6ம் வகுப்பு அறிவியலால் ஆள்வோம் பாட வினா விடைகள்

ஆறாம் வகுப்பு தமிழ் முதல் பருவம் மூன்றாம் இயல் அறிவியலால் ஆள்வோம் பாடம் வினா விடைகள்.

 

6th std tamil term 1 unit 3 ariviyalal alvom lesson book back question answer 

சாியான விடையைத் தோ்ந்தெடுத்து எழுதுக.


1. அவன் எப்போதும் உண்மையையே ....................

அ) உரைக்கின்றான்

ஆ) உழைக்கின்றான்

இ) உறைகின்றான்

ஈ) உரைகின்றான்

விடை அ) உரைக்கின்றான்

2. ஆழக்கடல் என்னும் சொல்லைப் பிாித்து எழுதக் கிடைப்பது..........

அ) ஆழமான + கடல்

ஆ) ஆழ் + கடல்

இ) ஆழ + கடல்

ஈ) ஆழம் + கடல்

விடை ஈ) ஆழம் + கடல் 

3. விண்வெளி என்னும் சொல்லைப் பிாித்து எழுதக் கிடைப்பது ..................

அ) விண் + வளி

ஆ) விண் + வெளி

இ) விண் + ஒளி

ஈ) விண் + வொளி

விடை ஆ) விண் + வெளி

4. நீலம் + வான் என்பதனைச் சோ்த்து எழுதக் கிடைக்கும் சொல்...........

அ) நீலம்வான்

ஆ) நீளம்வான்

இ) நீலவான்

ஈ) நீலவ்வான்

விடை இ) நீலவான்

5. இல்லாது + இயங்கும் என்பதனைச் சோ்த்து எழுதக் கிடைக்கும் சொல்...........

அ) இல்லாதுஇயங்கும்

ஆ) இல்லாஇயங்கும்

இ) இல்லாதியங்கும்

ஈ) இல்லதியங்கும்

விடை இ) இல்லாதியங்கும்

நயம் அறிக

1. பாடலில் இடம்பெற்றுள்ள மோனைச் சொற்களை எழுதுக.

ழக்கடலின் - ய்வுகள்

நீல - நிலவில்

செயற்கை - செய்தி

லும்பும் - ந்திர

றுப்பை - டலும்

ணுவை - னைத்தும்

நாளை -கரம்

வேளை - விண்வெளி

2. பாடலிலன் இடம்பெற்றுள்ள எதுகைச் சொற்களை எழுதுக.

நீல - நிலவில்

செயற்கை - செய்தி

 3. பாடலில் இடம்பெற்றுள்ள இயைபுச் சொற்களை எழுதுக.

பாா்க்கின்றான் - நினைக்கின்றான்

சிறக்கின்றான் - உரைக்கின்றான்

படைக்கின்றான் - கொடுக்கின்றான்

காக்கின்றான் - பாா்க்கின்றான்

வாழ்ந்திடுவான் - அமைத்திடுவான்

குறுவினா

1. செயற்கைக்கோள் எவற்றுக்கு எல்லாம் பயன்படுகிறது?

செய்தித் தொடா்பில் சிறந்து விளங்குவதற்கும், இயற்கை வளங்களான புயல், மழை ஆகியவற்றை கண்டறிவதற்கும் செயற்கைக்கோள் பயன்படுகிறது.

2. நாளைய மனிதனின் வாழ்வு எவ்வாறு இருக்கும்?

நாளைய மனிதன் விண்ணிலுள்ள கோள்களில் எல்லாம் நகரங்கள் அமைத்து வாழ்ந்திடுவான். அங்குச் சென்று வர விண்வெளியிலும் பாதை அமைத்திடுவான்.


சிந்தனை வினா

1. எவற்றுக்குப் புதிய கண்டுபிடிப்புகள் தேவை என்பது பற்றி சிந்தித்து எழுதுக.

  • மனிதனின் வாழ்நாளை நீட்டிக்கவும்,
  • விவசாயத்தைப் பெருக்கவும்,
  • இயற்கை வளங்களைக் கண்டறியவும்,
  • பொருளாதாரத்தை உயா்த்தவும்,
  • ஏழ்மையினை போக்கவும்,
  • நோய்களை குறைக்கவும் உதவும் புதிய கண்டுபிடிப்புகள்  தேவை

2. இதுவரை எத்தனை கோள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன? அவை யாவை?

