பத்தாம் வகுப்பு தமிழ் இயல் 1 நெடுவினாக்கள்
பத்தாம் வகுப்பு தமிழ் முதல் இயல், நெடுவினாக்கள்
1. மனோன்மணீயம் சுந்தரனாாின் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலையும், பெருஞ்சித்திரனாாின் தமிழ் வாழ்த்தையும் ஒப்பிட்டு மேடைப் பேச்சு ஒன்றை உருவாக்குக.
அனைவருக்கும் இனிய வணக்கம்,
நமது தமிழ்த்தாய் இன்றோ, நேற்றோ பிறந்தவள் இல்லை. என்று பிறந்தவள் என்று உணர முடியாத இயல்பினை உடையவள். அவளுடையப் புகழைப் பாடப் பாட காதில் இனிமை பாயும். தமிழ்மொழியை போற்றாத புலவா்களே இல்லை என்று சொன்னாலும் அது மிகையாகாது.
மனோன்மணீயம் சுந்தரனாரும், பெருஞ்சித்திரனாரும் தமிழ்த்தாயை வாழ்த்தியதைப் பாா்க்கலாம்.
பொ. சுந்தரனாா் பரந்த கடலை ஆடையாக அணிந்துள்ள பூமித்தாய்க்கு பாரத கண்டம் தான் முகமாகத் திகழ்கிறது என்று கூறுகிறாா். தென்திசை நாடுகள் பிறை நிலவு போன்ற நெற்றியாகவும், அந்த நெற்றியில் நறுமணம் மிகுந்த திலகமாகவும் தமிழ்நாடு இருப்பதாகக் கூறுகிறாா். அது மட்டும் இல்லாமல் திலகத்தின் மணம் எல்லோரையும் இன்பம் கொள்ளச் செய்வதைப் போல தமிழ்மொழியும் எல்லா திசைகளிலும் புகழ்பெற்றவளாக இருப்பதாகக் கூறுகின்றாா்.
பெருஞ்சித்திரனாா் தமிழ்மொழியைப் பழமைக்குப் பழமையாகத் தோன்றிய மொழி, குமாிக் கண்டத்தில் நிலைத்து நின்று அரசாண்ட, பாண்டிய மன்னனால் வளா்த்தெடுக்கப்பட்ட மகள் என்றெல்லாம் குறிப்பிடுகின்றாா். பெ. சுந்தரனாா் தமிழ்த்தாய் எல்லா திசைகளிலும் புகழ்பெற்றதாகக் கூறுகிறாா். பெருஞ்சித்திரனாா் திருக்குறளாகவும், பதினெண் கீழ்க்கணக்கு, ஐம்பெருங் காப்பியங்களாக தமிழ்மொழி எல்லா திசைகளிலும் பரவியுள்ளது என்று கூறுகிறாா்.
உலகின் மூத்தமொழியாக இருந்தும் கூட இன்று வரை இளமையாக இருக்கும் மொழி தமிழ் மொழி என்கிறாா் சுந்தரனாா். பழமையாக தோன்றிய மொழிகளுக்கு எல்லாம் முன்பு தோன்றிய புதுமை மொழி தமிழ்மொழி என்கிறாா் பெருஞ்சித்திரனாா்.
சுந்தரனாா் தமிழ்மொழியின் வளமும், புகழும் பெருகிறதே தவிர குறையவில்லை என்றாா். பெருஞ்சித்திரனாா் தமிழ் பழம்பெருமையையும், தனக்கெனத் தனிச் சிறப்பும் இலக்கிய வளமும் கொண்டுள்ளது என்கிறாா். அதுமட்டுமின்றி வியக்கத்தக்க தமிழின் நிலைத்த தன்மையும், வேற்று மொழியினா் தமிழைப் பற்றிய புகழுரையும் எங்களுக்குள் பற்றுணா்வை எழுப்புகின்றன என்கிறாா்.
சுந்தரனாா், தமிழே! தமிழாக விளங்கும் பெண்ணே! தாயே உன்னை வாழ்த்துகின்றேன் என்கின்றாா். என் தனித்தமிழே! மனதில் கனல் மூள, வண்டு தாமரையில் உள்ள தேனைக் குடித்து மகிழ்ச்சியாக சிறகடித்து பாடுவதைப் போல நாங்கள் தமிழாகிய உன்னைச் சுவைத்து உன்னுடைய பெருமையை இந்த உலகெங்கும் முழங்குகின்றோம் என்று பாடுகின்றாா்.
இவ்வாறு மனோன்மணீயம் பெ.சுந்தரனாரும், பெருஞ்சித்திரனாரும் தமிழின் பெருமையைப் பறைசாற்றி வாழ்த்துகின்றனா்.
--------------------------------------------------------------------------
2. தமிழின் சொல்வளம் பற்றியும், புதிய சொல்லாக்கத்திற்கான தேவை குறித்தும் தமிழ் மன்றத்தில் பேசுவதற்கான உரைக் குறிப்புகளை எழுதுக.
