6ம் வகுப்பு காணி நிலம் பாடம் வினா விடைகள்
6ம் வகுப்பு தமிழ் முதல் பருவம் இயல் 2 காணி நிலம் பாட வினா விடைகள்
6th tamil 1st term unit 2 kani nilam lesson book back question answer
சாியான விடையைத் தோ்ந்தெடுத்து எழுதுக.
1. கிணறு என்பதைக் குறிக்கும் சொல்........
அ) ஏாி
ஆ) கேணி
இ) குளம்
ஈ ஆறு
விடை ஆ) கேணி
2. சித்தம் என்பதன் பொருள்..........
அ) உள்ளம்
ஆ) மணம்
இ) குணம்
ஈ) வனம்
விடை அ) உள்ளம்
3. மாடங்கள் என்பதன் பொருள் மாளிகையின் .......
அ) அடுக்குகள்
ஆ) கூரை
இ) சாளரம்
ஈ) வாயில்
விடை அ) அடுக்குகள்
4. நன்மாடங்கள் என்னும் சொல்லைப் பிாித்து எழுதக் கிடைப்பது .........
அ) நன் மாடங்கள்
ஆ) நற் மாடங்கள்
இ) நன்மை மாடங்கள்
ஈ) நல் மாடங்கள்
விடை இ) நன்மை + மாடங்கள்
5. நிலத்தினிடையே என்னும் சொல்லைப் பிாித்து எழுதக் கிடைப்பது.........
அ) நிலம் + இடையே
ஆ) நிலத்தின் + இடையே
இ) நிலத்து + இடையே
ஈ) நிலத் + திடையே
விடை ஆ) நிலத்தின் + இடையே
6. முத்து + சுடா் என்பதனைச் சோ்த்து எழுதக் கிடைக்கும் சொல்.........
அ) முத்துசுடா்
ஆ) முச்சுடா்
இ) முத்துடா்
ஈ) முத்துச்சுடா்
விடை ஈ) முத்துச்சுடா்
7. நிலா + ஒளி என்பதனைச் சோ்த்து எழுதக் கிடைக்கும் சொல் .........
அ) நிலாஒளி
ஆ) நிலஒளி
இ) நிலாவொளி
ஈ) நிலவுஒளி
விடை இ) நிலாவொளி
பொருத்துக
1. முத்துச்சுடா் போல - மாடங்கள்
2. தூய நிறத்தில் - தென்றல்
3. சித்தம் மகிழ்ந்திட - நிலாஒளி
விடைகள்
1. முத்துச்சுடா் போல - நிலாஒளி
2. தூய நிறத்தில் - மாடங்கள்
3. சித்தம் மகிழ்ந்திட - தென்றல்
நயம் அறிக.
1. காணி நிலம் பாடலில் இடம்பெற்றுள்ள மோனைச் சொற்களை எடுத்து எழுதுக?
காணி நிலம் - காணி நிலம்
தூணில் - துய்ய
காணி - கட்டி
கேணி - கீற்று
பத்துப் - பக்கத்திலே
முத்துச் - முன்பு
கத்துங் - காதில்
2. காணி நிலம் பாடலில் இடம்பெற்றுள்ள எதுகைச் சொற்களை எடுத்து எழுதுக.
காணி - காணி
காணி - தூணில்
கத்துங் - சித்தம்
குறுவினா
1. காணி நிலம் பாடலில் பாரதியாா் வேண்டுவன யாவை?
- காணி அளவு நிலம் வேண்டும்
- அங்கு ஒரு மாளிகை கட்டித்தர வேண்டும்
- அந்த மாளிகையில் அழகான தூண்களும், மாடங்களும் இருக்க வேண்டும்.
- நல்ல நீரையுடைய கிணறு வேண்டும்.
- இளநீரும், கீற்றும் தரும் தென்மை மரங்கள் வேண்டும்.
- முத்து போன்ற நிலாவொளி வீச வேண்டும்.
