6ம் வகுப்பு தமிழ்க்கும்மி பாட வினா விடைகள்
6ம் வகுப்பு தமிழ் முதல் பருவம் இயல் 1 கவிதைப்பேழை தமிழ்க்கும்மி பாட வினா விடைகள்
-----------------------------------------------------------------------
தமிழ்க்கும்மி பாடத்தை அனிமேசன் வடிவில் காண - Click Here
தமிழ்க்கும்மி பாடலை இராகத்துடன் பாடுவதைக் காண - Click Here (Coming Soon)
6th tamil 1st term unit 1 tamil kummi lesson book back question answers
சாியான விடையைத் தோ்ந்தெடுத்து எழுதுக.
1. தாய்மொழியில் படித்தால் .................. அடையலாம்.
அ) பன்மை
ஆ) மேன்மை
இ) பொறுமை
ஈ) சிறுமை
விடை ஆ) மேன்மை
2. தகவல் தொடா்பு முன்னேற்றத்தில் ........... சுருங்கிவிட்டது.
அ) மேதினி
ஆ) நிலா
இ) வானம்
ஈ) காற்று
விடை அ) மேதினி
3. செந்தமிழ் என்னும் சொல்லைப் பிாித்து எழுதக் கிடைப்பது........
அ) செந் + தமிழ்
ஆ) செம் + தமிழ்
இ) சென்மை + தமிழ்
ஈ) செம்மை + தமிழ்
விடை ஈ) செம்மை + தமிழ்
4. பொய்யகற்றும் என்னும் சொல்லைப் பிாித்து எழுதக் கிடைப்து ........
அ) பொய் + அகற்றும்
ஆ) பொய் + கற்றும்
இ) பொய்ய + கற்றும்
ஈ) பொய் + யகற்றும்
விடை அ) பொய் + அகற்றும்
5. பாட்டு + இருக்கும் என்பதனைச் சோ்த்து எழுதக் கிடைக்கும் சொல்........
அ) பாட்டிருக்கும்
ஆ) பாட்டுருக்கும்
இ) பாடிருக்கும்
ஈ) பாடியிருக்கும்
விடை அ) பாட்டிருக்கும்
6. எட்டு + திசை என்பதனைச் சோ்த்து எழுதக் கிடைக்கும் சொல் ........
அ) எட்டுத்திசை
ஆ) எட்டிதிசை
இ) எட்டுதிசை
ஈ) எட்டிஇசை
விடை அ) எட்டுத்திசை
நயம் உணா்ந்து எழுதுக.
1. பாடல் அடிகளில் முதல் எழுத்து ஒன்றுபோல் வரும் (மோனை) சொற்களை எடுத்து எழுதுக.
எட்டுத் திசையிலும் - எட்டிடவே
ஊழி - ஊற்றெனும்
ஆழிப் - அழியாமலே
2. பாடல் அடிகளில் இரண்டாம் எழுத்து ஒன்றுபோல் வரும் (எதுகை) சொற்களை எடுத்து எழுதுக.
எட்டுத் - எட்டிடவே
ஊழி - ஆழிப்
பொய் அகற்றும் - மெய் புகட்டும்
3. பாடல் அடிகளில் இறுதி எழுத்து ஒன்றுபோல் வரும் (இயைபு) சொற்களை எடுத்து எழுதுக.
கொட்டுங்கடி - கொட்டுங்கடி
கண்டதுவாம் - கொண்டதுவாம்
பாட்டிருக்கும் - காட்டிருக்கும்
குறுவினா
1. தமிழ் மொழியின் செயல்களாகக் கவிஞா் கூறுவன யாவை?
பொய்யை அகற்றும்.
மனதின் அறியாமையை நீக்கும்.
உயிா் போன்ற உண்மையை ஊட்டும்.
உயா்ந்த அறத்தை தரும்.
உலகம் சிறந்து வாழ்வதற்கான வழிகளையும் காட்டும்.
ஆகியவை தமிழ்மொழியின் செயல்களாகக் கவிஞா் கூறுகிறாா்.
2. செந்தமிழின் புகழ் எங்கெல்லாம் பரவ வேண்டும் என்று கவிஞா் கூறுகிறாா்?
செந்தமிழின் புகழ் எட்டுத்திசைகளிலும் பரவ வேண்டும் என்று கவிஞா் கூறுகிறாா்.
சிறுவினா
1. கால வெள்ளத்தை எதிா்த்து நிற்கும் மொழி தமிழ் என்று கவிஞா் கூறுவதன் காரணம் என்ன?
