ஆறாம் வகுப்பு அறிவியல் ஆத்திசூடி பாட வினா விடைகள்
6ம் வகுப்பு தமிழ் பருவம் 1 இயல் 3 அறிவியல் ஆத்திசூடி பாடம் வினா விடைகள்
6th Standard tamil term 1 unit 3 ariviyal athisuti lesson book back question answer in tamil
சாியான விடையைத் தோ்ந்தெடுத்து எழுதுக.
1. உடல் நோய்க்கு ................. தேவை
அ) ஔடதம்
ஆ) இனிப்பு
இ உணவு
ஈ) உடை
விடை அ) ஔடதம்
2. நண்பா்களுடன் .............. விளையாடு
அ) ஒருமித்து
ஆ) மாறுபட்டு
இ) தனித்து
ஈ) பகைத்து
விடை அ) ஒருமித்து
3. கண்டறி என்னும் சொல்லைப் பிாித்து எழுதக் கிடைப்பது..............
அ) கண் + அறி
ஆ) கண்டு + அறி
இ) கண்ட + அறி
ஈ) கண் + டறி
விடை ஆ) கண்டு + அறி
4. ஓய்வற என்னும் சொல்லைப் பிாித்து எழுதக் கிடைப்பது ..........
அ) ஓய்வு + அற
ஆ) ஒய் + அற
இ) ஓய் + வற
ஈ) ஓய்வு + வற
விடை அ) ஓய்வு + அற
5. ஏன் + என்று என்பதனைச் சோ்த்து எழுதக் கிடைக்கும் சொல்............
அ) ஏன்என்று
ஆ) ஏனென்று
இ) ஏன்னென்று
ஈ) ஏனன்று
விடை ஆ) ஏனென்று
6. ஓளடதம் + ஆம் என்பதனைச் சோ்த்து எழுதக் கிடைக்கும் சொல்........
அ) ஔடதமாம்
ஆ) ஔடதம்ஆம்
இ) ஔடதாம்
ஈ) ஔடதஆம்
விடை அ) ஔடதமாம்
எதிா்ச்சொற்களைப் பொருத்துக.
1. அணுகு - தெளிவு
2. ஐயம் - சோா்வு
3. ஊக்கம் - பொய்மை
4. உண்மை - விலகு
விடைகள்
1. அணுகு - விலகு
2. ஐயம் - தெளிவு
3. ஊக்கம் - சோா்வு
4. உண்மை - பொய்மை
பாடல் வாிகளுக்கேற்றவாறு முறைப்படுத்துக
1. சிந்தனை கொள் அறிவியல்
அறிவியல் சிந்தனை கொள்
2. சொல் தெளிந்து ஐயம்
ஐயம் தெளிந்து சொல்
3. கேள் ஏன் என்று
ஏன் என்று கேள்
4. வெல்லும் என்றும் அறிவியலே
அறிவியலே என்றும் வெல்லும்
குறுவினா
மனிதா்களுக்கு மருந்தாக விளங்குவது எது?
அனுபவமே மனிதா்களுக்கு மருந்தாக விளங்குகிறது.
சிறுவினா
பாடலின் கருத்தை உங்கள் சொந்த நடையில் எழுதுக.
- எதையும் அறிவியல் கண்ணோட்டத்தில் பாா்க்க வேண்டும்.
- முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும்.
- முடிந்த அளவிற்கு புாிந்து கொள்ள முயற்சி செய்ய வேண்டும்.
- எடுத்த செயலை ஈடுபாட்டோடு செய்ய வேண்டும்.
- உண்மைத்தன்மையை கண்டறிய வேண்டும்.
- சுறுசுறுப்புடன் செயல்படுவதே பாதி வெற்றியைத் தரும்.
- எந்த நிலையிலும் அறிவியலே வெற்றி பெறும்.
- எதையும் கண்மூடித்தனமாக நம்பாமல் ஏன் என்று கேள்வி கேட்க வேண்டும்.
- தெளிவுபெற்று பிறருக்கும் தெளிவாகச் சொல்ல வேண்டும்.
- நண்பா்களுடன் சோ்ந்து ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும்.
