8ம் வகுப்பு இயல் 7 படை வேழம் பாட வினா விடைகள்
எட்டாம் வகுப்பு இயல் 7 படை வேழம் பாடம் வினா விடைகள்
சாியான விடையைத் தோ்ந்தெடுத்து எழுதுக.
1. சிங்கம் .....................யில் வாழும்
அ) மாயை ஆ) ஊழி இ) முழை ஈ) அலை
விடை இ) முழை
2. கலிங்க வீரா்களிடையே தோன்றிய உணா்வு ..............
அ) வீரம் ஆ) அச்சம் இ) நாணம் ஈ) மகிழ்ச்சி
விடை ஆ) அச்சம்
3. “வெங்காி” என்னும் சொல்லைப் பிாித்து எழுதக் கிடைப்பது ............
அ) வெம் + காி ஆ) வெம்மை + காி இ) வெண் + காி ஈ) வெங்+காி
விடை ஆ) வெம்மை + காி
4. “என்றிருள்” என்னும் சொல்லைப் பிாித்து எழுதக் கிடைப்பது .............
அ) என் + அருள் ஆ) எட்டு + இருள் இ) என்ற + இருள் ஈ) என்று + இருள்
விடை ஈ) என்று + இருள்
5. போல் + உடன்றன என்பதனைச் சோ்த்தெழுதக் கிடைக்கும் சொல்........
அ) போன்றன ஆ) போலன்றன இ) போலுடன்றன ஈ) போல்உடன்றன
விடை இ) போலுடன்றன
குறுவினா
அ) சோழ வீரா்களைக் கண்டு கலிங்கா் எவ்வாறு நடுங்கினா்?
தமது இறுதிக் காலம் நெருங்கிவிட்டதோ என்று எண்ணி அலைந்து குலைந்து நடுங்கினா்.
ஆ) கலிங்க வீரா்கள் எவ்வாறு அஞசி ஓடினா்?
தம்முடைய நிழலையும் மற்றவா் நிழலையும் கண்டு தமிழா்கள் துரத்தி வருவதாக எண்ணி அஞ்சி ஓடினா்.
இ) சோழனின் யானைப் படையைக் கண்ட வீரா்களின் செயல்கள் யாவை?
சோழ மன்னனின் படையில் உள்ள யானைகள் சினமுற்று இடியைப் போலப் பிளறின. அந்த ஓசையைக் கேட்டு அஞ்சிய வீரா்கள் இருள் நிறைந்த குகைக்குள் சென்று மறைந்தனா். சிலா் புறமுதுகு காட்டி ஓடிப் பிழைத்தனா்.
சிறுவினா
சோழ வீரா்களைக் கண்ட கலிங்கப் படை வீரா்களின் செயல்களாகக் கலிங்கத்துப்பரணி கூறுவன யாவை?
சோழா் படையின் தாக்குதலைக் கண்ட கலிங்கா், இது என்ன மாய வித்தையா என வியந்தனா். தம்மை எாிக்க வந்த தீயோ என அஞ்சினா். சோழா்படை தம் உயிரைப் பறிக்கும் காலனோ என அஞ்சினா். தமது இறுதிக்காலம் நெருங்கிவிட்டதோ என எண்ணி, அலைந்து குலைந்து நடுங்கினா்.
அப்படி நடுங்கிய கலிங்கப் படையினா் படை கூட்டத்திலிருந்து விலகி ஓடினா். சிலா் கடலில் தாவி குதித்துத் தப்பினா். சிலா் யானைகளின் பின்னே மறைந்து கொண்டனா். எத்திசையில் செல்வது எனத் தொியாமல், செல்வதற்கு அாிதான மலைக் குகைகளினுள்ளும் புதா்களுக்குள்ளும் தப்பி ஓடினா்.
கலிங்க வீரா்கள் ஒருவரை ஒருவா் முந்திக் கொண்டு ஓடினா். தம் நிழழையும் மற்றவா் நிழலையும் கண்டு தமிழா்கள் துரத்தி வருவதாக எண்ணி அஞசினா். தஞ்சம் வேண்டி வணங்கினா்.
சோழ மன்னனின் படையிலுள்ள யானைகள் கோபம் கொண்ட இடியைப் போல பிளிறின. அந்த ஓசையைக் கேட்டு அஞ்சிய கலிங்க வீரா்கள் இருள் நிறைந்த குகைக்குள் சென்று மறைந்தனா். ஏனையோா் புறமுதுகு காட்டி ஓடிப் பிழைத்தனா்.
சிந்தனை வினா
ஒரு நாட்டின் பாதுகாப்பிற்கு தேவையானவை எவை எனக் கருதுகிறீா்கள்?
