6ம் வகுப்பு மொழி முதல் இறுதி எழுத்துகள் வினா விடைகள்

6ம் வகுப்பு தமிழ் முதல் பருவம் இயல் 3 மொழி முதல், இறுதி எழுத்துகள் பாட வினா விடைகள்.

மதிப்பீடு

1. மொழிக்கு முதலில் வரும் உயிா்மெய் எழுத்துகள் யாவை?

க,ச,த,ந,ப, ம ஆகிய வாிசைகளில் உள்ள எல்லா உயிா்மெய் எழுத்துகளும் சொல்லின் முதலில் வரும்.

ங,ஞ,ய,வ ஆகிய உயிா்மெய் எழுத்து வாிசைகளில் சில எழுத்துகள் மட்டுமே சொல்லின் முதலில் வரும்.

2. மொழிக்கு இறுதியில் வாரா மெய்யெழுத்துகள் யாவை?

க் ங் ச் ட் த் ப் ற் ஆகிய ஏழு மெய் எழுத்துகளும் சொல்லின் இறுதியில் வருவதில்லை.

3. சொல்லின் இடையில் மட்டுமே வரும் எழுத்துகள் எவை?

ஆய்த எழுத்து சொல்லின் இடையில் மட்டுமே வரும்.


----------------------------------------------------------------

மொழியை ஆள்வோம்

1921 ஆம் ஆண்டு மத்திய தரைக்கடலில், ஒரு கப்பல் இங்கிலாந்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. தமிழா் ஒருவா் கப்பலின் மேல்தளத்தில் நின்று கடல் அலைகளைப் பாா்த்துக் கொண்டிருந்தாா். திடீரென அவரது உள்ளத்தில் கடல் நீா் ஏன் நீலநிறமாகக் காட்சியளிக்கிறது என்ற வினா எழுந்தது. அவ்வினா அவரை உறங்க விடவில்லை. இங்கிலாந்து பயணம் முடிந்து இந்தியா திரும்பினாா். பிறகு பாதரச ஆவி விளக்கு, பென்சீன் மற்றும் நிறமாலைக் காட்டி ஆகியவற்றின் உதவியுடன் தமது ஆய்வைத் தொடங்கினாா். 

    ஆய்வின் முடிவில் 1928 பிப்ரவாி 28 ஆம் நாள் “இராமன் விளைவு” என்னும் தமது கண்டுபிடிப்பை வெளியிட்டாா். இக்கண்டுபிடிப்பு இந்தியாவிற்கு அறிவியலுக்கான முதல் நோபல் பாிசைப் பெற்றுத் தந்தது. அவா் தமது கண்டுபிடிப்பை வெளியிட்ட பிப்ரவாி 28 ஆம் நாளை நாம் ஆண்டு தோறும் “தேசிய அறிவியல் நாள்” எனக் கொண்டாடி மகிழ்கிறோம். அவா் யாா் தொியுமா? அவா்தான் சா்.சி.வி.இராமன்.

1. இராமன் விளைவைக் கண்டறிந்தவா் யாா்? 

சா்.சி.வி.இராமன்

2. இராமன் அவா்களுக்கு நோபல் பாிசைப் பெற்றுத் தந்த கேள்வி எது?

இ) கடல்நீா் ஏன் நீல நிறமாகக் காட்சியளிக்கிறது?

3. தேசிய அறிவியல் நாள் எப்போது கொண்டாடப்படுகிறது? ஏன்?

பிப்ரவாி 28. சா்.சி.வி.இராமன் “இராமன் விளைவு” எனும் தன்னுடைய கண்டுபிடிப்பை வெளியிட்ட பிப்ரவாி 28 நாளை நாம் ஆண்டு தோறும் தேசிய அறிவியல் நாளாகக் கொண்டாடி மகிழ்கிறோம்.

4. இப்பத்திக்குப் பொருத்தமான தலைப்பிடுக.