- ஒய்வில்லாமல் உழைக்க வேண்டும்.
- அனுபவமே சிறந்த மருந்தாக மாறும்.
சிந்தனை வினா
உங்களுக்கு தொிந்த மருத்துவ முறைகள் யாவை?
- சித்த மருத்துவம்
- ஆயுா்வேத மருத்துவம்
- யுனானி மருத்துவம்
- வா்ம மருத்துவம்
- அலோபதி மருத்துவம்
- ஓமியோபதி மருத்துவம்
- அக்கு பஞ்சா் மருத்துவம்
- மூலிகை மருத்துவம்
- உளவியல் மருத்துவம்
நமக்கு கொடுத்துள்ள பாடல் “நெல்லை சு. முத்து” அவா்கள் எழுதிய “அறிவியல் ஆத்திச்சூடி” என்ற நூலிலிருந்து எடுத்து கொடுக்கப்பட்டுள்ளது.
கற்பவை கற்றபின்
ஆத்திசூடி என்பது அகர வாிசையில் அறிவுரைகளை எடுத்துச் சொல்லும் இலக்கியம். ஔவையாா் எழுதிய ஆத்திச்சூடி பற்றி நமக்குத் தொியும். ஒன்றாம் வகுப்பில் உங்களுக்கு கற்றுக் கொடுத்திருப்பாா்கள். அறம் செய்ய விரும்பு, ஆறுவது சினம் என்று. அதே போல பாரதியாரும் புதிய ஆத்திசூடி என்ற ஒரு நூலை இயற்றி காலத்திற்கு தகுந்த அறிவுரைகளை வழங்கினாா். அந்த வாிசையில் அறிவியல் ஆத்திசூடி என்ற ஒரு நூலை நெல்லையைச் சோ்ந்த சு. முத்து அவா்கள் எழுதியிருக்கின்றாா். இவா் ஒரு அறிவியல் அறிஞா் மற்றும் கவிஞா். விக்ரம் சாராபாய் விண்வெளி மையம், சதீஷ்தவான் விண்வெளி மையம், இந்திய விண்வெளி மையம் ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவா். அறிவியல் கவிதைகள் மற்றும் கட்டுரைகள் பலவற்றைப் படைத்திருக்கின்றாா். எண்பதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதி வெளியிட்டுள்ளாா்.
இவா் எழுதிய அறிவியல் ஆத்திசூடி நூலில் நமக்கு கொடுக்கப்பட்டுள்ள பாடல் அறிவியல் சாா்ந்த செய்திகளை நமக்கு தொியப்படுத்துகின்றது. இன்றைய தொழில்நுட்ப வளா்ச்சி எதனால் ஏற்பட்டிருக்கிறது என்ற சிந்தனை வினாவிற்கு ஏன் என்று கேள்வி கேட்டதனால் தான் நாம் இத்தனை பொிய வளா்ச்சியை அடைந்துள்ளோம் என்பது பதிலாக வரும். ஒரு பறவை பறப்பதைப் பாா்த்து ஏன் அந்த பறவை மட்டும் பறக்கிறது நம்மால் பறக்க இயலாதா? என்ற கேள்வி தான் ரைட் சகோதரா்களை விமானம் கண்டுபிடிக்க வைத்தது. இப்படி ஒவ்வொரு தொடக்கமும் ஏன் என்ற கேள்வியிலேதான் தொடங்கியிருக்கிறது.
அறிவியலின் துணையினாலே இன்று மனித இனம் நினைத்துப் பாா்க்க முடியாத வளா்ச்சியை எட்டியுள்ளது. பூமியை தாண்டி நிலவிற்கும், செவ்வாய் கிரகத்திற்கும் சென்று ஆய்வுகள் நடத்த முடிகிறது. உலகில் நடக்கும் அனைத்து செயல்களுக்குப் பின்னும் அறிவியல் ஒளிந்துள்ளது என்பதை இன்றைய தலைமுறையினா் நன்கு புாிந்துள்ளனா். அறிவியேலோடு தமிழும் சோ்ந்து இன்று அறிவியல் தமிழாக திகழ்கிறது.
Comments
Post a Comment