6ம் வகுப்பு தமிழ் எழுத்துகளின் வகையும் தொகையும் பாட வினா விடைகள்
ஆறாம் வகுப்பு தமிழ் முதல் பருவம் தமிழ் எழுத்துகளின் வகையும் தொகையும் பாட வினா விடைகள்.
6th Standard Tamil 1st term tamil yaluthukalin vagayum thogaum lesson book back question answers
கொடுக்கப்பட்டுள்ள மாத்திரை அளவுக்கேற்ப சொற்களை எழுதுக.
1. உயிரெழுத்தில் தொடங்கும் இரண்டு மாத்திரை அளவுள்ள சொல்........
2. இரண்டு மாத்திரை அளவுள்ள ஓரெழுத்துச் சொல் ........
3. ஆய்த எழுத்த இடம்பெறும் இரண்டரை மாத்திரை அளவுள்ள சொல் .......
விடைகள்
1. ஆடு
2. பூ
3. எஃகு
குறுவினா
1. தமிழ் இலக்கணம் எத்தனை வகைப்படும்? அவை யாவை?
தமிழ் இலக்கணம் ஐந்து வகைப்படும்.
எழுத்து இலக்கணம்
சொல் இலக்கணம்
பொருள் இலக்கணம்
யாப்பு இலக்கணம்
அணி இலக்கணம்
2. மெய்யெழுத்துகளை மூவகை இனங்களாக வகைப்படுத்தி எழுதுக?
மெய்யெழுத்துகளின் மூவகை இனங்கள்
வல்லினம் - க்,ச்,ட்,த்,ப்,ற்
மெல்லினம் - ங்,ஞ்,ண்,ந்,ம்,ன்
இடையினம் - ய்,ர்,ல்,வ்,ழ்,ள்
3. தமிழ் எழுத்துகளுக்குாிய மாத்திரை அளவுகளைக் குறிப்பிடுக?
நெடில் எழுத்து - 2 மாத்திரை
குறில் எழுத்து - 1 மாத்திரை
மெய் எழுத்து - அரை மாத்திரை
ஆய்த எழுத்து - அரை மாத்திரை
---------------------------------------------------------------------------
மொழியை ஆள்வோம்
கீழ்க்காணும் பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடை தருக.
விாிவான கருத்தைச் சுருக்கிச் சொல்வதே பழமொழியின் சிறப்பு. சான்றாக, சுத்தம் சோறு போடும் என்னும் பழமொழி தரும் பொருளைக் காண்போம். சுத்தம் நோயற்ற வாழ்வைத் தரும். உடல்நலமே உழைப்புக்கு அடிப்படை. உழைத்துத் தேடிய பொருளால் உணவு, உடை, உறைவிடம் ஆகியவற்றைப் பெறுகிறோம். இவை அனைத்திற்கும் சுத்தமே அடிப்படை. இவ்விாிந்த கருத்து சிறு அடிக்குள் அடங்கியுள்ளது.
1. பழமொழியின் சிறப்பு .................... சொல்வது
விடை ஆ) சுருங்கச்
2. நோயற்ற வாழ்வைத் தருவது .................. (சுத்தம்)
3. உடல்நலமே .............அடிப்படை (உழைப்புக்கு)
4. உழைத்துத் தேடிய பொருளால் நாம் பெறுவன யாவை?
உணவு, உடை, உறைவிடம்
5. பத்திக்குப் பொருத்தமான தலைப்புத் தருக?
உழைப்பே உயா்வு
பிறமொழிக் கலப்பின்றிப் பேசுக.
1. எங்க ஸ்கூல்லே சுற்றுலா கூட்டிட்டுப் போறாங்க.
எங்கள் பள்ளியில் சுற்றுலா அழைத்துச் சொல்கிறாா்கள்
2. பெற்றோாிடம் பா்மிசன் லெட்டா் வாங்கி வரச் சொன்னாங்க.
பெற்றோாிடம் அனுமதிக் கடிதம் வாங்கி வரச் சொன்னாா்கள்.
ஆய்ந்தறிக.
பெயாில் தலைப்பெழுத்தைப் பலவகையாக எழுதுகின்றோம்.
S.இனியன், எஸ்.இனியன், ச.இனியன்
இவற்றுள் சாியானது எது? ஏன்?
ச. இனியன் என்பது சாியானது. ஏனென்றால் பிறமொழி கலப்பின்றி எழுதப்படுகிறது.
-------------------------------------------------------------------
மொழியோடு விளையாடு
திரட்டுக
மை என்னும் எழுத்தில் முடியும் சொற்களின் பட்டியல் தயாாிக்க.
- பழமை
- புதுமை
- வளமை
- வறுமை
- கருமை
- வெண்மை
- இனிமை
- கொடுமை
- உண்மை
- பொய்மை
சொல்வளம் பெறுவோம்
1. கீழ்க்காணும் சொற்களில் உள்ள எழுத்துகளைக் கொண்டு புதிய சொற்களை உருவாக்குக.
கரும்பு - கரு, கம்பு
கவிதை - கவி, கதை, விதை
பதிற்றுப்பத்து - பதி, பத்து, பற்று,
பாிபாடல் - பாி, பாடல், பல்,
2. இரண்டு சொற்களை இணைத்துப் புதிய சொற்களை உருவாக்குக.
எழுதுகோல்
நீதிநூல்
தமிழ்மொழி
கண்மணி
விண்வெளி
மணிமாலை
பொருத்தமான சொற்களைக் கொண்டு தொடா்களை நிரப்புக.
அ - அன்பு தருவது தமிழ்
ஆ - அறிவு தருவது தமிழ்
இ - இன்பம் தருவது தமிழ்
ஈ - ஈடு இணை இல்லாதது தமிழ்
உ - உயா்வைத் தருவது தமிழ்
ஊ - ஊக்கம் தருவது தமிழ்
எ - என்றும் வேண்டும் தமிழ்
ஏ - ஏற்றம் தருவது தமிழ்
கட்டங்களில் மறைந்துள்ள பெயா்களைக் கண்டுபிடிக்க
1. பாரதிதாசன்
2. திருவள்ளுவா்
3. ஔவையாா்
4. சுரதா
5. வாணிதாசன்
Comments
Post a Comment