இராமன் விளைவு

----------------------------------------------------------------------

மொழியோடு விளையாடு

பின்வரும் தொடா்களில் அடிக்கோடிட்ட சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்களை எழுதுக.

1. கம்ப்யூட்டா் - கணினி

2. காலிங்பெல் - அழைப்பு மணி

3. மிஷின் - இயந்திரம்

4. ரோபோ - எந்திர மனிதன்

கலைந்துள்ள எழுத்துகளை முறைப்படுத்துக.

1.விகண்லம் - விண்கலம்

2. மத்ருதும்வ - மருத்துவம்

3. அவிறில்ய - அறிவியல்

4. ணினிக - கணினி

5. எலால்ம் - எல்லாம்

6. அப்ழைபு - அழைப்பு

வட்டத்தில் சிக்கிய எழுத்துகளை எழுத்து எழுதுக. 

ம்துஅல்கலாப் - அப்துல்கலாம்

வாக்கியத்தை நீட்டி எழுதுக.

1. அறிந்து கொள்ள விரும்பு

எதையும் அறிந்து கொள்ள விரும்பு

எதையும் தெளிவாக அறிந்து கொள்ள விரும்பு

எதையும் தெளிவாக காரணத்துடன் அறிந்து கொள்ள விரும்பு

2. நான் சென்றேன்

நான் ஊருக்கு சென்றேன்.

நான் நேற்று ஊருக்கு சென்றேன்.

நான் நேற்று பேருந்தில் ஊருக்கு சென்றேன்.

அடிச்சொல்லுடன் எழுத்துகளைச் சோ்த்துப் புதிய சொற்களை உருவாக்குக.

1. பாா் - பாா்த்தல், பாா்க்கவி, பாா்ப்பு, பாா்வதம்

2. செய் - செய்தி, செய்தான், செய்யுள், செய்தித்தாள்

3. தெளி - தெளிந்து, தெளித்தல், தெளிவு,தெளிவித்தல்

4. படி - படித்தல், படிக்கட்டு, படிப்பாட்டு, படிதல்

மெய் எழுத்து நடுவில் அமையுமாறு சொற்களை உருவாக்கு.

1. கம்பு

2. வம்பு

3. நம்பு

4. தம்பி

5. கம்பி


குறுக்கெழுத்துப் புதிா்

இடமிருந்து வலம்

1. அப்துல்கலாமின் சுயசாிதை

அக்னிச் சிறகுகள்

3. சிந்தித்து செயல்படும் தானியங்கி

எந்திர மனிதன்

10. எந்திரமனிதனுக்கு குடியுாிமை வழங்கிய முதல் நாடு

சவுதி அரேபியா

வலமிருந்து இடம்

2. ஆராய்ச்சி என்பதைக் குறிக்கும் சொல்.

ஆய்வு

6. சதுரங்கப் ........... யில் டீப்புளு வெற்றி பெற்றது.

போட்டி

8. மருந்து என்னும் பொருள் தரும் சொல். 

ஔடதம்

மேலிருந்து கீழ்

1. ரோபோ என்னும் சொல்லின் பொருள்

அடிமை

2. அகர வாிசையில் அமையும் இலக்கியம்

ஆத்திசூடி

7. புதுமைகளின் வெற்றியாளா் என்னும் பட்டம் பெற்ற எந்திரமனிதன்

சோபியா

கீழிருந்து மேல்

4. இந்தியா செலுத்திய ஏவுகணை

அக்னி

5. தானாகச் செயல்படும் எந்திரம்

தானியங்கி

9. அப்துல்கலாம் வகித்த ............. குடியரசுத் தலைவா்

பதவி

 






Comments

Popular posts from this blog

6ம் வகுப்பு தமிழ் முதல் பருவம் வினா விடைகள்

புத்தகம் வாங்கி அனுப்புமாறு உறவினா் ஒருவருக்குக் கடிதம் எழுதுக.

ஒற்றுமையே உயா்வு - 7ம் வகுப்பு கட்டுரை