7ம் வகுப்பு குற்றியலுகரம் குற்றியலிகரம் பாட வினா விடைகள்
ஏழாம் வகுப்பு தமிழ் குற்றியலுகரம் குற்றியலிகரம் வினா விடைகள்
கீழ்க்காணும் சொற்களைக் குற்றியலுகரம் வகையின் அடிப்படையில் வகைப்படுத்துக.
ஆறு, எஃகு, கரும்பு, விறகு, உழக்கு, எட்டு, ஏடு, பந்து, காசு, கொய்து
நெடில்தொடர் | ஆறு, ஏடு, காசு |
---|---|
ஆய்தத்தொடர் | எஃகு |
உயிர்த்தொடர் | விறகு |
வன்தொடர் | உழக்கு, எட்டு |
மென்தொடர் | கரும்பு, பந்து |
இடைத்தொடர் | கொய்து |
பொருந்தாத சொற்களை எடுத்து எழுதுக
பசு, விடு, ஆறு, கரு | ஆறு |
---|---|
பாக்கு, பஞ்சு, பாட்டு, பத்து |
பஞ்சு |
ஆறு, மாசு, பாகு, அது | அது |
அரசு, எய்து, மூழ்கு, மார்பு |
அரசு |
பண்பு, மஞ்சு, கண்டு, எஃகு | எஃகு |
குறுவினா
1. குற்றியலுகரம் என்னும் சொல்லைப் பிரித்து விளக்கம் தருக.
குறுமை + இயல் + உகரம்
தனக்குரிய ஒரு மாத்திரை அளவில் இருந்து குறுகி அரை மாத்திரை அளவில் ஒலிக்கும். இவ்வாறு தனக்குரிய ஓசையில் குறைந்து ஒலிக்கும் உகரம் குற்றியலுகரம் ஆகும்.
2. குற்றியலிகரம் என்றால் என்ன?
வரகு + யாது - வரகியாது
கேள் + மியா - கேண்மியா
ஆகிய சொற்களில் வரும் இகரமானது தனக்குரிய ஒரு மாத்திரை அளவில் ஒலிக்காமல் அரை மாத்திரையாகக் குறுகி ஒலிக்கும் இகரம் குற்றியலிகரம் எனப்படும்.
கற்பவை கற்றபின்
1. ஒன்று முதல் பத்து வரையுள்ள எண்ணுப் பெயர்களைப் பட்டியலிட்டு எழுதுங்கள். அவற்றில் குற்றியலுகரச் சொற்களை எடுத்து எழுதுங்கள்.
குற்றியலுகரம் | ஒன்று, இரண்டு, மூன்று நான்கு, ஐந்து, ஆறு, எட்டு, ஒன்பது, பத்து |
---|---|
முற்றியலுகரம் | ஏழு |
2. குற்றியலுகர எண்ணுப் பெயர்களைக் குற்றியலுகர வகையின் அடிப்படையில் வகைப்படுத்துக.
ஒன்று | மென்தொடர் குற்றியலுரகம் |
---|---|
இரண்டு | மென்தொடர் குற்றியலுகரம் |
மூன்று | மென்தொடர் குற்றியலுரகம் |
நான்கு | மென்தொடர் குற்றியலுகரம் |
ஐந்து | மென்தொடர் குற்றியலுகரம் |
ஆறு | நெடில்தொடர் குற்றியலுகரம் |
எட்டு |
வன்தொடர் குற்றியலுகரம் |
ஒன்பது |
உயிர்த்தொடர் குற்றியலுகரம் |
பத்து | வன்தொடர் குற்றியலுகரம் |
3. குற்றியலுகர எண்ணுப் பெயர்களின் மாத்திரை அளவைக் கண்டுபிடியுங்கள்
ஒன்று | 1 + 1/2 + 1/2 = 2 மாத்திரை |
---|---|
இரண்டு | 2 + 1/2 + 1/2 = 3 மாத்திரை |
மூன்று | 2 + 1/2 + 1/2 = 3 மாத்திரை |
நான்கு | 2 + 1/2 + 1/2 = 3 மாத்திரை |
ஐந்து | 2 + 1/2 + 1/2 = 3 மாத்திரை |
ஆறு | 2 + 1/2 = 2 1/2 மாத்திரை |
எட்டு | 1 + 1/2 + 1/2 = 2 மாத்திரை |
ஒன்பது | 1 + 1/2 + 1 + 1/2 = 3 மாத்திரை |
பத்து | 1 + 1/2 + 1/2 = 2 மாத்திரை |
4. கு,சு,டு,து,பு,று ஆகிய குற்றியலுகரத்தை இறுதியாகக் கொண்ட ஈரெழுத்துச் சொற்களைத் திரட்டுக.
காடு |
ஆறு | மாடு | சூது |
---|---|---|---|
பாகு | காது | கோடு | தூது |
போடு | சோறு |
காசு | தூசு |
மொழியை ஆள்வோம்
கொடுக்கப்பட்டுள்ள வினாக்களுக்கு ஏற்பத் தொடரில் அழுத்தம் தர வேண்டிய சொற்களை எடுத்து எழுதுக.
வினா | அழுத்தம் தர வேண்டிய சொல் |
---|---|
கோதை எதைப் படித்தாள்? | கவிதையை |
கவிதையைப் படித்தது யார்? | கோதை |
கோதை கவிதையை என்ன செய்தாள்? |
படித்தாள் |
படத்திற்கு பொருத்தமான திணையை எழுதுக.
கீழ்க்காணும் சொற்களை உயர்திணை, அஃறிணை என வகைப்படுத்துக.
பிக்சர்ஸ் மூன்று
மொழியோடு விளையாடு
தொகைச் சொற்களை விரித்தெழுதுக.
முக்கனி | மா, பலா, வாழை |
---|---|
முத்தமிழ் |
இயல், இசை, நாடகம் |
நாற்றிசை | வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு |
ஐந்திணை |
குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை |
அறுசுவை | இனிப்பு, கசப்பு, புளிப்பு, துவர்ப்பு, உவர்ப்பு, கார்ப்பு |
கட்டங்களிலுள்ள எழுத்துகளை மாற்றி, மேலிருந்து கீழாகவும் இடமிருந்து வலமாகவும் எழுதினால் ஒரே சொல் வருமாறு கட்டங்களில் எழுதுக.
கு | ம | த |
---|---|---|
ந் | தி | த |
ரை | கு | தி |
ம |
த |
கு |
---|---|---|
த |
ந் |
தி |
கு |
தி |
ரை |
இரு பொருள் கொண்ட ஒரு சொல்லால் நிரப்புக.
1. மழலை பேசும் மொழி அழகு
இனிமைத் தமிழ் மொழி அழகு
2. அன்னை தந்தையின் கைப்பிடித்துக் குழந்தை நடை பழகும்
அறிஞர் அண்ணாவின் சிறப்பு அவரது அடுக்கு மொழி நடை
3. நீ அறிந்ததைப் பிறருக்குச் சொல்
எழுத்துகள் தொடர்ந்து நின்று பொருள் தருவது சொல்
4. உழவர்கள் நாற்று நட வயலுக்குச் செல்வர்
குழந்தையை மெதுவாக நட என்போம்
5. நீதிமன்றத்தில் தொடுப்பது வழக்கு
நீச்சத் தண்ணி குடி என்பது பேச்சு வழக்கு
Comments
Post a Comment