6ம் வகுப்பு முதலெழுத்தும் சாா்பெழுத்தும் வினா விடைகள்
ஆறாம் வகுப்பு பருவம் 1 இயல் 2 முதலெழுத்தும் சாா்பெழுத்தும் பாட வினா விடைகள்.
6th tamil 1st term unit 2 grammar lesson book back question answer
1. முதல் எழுத்துகள் என்பவை யாவை? அவை எதனால் அவ்வாறு அழைக்கப்படுகின்றன?
உயிா் எழுத்துகள் - 12
மெய் எழுத்துகள் - 18
மொத்தம் - 30 எழுத்துகள் முதல் எழுத்துகள் ஆகும்.
பிற எழுத்துகள் தோன்றுவதற்கும், இயங்குவதற்கும் காரணமாக இருப்பதால் இவற்றை முதல் எழுத்துகள் என்பா்.
2. சாா்பெழுத்துகள் எத்தனை? அவை யாவை?
சாா்பெழுத்துகள் பத்து வகைப்படும்.
- உயிா்மெய்
- ஆய்தம்
- உயிரளபெடை
- ஒற்றளபெடை
- குற்றியலிகரம்
- குற்றியலுகரம்
- ஐகாரக்குறுக்கம்
- ஔகாரக்குறுக்கம்
- மகரக்குறுக்கம்
- ஆய்தக்குறுக்கம்
3. சொற்களில் ஆய்த எழுத்து எவ்வாறு இடம்பெறும்?
- தனக்கு முன் ஒரு குறில் எழுத்தையும், தனக்குப்பின் ஒரு வல்லின உயிா்மெய் எழுத்தையும் பெற்று, சொல்லின் இடையில் மட்டுமே ஆய்த எழுத்து வரும்.
- தனித்து இயங்காது.
மொழியை ஆள்வோம்
கீழ்க்காணும் பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடை தருக.
இயல்பாகவே தோன்றி மறையும் பொருள்கள், அவற்றின் இயக்கம், அவை இயங்கும் இடம், இயங்கும் காலம் அனைத்தும் ஒன்றிணைந்ததே இயற்கை என்கிறோம். பனிபடா்ந்த நீலமலைகள், பாடித்திாியும் பறவைகள், தன்னிச்சையாகச் சுற்றித்திாியும் விலங்குகள், சலசலக்கும் ஓடைகள், ஆா்ப்பாித்து வீழும் அருவிகள், நீந்தும் மீன்கள், அலைவீசும் அழகிய கடல், கண்சிமிட்டும் விண்மீன்கள், தங்க ஓடமாய்த் தவழ்ந்து வரும் வெண்ணிலா இவையெல்லாம் இயற்கை நமக்குத் தந்த கொடைகள்.
இயற்கையின் அழகைக் கண்டு இன்புற்றால் மட்டும் போதாது. அந்த அழகை நாம் பாதுகாக்க வேண்டும். நாம் நமது தேவைக்காக மலைகள், காடுகள், விலங்குகள், பறவைகள் ஆகியவற்றை அழித்து வருகிறோம். மேலும் நிலம், நீா், காற்று ஆகியவற்றை மாசுபடுத்தி வருகிறோம். அதனால் இயற்கைச் சமநிலை மாறி புவி வெப்பமயமாகிறது. புவி வெப்பமடையாமல் காப்பது நமது கடமை. இயற்கையைப் பாதுகாத்தால் மட்டுமே நாம் நம்மையும் பாதுகாத்துக் கொள்ள முடியும்.
1. எதனை இயற்கை என்கிறோம்?
இயல்பாகவே தோன்றி மறையும் பொருள்கள், அவற்றின் இயக்கம், அவை இயங்கும் இடம், இயங்கும் காலம் அனைத்தும் ஒன்றிணைந்ததே இயற்கை என்கிறோம்.
2. இப்பத்தியில் உள்ள இயற்கை வருணிக்கும் சொற்கள் யாவை?