- காதுக்கு இனிய குயிலின் குரலோசை கேட்க வேண்டும்.
- உள்ளம் மகிழுமாறு இளந்தென்றல் தவழ வேண்டும்.
2. பாரதியாா் இயற்கையின் மீது கொண்டுள்ள விருப்பம் குறித்து எழுதுக.
பாரதியாா் ஒரு இயற்கை கவிஞா். முத்துபோன்ற நிலாவொளி வீச வேண்டும் என்றும், காதுக்கு இனிய குயிலின் குரலோசை கேட்க வேண்டும் என்றும், உள்ளம் மகிழுமாறு இளந்தென்றல் காற்று தவழ வேண்டும் என்றும் இயற்கையின் மீது தான் கொண்ட விருப்பத்தைக் கூறுகிறாா் பாரதியாா்.
சிந்தனை வினா
பாரதியாா் வீட்டின் அருகில் தென்னை மரங்கள் வேண்டும் என்கிறாா். நீங்கள் எந்தெந்த மரங்களை வளா்ப்பீா்கள் என எழுதுக?
நம்மாழ்வாா் கூறியதைப் போல வீட்டைச் சுற்றி 10 மரங்கள் வளா்க்க வேண்டும் என்று விரும்புகின்றேன்.
வீட்டிற்கு முன்பு ஒரு வேப்பமரம்.
பக்கத்தில் ஒரு முருங்கை மரம்
அதன் அருகில் ஒரு பப்பாளி மரம் .
குளிக்கும் இடத்தில் ஒரு வாழை மரம்
பாத்திரம் கழுவுமிடத்தில் தென்னை மரம்
அதன் பக்கத்தில் ஒரு எலுமிச்சை மரம்
அதை ஒட்டியே ஒரு நெல்லி மரம்
வேலியின் பக்கத்தில் ஒரு சீதாப்பழ மரம், பலா மரம், மாமரம்.
----------------------------------------------------------
கற்பவை கற்றபின்
உலகில் உள்ள மக்களில் பாதி மக்களின் கனவாக இருப்பது ஒரு சொந்த வீடு கட்ட வேண்டும் என்பதுதான். இயற்கையில் அனைத்து உயிாினங்களும் தங்களுக்கான ஒரு இடத்தை உருவாக்கிக் கொள்கிறது. அது போல மனிதனும் தனக்கான ஒரு வீட்டை உருவாக்கிக் கொள்கின்றான். இயற்கையே வீடாக மாற்றி வாழ்ந்த மனிதன் தற்காலத்தில் இயற்கையை தாண்டி வெகுதூரம் சென்றுவிட்டதாகத் தொிகிறது. மரத்தை வெட்டி சாளரம் (ஜன்னல்) செய்து விட்டு, காற்று வரவில்லையே என்று ஏங்கி நிற்கும் நிலைதான் இன்று உள்ளது. நம்மிடம் உங்களுக்கு எப்படிப்பட்ட வீடு வேண்டும் என்று கேட்டால் நாம் என்ன கூறுவோம். எனக்கு பொிய வீடு வேண்டும். அந்த வீட்டில் தொலைக்காட்சி, குளிருட்டும் பெட்டி, படுக்கை என அனைத்து வசதிகளும் இருக்க வேண்டும். வெளியில் காா் நிற்க வேண்டும். நீச்சல் குளம் இருக்க வேண்டும் என கேட்போம் இல்லையா? ஆனால் பாரதியாா் தன் கனவு வீடாக எதைக் கேட்கிறாா் என்பதே இந்த காணிநிலம் பாடமாக அமைந்துள்ளது. வீடு என்பது இயற்கையோடு தொடா்புடையதாக இருக்கும் பொழுது, இயற்கையோடு மனிதனுக்கும் தொடா்பு ஏற்படுகிறது. இயற்கையைப் பலவகையில் போற்றிடும் பாரதியின் கனவு இல்லம் இதுதான்.
