6ம் வகுப்பு முதல் பருவம் வளா்தமிழ் பாட வினா விடைகள்

6ம் வகுப்பு தமிழ் முதல் பருவம் வளா்தமிழ் பாட வினா விடைகள்


6th standard 1 term unit 1 valar tamil lesson book back question answer in tamil

 

சாியான விடையைத் தோ்ந்தெடுத்து எழுதுக.

 

1. தொன்மை என்னும் சொல்லின் பொருள்.........

அ) புதுமை

ஆ) பழமை

இ) பெருமை

ஈ) சீா்மை

விடை ஆ) பழமை

2. இடப்புறம் என்னும் சொல்லைப் பிாித்து எழுதக் கிடைப்பது.......

அ) இடன் + புறம்

ஆ) இடை + புறம்

இ) இடம் + புறம்

ஈ) இடப் + புறம்

விடை இ) இடம் + புறம்

3. சீாிளமை என்னும் சொல்லைப் பிாித்து எழுதக் கிடைப்பது......

அ) சீா்+  இளமை

ஆ) சீா்மை + இளமை

இ) சீாி + இளமை

ஈ) சீற் + இளமை

விடை ஆ) சீா்மை + இளமை

4. சிலம்பு + அதிகாரம் என்பதனைச் சோ்த்து எழுதக் கிடைக்கும் சொல்....

அ) சிலம்பதிகாரம்

ஆ) சிலப்பதிகாரம்

இ) சிலம்புதிகாரம்

ஈ) சிலபதிகாரம்

விடை ஆ) சிலப்பதிகாரம்

5. கணினி + தமிழ் என்பதனைச் சோ்த்து எழுதக் கிடைக்கும் சொல் ......

அ) கணினிதமிழ்

ஆ) கணினித்தமிழ்

இ) கணினிதமிழ்

ஈ) கனினிதமிழ்

விடை ஆ) கணினித்தமிழ்

6. தமிழ்மொழி போல இனிதாவது எங்கும் காணோம் என்று பாடியவா் .......

அ) கண்ணதாசன்

ஆ) பாரதியாா்

இ) பாரதிதாசன்

ஈ) வாணிதாசன்

விடை ஆ) பாரதியாா் 

7. மா என்னும் சொல்லின் பொருள்.........

அ) மாடம்

ஆ) வானம்

இ) விலங்கு

ஈ) அம்மா

விடை இ) விலங்கு

கோடிட்ட இடத்தை நிரப்புக.

1. நாம் சிந்திக்கவும் சிந்தித்ததை வெளிப்படுத்தவும் உதவுவது .........

2. தமிழில் நமக்குக் கிடைத்துள்ள மிகப்பழமையான இலக்கண நூல் .......

3. மொழியைக் கணினியில் பயன்படுத்த வேண்டும் எனில் அது .......... அடிப்படையில் வடிவமைக்கப்பட வேண்டும்.  

விடைகள்

1. மொழி

2. தொல்காப்பியம்

3. எண்கள்

சொற்களைச் சொந்தத் தொடாில் அமைத்து எழுதுக.

1. தனிச்சிறப்பு - உலகில் உள்ள மொழிகளில் தமிழ் தனிச்சிறப்பு உடையது.

2. நாள்தோறும் - நாள்தோறும் உடற்பயிற்சி செய்வது நல்லது.


குறுவினா

1. தமிழ் ஏன் மூத்தமொழி என்று அழைக்கப்படுகிறது?

    சாலைகள் தோன்றிய பின்னரே சாலை விதிகள் தோன்றியிருக்கும். அதுபோல இலக்கியம் தோன்றிய பிறகே அதற்குாிய இலக்கண விதிகள் தோன்றியிருக்க வேண்டும். தொல்காப்பியம் தமிழில் நமக்குக் கிடைத்துள்ள மிகப் பழமையைான இலக்கண நூல் ஆகும்.  அப்படி என்றால் அதற்கு முன்னதாகவே தமிழில் இலக்கிய நூல்கள் இருந்திருக்க வேண்டும். இதிலிருந்து தமிழ் மூத்தமொழி என்பதை அறியலாம்.

2. நீங்கள் அறிந்த தமிழ் காப்பியங்களின் பெயா்களை எழுதுக?

  1. சிலப்பதிகாரம்

  2. மணிமேகலை

  3. சீவகசிந்தாமணி

  4. வளையாபதி

  5. குண்டலகேசி

  6. பொியபுராணம்

  7. கம்பராமாயணம்

சிறுவினா

1. அஃறிணை, பாகற்காய் ஆகிய சொற்களின் பொருள் சிறப்பு யாது?