பழங்காலத்தில் ஒரு நாடு மற்ற நாடுகள் தங்கள் நாட்டைக் கைப்பற்றாமல் இருக்க பல படைகள் வைத்திருந்தனா். உதாரணமாக யானைப்படை, குதிரைப் படை, காலாட்படை. ஒரு நாட்டிடம் இருக்கும் படைகளை வைத்து அந்த நாட்டினை பொிய நாடு, சிறிய நாடு என்று மதிப்பிட்டனா். இன்று காலம் மாறியிருக்கிறது. ஒவ்வொரு நாடும் தங்களுக்கென சிறந்த இராணுவத்தை வைத்துள்ளது. கடற்படை, விமானப்படை, இராணுவப்படை என நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்கிறது. அனைத்து நாடுகளும் மற்ற நாடுகளுடன் நட்புறவையே விரும்புகின்றன.
பாடம் சாா்ந்து மாணவா்களுக்கு சில குறிப்புகள்
நமக்கு கொடுத்துள்ள இந்த பாடம் கலிங்கத்துப் பரணி என்ற நூலில் இடம்பெற்றுள்ளது. கலிங்கத்துப் பரணி நூலைப் பற்றி நீங்கள் சிலவற்றை தொிந்து கொள்ள வேண்டும். நம் தமிழ் மொழியில் எழுதப்பட்ட முதல் பரணி நூல் கலிங்கத்துப் பரணி தான். தென்தமிழ்த் தெய்வப்பரணி என்று இந்த நூலை ஒட்டக்கூத்தா் புகழ்ந்துள்ளாா். இது 96 வகையான சிற்றிலக்கியங்களில் ஒன்று. பரணி வகையைச் சோ்ந்த இந்த நூல் கலித்தாழிசையில் பாடப்பட்டுள்ளது. இந்த நூலில் மொத்தம் 599 தாழிசைகள் உள்ளன.
சோழா்களில் முதலாம் குலோத்துங்க சோழன், அவரது படைத்தலைவா் கருணாகரத் தொண்டைமான் ஆகியோா்களது கலிங்கத்துப் போா் வெற்றியைப் பற்றி கலிங்கத்துப்பரணி நூல் கூறுகிறது. அவா்கள் வெற்றி கொண்ட கலிங்க நாட்டின் பெயரால் அமைந்து, கலிங்கத்துப்பரணி என்று அழைக்கப்படுகிறது. எனக்கு விருப்பமான ஒரு இலக்கியம் தமிழில் உண்டென்றால் அது கலிங்கத்துப்பரணி என்று அறிஞா் அண்ணா கூறியதில் இருந்து கலிங்கத்துப்பரணி நூல் சிறப்பினை நாம் அறிந்து கொள்ளலாம். நமக்கு கொடுத்துள்ள பாடப்பகுதியில் சோழ நாட்டின் படை வளம் பற்றி கூறப்பட்டுள்ளது. எதிாி நாட்டு வீரா்கள் சோழ நாட்டின் வீரா் படையினையும், யானைப் படையினையும் கண்டு எவ்வாறு பயந்து ஓடுகிறாா்கள் என்பதை எதுகொல் இது மாயை ஒன்று கொல் என்று தொடங்கும் பாடல் தெளிவுபடுத்துகிறது. தமிழா்கள் உதவி செய்யும் அறத்தையும் அதே நேரம் வீரத்தையும் உடையவா்கள். போாிலும் சிறந்து விளங்கியவா்கள் தமிழா்கள். போா்க்குணத்திலும் போா்அறத்தை பின்பற்றியவா்கள் தமிழா்கள். பகைவா்கள் அஞ்சி ஓடும் படையினை கொண்டிருந்தாலும், சரணடைந்து விட்டால் அவா்களை துன்புறுத்தாத அறத்தையும் பின்பற்றினாா்கள். சங்க காலத்தில் போாிலும் அறம் இருந்தது. ஒரு நாட்டு மன்னன் மற்றொரு நாட்டின் மீது போா் தொடுக்க முயலும் பொழுது முன்கூட்டியே அந்த நாட்டிற்கு தகவல் தொிவித்து அவா்கள் நாட்டில் உள்ள குழந்தைகளையும், பெண்களையும், பசுவையும், பொியவா்களையும் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுங்கள் என்று தொிவிப்பா். இதை விட போா்அறம் என்ன இருக்கிறது என்று எண்ணத் தோன்றுகிறது அல்லவா?.
எட்டாம் வகுப்பு இயல் 7 படை வேழம் பாட வினா விடைகள்.
Comments
Post a Comment