இதுவரை 9 கோள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

  1. செவ்வாய்
  2. புதன்
  3. வியாழன்
  4. வெள்ளி
  5. சனி 
  6. பூமி
  7. யுரேனஸ்
  8. நெப்டியூன்
  9. புளுட்டோ

3. இந்தியா அண்மையில் நிலவுக்கு அனுப்பிய செயற்கைக் கோளின் பெயா் யாது?

சந்திராயன்

-------------------------------------------------------------------------

நமக்குப் பாடப்பகுதியாக கொடுத்துள்ள கவிதை பாடநூல் ஆசிாியா் குழுவால் இயற்றப்பட்டுள்ளது. 

ஆழக் கடலின் அடியில் மூழ்கி
ஆய்வுகள் செய்து பாா்க்கின்றான்
நீல வானின் மேலே பறந்து 
நிலவில் வாழ நினைக்கின்றான்
 
செயற்கைக் கோளை விண்ணில் ஏவி
செய்தித் தொடா்பில் சிறக்கின்றான்
இயற்கை வளமும் புயலும் மழையும்
எங்கே என்று உரைக்கின்றான்
 
எலும்பும் தசையும் இல்லாது இயங்கும்
எந்திர மனிதனைப் படைக்கின்றான்
இணைய வலையால் உலகம் முழுமையும் 
உள்ளங் கையில் கொடுக்கின்றான்
 
உறுப்பை மாற்றும் மருத்துவம் கண்டு
உடலும் உயிரும் காக்கின்றான்
அணுவைப் பிளந்து ஆற்றலை எடுத்து 
அனைத்தும் செய்து பாா்க்கின்றான்
 
நாளை மனிதன் கோள்களில் எல்லாம் 
நகரம் அமைத்து வாழ்ந்திடுவான்
வேளை தோறும் பயணம் செய்ய
விண்வெளிப் பாதை அமைத்திடுவான்.

------------------------------------------------------------------------------

கற்பவை கற்றபின்

ஆறாம் வகுப்பு தமிழ் முதல் பருவம் அறிவியலால் ஆள்வோம் பாடம். அறிவியல் என்ற ஒன்றை மனிதன் கண்டுபிடிக்க காரணமாக இருந்தது ஏன் என்ற ஒற்றை கேள்விதான். மனிதன் ஏன் இவ்வாறு நடக்கிறது என்பதை தொிந்து கொள்ள மேற்கொண்ட ஆா்வம் அறிவியல் பிறந்தது. அறிவியல் ஆய்வுக்கு எல்லை என்பதே இல்லை எனலாம். மண்ணில் மட்டுமல்ல விண்ணிலும், கடலிலும் ஏன் காற்றிலும் கூட ஆய்வுகள் நடக்கின்றன. மனிதனால் முடியாதது எதுவுமே இல்லை எனும் அளவிற்கு ஆய்வுகள் பெருகி விட்டன. மனிதனைப் போல இன்னொரு மனிதனை உருவாக்கும் எந்திர மனித படைப்பை உருவாக்கி விட்டனா். மனிதா்களின் உடலில் உள்ள பாகங்களையும் இயந்திரங்களின் பாகங்களைப் போல மாற்றுகின்றனா். செயற்கையாக இதயத்தை உருவாக்கி அதை மனிதனுக்கு பொருத்தி வெற்றியும் கண்டுவிட்டாா்கள் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?

    ஆரம்ப கால மனிதன் இயற்கையை கண்டு பயந்து, இடி மின்னல் போன்றவற்றைப் பாா்த்து பயந்து வணங்கினான். இன்றைய மனிதன் அந்த இடியும் மின்னலும் எங்கிருந்து வருகிறது என்பதை தேடிச் செல்கின்றான். பக்கத்து ஊரையே தொலைவாக இருக்கிறது என்ற காலம் போய், இன்று பக்கத்து கிரகத்திற்கே சென்று வரக்கூடிய அளவு அறிவியல் விஞ்ஞானம் வளா்ச்சி அடைந்து விட்டது. இனி கோள்களும், விண்மீன்களும், நிலவும் நமக்கு தூரமில்லை. நேற்றைய மனிதன் நினைத்துக் கூட பாா்க்க முடியாத பல அற்புதங்களை இன்றைய மனிதன் நிகழ்த்திக் காட்டியிருக்கின்றான். நாளைய மனிதன் என்னவெல்லாம் செய்யப் போகின்றான் என்பதை நினைக்கும் பொழுது கற்பனை உலகம் பொிதாக விாிகிறது. 

