ஒன்பதாம் வகுப்பு தமிழ் இயல் 1 வினா விடைகள்

 9ம் வகுப்பு தமிழ் இயல் 1 வினா விடைகள்

பலவுள் தெரிக.

1. குழுவில் விடுபட்ட வரிசையைத் தேர்ந்தெடுக்க.

அ) 1. வங்கம் 2. மானு 3. தாழிசை 4. பிறவினை

ஆ) 1. தாழிசை 2. மானு 3. பிறவினை 4. வங்கம்

இ) 1. பிறவினை 2. தாழிசை 3. மானு 4. வங்கம்

ஈ) 1. மானு 2. பிறவினை 3. வங்கம் 4. தாழிசை

விடை 

அ)  1. வங்கம் 2. மானு 3. தாழிசை 4. பிறவினை

2. தமிழ் விடு தூது ..................என்னும் இலக்கிய வகையைச் சேர்ந்தது. 

அ) தொடர்நிலைச் செய்யுள்

ஆ) புதுக்கவிதை

இ) சிற்றிலக்கியம்

ஈ) தனிப்பாடல்

விடை இ) சிற்றிலக்கியம்

3. விடுபட்ட இடத்திற்குப் பொருத்தமான விடை வரிசையைக் குறிப்பிடுக.

அ) ..................இனம்

ஆ) வண்ணம் ................

இ) ........................குணம்

ஈ) வனப்பு ........................

க) மூன்று, நூறு, பத்து, எட்டு

உ) எட்டு, நூறு, பத்து, மூன்று

ங) பத்து, நூறு, எட்டு, மூன்று

ச) நூறு, பத்து, எட்டு, மூன்று

விடை க) மூன்று, நூறு, பத்து, எட்டு

4. காலம் பிறக்கும்முன் பிறந்தது தமிழே! - எந்தக் 

காலமும் நிலையாய் இருப்பதும் தமிழே !

இவ்வடிகளில் பயின்று வரும் நயங்கள் --

அ) முரண், எதுகை, இரட்டைத் தொடை

ஆ) இயைபு, அளபெடை, செந்தொடை

இ) மோனை, எதுகை, இயைபு

ஈ) மோனை, முரண், அந்தாதி

விடை இ) மோனை, எதுகை, இயைபு

5. அழியா வனப்பு, ஒழியா வனப்பு, சிந்தாமணி - அடிக்கோடிட்ட சொற்களுக்கான இலக்கணக்குறிப்பு - 

அ) வேற்றுமைத் தொகை

ஆ) ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்

இ) பண்புத் தொகை

ஈ) வினைத்தொகை

விடை 

ஆ) ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்

குறுவினா

1. நீங்கள் பேசும் மொழி எந்த இந்திய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தது. 

    நான் பேசும் மொழி தமிழ். அது தென் திராவிட மொழிக்குடும்பத்தைச் சேர்ந்தது.

2. தமிழோவியம் கவிதையில் உங்களை மிகவும் ஈர்த்த அடிகள் குறித்து எழுதுக.

குறைகள் சொல்வதை விட்டுவிட்டுப் புதுக்

கோலம் புனைந்து தமிழ் வளர்ப்பாய்!

3. கண்ணி என்பதன் விளக்கம் யாது?

    இரண்டு கண்களைப் போல் இரண்டிண்டு பூக்களை வைத்துத் தொடுக்கப்படும் மாலைக்குக் கண்ணி என்று பெயர். 

    அதேப்போல் தமிழில் இரண்டிரண்டு அடிகள் கொண்ட எதுகையால் தொடுக்கப்படும் செய்யுள் வகை கண்ணி ஆகும்.

4. கணினி சார்ந்து நீங்கள் அறிந்த எவையேனும் ஐந்து தமிழச் சொற்களைத் தருக.

1. லேப்டாப் (Laptop)          -    மடிக்கணினி

2. கீ போர்டு (Keyboard)    -    விசைப்பலகை

3. கர்சர் (cursor)                  -    ஏவி (அ) சுட்டி

4. சாப்ட்வேர் (Software)    -    மென்பொருள்

5. பிரௌசர் (Browser)      -    உலவி

5. அகமாய்ப் புறமாய் இலக்கியங்கள் அவை அமைந்ததைச் சொல்லும் இலக்கணங்கள் - இலக்கியங்களின் பாடுபொருள்களாக இவ்வடிகள் உணர்த்துவன யாவை?

