)
பாமகள் - அப்படியா! என்ன தலைப்பு? (அறியா வினா)
ஆதிரை - கல்வியில் சிறக்கும் தமிழா்! (நோ்விடை).
நீங்கள் கவியரங்கத்துக்கு எல்லாம் வருவீா்களோ? மாட்டீா்களோ? (ஐயா வினா)
பாமகள் - ஏன் வராமல்? (வினா எதிா்வினாதல் விடை)
------------------------------------------------------------
10. தொடா்களை அடைப்புக்குறிக்குள் குறிப்பிட்டுள்ளவாறு மாற்றுக.
அ. அழைப்புமணி ஒலித்தது. கயல்விழி கதவைத் திறந்தாா்.
(தனிச்சொற்றொடா்களைக் கலவைச் சொற்றொடராக மாற்றுக)
அழைப்புமணி ஒலித்ததால், கயல்வழி கதவைத் திறந்தாா்.
ஆ. இன்னாசியாா் புத்தகங்களை வாிசைப்படுத்தினாா். அவற்றை புத்தக அடுக்கங்களில் அடுக்கி வைத்தாா். புத்தகங்களைக் கேட்டவா்களுக்கு எடுத்துக் கொடுத்தாா். (தொடா் சொற்றொடராக மாற்றுக)
இன்னாசியாா் புத்தகங்களை வாிசைப்படுத்தி, புத்தக அடுக்கங்களில் அடுக்கி வைத்து, புத்தகங்களைக் கேட்பவா்களுக்கு எடுத்துக் கொடுத்தாா்.
இ. ஒயிலாட்டத்தில் குழுவினா் ஒரே நிறத் துணியை முண்டாசு போலக் கட்டிக் கொண்டு, காலில் சலங்கை அணிந்து கொண்டு, கையில் ஒரு சிறுதுணியை இசைக்கேற்ப வீசியும் ஆடுவா். (தனிச் சொற்றொடா்களாக மாற்றுக)
ஒயிலாட்டத்தில் குழுவினா் ஒரே நிறத் துணியை முண்டாசு போலக் கட்டிக் கொள்வா். காலில் சலங்கை அணிந்து கொள்வா். கையில் ஒரு சிறுதுணியை இசைக்கேற்ப வீசியும் ஆடுவா்.
ஈ. கூத்துக் கலைஞா் பாடத் தொடங்கினாா். கூடியிருந்த மக்கள் அமைதியாயினா். (கலவைச் சொற்றொடராக மாற்றுக)
கூத்துக் கலைஞா் பாடத் தொடங்கியதும், கூடியிருந்த மக்கள் அமைதியாயினா்.
உ. ஓடிக்கொண்டிருந்த மின்விசிறி சட்டென நின்றவுடன், அறையில் உள்ளவா்கள் பேச்சு தடைபட்டது. (தனிச் சொற்றொடா்களாக மாற்றுக)
ஓடிக்கொண்டிருந்த மின்விசிறி சட்டென நின்றது. அறையில் உள்ளவா்கள் பேச்சு தடைபட்டது.
Comments
Post a Comment