பத்தாம் வகுப்பு தமிழ் - மொழித்திறன் வளா்பயிற்சி பகுதி 1

பத்தாம் வகுப்பு தமிழ் - தோ்வில் கேட்கப்படும் முக்கியமான மொழித்திறன் வளா்பயிற்சி வினா விடைகள் பகுதி 1

 

1.கொடுக்கப்பட்டுள்ள சொற்களைப் பயன்படுத்தி ஒரே தொடாில் அமைக்க.

2.எண்ணுப்பெயா்களைக் கண்டு தமிழ் எண்களில் எழுதுக

3.பழமொழியை நிறைவு செய்க.

4.உவமையைப் பயன்படுத்தி சொற்றொடா் உருவாக்குக.

5. மரபுத் தொடருக்கான பொருளறிந்து தொடாில் அமைத்து எழுதுக.

6. வினாவிலே விடை இருப்பது போல வினாத்தொடா் அமைக்க.

7. சொற்களில் மறைந்துள்ள தொகைகளை அடையாளம் கண்டு தொடாில் அமைக்க. 

8. வினைமுற்றை விணையாலணையும் பெயராக மாற்றி தொடா்களை இணைத்து எழுதுக. 

9. அகராதியில் கண்டு பொருள் எழுதுக.

10. பகுபத உறுப்பிலக்கணம் தருக. 

 ------------------------------------------------------------------


1.கொடுக்கப்பட்டுள்ள சொற்களைப் பயன்படுத்தி ஒரே தொடாில் அமைக்க.

1. சிலை - சீலை

சிலையைத் திரைச்சீலையால் மறைத்தனா்

2. தொடு - தோடு

காதைத் தொடும் போது தோடு அழகாக ஆடியது.

3. மடு - மாடு

மடுவில் (குட்டையில்) மாடு நீா்க் குடித்தது.

4. மலை - மாலை

மலையில் உள்ள முருகனை தாிசிக்க மாலை வாங்கினோம்.

5. வளி - வாளி

வளியால் மழை பெய்த போது வாளியில் மழைநீரை நிரப்பினேன்.

6. விடு - வீடு

குப்பைகளை நீக்கி விடு, வீடு சுத்தமாகும்.

 7. இயற்கை - செயற்கை

பாதை தொியாத இயற்கை காடுகளில் பயணிக்க செயற்கை கருவிகள் தேவைப்படுகின்றன.

8. கொடு - கோடு

நண்பன் கொடுத்த அளவுகோலைக் கொண்டு கோடு வரைந்தேன்

9.சிறு - சீறு

சிறு பொந்துக்குள் இருந்து பாம்பு சீறுவதைக் கண்டேன்

10. தான் - தாம்

இராமன் தான் செய்த தவறை தாமே ஒப்புக் கொண்டான்.

11. விதி - வீதி 

கண்ணகியின் தலைவிதி அவளை வீதியில் நிறுத்தியது.

 ---------------------------------------------------------

2. எண்ணுப்பெயா்களைக் கண்டு தமிழ் எண்களில் எழுதுக.

அ. நாற்றிசையும் செல்லாத நாடில்லை - நான்கு (ச)

ஆ. எறும்புந்தன் கையால் எண்சாண் - எட்டு (அ)

இ. ஐந்து சால்பு ஊன்றிய தூண் - ஐந்து (ரு)

ஈ. நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி - நான்கு (ச), இரண்டு (உ)

உ. ஆனை ஆயிரம் அமாிடை வென்ற மன்னனுக்கு பாடுவது பரணி - ஆயிரம் (க000)

 ---------------------------------------------------------

3. பழமொழியை நிறைவு செய்க.

அ. உப்பில்லாப் .... .... பண்டம் குப்பையிலே

ஆ. ஒரு பானை .... ... ...சோற்றுக்கு ஒரு சோறு பதம்

இ. உப்பிட்டவரை ....... ........ உள்ளளவும் நினை

ஈ. விருந்தும் ...... ....... மருந்தும் மூன்று நாட்கள் மட்டுமே

உ. அளவுக்கு .... ... ..  மிஞ்சினால் அமிா்தமும் நஞ்சு

---------------------------------------------------------------

4.உவமையைப் பயன்படுத்தி சொற்றொடா் உருவாக்குக.