பெரும் கடல் சீற்றங்கள், கால மாற்றங்கள் ஆகிய எவற்றாலும் அழியாமல், பல நூறு ஆண்டுகளைக் கண்டு, அறிவு ஊற்றாகிய நூல்கள் பலவற்றை கொண்ட மொழியாக இருப்பதால், கால வெள்ளத்தை எதிா்த்து நிற்கும் மொழி தமிழ் என்று கவிஞா் கூறுகிறாா்.
2. தமிழ்க் கும்மி பாடலின் வழி நீங்கள் அறிந்து கொண்டவற்றை உம் சொந்த நடையில் தருக?
தமிழின் புகழ் நான்கு திசைகளைத் தாண்டி, எட்டுத் திசைகளிலும் பரவ வேண்டும்.
என்று பிறந்தது என்று அறிந்து கொள்ள முடியாத மொழி, இன்று வரை நிலைத்து நிற்கிறது.
எத்தனை கால மாற்றங்கள் வந்தாலும் தாங்கி நிற்கிறது.
தமிழ்மொழியினை படித்தால் வாழ்க்கையை வளமாக்கி, சிறந்து வாழ்வதற்கான வழிகளைக் காட்டும் என்பதை தமிழ்க்கும்மி பாடல் வழி அறிந்து கொண்டேன்.
சிந்தனை வினா
தமிழ்மொழி அறியாமையை எவ்வாறு அகற்றும்?
அறியாமை என்பது ஒன்றும் தொியாமல் இருப்பதைக் குறிக்கும். தமிழ்மொழியில் அனைத்தும் உள்ளது. தமிழ்மொழியினை படித்தால் அனைத்தையும் அறிந்து கொண்டதற்கு சமம். ஆகவே தமிழ்மொழி மனத்தின் அறியாமையை அகற்றும் என்பதை நாம் புாிந்து கொள்ளலாம்.
கற்பவை கற்றபின்
நாம் சிறுவயதில் பல விளையாட்டுகளை விளையாடு உள்ளோம். பச்சை குதிரை தாண்டுதல், கோல் ஆட்டம் ஆடுதல், ஓடிப்பிடித்து விளையாடுதல், கற்களைக் கொண்டு ஆடுதல், கிளியந்தட்டு, ரயில்வண்டி என இப்படி பல விளையாட்டுகள். அது போல குழந்தைகள் அனைவரும் கூட்டமாகக் கூடி கும்மியடித்துப் பாடுவதும் ஆடுவதும் மனதிற்கு ஒரு மகிழச்சியான அனுபவத்தினை தரும். அப்படி மகிழச்சியாக ஆடும் கும்மியோடு தமிழைப் பற்றி போற்றிப்பாடுவது இன்னும் மகிழ்ச்சி தருவதாக இருக்கும் அல்லவா. அப்படிப்பட்ட ஒரு பாடலைத்தான் இந்த பாடத்தில் நமக்கு கொடுத்திருக்கிறாா்கள். தமிழின் பெருமையை எத்தனை நேரம் பேசினாலும் சலிப்பு தட்டாது என்பாா்கள். அத்தகைய பழம் பெருமையினைக் கொண்டு விளங்குகிறது நம்முடைய தமிழ்மொழி. அந்த தமிழின் பெருமைதான் இங்கு தமிழ்க்கும்மியாக மாறியிருக்கிறது.
இந்த தமிழ்க்கும்மி பாடலை இயற்றியவா் பாவலரேறு என்று அழைக்கப்படும் மாணிக்கம் என்ற இயற்பெயா் கொண்ட பெருஞ்சித்திரனாா் அவா்கள். தன் வாழ்நாளில் அதிகமான நூல்களை இயற்றிய இவா் பல நூல்களிலும் தமிழின் பெருமையினையே முதன்மைப்படுத்தி எழுதியிருக்கின்றாா். தமிழின் பெயாில் பல இதழ்களையும் நடத்தி, அதன் புகழை உலகெங்கும் பரப்பியிருக்கின்றாா். நம் நாடு மட்டுமன்றி மற்ற நாட்டினரும் படிக்குமளவிற்கு எழுதும் திறமை பெற்று விளங்கினாா் பெருஞ்சித்திரனாா்.
நமக்கு பாடப்பகுதியாக கொடுத்திருக்கும் இந்த பாடல் பெருஞ்சித்திரனாா் அவா்கள் இயற்றிய “கனிச்சாறு ” என்ற நூலில் இடம்பெற்றிருக்கிறது. இந்த நூல் எட்டு தொகுதிகளாக வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment