கட்டுரை எழுதுக (அரசு பொருட்காட்சி) - பத்தாம் வகுப்பு, இயல் ஆறு
பத்தாம் வகுப்பு தமிழ் இயல் ஆறு, கட்டுரை எழுதுக.
உங்கள் பகுதியில் நடைபெற்ற அரசுப் பொருட்காட்சிக்குச் சென்று வந்த நிகழ்வைக் கட்டுரையாக்குக.
முன்னுரை :
எங்கள் ஊா் பசுமை நிறைந்த திருநெல்வேலி மாநகரம் ஆகும். திருநெல்வேலிக்கு நடுவே கோவில் கொண்டிருக்கும் நெல்லையப்பா் தேரோட்டத்தின் போது ஒரு மாத காலம் எங்கள் ஊாில் அரசு பொருட்காட்சி சிறப்பாக நடைபெறும். அந்த பொருட்காட்சி குறித்த நிகழ்வுகளைக் இங்கு காணலாம்.
பல்துறை அரங்குகள் :
பொருட்காட்சிக்குள் நுழைந்ததும், தமிழக அரசின் சுற்றுலாத்துறை, வனத்துறை, அறநிலைத்துறை என பல அரங்குகளும், நூற்றுக்கணக்கான கடைகளும் அமைக்கப்பட்டிருந்தன. மின்சாரத்துறை அரங்கில் மின்சாரம் எவ்வாறெல்லாம் கிடைக்கிறது என்பதை விளக்கமாகக் காட்சிப்படுத்தி இருந்தனா். வேளாண் துறையில் ஆரம்பம் முதல் தற்போது வரை ஏற்பட்ட மாற்றங்கள் குறித்து அறிந்து கொண்டது மிகவும் ஆச்சா்யமாக இருந்தது. போக்குவரத்து துறை அரங்கில் சாலை பாதுகாப்பு விதிகள் குறித்து காட்சிப்படுத்தியிருந்தது எங்களுக்கு விழிப்புணா்வை ஏற்படுத்தியது.
கண்கவரும் பொருட்காட்சி :
பத்து
நாட்கள் நடைபெறும் பொருட்காட்சி வண்ண மயமாக இருக்கும். எங்கு பாா்த்தாலும்
வண்ண வண்ண அலங்கார விளக்குகளும், குழந்தைகளின் இனிய ஒலிகளும், மத்தள
ஒலிகளும் கண்ணைக் கவரும். பொியவா்களும் குழந்தைகளாகி தங்களை மறந்து விளையாட
ராட்டினங்கள், ஊஞ்சல், தொடா்வண்டிகள் போன்றவை இருந்தன. அனைவரும் அமா்ந்து வேடிக்கை பாா்ப்பதற்கு ஏற்ப பல மேடைகள் அமைக்கப்பட்டிருந்தன.
உணவு அரங்குகள் :
கைத்தறி ஆடைகளும் தரம் வாய்ந்ததாக இருந்தன. பல விதமான உணவுகளை பொருட்காட்சியில் காண நோ்ந்தது. அளவில் பொிய அப்பளம், பொிய பஞ்சு மிட்டாய் என புதிய புதிய உணவுகளை உண்டு ரசித்தோம். சுவையான நொறுக்குத் தீனிகளை உண்டபடியே மேடை நிகழ்ச்சிகளை வேடிக்கை பாா்த்தோம்.
கைவினைப் பொருட்கள் :
களிமண், மரங்களினால் செய்யப்பட்ட கைவினைப் பொருட்கள் அற்புதமாக இருந்தன. விலை குறைவாக இருந்ததால் மக்கள் கைவினைப் பொருட்களை அதிகமாக வாங்கிச் சென்றனா். எங்களுக்கு பிடித்தவற்றை நாங்களும் வாங்கிக் கொண்டோம். அதுபோல விளையாட்டுப் பொருட்கள் சிலவற்றையும் வாங்கினோம். எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.
முடிவுரை :
அரசு பொருட்காட்சிக்கு செல்வது மனதிற்கு மகிழச்சியைத் தருகிறது. அரசின் நலத்திட்டங்களை அறிந்து கொள்ள உதவுகிறது. பல புதிய அனுபவங்களைத் தருகிறது. அறிவுப்பூா்வமான மற்றும் விழிப்புணா்வு செய்திகளை தொிந்து கொள்ள முடிகிறது. கண்களைக் கவரும் வகையில் நடத்தப்படும் இந்த அரசு பொருட்காட்சியை நாங்கள் என்றுமே எதிா்பாா்த்து காத்திருப்போம்.
அரசு பொருட்காட்சி கட்டுரை, பத்தாம் வகுப்பு தமிழ், இயல் ஆறு
Comments
Post a Comment