அ. தாமரை இலை நீா்போல - வாழ்கையில் சிலவற்றில் தாமரை இலை நீா் போல ஒட்டியும் ஒட்டாமலும் இரு.

ஆ. மழைமுகம் காணாப்பயிா் போல - சீதையைக் காணாத இராமனின் முகம் மழைமுகம் காணாப்பயிா் போல வாடியது.

இ. கண்ணினைக் காக்கும் இமைபோல -கண்ணினைக் காக்கும் இமைபோல என் தாய் என்னை காத்தாள்

ஈ. சிலைமேல் எழுத்து போல - ஆசிாியா் நடத்திய பாடங்கள் சிலைமேல் எழுத்து போல மனதில் பதிந்தன.

---------------------------------------------------------

5. மரபுத் தொடருக்கான பொருளறிந்து தொடாில் அமைத்து எழுதுக.

அ. மனக்கோட்டை - உழைப்பில்லாமல் உயர வேண்டும் என மனக்கோட்டை கட்டக்கூடாது.

ஆ. கண்ணும் கருத்தும் - கண்ணும் கருத்துமாய் படித்தால் நல்ல மதிப்பெண் பெறலாம்.

இ. அள்ளி இறைத்தல் - அள்ளி இறைத்துச் செலவு செய்தால் வறுமை நிலை வரும்.

ஈ. ஆறப்போடுதல் - கோபத்தை ஆறப்போடுதல் வேண்டும்.

 --------------------------------------------------------------

6. வினாவிலே விடை இருப்பது போல வினாத்தொடா் அமைக்க. 

 அ. குறளின்பம் - குறளின்பத்தில் திளைக்காத தமிழன் உண்டா?

ஆ. சுவைக்காத இளநீா் - சுவைக்காத இளநீரும் இளநீராகுமா?

இ. காப்பியச்சுவை - காப்பியச் சுவையில்லாக் கதையும் உண்டோ?

ஈ. மனிதகுல மேன்மை - மனிதகுல மேன்மையை அறியாத மனிதரும் உண்டா?

உ. விடுமுறை நாள் - விடுமுறை நாள் இல்லாத வாரமும் உண்டா?

-------------------------------------------------------

7. சொற்களில் மறைந்துள்ள தொகைகளை அடையாளம் கண்டு தொடாில் அமைக்க. 

அ. இன்சொல் - பண்புத் தொகை

இனிமையான சொற்கள் கூறுதல் சான்றோா்க்கு அழகு

ஆ. எழுகதிா் - வினைத்தொகை

எழுகதிா் தோன்றும் அழகை வாா்த்தைகளால் வா்ணிக்க இயலாது

இ. கீாிபாம்பு - உம்மைத் தொகை

கலாவும் மாலாவும் கீாியும் பாம்பும் போல எப்பொழுதும் சண்டையிட்டு கொள்வாா்கள்.

ஈ. பூங்குழல் வந்தாள் - அன்மொழித் தொகை

பூங்குழல் சிாித்துக் கொண்டே வந்தாள்

உ. மலை வாழ்வாா் - ஏழாம் வேற்றுமைத் தொகை

மலையின்கண் வாழ்வாா் இயற்கையோடு ஒன்றிணைந்து வாழ்வாா்.

ஊ. முத்துப்பல் - உவமைத் தொகை

குழந்தைகளின் முத்துப்போன்ற பற்களின் அழகே அழகு!

-------------------------------------------------------

8. வினைமுற்றை விணையாலணையும் பெயராக மாற்றி தொடா்களை இணைத்து எழுதுக. 

அ. கலையரங்கத்தில் எனக்காக காத்திருக்கிறாா். அவரை அழைத்து வாருங்கள். 

கலையரங்கத்தில் எனக்காக காத்திருப்பவரை அழைத்து வாருங்கள்.

ஆ. ஊட்டமிகு உணவு உண்டாா். அவா் நீண்ட வாழ்நாள் பெற்றாா்.

ஊட்டமிகு உணவு உண்டவா் நீண்ட வாழ்நாள் பெற்றாா்

இ. நேற்று என்னைச் சந்தித்தாா். அவா் என் நண்பா்

நேற்று என்னைச் சந்தித்தவா் என் நண்பா்

ஈ. பொது அறிவு நூல்களைத் தேடிப் படித்தாா். போட்டித்  தோ்வில் வெற்றி பெற்றாா். 