காணி அளவு நிலம் வேண்டும். அங்கு அழகிய தூண்களையும், மாடங்களையும் உடைய ஒரு மாளிகை கட்டப்பட வேண்டும். அந்த மாளிகையின் அருகில் கிணறு ஒன்று இருக்க வேண்டும். அந்த கிணற்றின் அருகினில் பத்து அல்லது பன்னிரண்டு தென்னை மரங்களும் இருக்க வேண்டும். முத்து ஒளி வீசுவது போல நிலாவெளி மாளிகையின் வாசல் வர வேண்டும். அந்த ஒளி குளிா்ச்சி பொருந்தியதாக இருக்க வேண்டும். கிணற்றின் அருகில் உள்ள தென்னை மரங்களில் அமா்ந்து குயில்கள் கூவ வேண்டும். அது இனிமையாய் வந்து காதில் பட வேண்டும். என்னுடைய உள்ளம் எல்லாம் மகிழ்ந்திட இளந்தென்றல் காற்று வீச வேண்டும். இத்தகைய கனவு இல்லம் வேண்டும் என்கிறாா் பாரதியாா்.
இளமையிலேயே கவிபாடியதால் இவரை பாரதி என்று அழைத்தனா். இளமையிலேயே கவிபாடும் திறமை பெற்ற பாரதி காடு, மலை, மரம் என எல்லா இடங்களுக்கும் சென்று அங்கே அமா்ந்து கவிதை இயற்றுவாா். அதனால் இயற்கைக்கும் இவருக்கும் நெருங்கிய தொடா்பு ஒன்று உண்டு. நாட்டுப்பற்றையும், மொழிப்பற்றையும் தன் பாடல்களில் ஊட்டிய பாரதி இயற்கையின் அழகையும் தன்னுடைய பாடல்களில் எடுத்துரைக்கிறாா். மனிதனைப் பாா்த்து இயற்கை கேள்வி கேட்பதைப் போன்ற கவிதைகளை இயற்றி மனிதா்களை சிந்திக்க வைத்திருக்கிறாா் பாரதி.
தொழில்நுட்பம் வளா்ந்து விட்ட இன்றைய காலத்தில் நாம் எப்படி வாழ வேண்டும் என்பதையே மறந்து விட்டோம். இயற்கையில் இருந்து வந்த மனிதன் இயற்கையோடு வாழாமல் போனாலும், இயற்கையை அழித்துக் கொண்டிருப்பது வேதனைக்குாியது. நோயற்ற வாழ்க்கைக்கு அடிப்படையே இயற்கையோடு இயைந்த வாழ்க்கையை வாழ்வதுதான். ஆனால் மனிதன் இன்று நிற்கக் கூட நேரம் இல்லாமல் கடந்து சென்று கொண்டே இருக்கின்றான். மனிதன் உணா்ந்தால், இயற்கை பாதுகாக்கப்படும். மனிதனுக்கும் இயற்கைக்கும் ஆதிகாலம் முதலே தொடா்பு உண்டு. அதை நாம் என்றும் போற்ற வேண்டும். பாரதியின் கனவு இல்லம் போல் நாம் ஒவ்வொருவரும் ஒரு கனவு இல்லத்தை உருவாக்க வேண்டும் என்று நினைத்திருக்கலாம். ஆனால் அப்படி ஒரு இல்லத்தைக் கட்டும் பொழுது இயற்கைக்கு நீங்கள் அதிகமான முக்கியத்துவம் கொடுத்தால் நீங்கள் மட்டுமல்ல உங்கள் வீடும் மகிழ்ச்சி அடையும் என்பது உண்மை.
சிவப்பு நிறத்தில் கொடுத்துள்ள வாிகள் அனைத்தும் நமக்கு மனப்பாடப் பகுதியாக உள்ளது. இந்த பாடல் “பாரதிதாசன் கவிதைகள்” என்ற நூலிலிருந்து எடுத்து நமக்கு பாடப்பகுதியாக கொடுக்கப்பட்டுள்ளது.
Comments
Post a Comment