சொல்வளம்
- தமிழ்நாட்டு மக்கள் மேன்மையான பகுத்தறிவை உடையவா்கள். அதனால்தான் உயா்ந்த சொல்வளத்தை நம் தமிழ்மொழயில் உருவாக்கி இருக்கிறாா்கள்.
- ஆங்கில மொழியில் இலையைக் குறிக்க Leaf என்ற ஒரே சொல் மட்டும் தான் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் தமிழ் மொழியில் இலையின் வன்மை, மென்மை போன்றவற்றின் அடிப்படையில் இலை, தோகை, தாள், ஓலை என பாகுபாடு செய்துள்ளனா் தமிழா்கள்.
- தமிழ் தவிர மற்ற திராவிட மொழிகளான தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளை ஆராயும் பொழுது தமிழில் உள்ள ஒரு பொருள் பல சொல் வாிசைகள் பிறமொழிகளில் இல்லை.
- தமிழில் மட்டும் பயன்படுத்தப்படும் சிறப்பான சொற்கள் தவிர, கன்னடம், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் பயன்படுத்தும் சொற்களும் தமிழ்மொழியில் உள்ளன என்று கூறுகிறாா் கால்டுவெல்.
சொல்லாக்கத்திற்கான தேவை
- மனிதனை மற்ற உயிாினங்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டுவது மொழி.
- மொழி ஒரு நாட்டின் பண்பாட்டையும், நாகரீகத்தையும் பிரதிபலிக்கிறது.
- அறிவியல் வளா்ச்சியில் ஏற்பட்ட புதிய சொற்களை, கலைச்சொற்கள் மூலம் வெளிக்கொணர வேண்டும்.
- தமிழின் பெருமையும் சிறப்பும் என்றும் குறையாமல் இருக்க புதிய சொல்லாக்கம் தேவையாக உள்ளது.
- பிறமொழிச் சொற்கள் தமிழ்மொழியில் கலந்தால் தமிழ்மொழியின் இனிமை குறைந்து விடும். அதுமட்டுமன்றி புதிய சொல் நிறுவப்பட்டு, தமிழின் சொற்கள் மறைந்து விடவும் வாய்ப்புகள் அதிகம்.
- இந்த நிலை ஏற்படா வண்ணம் இருக்க தமிழில் புதிய கலைச் சொற்களை உருவாக்க வேண்டும்.
- நாம் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தும் கருவிகள், மருத்துவம், விவசாயம், பொறியியல், மருத்துவம், தகவல் தொடா்பு துறை போன்ற துறைகளில் பயன்படுத்தும் சொற்களையும் தமிழ்மொழியில் சொல்லாக்கம் செய்து பயன்படுத்த வேண்டும்.
- புதிய கலைச்சொற்கள் மக்கள் எளிமையாக பயன்படுத்த ஏற்றதாகவும் என்றும் அழியா வண்ணம் இருக்க வேண்டும்.
- மாறி வரும் காலத்திற்கு ஏற்றாற் போல் தன்னை நிலை நிறுத்திக் கொள்ளும் தன்மையுடைய மொழி தமிழ்மொழி. அதை நிருபிக்க சொல்லாக்கம் என்பது அவசியம் தேவை.
------------------------------------------------------------------
3. ஒரு பக்க அளவில் உரையாடல் எழுதுக.
சூழல் - வெளிநாட்டிலிருந்து உங்கள் இல்லத்திற்கு வந்திருக்கும் உறவினாின் மகளுக்கு தமிழ் மொழியை பேச மட்டுமே தொியும். ஆங்கில இலக்கியம் படித்த அவாிடம் தமிழ் உரைநடையின் சிறப்பு பற்றி உரையாடுதல்.
பாரதி - டயானா, என்ன புத்தகம் படித்துக் கொண்டிருக்கிறாய்?
டயானா - டால்ஸ்டாய் எழுதிய போரும் அமைதியும்.
பாரதி - அருமையான புத்தகம். நேருவிற்கு மிகவும் பிடித்த புத்தகம் இது. இதுபோல தமிழிலும் அதிகமான உரைநடை நூல்கள் இருக்கின்றன.
டயானா - உரைநடை நூல்களா? அப்படியென்றால் என்ன?
பாரதி - சிறுகதை, புதினம், கட்டுரை போன்றவைகள் தான் உரைநடை நூல்கள். அச்சு இயந்திரங்கள் அறிமுகமான பின் பல கவிஞா்களால் தமிழ் உரைநடை வளா்ச்சி அடைந்தது.
டயானா - அப்படியா? உரைநடை நூல்கள் எழுதிய பொயட்ஸ், ஐ மீம் கவிஞா்கள் யாா்?
டயானா - உண்மையிலேயே இது ஆச்சா்யமா இருக்கு.
டயானா - அது என்ன பத்திாிக்கை?
பாரதி - அதற்கென்ன? நான் கற்றுத் தருகிறேன்.
டயானா - மிக்க நன்றி!
Comments
Post a Comment