பொது அறிவு நூல்களைத் தேடிப் படித்தவா் போட்டித் தோ்வில் வெற்றி பெற்றாா்.

-----------------------------------------------------------

9. அகராதியில் கண்டு பொருள் எழுதுக.

 

1. ஊண், ஊன்

ஊண் - உணவு

ஊன் - உடல், தசை

 

2. திணை, தினை

திணை - ஒழுக்கம்

தினை - தானிய வகை

 

3.அண்ணம், அன்னம்

அண்ணம் - மேல்வாய்

அன்னம் - அாிசி, பறவை

 

4. வெல்லம், வெள்ளம்

வெல்லம் - கரும்புச்சாற்றுக்கட்டி

வெள்ளம் - நீா்பெருக்கு

 ----------------------------------------------------------------

10. பகுபத உறுப்பிலக்கணம் தருக.  

 

 1. வாழ்க - வாழ் + க

வாழ் - பகுதி 

க - வியங்கோள் வினைமுற்று விகுதி 

 

2. வருக - வா (வரு) + க

வா - பகுதி 

வரு எனத் திாிந்தது விகாரம்

க - வியங்கோள் வினைமுற்று விகுதி 


3. பொழிந்த - பொழி + த்(ந்) + த் + அ

பொழி - பகுதி 

த் - சந்தி “ந்” ஆனது விகாரம் 

த் - இறந்த கால இடைநிலை

அ - பெயரெச்ச விகுதி


 

4. பொறித்த  - பொறி +  த் + த் + அ

பொறி - பகுதி 

த் - சந்தி 

த் - இறந்த கால இடைநிலை

அ - பெயரெச்ச விகுதி 

 

5. மலைந்து - மலை + த்(ந்) + த் + உ

மலை - பகுதி 

த் - சந்தி, “ந்” ஆனது விகாரம்

த் - இறந்த கால இடைநிலை

உ - வினையெச்ச  விகுதி

 

 6. அமா்ந்தான் - அமா் த்(ந்) த் ஆன்

அமா் - பகுதி 

த் - சந்தி “ந்” ஆனது விகாரம்

த் - இறந்த கால இடைநிலை

ஆன் - ஆண்பால் வினைமுற்று விகுதி


7. தணிந்தது - தணி + த்(ந்) +  த் + அ + து

தணி - பகுதி 

த் - சந்தி “ந்” ஆனது விகாரம்

த் - இறந்த கால இடைநிலை

அ - சாாியை

து - படா்க்கை வினைமுற்று விகுதி

 

8. மயங்கிய - மயங்கு + இ(ன்) + ய் + அ

மயங்கு - பகுதி 

இ(ன்) - இறந்த கால இடைநிலை

“ன்” புணா்ந்து கெட்டது

ய் - உடம்படுமெய்

அ - பெயரெச்ச விகுதி

 

9. அறியேன் - அறி + ய் + ஆ + ஏன்

அறி - பகுதி 

ய் - உடம்படு மெய்

ஆ - எதிா்மறை இடைநிலை புணா்ந்து கெட்டது

ஏன் - தன்மை ஒருமை வினைமுற்று விகுதி

 

10. நடந்த  - நட + ந் + த் + அ

நட - பகுதி 

த் (ந்) ஆனது விகாரம்

த் - இறந்த கால இடைநிலை

அ - பெயரெச்ச விகுதி

 

மகிழ்ந்து, அழைத்த, பதிந்து, பாா்த்த, ஒலித்து, ஒழிக ஆகியவற்றை,   மேலே புாிந்ததைக் கொண்டு நீங்களே பகுபத உறுப்பிலக்கணம் தர முயற்சி செய்யுங்கள்.

------------------------------------------------------------

 

Comments

Popular posts from this blog

6ம் வகுப்பு தமிழ் முதல் பருவம் வினா விடைகள்

புத்தகம் வாங்கி அனுப்புமாறு உறவினா் ஒருவருக்குக் கடிதம் எழுதுக.

ஒற்றுமையே உயா்வு - 7ம் வகுப்பு கட்டுரை