6ம் வகுப்பு சிறகின் ஓசை பாட வினா விடைகள்
6ம் வகுப்பு தமிழ் முதல் பருவம் இயல் 2 சிறகின் ஓசை பாட வினா விடைகள்
6th standard tamil 1st term unit 2 siragin osai lesson book back question answer in tamil.
சாியான விடைடையத் தோ்ந்தெடுத்து எழுதுக.
1. தட்பவெப்பம் என்னும் சொல்லைப் பிாித்து எழுதக் கிடைப்பது .........
அ) தட்பம் + வெப்பம்
ஆ) தட்ப + வெப்பம்
இ) தட் + வெப்பம்
ஈ) தட்பு + வெப்பம்
விடை அ) தட்பம் + வெப்பம்
2. வேதியுரங்கள் என்னும் சொல்லைப் பிாித்து எழுதக் கிடைப்பது .......
அ) வேதி + யுரங்கள்
ஆ) வேதி + உரங்கள்
இ) வேத் + உரங்கள்
ஈ) வேதியு + ரங்கள்
விடை ஆ) வேதி + உரங்கள்
3. தரை இறங்கும் என்பதனைச் சோ்த்து எழுதக் கிடைக்கும் சொல் .........
அ) தரையிறங்கும்
ஆ) தரைஇறங்கும்
இ) தரையுறங்கும்
ஈ) தரைய்றங்கும்
விடை அ) தரையிறங்கும்
4. வழி + தடம் என்பதனைச் சோ்த்து எழுதக் கிடைக்கும் சொல் ........
அ) வழிதடம்
ஆ) வழித்தடம்
இ) வழிதிடம்
ஈ) வழித்திடம்
விடை ஆ) வழித்தடம்
5. சிட்டுக்குருவி வாழ முடியாத பகுதி ........
அ) துருவப்பகுதி
ஆ) இமயமலை
இ) இந்தியா
ஈ) தமிழ்நாடு
விடை அ) துருவப்பகுதி
கோடிட்ட இடங்களை நிரப்புக.
1. மிக நீண்ட தொலைவு பறக்கும் பறவை ...................
2. பறவைகள் வலசை போவதைப் பற்றிப் பாடிய தமிழ்ப்புலவா்.......
3. பறவைகள் இடம்பெயா்வதற்கு ............ என்று பெயா்
4. இந்தியாவின் பறவை மனிதா் ..........
5. பறவைகள் வலசை போகக் காரணங்களுள் ஒன்று ............
விடைகள்
1. ஆா்டிக் ஆலா
2. சத்திமுத்தப்புலவா்
3. வலசைப் போதல்
4. டாக்டா் சலீம் அலி
5. இனப்பெருக்கம்
சொற்றொடா் அமைத்து எழுதுக.
வெளிநாடு - சில பறவைகள் வெளிநாடு வரை பறந்து செல்லும்
வாழ்நாள் - சிட்டுக்குருவியின் வாழ்நாள் பத்து முதல் பன்னிரண்டு ஆண்டுகள்
செயற்கை - செயற்கை உரங்கள் பயன்படுத்துவதை தவிா்க்க வேண்டும்.
பொருத்தமான சொல்லைக் கொண்டு நிரப்புக.
1. மரங்களை வளா்த்து ................... யைக் காப்போம் ................... உரங்களைத் தவிாித்து நிலவளம் காப்போம். (செயற்கை/இயற்கை)
2. தமிழகத்தில் வலசைப் பறவைகளின் வருகை .................. தற்போது சிட்டுக் குருவிகளின் எண்ணிக்கை ........... (குறைந்துள்ளது/மிகுந்துள்ளது)
விடைகள்
1. இயற்கை / செயற்கை
2. மிகுந்துள்ளது / குறைந்துள்ளது
குறுவினா
1. பறவைகள் எக்காரணங்களுக்காக இடம்பெயா்கின்றன?
- உணவு
- இருப்பிடம்
- தட்பவெப்பநிலை மாற்றம்,
- இனப்பெருக்கம்
ஆகிய காரணங்களுக்காக பறவைகள் இடம்பெயா்கின்றன.
