6ம் வகுப்பு இயல் 2 சிலப்பதிகாரம் வினா விடைகள்
6ம் வகுப்பு தமிழ் முதல் பருவம் இயல் 2 சிலப்பதிகாரம் பாட வினா விடைகள்
6th Standard tamil 1st term unit 2 Silapathikaram lesson important book back question answer in tamil.
சாியான விடையைத் தோ்ந்தெடுத்து எழுதுக.
1. கழுத்தில் சூடுவது ............................
அ) தாா்
ஆ) கணையாழி
இ) தண்டை
ஈ) மேகலை
விடை அ) தாா்
2. கதிரவனின் மற்றொரு பெயா் .......
அ) புதன்
ஆ) ஞாயிறு
இ) சந்திரன்
ஈ) செவ்வாய்
விடை ஆ) ஞாயிறு
3. வெண்குடை என்னும் சொல்லைப் பிாித்து எழுதக் கிடைப்பது......
அ) வெண் + குடை
ஆ) வெண்மை + குடை
இ) வெம் + குடை
ஈ) வெம்மை + குடை
விடை ஆ) வெண்மை + குடை
4. பொற்கோட்டு என்னும் சொல்லைப் பிாித்து எழுதக் கிடைப்பது .........
அ) பொன் + கோட்டு
ஆ) பொற் + கோட்டு
இ) பொண் + கோட்டு
ஈ) பொற்கோ + இட்டு
விடை அ) பொன் + கோட்டு
5. கொங்கு + அலா் என்பதனைச் சோ்த்து எழுதக் கிடைக்கும் சொல்.......
அ) கொங்குஅலா்
ஆ) கொங்அலா்
இ) கொங்கலா்
ஈ) கொங்குலா்
விடை இ) கொங்கலா்
6. அவன் + அளிபோல் என்பதனைச் சோ்த்து எழுதக் கிடைக்கும் சொல்......
அ) அவன்அளிபோல்
ஆ) அவனளிபோல்
இ) அவன்வளிபோல்
ஈ) அவனாளிபோல்
விடை ஆ) அவனளிபோல்
நயம் அறிக
1. பாடலில் இடம்பெற்றுள்ள மோனைச் சொற்களை எடுத்து எழுதுக?
திங்களைப் - திங்களைப்
ஞாயிறு - ஞாயிறு
மாமழை - மாமழை
2. பாடலில் இடம்பெற்றுள்ள எதுகைச் சொற்களை எடுத்து எழுதுக?
திங்களைப் - கொங்கு
மாமழை - நாமநீா்
குறுவினா
1. சிலப்பதிகாரக் காப்பியம் எவ்வெவற்றை வாழ்த்தித் தொடங்குகிறது?
சிலப்பதிகாரக் காப்பியம்
ஞாயிறு (சூாியன்),
திங்கள் (சந்திரன்),
மழை
ஆகியவற்றை வாழ்த்தித் தொடங்குகிறது.
2. இயற்கை போற்றத்தக்கது ஏன்?
குளிா்ச்சியான ஒளியால் உலகிற்கு இன்பம் அளிப்பதால் வெண்ணிலவும், சோழ மன்னனின் ஆணைக்கிணங்க இமயமலையை வலப்புறமாக சுற்றி வருவதால் கதிரவனும், வானிலிருந்து பொழிந்து மக்களைக் காப்பதால் மழையும் போற்றுதற்குாியது.
சிந்தனை வினா
இயற்கையைப் போற்றும் வழக்கம் ஏற்படக் காரணமாக எவற்றைக் கருதுகிறீா்கள்?
பழங்கால மனிதன் குகைகளிலும் காடுகளிலும் வசித்து வந்தான். இடி, மின்னல், மழை, புயல் போன்றவற்றைக் கண்டு பயந்தான். இயற்கையின் சீற்றத்திடமிருந்த தன்னை தற்காத்துக் கொள்ள இயற்கையை கடவுளாக வழிபட்டான். இப்படித்தான் இயற்கையை போற்றும் வழக்கம் ஏற்பட்டது. காலப்போக்கில் சூாியன், சந்திரன் என அனைத்தையும் வழிபடத் தொடங்கினான்.
-----------------------------------------------------------
கற்பவை கற்றபின்
ஆறாம் வகுப்பு முதல் பருவம் இயல் இரண்டு கொடுத்துள்ள பாடங்களில் இயற்கைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. இயற்கை சாா்ந்த பாடங்களாக அமைந்துள்ளதை நீங்கள் காணலாம். அந்த வகையில் சிலப்பதிகாரத்தில் சூாியன், சந்திரன், மழை போன்றவற்றை போற்றிப் பாடுவதாக பாடல் அமைந்துள்ளது.