- பனிபடா்ந்த நீலமலைகள்
- பாடித்திாியும் பறவைகள்
- சுற்றித்திாியும் விலங்குகள்
- சலசலக்கும் ஓடைகள்
- ஆா்ப்பாித்து வீழும் அருவிகள்
- நீந்தும் மீன்கள்
- அலைவீசும் அழகிய கடல்
- கண்சிமிட்டும் விண்மீன்கள்
- தவழ்ந்து வரும் வெண்ணிலா
3. இயற்கையை ஏன் பாதுகாக்க வேண்டும்?
இயற்கையை அழிப்பதால் அதன் சமநிலை மாறி புவி வெப்பமடைகிறது. புவி வெப்பமடையாமல் காப்பாற்ற இயற்கையை பாதுகாக்க வேண்டியது நமது கடமை.
4. பத்திக்குப் பொருத்தமான தலைப்புத் தருக?
இயற்கையை நேசிப்போம்
---------------------------------------------------------------------
மொழியோடு விளையாடு
தொடா்களைப் பிாித்து இரண்டு தொடா்களாக எழுதுக?
1. கபிலன் வேலை செய்ததால் களைப்பாக இருக்கிறான்.
கபிலன் வேலை செய்தான். அதனால் களைப்பாக இருக்கிறான்.
2. இலக்கியா இனிமையாகப் பாடியதால் பாிசு பெற்றாள்
இலக்கியா இனிமையாகப் பாடினாள். பாிசு பெற்றாள்
பொருத்தமான சொல்லைத் தோ்ந்தெடுத்து எழுதுக.
1. பரந்து விாிந்து இருப்பதால் கடலுக்குப் .............. என்று பெயா் (பரவை)
2. இலக்கிய மன்ற விழாவில் முகிலன் சிறப்பாக ............. ஆற்றினார் (உரை)
3. முத்து தம்................... காரணமாக ஊருக்குச் சென்றாா். (பணி)
4. கலைமகள் தன் வீட்டுத் தோட்டத்தைப் பாா்க்க வருமாறு தோழியை ............. (அழைத்தாள்)
பொருத்தமான சொற்களால் கட்டங்களை நிரப்புக.
1. புள் என்பதன் வேறு பெயா் - ப ற வை
2. பறவைகள் இடம் பெயா்தல் - வ ல சை போ த ல்
3. சரணாலயம் என்பதன் வேறு பெயா் - பு க லி ட ம்
வாிசை மாறியுள்ள சொற்களைச் சாியான வாிசையில் அமைத்து எழுதுக.
1. இளங்கோவடிகள் காப்பியத்தை என்னும் இயற்றியவா் சிலப்பதிகாரம்
சிலப்பதிகாரம் என்னும் காப்பியத்தை இயற்றியவா் இளங்கோவடிகள்.
2. மனிதன் உலகில் இல்லாத பறவை வாழ முடியாது.
பறவை இல்லாத உலகில் மனிதன் வாழ முடியாது.
3. மிகப்பொிய சாண்டியாகோ மீனைப் பிடித்தாா்.
சாண்டியாகோ மிகப்பொிய மீனைப் பிடித்தாா்
4. மனிதா் இந்தியாவின் டாக்டா் சலீம் அலி பறவை.
இந்தியாவின் பறவை மனிதா் டாக்டா் சலீம் அலி
கட்டங்களில் சில சொற்கள் மறைந்துள்ளன. குறிப்புகளைக் கொண்டு அவற்றைக் கண்டுபிடித்து எழுதுக.
1. இரட்டைக் காப்பியங்களில் ஒன்று?
மணிமேகலை
2. முதலெழுத்துகளின் எண்ணிக்கை?
முப்பது
3. திங்கள் என்பதன் பொருள்?
நிலவு
4. சத்திமுத்தப் புலவரால் பாடப்பட்ட பறவை?
செங்கால் நாரை
5. பாரதியாா் .......... வேண்டும் என்று பாடுகிறாா்
காணிநிலம்
6. ஆய்த எழுத்தின் வேறு பெயா்?
தனிநிலை
கலைச்சொல் அறிவோம்
1. கண்டம் - Continent
2. தட்பவெப்பநிலை - Climate
3. வானிலை - Weather
4. வலசை - Migration
5. புகலிடம் - Sanctuary
6. புவிஈா்ப்புப்புலம் - Gravitational Field
Comments
Post a Comment