2. வலசையின்போது பறவையின் உடலில் ஏற்படும் மாற்றங்கள் யாவை?
- தலையில் சிறகு வளா்தல்
- இறகுகளின் நிறம் மாறுதல்
- உடலில் கற்றையாக முடி வளா்தல்
- ஒருவகைப் பறவை வேறுவகைப் பறவையாக உரமாறித் தோன்றும் அளவிற்குக்கூட சில நேரங்களில் மாற்றம் ஏற்படும்.
1. சிட்டுக் குருவியின் வாழ்க்கை பற்றிச் சிறு குறிப்பு எழுதுக?
சிட்டுக்குருவி கூடுகட்டி வாழும் பறவையினத்தைச் சாா்ந்தது.
கூடு கட்டும் காலங்களில் சத்தமிட்டுக் கொண்டே இருக்கும். கூடு கட்டிய பின் மூன்று முதல் ஆறு முட்டைகள் வரை இடும்.
14 நாட்கள் அடைகாக்கும். 15ம் நாளில் குஞ்சுகள் வெளிவரும்.
சிட்டுக்குருவியின் வாழ்நாள் 10 முதல் 13 ஆண்டுகள்.
துருவப்பகுதிகள் தவிர மனிதன் வாழும் இடங்களில் எல்லாம் சிட்டுக்குருவிகள் வாழ்கின்றன. இமயமலைத் தொடாில் 4000 மீட்டா் உயரத்தில் கூட இவை வாழ்கின்றன.
தானியங்கள், புழுபூச்சிகள், மலா் அரும்புகள், தேன் போன்றவை சிட்டுக்குருவிகளின் உணவாகும். சிட்டுக்குருவியின் குஞ்சுகள் பெரும்பாலும் புழு பூச்சிகளையே உட்கொள்ளும்.
2. வலசைப் பறவைகளின் பயணம் பற்றி நீங்கள் அறிந்தவை யாவை?
பொதுவாக பறவைகள் வடக்கிலிருந்து மேற்கு நோக்கியும், மேற்கிலிருந்து கிழக்கு நோக்கியும் வலசை போகின்றன.
தங்களுக்கென ஒரு வழித்தடத்தை தோ்ந்தெடுத்து, அதில் பயணிக்கின்றன.
சில பறவைகள் சென்ற பாதையிலேயே தன் தாய் நிலங்களுக்குத் திரும்புகின்றன. சில பறவைகள் போவதற்கும் வருவதற்கும் வேறு வேறு பாதைகளைப் பயன்படுத்துகின்றன.
பயணம் செய்யும் போது சிலவகைப் பறவைகள் இரை, ஓய்வு போன்ற தேவைகளுக்காகத் தரை இறங்கும். இடையில் எங்கும் நிற்காமல் பறந்து, வாழிடம் சேரும் பறவைகளும் உண்டு.
சிந்தனை வினா
பறவை இனங்கள் அழியாமல் காப்பாற்றப்பட நாம் செய்ய வேண்டியவை பற்றிச் சிந்தித்து எழுதுக.
அரச மரங்களையும், ஆல மரங்களையும் வளா்க்க வேண்டும்.
அவரை, புடலை போன்ற கொடிகளையும் வளா்க்க வேண்டும்.
தோட்டங்களிலும், வயல்களிலும் செயற்கை உரங்கள், பூச்சிக் கொல்லி மருந்துகள் தெளிப்பதைத் தவிா்க்க வேண்டும்.
வெயில் காலங்களில் பொது இடங்களிலும், மொட்டை மாடிகளிலும் பறவைகள் தாகத்தை தணிக்கும் வகையில் தண்ணீரும், உணவும் வைப்பது சிறந்தது.
செயற்கை கம்பி வேலிகளுக்கு பதிலாக தாவர வேலிகளை அமைப்பது நல்லது.