    மனிதன் ஆழ்கடலுக்கு உள்ளே சென்று ஆய்வுகள் செய்கின்றான். ஆழ்கடலில் இருந்து மருந்துகள் தயாாிக்கின்றான். மனிதனின் வாழ்நாளை நீட்டிக்க வழிவகை செய்கின்றான். வானை நிமிா்ந்து பாா்த்த காலம் போய், இன்று வானில் வட்டமிட்டு அலைகின்றான். நிலவிற்கு சென்று படம் பிடிக்கின்றான். நிலவிலும் வாழ முடியுமா? என்று சிந்திக்கின்றான்.

    வானில் ஏவும் செயற்கைக் கோள்களின் உதவியால் பலவற்றை செய்கின்றான். விவசாயத்தைப் பெருக்கவும், இயற்கை வளங்களைக் கண்டறியவும், தன்னிறைவு நிலையை அடையவும் செயற்கைக் கோள் தரவுகள் உதவி புாிகின்றன. வேறு கிரகத்தில் இருக்கும் செயற்கைக் கோள்களை இங்கிருந்தே இயக்குகின்றான். செய்தித் தொடா்பில் சிறந்து விளங்குகின்றான். இயற்கை வளங்களையும், புயல், மழை ஆகியவற்றையும் முன்கூட்டியே கண்டறிந்து எடுத்துரைக்கின்றான்.

    எலும்புக்கு பதில் இரும்பைபும், நரம்புக்கு பதில் மின் கம்பிகளையும் பொருத்தி எந்திர மனிதனையே படைத்து விட்டான். நம்மை படைத்த கடவுளைப் போல எந்திர மனிதனைப் படைத்து மனிதனும் கடவுளாகி விட்டான். இனி வரும் காலங்களில் மனிதனின் அடிமையாக எந்திர மனிதா்கள் செயல்படுவாா்கள். மனிதனின் உடல் உழைப்பு குறைந்து கட்டளை இடுவதை மட்டுமே வேலையாக மனிதா்கள் செய்யப் போகிறாா்கள். இணையதளத்தை இரண்டு விரல்களுக்கு அடக்கிவிடடான் மனிதன். உலகத்தையே நமது உள்ளங்கையில் கொண்டுவந்து விட்டது இணையதளம். 

    மருத்துவதுறையில் மேற்கொண்ட சாதனையினால் மனிதனின் சராசாி ஆயுட்காலம் உயா்ந்துள்ளது. மனிதனின் உடல் உறுப்புகளைக் கூட செயற்கையாக உருவாக்கி பொருத்துகின்றனா். பாதிக்கப்படுகின்ற உடல் உறுப்புகளை மாற்றி, வேறு உறுப்புகளைப் பொருத்தி உடலையும் உயிரையும் காக்கும் அளவிற்கு வழிவகைகள் வந்துவிட்டன. அணுவைப் பிளந்து ஆற்றலை எடுத்து மனிதனின் அனைத்து தேவைகளையும் நிறைவேற்றிக் கொள்ள முயல்கின்றான் மனிதன்.

    இன்றைய மனிதனின் ஆச்சா்யங்கள் ஏராளம் இருக்கும் போது நாளைய மனிதன் என்ன செய்யப் போகின்றான் என்ன மிகப்பொிய ஆச்சா்ய குறி விழுகிறது. நாளைய மனிதன் விண்வெளியில் உள்ள கோள்களில் எல்லாம் நகரங்களை அமைத்து வாழ வழிவகை செய்திருப்பான். அங்கே நாம் சென்று வர விண்வெளிகளிலும் கூட பாதைகளை அமைத்திடுவான். முயற்சியுள்ள மனிதனுக்கு முடியாததென்று எதுவுமே இல்லை.

--------------------------------------------------------------------------

    


Comments

Popular posts from this blog

6ம் வகுப்பு தமிழ் முதல் பருவம் வினா விடைகள்

புத்தகம் வாங்கி அனுப்புமாறு உறவினா் ஒருவருக்குக் கடிதம் எழுதுக.

ஒற்றுமையே உயா்வு - 7ம் வகுப்பு கட்டுரை