    பழந்தமிழ் இலக்கியங்கள் தமிழர்களின் இல்லற வாழ்க்கையை அகம் எனவும், போர் வாழ்வை புறம் எனவும் பிரிக்கின்றன என்பதை இலக்கணங்கள் எடுத்துரைக்கின்றன. 

6. செய்வினையைச் செயப்பாட்டு வினையாக மாற்றும் துணைவினைகள் இரண்டினை எடுத்துக்காட்டுடன் எழுதுக. 

துணைவினைகள் :-

போனது, போயிற்று

எடுத்துக்காட்டு :-

1.  பணம் காணாமல் போனது

2.  சட்டி உடைந்து போயிற்று

7. வீணையோடு வந்தாள், கிளியே பேசு - தொடரின் வகையைச் சுட்டுக. 

வீணையோடு வந்தாள் - வேற்றுமைத் தொடர்

கிளிளே பேசு - விளித்தொடர் 

சிறுவினா

1. சங்க இலக்கியத்தில் காணப்படும் கடற்கலனுக்குரிய சொல் கிரேக்க மொழியில் எவ்வாறு மாற்றம் பெற்றுள்ளது?

எறிதிரை     -    எறுதிரான்

கலன்            -    கலயுகோய்

நீர்                  -    நீரியோஸ்

நாவாய்        -    நாயு

தோணி        -    தோணீஸ்

2. திராவிட மொழிகளின் பிரிவுகள் யாவை? அவற்றுள் உங்களுக்குத் தெரிந்த மொழிகளின் சிறப்பியல்புகளை விளக்குக?

திராவிட மொழிகளின் பிரிவுகள் மூன்று

தென் திராவிட மொழிகள் 

நடுதிராவிட மொழிகள்

வடதிராவிட மொழிகள்

இவற்றுள் எனக்குத் தெரிந்த மொழிகள் தமிழ், மலையாளம்

  • தமிழ்மொழி திராவிட மொழிகள் சிலவற்றின் தாயாக விளங்குகிறது.
  • இந்தியாவின் தொன்மையான கல்வெட்டுகளில் பெரும்பாலானவை தமிழிலேயே அமைந்துள்ளன. 
  • மலையாளத்தில்  திணை, பால், எண் ஆகியவற்றைக் காட்டும் பாலறி கிளவிகள் இல்லை. 
  • தனிச்சொற்களாலேயே ஆண், பெண் பகுப்பை அறிந்து கொள்ள முடியும்.  

 5. வளரும் செல்வம் - உரையாடலில் குறிப்பிடப்படும் பிறமொழிச் சொற்களைத் தொகுத்து அவற்றிற்கு இணையான தமிழ்ச் சொற்களைப் பட்டியலிடுக. 

Software        -    மென்பொருள்

Browser         -    உலவி

Crop              -    செதுக்கி

Cursor           -    ஏவி (அ) சுட்டி 

Cyberspace   -    இணையவெளி

Server           -    வையக விரிவு வலை

Folder           -    உறை

Laptop          -    மடிக்கணினி

Navy             -    நாவாய்

எறுதிரான்     -      எறிதிரை

கலயுகோய்  -        கலன்

நீரியோஸ்     -        நீர்

நாயு                 -    நாவாய்

தோணீஸ்      -    தோணி

6. தன்வினை, பிறவினை - எடுத்துக்காட்டுகளுடன் வேறுபடுத்திக் காட்டுக.

எழுவாய் ஒரு வினையைத் தானே செய்தால் அது தன்வினை ஆகும்.

பந்து உருண்டது

எழுவாய் ஒரு வினையைச் செய்ய வைத்தால் அது பிறவினை ஆகும்.

பந்தை உருட்ட வைத்தான்

7. புதுக்கோலம் புனைந்து தமிழ் வளர்ப்பாய் - உங்கள் பங்கினைக் குறிப்பிடுக.

  1. தமிழைப் பிழையின்றி பேசுதல் 
  2. தமிழைப் பிழையின்றி எழுதுதல்
  3. பிறமொழி கலப்பை தவிர்த்தல்
  4. தமிழ்மொழி பெருமையைப் பரப்புதல்
  5. சமூக வலைதளங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தல் 
போன்றவை தமிழை வளர்க்க என்னுடைய பங்களிப்பாகும்.
 