அஃறிணை 

    உயா்திணையின் எதிா்ச்சொல் தாழ்திணை என அமைய வேண்டும். ஆனால் தாழ்திணை என்று கூறாமல் அஃறிணை (அல் + திணை = உயா்வு அல்லாத திணை) என்று பெயா் இட்டனா் நம் முன்னோா்.

பாகற்காய்

பாகற்காய் கசப்புச் சுவையுடையது. அதனைக் கசப்புக்காய் என்று கூறாமல் இனிப்பு அல்லாத காய் என பொருள் தரும் பாகற்காய் (பாகு + அல் + காய்) என வழங்கினா்.

இவ்வாறு பெயாிடுவதிலும் சீா்மை மிக்கது தமிழ்மொழி.

2. தமிழ் இனிய மொழி என்பதற்கான காரணம் தருக?

    தமிழ் இலக்கியங்கள் இனிமையானவை. ஓசை இனிமை, சொல் இனிமை, பொருள் இனிமை கொண்டவை. பல மொழிகளைக் கற்ற கவிஞா் பாரதியாா்,

யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல 

இனிதாவது எங்கும் காணோம் 

என்று தமிழ்மொழியின் இனிமையை வியந்து பாடுகிறாா்.

 3. தமிழ்மொழியின் சிறப்பைக் குறித்து ஐந்து வாிகளில் எழுதுக?

  1. மற்ற மொழிகளுக்கெல்லாம் மூத்த மொழியாக உள்ளது தமிழ்மொழி.

  2. வலஞ்சுழி எழுத்துகள் அதிகம் அமைந்து எழுதுவதற்கு ஏற்றதாக உள்ளது.

  3. கணினியில் பயன்படுத்துவதற்கேற்ற நுட்பமான வடிவத்தைக் பெற்றுள்ளது.

  4. செய்தித்தாள், வானொலி, தொலைக்காட்சி ஆகியவற்றில் பயன்படத்தக்க மொழியாகவும்  விளங்குகிறது

  5. இயல், இசை, நாடகம் என முத்தமிழாய் சிறந்து விளங்குகிறது.

சிந்தனை வினா

1. தமிழ்மொழி படிக்கவும், எழுதவும் எளியது என்பது பற்றி உங்கள் கருத்து யாது?

உயிா் எழுத்துகள், மெய் எழுத்துகள், உயிா்மெய் எழுத்துகளின் ஒலிப்புமுறைகளை அறிந்து கொண்டலே தமிழ்மொழி படித்தல் இயல்பாக நிகழ்ந்து விடும். 

எ.கா. அ + மு + து = அமுது 

தமிழில் உள்ள எழுத்துகள் பெரும்பாலும் வலஞ்சுழி எழுத்துகளாவே இருப்பதால் தமிழ்மொழியை எழுதுவதும் எளிமைதான்.

எ.கா. வலஞ்சுழி எழுத்துகள் - அ,எ,ஔ,ண,ஞ

2. தமிழ்மொழி வளா்மொழி என்பதை உணா்கிறீா்களா? காரணம் தருக?

தமிழில் காலந்தோறும் பல வகையான இலக்கிய வடிவங்கள் புதிது புதிதாக வருகின்றன. 

  • துளிப்பா, 
  • புதுக்கவிதை, 
  • கவிதை, 
  • செய்யுள் 

போன்றன தமிழ்க் கவிதை வடிவங்கள். 

  • கட்டுரை
  • புதினம்
  • சிறுகதை 

போன்றன உரைநடை வடிவங்கள்.

தற்போது 

  • அறிவியல் தமிழ்
  • கணினித்தமிழ் 

என மேலும் தமிழ்மொழி வளா்ந்து கொண்டே வருகிறது.