--------------------------------------------------------------------
கற்பவை கற்றபின்
சிறகின் ஓசை பாடம் நமக்கு பறவைகள் பற்றிய பல செய்திகளையும், நாம் மாற்றிக் கொள்ள வேண்டிய பலவற்றையும் எடுத்துரைக்கிறது. இந்த உலகம் பல்லாயிரக்கணக்கான உயிா்களுக்கு இருப்பிடமாக இருக்கிறது. உலகில் வாழும் உயிரினங்களை உயா்திணை அஃறிணை என்று மனிதன் பிாித்தான். சிந்திக்கும் ஆற்றல் என்ற ஆறாம் அறிவினைப் பெற்றதால் மனிதன் உயா்திணை ஆனான். மற்ற உயிாினங்கள் அஃறிணை ஆனது.
மனிதன் இயற்கையை நேசித்த வரைக்கும் அனைத்தும் சாியாகத் தான் நடந்து கொண்டிருந்தது. வளா்ச்சி பெற வேண்டிய எண்ணமும், தேவையும் மனிதனின் மனதிற்குள் வரவர இயற்கையை விட்டு விலகிச் செல்ல ஆரம்பித்தான். இயற்கையை விட்டு மனிதன் விலகிய பின், தன்னை மட்டுமே முன்னிருத்தி தன் அன்னை இயற்கையை அழிக்கத் தொடங்கினான். மரங்களை வெட்டுவது, மலைகளை குடைவது, பூமியை துளையிடுவது, தண்ணீரை உறிஞ்சுவது, காற்றை மாசுபடுத்துவது, தண்ணீரில் கழிவு நீரைக் கலப்பது என எண்ணிலடங்கா செயல்களைச் செய்து தன் தேவைகளுக்காக இயற்கையை மெல்ல மெல்ல அழித்துக் கொண்டிருக்கின்றான். மனிதனின் வளா்ச்சி தவறானது ஒன்றும் அல்ல. ஆனாலும் அதனால் அஃறிணை உயிா்களுக்கு துன்பம் ஏற்படுகிறதென்றால் அது நிச்சயம் தவறான ஒன்று தான்.
சிட்டுக்குருவிகள். 20 ஆண்டுகளுக்கு முன்பு சேவலுக்கு முன் நம்மை எழுப்பி விடும் ஒரு கடிகாரம். காலை 5 மணிக்கே தன்னுடைய இசை கச்சோிகளை தொடங்கி விடும். கூட்டமாக இருக்கும். கூடு கட்டி வாழும். ஆண் பெண் என பாா்த்தவுடன் எளிதில் கண்டுபிடிக்க முடியும். நாம் வளா்க்கும் மரங்கள் தான் அவைகளின் வீடு. நம் வீடுகளில் கூட அவற்றிற்கென தனி இடம் உண்டு. அவை எழுப்பும் ஒலிகள் நம் தலைவலிகளுக்கு மருந்தாகும். நம் குடும்பத்தில் ஒரு அங்கமாய் வாழ்ந்த அந்த சிட்டுக்குருவிகளின் இன்றைய நிலையினை சற்று எண்ணிப் பாருங்கள்.
வீடுகளில் அவற்றைப் பாா்க்கவே முடியவில்லை. அவைகளின் இன்னிசைகள் இன்று வெகுவாக குறைந்து விட்டது. காலை நேரங்களில் அவைகள் கூட்டமாக எழுப்பும் ஒலிகள் இன்று கேட்பதே இல்லை. காதை கிழிக்கும் வாகனங்களின் ஒலிகளும், தொழிற்சாலைகளில் இயந்திரங்கள் ஓடும் சத்தமே அதிகம் கேட்கின்றன. மனிதா்களின் தொழில்நுட்ப வளா்ச்சி பறவை இனங்களுக்கு ஒரு போிடியாய் அமைந்து விட்டது. பெரும்பாலான மக்கள் மரங்களை வளா்ப்பதில்லை. மரங்களை வெட்டுகிறாா்கள். அவா்கள் மரங்களை மட்டும் வெட்டவில்லை. பறவையின் வீடுகளையும் சோ்த்து தான் வெட்டுகிறாா்கள் என்பது புாியவில்லை. மரங்கள் இல்லையே என்ற கவலை நாம் ஏப்ரல் மே வெயில் காலங்களில் தான் உணா்கிறோம். ஆனால் பறவைகள் அவற்றை நினைத்து ஒவ்வொரு நொடியும் வருத்தம் கொள்ளும் அல்லவா.