நெடுவினா

1. திராவிட மொழிகளின் ஒப்பியல் ஆய்விற்கு தமிழே பெருந்துணையாக இருக்கிறது என்பதை எடுத்துக்காட்டுகளுடன் விவரிக்க?

    தமிழ் என்ற சொல்லிருந்து, தமிழ் - தமிழா - தமிலா - டிரமிலா - ட்ரமிலா - த்ராவிடா - திராவிட என்று மாறி, திராவிடம் என்ற சொல் வந்ததாக ஹீராஸ் பாதிரியார் கூறுகின்றார். 

    திராவிட மொழிகளில் தமிழ் மொழியே மூல மொழியாக உள்ளது. தமிழ்மொழியில் இருந்தே மலையாளம், தெலுங்கு, கன்னடம் என பல கிளை மொழிகள் தோன்றியிருக்கின்றன. எனவே தமிழ்மொழியை ஆய்வு செய்தாலே திராவிட மொழிகளின் பொதுவான பண்புகளை அறிந்து கொள்ள முடியும். 

    தமிழின் பல அடிச் சொற்களின் ஒலியன்கள், ஒலி இடம்பெயர்தல் என்ற விதிப்படி பிற திராவிட மொழிகளின் வடிவம் மாறியிருக்கின்றன.

    உதாரணமாக திராவிட மொழிகளின் அடிச்சொற்களும், எண்ணுப் பெயர்களும் ஒரே மாதிரியாக அமைந்துள்ளன.

பாக்ஸ

    இவற்றைக் கொண்டு பார்க்கும் பொழுது திராவிட மொழிக்குடும்பத்தின் தொன்மையான மூத்த மொழியாகத் திகழ்கின்ற தமிழ், பிற திராவிட மொழிகளைவிட ஒப்பியல் ஆய்வுக்குப் பெருந்துணையாக அமைந்துள்ளது என்பதை உணர்ந்து கொள்ளலாம். 

2. தூது அனுப்பத் தமிழே சிறந்தது என்பதற்குத் தமிழ்விடுதூது காட்டும் காரணங்களை விளக்கி எழுதுக.

    மதுரையில் கோயில் கொண்டுள்ள சொக்கநாதர் மீது காதல் கொண்ட பெண் ஒருத்தி, தன் காதலைக் கூறிவருமாறு தமிழ்மொழியை தூது விடுவதாக அமைந்துள்ள நூல் தமிழ் விடு தூது. தமிழ்மொழி தவிர அன்னம், கிளி, மான், வண்டு, தென்றல், மேகம் என பலவற்றை தூதாக அனுப்புவர். ஆனால் அவற்றில் தூது அனுப்பத் தமிழே சிறந்தது என்பதற்கு பல காரணங்கள் உண்டு.

    முற்றும் உணர்ந்த தேவர்களும் மூன்று குணமே பெற்றுள்ளனர். ஆனால் தமிழோ செறிவு, சமநிலை உட்பட பத்து குணங்களைப் பெற்றுள்ளது.

      மனிதர்கள் வெள்ளை, சிவப்பு, கருப்பு, மஞ்சள் பச்சை என ஐந்து வண்ணங்களையே உண்டாக்கினர். ஆனால் தமிழோ தூங்கிசை வண்ணம் முதல் இடை மெல்லிசை வண்ணம் ஈறாக நூறு வண்ணங்களைக் கொண்டுள்ளது.

   உணவின் சுவை ஆறுக்கு மேல் இல்லை. ஆனால் தமிழோ ஒன்பது சுவைகளைக் கொண்டுள்ளது. 

    நீங்கா அழகு என்று எதுவும் இல்லை. ஆனால் தமிழோ நீங்காத அழகுகள் எட்டினைப் பெற்றுள்ளது.

    மூவகை பாவினங்களையும் பெற்று, முத்தமிழாய் சிறந்து விளங்கி, என்றும் சிந்தாமணியாக விளங்கும் தமிழைத் தவிர தூது அனுப்பச் சிறந்தது ஏதும் உண்டோ?

 

 

 

 

 

 
 
 
 
 

Comments

Popular posts from this blog

6ம் வகுப்பு தமிழ் முதல் பருவம் வினா விடைகள்

எட்டாம் வகுப்பு கட்டுரை - உழைப்பே உயா்வு

ஒற்றுமையே உயா்வு - 7ம் வகுப்பு கட்டுரை