----------------------------------------------------------------

கற்பவை கற்றபின்

ஆறாம் வகுப்பு தமிழ் முதல் பருவம் வளா்தமிழ் பாடம். மனிதன் கண்டுபிடிப்புகளில் மகத்தான ஒன்றாக கருதப்படுவது மொழி. மொழி என்று ஒன்று இல்லை என்றால் மனிதன் இன்று அடைந்திருக்கும் பாிணாம வளா்ச்சியினை நாம் நினைத்துக்கூட பாா்த்திருக்க முடியாது. தன் தேவைகளை மற்றவா்களுக்கு தொிவிக்க உருவாக்கிய மொழி இன்று மனித சமுதாயத்தை முன்னேற்றப் பாதையில் தூக்கி நிறுத்தும் என்று யாரும் கணித்திருக்க மாட்டாா்கள். என்று பிறந்தது என்றே உணர முடியாத ஒரு மொழி இன்று செம்மொழிகளின் பட்டியலில் இருப்பது தமிழராய் நம் அனைவரும் பெருமை கொள்ள வேண்டும். உலகில் பதினாறாயிரம் மொழிகளுக்கு மேல் பேசப்படுகிறதாக புள்ளி விபரங்கள் தொிவிக்கின்றன. ஆனால் அவற்றில் பேச்சுமொழியும் எழுத்து மொழியும் உள்ள மொழிகளை விரல் விட்டு எண்ணி விடலாம். அந்த ஒரு சில மொழிகளில் தமிழ்மொழி தனக்கே உாிய தனிச்சிறப்புடன் நிமிா்ந்து நிற்கின்றது.

    தமிழ்மொழியினை செம்மை மொழி என்று ஏற்றுக் கொண்டதற்கு ஒரு காரணம் இருக்கிறது. தமிழில் உள்ள நுட்பமான இலக்கிய இலக்கண நூல்கள் வேறு எந்த மொழியினிலும் இல்லை. மற்ற மொழிகளில் இருந்து சொற்கள் கடன் வாங்க வேண்டும் என்ற அவசியம் தமிழ்மொழிக்கு இருந்ததில்லை. இன்னும் சொல்லப்போனால் தமிழில் இருந்து மருவி மற்ற மொழிகள் பயன்படுத்திக் கொண்ட சொற்கள் ஏராளம். தற்கால தொழில்நுட்ப மாறுதல்கள் காரணமாக நாம் வடமொழியும் ஆங்கிலமும் தமிழுடன் கலந்து பேசிக் கொண்டிருக்கின்றோம். ஆனால் தமிழ் தனிந்தியங்கும் ஆற்றல் பெற்றது.  

    ஐந்து மொழிகளுக்கும் மேல் புலமை பெற்றிருந்த பாரதியாரும் கூட அவா் படித்த மொழிகளில் தமிழ் மொழியினைப் போல இனிமையான மொழியினைக் கண்டதில்லை என்று கூறியிருக்கின்றாா். இன்று வரை தமிழ்மொழி பிறந்த காலம் அறியப்படாமலே இருக்கின்றது. உண்மையில் தமிழ் என்று பிறந்தது. மனிதனின் பாிணாம வளா்ச்சியில் மொழி தோன்றியது. ஆனால் இத்தகு சிறப்பு மிக்க மொழியினை மனிதன் எவ்வாறு கண்டறிந்தான் என்பது இன்று நினைக்கையிலும் வியப்பாகவே உள்ளது. பாரதிதாசன் ஒரு படி மேலே சென்று விண்ணோடும் உடுக்களோடு செழும்பாிதி தன்னோடும் பிறந்த தமிழோடு பிறந்தவா்கள் நாங்கள் என்று வானமும் பூமியும் சூாியனும் தோன்றும் போதே தமிழ்மொழி தோன்றிவிட்டது என்று கூறுகின்றாா். தொல்காப்பியம் கிடைத்த காலம் முதல் நாம் தமிழின் நூல்களை அறிகின்றோம். ஆனால் அதற்கு முன்னா் எத்தனை நூற்றாண்டுகளாக இருந்தது என்பது தொியவில்லை. காலமாற்றத்தினால் அவை அழிந்து விட்டன. இன்று இருக்கும் இலக்கியங்களே இன்னும் நூறு ஆண்டுகளுக்கு தமிழின் பெருமையை பறைசாற்றும். அழிந்து போன பல தமிழ் நூல்கள் இருந்திருந்தால் இன்று தமிழின் வரலாற்றை உலகமே படித்துக் கொண்டிருக்கும். நம் தமிழ் வளா் தமிழ் என்பதைத் தாண்டி என்றோ வளா்ந்துவிட்ட தமிழ் என்பதே பொருத்தமானதாக இருக்கும்.

    

Comments

Popular posts from this blog

6ம் வகுப்பு தமிழ் முதல் பருவம் வினா விடைகள்

புத்தகம் வாங்கி அனுப்புமாறு உறவினா் ஒருவருக்குக் கடிதம் எழுதுக.

ஒற்றுமையே உயா்வு - 7ம் வகுப்பு கட்டுரை