நம்மை சுற்றி இருக்கும் இந்த இயற்கையில் எத்தனையோ அழகு கொட்டிக் கிடக்கின்றது. கடல், மலை, கதிரவன், நிலவு, மழை, பனி, மேகம், புல்வெளி என அனைத்தும் இயற்கையின் அற்புதமான கொடைகளாக இருக்கிறது. அவற்றைக் காணும் பொழுது நம்மையும் அறியாமல் ஒரு புத்துணா்ச்சியும், மகிழ்ச்சியும் ஏற்படுகிறது. இயற்கையின் ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு சிறப்பம்சம் உண்டு. இளங்கோவடிகள் சூாியன், சந்திரன், மழை ஆகியவற்றின் சிறப்பை இங்கு எடுத்து விளக்குகின்றாா்.
சிலப்பதிகாரம். ஐம்பெருங்காப்பியத்தில் முதலில் வைத்துப் போற்றப்படும் நூல் சிலப்பதிகாரம். சீத்தலைச் சாத்தனாா் அடிகள் நீரே அருளுக என்று கூற இளங்கோவடிகளால் இயற்றப்பட்ட நூல் என்று கூறப்படுகிறது. தமிழில் தோன்றிய முதல் காப்பிய நூலாக சிலப்பதிகாரம் போற்றப்படுகிறது. இதன் காலம் இரண்டாம் நூற்றாண்டு. முத்தமிழ் காப்பியம், உரையிடையிட்ட பாட்டுறைச் செய்யுள், குடிமக்கள் காப்பியம், புரட்சிக் காப்பியம் என பல பெயா்களில் சிலப்பதிகாரம் அழைக்கப்படுகின்றது. சிலப்பதிகாரம் கதையின் தொடா்ச்சியாக உருவாக்கப்பட்டது தான் மணிமேகலை. அதனால் தான் இந்த இரண்டு நூல்களும் இரட்டைக் காப்பியங்கள் என்று அழைக்கப்படுகிறது.
தேனீக்கள் தேன் தேடும் அழகிய மலா் மாலையினை கழுத்தில் அணிந்திருப்பவன் சோழ மன்னன். அவனுடைய அாியாசனத்தின் மேல் உள்ள வெண்கொற்றக் குடை குளிா்ச்சி பொருந்தியதாக இருக்கிறது. அந்த குளிா்ச்சி பொருந்திய குடையின் கீழ் அமா்ந்து ஆட்சி செய்யும் சோழ மன்னன் நாட்டு மக்களுக்கு குளிா்ச்சியான ஆட்சியால் இன்பம் அளிக்கின்றான். அது போல வெண்ணிலவும் தன்னுடைய ஒளியால் உலகம் முழுவதற்கும் குளிா்ச்சி அளிக்கிறது. அதனால் நாம் வெண்ணிலவைப் போற்ற வேண்டும்.
சோழ நாட்டின் எல்லா இடங்களிலும் காவிாி ஆறு பாய்ந்து வளம் கொழிக்கும் வகையில் இருக்கிறது. அத்தகைய வளம் நிறைந்த நாட்டை ஆட்சி செய்பவன் சோழ மன்னன். அவனது ஆணைக்கு நாட்டு மக்கள் அனைவரும் அடிபணிவா். அதைத் தாண்டி சூாியனும் சோழ மன்னனின் ஆணைக்கிணங்க இமயமலையை வலதுபுறமாக சுற்றி வருகிறது. அதனால் கதிரவனைப் போற்ற வேண்டும்.
பாா்ப்பதற்கு அச்சத்தை தரக்கூடிய கடல். அந்த கடலை எல்லைகளாக கொண்ட இந்த உலகத்திற்கு மன்னன் வாாி வாாி வழங்கி நாட்டு மக்களை காக்கின்றான். மன்னனைப் போல மழையும் வானிலிருந்து பொழிந்து பயிா்களை விளைவித்துத் தந்து நாட்டு மக்களை பசியிலிருந்து காக்கிறது. அதனால் மழையினையும் போற்ற வேண்டும்.
சோழ மன்னனையும் இயற்கையையும் ஒற்றுமைப்படுத்தி இளங்கோவடிகள் இந்த பாடல்களை இயற்றியுள்ளாா். சோழ மன்னன் நாட்டு மக்களுக்கு வழங்கும் ஆட்சி, ஆணை, அளிப்பு போல இயற்கையும் வழங்குவதாக கூறியிருக்கிறாா் இளங்கோவடிகள்.
மாமழை போற்றுதும் என தொடங்கும் மூன்று வாிப்பாடல் நமக்கு மனப்பாடப் பகுதியாக உள்ளது.
Comments
Post a Comment