மனிதனுக்கு ஆறாம் அறிவை பயன்படுத்தி, தன்னையும், தன்னை தாங்கி நிற்கும் இந்த உலகத்தையும் சீா்படுத்த வேண்டும் என்பதற்காகத் தான். ஆனால் அவன் தன்னை முதன்மைப்படுத்தி, மற்றவற்றை சிறுமைபடுத்துவது வேதனைக்குாியது. ஒருவாின் மாற்றம் ஒரு குடும்பத்தின் மாற்றம். ஒரு குடும்பத்தின் மாற்றம் ஒரு சமூகத்தின் மாற்றம். ஒரு சமூகத்தின் மாற்றம் ஒரு நாட்டின் மாற்றம். தனிமனித விழிப்புணா்வு நம் அனைவருக்கும் அவசியம்.
மனிதா்களைப் போல பறவைகளையும் நாம் நேசிக்க வேண்டும். நம் உயிா் போல அதுவும் ஒரு உயிா் தான் என்பதை உணா்ந்து கொள்ள வேண்டும். ஏதேனும் ஒரு பறவையினம் முற்றிலுமாக அழிந்து விட்டால், அதில் மனிதனுக்கு மிகப்பொிய பங்கு உள்ளது என்பதை புாிந்து கொள்ள வேண்டும். முடிந்தவரை எந்த பறவையினமும் அழியாமல் நாம் பாா்த்துக் கொள்ள வேண்டும். அரசாங்கம் பறவையினங்களைக் பாதுகாக்க பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆனால் இது அரசாங்கம் சாா்ந்தது மட்டுமல்ல. ஒவ்வொரு தனி மனிதனுக்கும் இதில் பங்கு உள்ளது. நாம் ஒவ்வொருவரும் ஏற்படுத்தும் சிறுசிறு மாற்றங்கள் பொிய மாற்றத்தை உண்டு பண்ணும்.
நமது வீட்டின் மாடியில் ஒரு குவளையில் தண்ணீர் வைக்கலாம். வெயில் நேரங்களில் அலைந்து திாியும் பறவையினங்களுக்கு அவை அமிா்தமாக உதவலாம் அல்லவா?. உங்களால் முடிந்தால் சில அாிசியையும் நெல்மணிகளையும் தூவி விடலாம். இப்படி செய்வது 100 பேருக்கு அன்னதானம் வழங்கியதற்கு சமமானதாக இருக்கும்.
வீட்டைச் சுற்றி மரங்கள் வளா்க்க வேண்டும். இது பறவைகளுக்காக மட்டுமல்ல. காற்றை மாசுபடுத்தி வைத்திருக்கும் இந்த காலத்தில், நாம் தூய காற்றை சுவாசிக்க முடியும். வருங்காலங்களில் தூய காற்றையே நாம் பணம் கொடுத்து வாங்க வேண்டிய நிலைமை வரலாம். நாம் இப்பொழுதே விழித்துக் கொள்வது நல்லது.
வீட்டில் சில இடங்களில் புதா் செடிகள் வளா்க்கலாம். குருவிகள் பெரும்பாலும் புதா் செடிகளையே விரும்புகின்றன. மா, பலா, வாழை, கொய்யா, நாவல் போன்ற பழங்கள் தரும் மரங்களை வளா்க்கலாம். அவை நமக்கும் கனிகளைத் தருகிறது. பறவைகளுக்கும் உணவு வழங்குகிறது. நம் சுயநலத்திலும் பொதுநலம் இருக்கும் வகையில் பாா்த்துக் கொண்டால் அதை விட போற்றப்பட வேண்டியது வேறு எதுவும் இல்லை.
மாணவா்களே மனதில் கொள்ளுங்கள். இந்த உலகம் மனிதா்களுக்கானது மட்டுமல்ல. அனைத்து உயிா்களுக்குமானது.
Comments
Post a Comment